தொட விட மாட்டோம் ! தொட்டாலும் விட மாட்டோம் ! இப்படி punch dialogue பேசிவிட்டு அதற்கு நேர் எதிராக தொட விடும் ஆணையை போட்டாலும் விட மாட்டோம் !
வாருங்கள் விஜய் அரசின் ஊழலுக்கு வழி செய்யும் சுற்றறிக்கையை ரத்து செய்ய ஒன்றுகூடுவோம் ! அனைத்து டெண்டர்களையும் இணையதள டெண்டர்களாக மாற்றுவோம்! நாளை காலை 10.30 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் !
ஊழல் ஒழிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒவ்வொருவரும் மறைத்து வைத்து போடக்கூடிய Quotation முறைக்கு எதிராக குரல் கொடுப்போம். நாளை அறப்போர் அலுவலகத்திற்கு வாருங்கள்!
Our demands to @CMOTamilnadu
1. Withdraw the circular of the Finance Secretary allowing quotaton tenders under Rs 50 lakhs with floating open e tenders
2. Make amendment to TN Transparency in Tenders Act/ Rules to make all tenders above Rs 1 lakh as open e tenders
Register now if you are coming tomorrow for the launch of citizen campaign tomorrow ! Lets meet and start raising our collective voice together!
forms.gle/6dLmQKRYTZ6P2zkE9
Date: 29/11/2026
Time: 10.30 Am - 1 Pm
Venue: Arappor Iyakkam office, Nungambakkam
Map: maps.app.goo.gl/qm8WuJRLpCjR…
ஊழலை ஒழிக்க ஒன்றிணைவோம்!
தொட விட மாட்டோம்! தொட்டால் விட மாட்டோம் !
வருகிற ஞாயிற்றுக்கிழமை அறப்போர் அலுவலகத்தில் என்ன நடக்க போகிறது ?
பாருங்கள் இந்த வீடியோவை !
Date: 29/11/2026, Sunday
Time: 10.30 Am - 1 Pm
Venue: Arappor Iyakkam office, Nungambakkam Registration link: forms.gle/6dLmQKRYTZ6P2zkE9
newindianexpress.com/cities/…
We will not rest until
1. The circular of the Finance Secretary allowing quotation tenders under Rs 50 lakhs is withdrawn
2. Amend TN Transparency in Tenders act to make all tenders above Rs 1 lakh open e- tenders @CMOTamilnadu
Join the campaign for Transparency!
நண்பர்களே! வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அறப்போர் அலுவலகத்திற்கு வாருங்கள்.
அனைத்து டெண்டர்களையும் open இணையதள டெண்டர்களாக மாற்றக் கோருவோம் . ஐம்பது லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை quotation டெண்டர்களாகப் போடலாம் என்ற நிதித்துறைச் செயலரின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறக் கோருவோம். இதற்கான கையெழுத்துப் பிரச்சாரத்தைத் தொடங்குவோம். வெளிப்படைத்தன்மை என்பது சொல்லாக இருக்கக்கூடாது; செயலாக இருக்க வேண்டும் என்பதை முதல்வர் விஜய் அவர்களுக்கு உரக்கச் சொல்வோம்.
Register now: forms.gle/6dLmQKRYTZ6P2zkE9
Date: 29/11/2026
Time: 10.30 Am - 1 Pm
Venue: Arappor Iyakkam office, Nungambakkam
Map: maps.app.goo.gl/qm8WuJRLpCjR…
உதயநிதி பிறந்தநாளுக்கு இரண்டு உயிர்கள் கூடவா பலியாக கூடாது ??
இரண்டு உயிர்கள் போய் விட்டது என்று சொல்லி அந்த இடத்தில் உதயநிதி பேனர் வைக்காமல் விட்டு விடப் போகிறார்கள். உதயநிதி பிறந்தநாளுக்கு அங்கு உடனடியாக பேனர் வைக்கவும்!
