
ALT ஆவடி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு 21, சத்யா நகரில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால்வாய் தூய்மைப் பணிகளை, முறையான நீரோட்டம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வடிகால்வாய்களில் குப்பைகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் அடைப்புகள் ஏற்பட்டு நீரோட்டம் தடைபடுவதைத் தவிர்க்கலாம். ஆவடியைத் தூய்மையாக வைத்திருக்க அனைவரும் ஒத்துழைப்போம்.

ALT ஆவடி மாநகராட்சி, மண்டலம் 2, வார்டு 8, லலிதாம்பாள் நகரில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட வீட்டில் கொசுப்புழு ஒழிப்புப் பணி (AL Work) மற்றும் புகைமூட்டும் பணி (Fogging) மேற்கொள்ளப்படுவதை நேரில் ஆய்வு செய்தனர். டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கவும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும் மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ALT ஆவடி மாநகராட்சி, மண்டலம் 2, வார்டு 7, கிருஷ்ணா கார்டன் பகுதியில் இன்று குப்பைகள் தேங்கியிருந்த இடத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. ஆவடியைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ALT ஆவடி மாநகராட்சியின் சார்பில் 16.11.2026 அன்று காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை வார்டு 08, 05, 38 மற்றும் 26 ஆகிய பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டு, மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சுகாதார சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்களின் நலனே எங்கள் முன்னுரிமை! @CMOTamilnadu

ALT ஆவடி மாநகராட்சி, மண்டலம் 1, வார்டு 19, தண்டுரை குளம் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் கீழ் நான்கு வகையான குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் IEC விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தூய்மையான ஆவடிக்கு நம் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்! @CMOTamilnadu

ALT ஆவடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாநகராட்சி ஆணையர் செல்வி. எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேம்படுத்துதல், குப்பைகளை முறையாகச் சேகரித்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்தல், பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் குப்பையில்லா நகரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து, திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்திட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். @CMOTamilnadu @swachhbharat

ALT மக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து செயல்படும் ஆவடி மாநகராட்சி, மணிகண்டபுரம் சாலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். மக்களின் நலனே முதன்மை – மக்களுக்காக என்றும் ஆவடி மாநகராட்சி!


