எத்தனை உயிர்கள் போனாலும் உதயநிதி பேனர் வாழ்க! உதயநிதி வாழ்க! @Office_of_Udhay
ஆனால் ஊழல் என்னும் வியாதியை தடுப்பதற்கான மருந்து, தீர்ப்பதற்கான மருந்து வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை.
ரூபாய் 50 லட்சம் கீழே வெளிப்படையான டெண்டர்களை போடாமல் மறைத்து வைத்து டெண்டர் போடுங்கள் என்ற நிதித்துறை செயலரின் சுற்றறிக்கை வியாதியை வளர்க்கும்.
அனைத்து டெண்டர்களும் ஓபன் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்பதே வியாதிகளை தீர்க்க நம் கண் முன்னே இருக்கும் அறிவியல் பூர்வமான மருந்து.
ஊழல் வியாதிகளை தடுக்க, தீர்க்க சொற்கள் அளவில் பேசிவிட்டு செயலளவில் வியாதிகளை பரப்பும் வேலையில் உங்கள் அரசு ஈடுபடுவது நியாயமா முதல்வரே??
சுற்றறிக்கையை ரத்து செய்யுங்கள். வெளிப்படையான டெண்டர்களை உறுதி செய்யுங்கள். @CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand
Arappor Iyakkam retweeted
#BREAKING | முதலமைச்சர் விஜயை கேள்வி கேட்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட பாடல் வீடியோ இன்ஸ்டாவில் தடை!
#SunNews | #ArapporIyakkam | #Vijay | #TVK
தமிழ்நாடு முதல்வரை கேள்வி கேட்கும் அறப்போர் பாடல் இன்ஸ்டாகிராமில் Block செய்யப்பட்டுள்ளது
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் “தொடமாட்டோம், தொடவிடமாட்டோம்னு சொன்னீங்களே?” என்னும் ஒரு பாடலை வெளியிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 50 லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை இணையதள டெண்டர்களாகப் போடாமல், Quotation முறையில் போடலாம் என்று அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும், வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிராக மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களை போடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதை கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கிய. ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய சட்டரீதியான தேவைக்கு உட்பட்டு. இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்டுகிறது.
instagram.com/reel/DgNMOOjBx…
இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு அரசை நியாயமாகக் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பாடலை இப்படி Instagram-இல் block செய்திருப்பது, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது எந்தக் காரணத்திற்காக அல்லது எந்தவிதமான சட்ட விதிகளை மீறியது என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதை தமிழ்நாடு காவல்துறை செய்ததா??, வேறு யாராவது செய்தார்களா?? அல்லது இன்ஸ்டாகிராமே இதை பிளாக் செய்ததா?? என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை.
இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாடுகளில் தெரிகிறது என்பதையும் இத்துடன் இணைத்துள்ள வீடியோவில் பார்க்கலாம்.
டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது.
அறப்போர் தொடரும்!
தொட மாட்டோம்! தொட விட மாட்டோம்னு சொன்னீங்களே !
போகுற போக்க பார்த்தா .... தொடாம விட மாட்டீங்களோ ?
Withdraw the circular allowing quotation tenders for less than Rs 50 lakhs!
Amend the TN Transparency in Tenders Act to make all tenders above Rs 1 lakh open E Tender!
@CMOTamilnadu @Chief_Secy_TN
Preamble Song by Arappor!
இன்று அரசியல் நிர்ணய சபையால் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாகும். இந்த அரசியலமைப்பு தினத்தில், நீதி மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்!
Today marks the adoption of the constitution by the constituent assembly. On this Constitution day, let us strive to work towards achieving a Just and Equitable society!
அறப்போர் சட்டவிரோத பதாகைகள் குறித்து கொடுத்த புகாருக்கு பிறகு தற்பொழுது சென்னை மாநகராட்சி 265 சட்டவிரோத பதாகைகளை கண்டுபிடித்து அதில் 90 சட்டவிரோத பதாகைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த செயல்பாட்டை வரவேற்கிறோம். மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் இதை மேற்கொள்ள வேண்டும் !
நடவடிக்கை தொடர வேண்டும். மேலும் அனுமதிக்கப்பட்ட உயரம் மற்றும் அளவை விட அதிகமான உயரத்தில்/ அளவில் உள்ள பதாகை, நடைபாதைக்குள் நீட்டும் பதாகை என அனைத்து விதிமீறல் பதாகை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதா மாதம் தொடர்ந்து இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். @chennaicorp
பாக்ஸ் டெண்டர் vs ஓபன் டெண்டர்... வித்தியாசம் என்ன??
ஒரு சாலை போட 20 லட்சத்திற்கு டெண்டர் விடப்படுகிறது. பொறியாளர் நேர்மையாக இருந்தால் எந்த முறையிலும் பிரச்சனை இல்லை. ஆனால் பெரும்பாலும் ஊழலில் ஊறிய அதிகாரியே அனைத்து துறைகளிலும் டெண்டர் அதிகாரியாக உள்ளனர். கீழே இருப்பது தான் கடந்த காலங்களில் பெரும்பாலும் நாம் பார்த்த அனுபவம்.
1. மறைத்து வைக்கப்படும் பாக்ஸ் டெண்டர்:
பொறியாளர் தனக்கு யார் லஞ்சம் அதிகமாக கொடுப்பார்களோ அவருக்கு டெண்டரை ஒதுக்கி, அந்த ஒப்பந்ததாரரே இன்னும் இரண்டு பேர் ஏற்பாடு செய்து அந்த ஒப்பந்ததாரரின் விலைப்புள்ளி ரேட்டை விட கூடுதலாக டம்மி கவர் போடும்படி சொல்வார். போட்டியிருப்பது போல் பேப்பரில் காமிக்கும் வேலை. ஊழல் பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் நினைப்பதுதான் ரேட். மற்றவர்கள் டெண்டர் கவர் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். அதில் ஏதோ ஒரு ஆவணம் இல்லாதது போல் கிழித்து போட்டு விடுவார்கள்.
2. இணையதள லிமிடெட் டெண்டர்:
லிமிடெட் டெண்டரில் எந்த மூணு பேர் இணையதளத்தில் போட்டி போட வேண்டும் என்பதை பொறியாளர் தான் முடிவு செய்வார். அவர்கள் மூன்று பேர் மட்டுமே இணையதளத்தில் விலை புள்ளி சமர்ப்பிக்க முடியும். தனக்கு யார் லஞ்சம் அதிகமாக கொடுப்பார்களோ அவருக்கு டெண்டரை ஒதுக்கி, அந்த ஒப்பந்ததாரரே இன்னும் இரண்டு பேர் ஏற்பாடு செய்து அந்த ஒப்பந்ததாரரின் விலைப்புள்ளி ரேட்டை விட கூடுதலாக டம்மியாக இணையதளத்தில் போடவைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் சொல்வார். போட்டியிருப்பது போல் இணையதளத்தில் காமிக்கும் வேலை. ஊழல் பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் நினைப்பதுதான் ரேட்.
3. இணையதள ஓபன் டெண்டர்:
பொறியாளரும் ஒப்பந்ததாரர்களும் கூடி பேசி யார் எந்த டெண்டல்களில் இணையதளத்தில் போட்டி போட வேண்டும் என்றும் எந்தெந்த டெண்டர் யாருக்கு என்றும் fixing செய்ய முயற்சி செய்வார்கள். பல டெண்டர்கள் போடப்படுவதால் எந்த டெண்டர் யாருக்கு என்று முன்கூட்டியே முடிவு செய்து கொள்கின்றனர். இது இப்படியே நடந்தால் இதிலும் ஊழல் இருக்கும். ஆனால் இந்த கூட்டு சதியில் ஈடுபடாத ஒரே ஒரு ஒப்பந்ததாரர் இருந்தால் போதும். அவருக்கு கட்டுபடியாகும் விலையை இணையதளத்தில் அவர் விரும்பியபடி போட்டி போட முடியும். பல டெண்டர்களில் கூட்டு சதி அப்படி உடைக்கப்பட்டிருக்கிறது.
முதல் இரண்டு முறைக்கும் மூன்றாவது முறைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். முதல் இரண்டு முறையில் பொறியாளரோ அல்லது அவருக்கு மேல் இருக்கும் அரசியல்வாதியோ நினைப்பவர் தான் டெண்டர் போட்டு வெல்ல முடியும். மூன்றாவது முறையான ஓபன் டெண்டரில் பொறியாளரும் பல ஒப்பந்ததாரர்களும் கூட்டு சதி செய்தால் கூட ஒரே ஒரு ஒப்பந்ததாரர் நேர்மையாக போட்டி போட்டால் போதுமானது. ஊழல் சங்கிலி அறுந்து விடும். ஆனால் முதல் இரண்டு முறையில் பொறியாளர் ஊழல்வாதியாக இருக்கும்பொழுது ஒரு நேர்மையான ஒப்பந்ததாரர் போட்டி போடும் வழியே இல்லை.
வெளிப்படைத் தன்மை என்பது ஊழலை குறைக்க, நேர்மையாளர்கள் போட்டி போட்டு வணிகம் செய்ய, குறைவான விலையில் தரமான வேலையை அரசு செய்ய. அரசு கஜானா காப்பாற்றப்பட ஒரு முக்கியமான வழி.
நிதித்துறை செயலர் தன் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.அனைத்தும் ஓபன் இணையதள டெண்டர்களாக போடப்பட வேண்டும். @CMOTamilnadu
அரசுக்கு ஏற்பட்ட ரூ 600 கோடி இழப்பை தடுத்தோம் !
இது ஒரு நீண்ட நெடிய போராட்டம். குவாரி மாபியாக்களை எதிரித்து போராடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அறப்போர் 2024 ஆம் ஆண்டு கொடுத்த புகாரில் ஜெயகாந்தன் IAS செய்த ஊழல் மோசடிக்கான ஆதாரங்களை தெளிவாக வெளிக்கொண்டு வந்து இருந்தோம். திருநெல்வேலி ராதாபுரம் தாலுக்கில் 25 குவாரிகளில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்டவிரோதமாக 50 லட்சம் கன மீட்டர் Rough Stone வெட்டி எடுக்கபப்ட்டது. அடைமிதிப்பாங்குளம் இறப்புகளுக்கு பிறகு நடந்த ஆய்வில் இதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ராதாபுரம் 25 குவாரிகளுக்கு மட்டும் 262 கோடி ரூபாய் அபராதம் போட்டார் துணை ஆட்சியர். அதன் மீதான மேல் முறையீடு இருப்பின் குவாரி நபர்கள் ஆட்சியரிடம் முறையிட வேண்டும். ஆட்சியர் விஷ்ணு மீது அப்போதைய MLA அப்பாவு, MP ஞானதிரவியம் போன்றவர்கள் குவாரிகளை திறக்க அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார்.
உடனடியாக திமுக ஆட்சியில் கனிமவள ஆணையராக ஜெயகாந்தன் IAS கொண்டு வரப்பட்டு அனைத்து குவாரி அதிபர்களையும் ஆட்சியருக்கு முதல் மேல்முறையீடு செய்யாமல் நேரடியாக இரண்டாம் மேல்முறையீடு செய்ய கூட்டுச்சதி செய்கிறார்கள். இதற்கு சட்டத்தில் வழி இல்லை. இருந்தாலும் மாபியாக்களுக்கு எதற்கு சட்டம் ? ஜெயகாந்தன் IAS சட்டத்தை மீறி அனைத்து அபராதங்களையும் காலை செய்கிறார். ராதாபுரம் தாலுக் 262 கோடி ரூபாய் அபராதத்தை வெறும் 14 கோடியாக மாற்றுகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதனால் அரசு இழக்கும் பணம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய். சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கற்களுக்கு 100 சதவீதம் கனிமவள தொகையை மீட்க வேண்டும் என்று சட்டம் இருந்தும் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்தும் அபராதங்களை தள்ளுபடி செய்கிறார்.
அறப்போர் புகார் மீது ஜெயகாந்தனின் அனைத்து ஆணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது தற்பொழுது உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட ரூ 600 கோடி இழப்பை தடுத்துள்ளோம். இன்று வரை FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போராடி வருகிறோம். கடந்த ஆட்சியில் அமைச்சர் டேபிளில் இருந்து நகராத FILE @drtkprabhu_TVK பொறுப்பெடுத்த பிறகு FILE நகர துவங்கி நம் புகார் மீதான துறையின் அறிக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது . ஜெயகாந்தன் IAS உள்பட தவறு செய்த அனைவரின் மீதும் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் ! இந்த மாபியாக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கோடி மீட்டெடுக்கப்பட்டு அந்த பணத்தை திருநெல்வேலி மக்களின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும்!
அறப்போர் தொடரும்!
ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை போன்றவற்றை அதிகப்படுத்துவதும் அதிகாரி கையில் பாரபட்சம், ஒப்பந்ததாரர் கையில் மோனோபோலி போன்றவற்றை குறைப்பதும் தான் முக்கிய வழி. ஆனால் இதற்கு நேர் எதிரான மூடி மறைத்து போடப்படும் டெண்டர்களை அனுமதிப்பது என்பது ஊழலை வளர்க்கும் வழி!
அரசு மவுனம் காப்பது சரி அல்ல. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அனைத்தும் ஓபன் இணையவழி டெண்டர்களாக போடா வழிவகை செய்ய வேண்டும். @CMOTamilnadu
சிறிய டெண்டர்களில் தான் போட்டி அதிகமாக இருக்கும். பெரிய டெண்டர்களின் எப்படியோ டெண்டர் விதிகளை வைத்து பலர் போட்டி போடாதவாறு ஊழல்வாதிகள் டர்ன் ஓவர் போன்ற விதிகளை மாற்றி வைத்து விடுவார்கள். ஆனால் சிறிய தொகை டெண்டர்களில் டெண்டர் தொகையே குறைவாக இருப்பதால் விதிகளை பெரிய அளவில் மாற்றி வைப்பது மிகக் கடினம். FIXING செய்ய ஒரே வழி அதை ஓபன் இணையதள டெண்டர்களாக போடாமல் மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களாக மாற்றுவது தான்.
இதற்காக WRD போன்ற சில துறை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் ஓபன் டெண்டர்களை வீழ்த்த தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசும் இதற்கு செவி சாய்த்து சுற்றறிக்கை வெளியிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதை திரும்ப பெற வைப்போம்!
கடந்த சில மாதங்களில் நடந்தது போல அனைத்து ஒப்பந்தங்களையும் ஓபன் இணையதள டெண்டர்களாக போடுவதை தொடர வைப்போம்! @CMOTamilnadu
youtu.be/ypkRb9IBAwY?si=eGLh…
50 லட்சம் கீழே உள்ள ஒப்பந்தங்கள் Quotation முறையில் போடலாம் என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஒரு லட்சத்திற்கும் மேலிருக்கும் அனைத்து டெண்டர்களும் ஓபன் இணையதள டெண்டர்களாக வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அவர்களுக்கு அறப்போர் இயக்கம் அனுப்பிய கடிதத்தின் நகல்.
@CMOTamilnadu
அவசர டெண்டர்களை எப்படி அரசு போட வேண்டும் என்பது குறித்தும் இதில் விளக்கியுள்ளோம். நீங்கள் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ள தீர்வுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்
இதைப் பற்றி விரிவாக புரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்
youtu.be/ypkRb9IBAwY?si=nmeP…
#ArapporIyakkam | #CMVijay














