நீ முன்னாலே போனே ..என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி..1984ல இந்த பாடல TKS நடராஜன் என்கிற ஒரு சிறிய ஆனால் பழைய நடிகர் பாடி தமிழ்நாட்டினல பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார்.
சங்கர்-கணேஷ் இசையில் வாங்க மாப்பிள்ளை வாங்க என்கிற படத்தில் சிவசங்கர் என்பவர் தயாரித்து அவரே நடித்தது. பற்ற விவரங்கள் அவ்வளவாக கிடைக்கவில்லை, தெரிந்தவர்கள் இங்கே பகிரவும்.
இந்த பாடல் 2006ல வாத்தியார் படத்தில் இமான் இசையில் ரீமிக்ஸ் செய்து அர்ஜுன் நடனம் ஆட அதே பாடகர் TKS நடராஜன் இதிலும் ஆரம்பத்தில் பாட, கார்த்திக் அதற்கு மேல் ஒரு மெருகேற்றுகிறார்.
இந்த படம் பெரிய ஹிட்டாச்சுன்னா அதுக்கு காரணம் விட்டலாச்சார்யாவா, ஜெயமாலினியா, அடுப்பு உள்ள காலில் நெறுப்பு எரியும் பேய்களா?
என் பதில் ..வேறென்ன ஜெயமாலினி கவர்ச்சிதான். 100 நாள் அவுஸ்புல்.
1
2
459
‘ஏ உன்னத்தான் உன்னத்தான், செப்பு குடம் தூக்கிபோற செல்லம்மா’ இந்த பாடல் KJ Yesudas and Vanijayaram ஒத்தையடி பாதையில படத்துல பாடியது.
சங்கர்-கணேஷ் இசையில், கணேஷ் ஹிரோவாக -1979ல வந்தது.
குலோசப் கொஞ்சம் ஓவர்தான், பாடல் நல்லாயிருக்கும், அவ்வளவுதான் அதுக்குமேல எதுவும் தெரியாது
ஆனந்த பைரவி ராகத்தில ‘கொஞ்சநாள் பொறு தலைவா’ பாடல், தேவா இசையில அப்ப வந்த பாடல்கள் எல்லாம் அருமையானவை.
ஆசை படத்தில் எல்லா பாடல்களும் முத்துக்கள், சினிமா இசை எல்லாருக்கும் சொந்தமானது, திறமையிருப்பவர்கள் ஜொலித்தார்கள் என்பது உண்மை.
பாடலை கேளுங்கள் ஹரிஹரன் பாடிய அந்த கானம், தேவா அவர்கள் ஞாபகம்தான் அதிகமா வருகுது.
இளையராஜா Rival இளையராஜா: மெட்டி -1982 படத்தின் ‘சந்தக்கவிகள் பாடிடும் மனதில்’ பாடலை பிரமானந்தன் என்ற மலையாள பாடகர் பாடியது, இப்போது அவர் உயிருடன் இல்லை.
மலையாளத்தில் பிரபலமான இவர் தமிழில் பாடியது இரண்டு பாடல்கள், இதுவும் ‘மெட்டி மெட்டி’ என்கிற பாடல்களும்.
அவரின் திறமையை அறிந்து ராஜா அவர்கள் சரியான பாடலை அவருக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த பாடலில் வரும் ஆரம்ப வயிலின் இசையை அனுபவியுங்கள்.
இதன் -ஆரபி- இசையின் ராகத்தை கொஞ்சம் மாற்றி பாடினால் இன்னொரு ராஜா பாடல் ஞாபகம் வரும். அதுதான் ‘காதல் மயக்கம்’ புதுமை பெண் படம் வரும், சுத்தசாவேரி, இரண்டும் சங்கராபரணத்தின் ஜன்யராகம். ஏதோ கொஞ்சம் தெரிந்தது சொல்றேன்.
டூயட் படத்தில் வரும் இந்த பாடல் எத்தனைபேருக்கு ஞாபகம் இருக்கு, அஞ்சலி அஞ்சலிதான் உடனே நம்ம மண்டைக்குள் வரும்.
‘நான் பாடும் சந்தம்’ பாடலில் ARR SPBயிடம் இந்த இடத்தில கொஞ்சம் ஹய் பிட்ச் போகனும் என்று சொல்ல அதை அப்படியியே ‘காலம் ஒரு டூயட் அதிலே ‘இரவு பகல்’ இரண்டும் உண்டு என பாடி அசத்திய பாடல்.
இதுலே ஒரு பெரிய விஷயம் அந்த சாக்ஸபோன் இவ்வளவு அழகா நம் மனதை தொடுவது ஏன்னால் அதை இசைத்தது சாக்ஸபோன் முடிசூடா மன்னன் என பெயர் பெற்ற மறைந்த கதிரி கோபால்நாத் அவர்கள்.
இது என் பேவரட் பாடல் - ‘அடி வான்மதி என் பார்வதி’ , படம்: சிவா-1989ல வந்தது.
பாலசந்தர் அவர்களுடைய தயாரிப்பு, அவர் சிஷ்யர் அமீர்ஜான் இயக்கத்தில். இந்தி படத்தின் தழுவல்.
இளையராஜா பாடல்தான் முக்கியமான பலம், இப்பல்லாம் 500 கோடி வசூல்னு ஏதோ போடறாங்க. பாவம் பாலசந்தர் படத்த மார்க்கெட் சரியா பண்ணியிருந்தா இது மாதிரி பாடல்கள்ல படம் பிச்சிட்டு போயிருக்கும்.
இந்த பாடல்ல SPB & சித்ரா பாடிய விதம் என்ற அஅருமையாக இருக்கு.
‘சின்ன ரோஜா இதழ்
அது கன்னம் நான் என்றது
பாடும் புல்லாங்குழல்
உன் பாஷை நான் என்று கூறும்’
இவ்வளவு வருடம் கழித்தும் இதுதான் காலத்து கடந்த பாடல்
முந்தய பாட்டு ‘சோலை புஷ்பங்களே’ல அமரன் பாடிய ஆரம்ப ஆலாபனை ஒ..ஒ..ஒ.ஒ கேட்டால் நமக்கு உடனே கிடைப்பது. மனோஜ் கியான் SPBய இதே பாணியில பாடவச்ச ‘செந்தூர பூவே’ பாடல்ல வரும் ‘மின்னலை தேடும் தாழம் பூவே’.
அப்படியே அந்த ஒ.ஒ.ஒ.ஒவை கொஞ்சம் இன்னும் சோகம் கலந்த மாதிரியான ஒ.ஒ.ஒவில பாடினா நமக்கு கிடைக்கும் பாடல்.
‘முக்குளிச்சு நானெடுத்த
முத்து சிப்பி நீ தானே
முத்தெடுத்து நெஞ்சிக்குள்ள
பத்திரமா வச்சேனே’ ஆமாம் அதுதான் ‘
வைதேகி காத்திருந்தால் படப்பாடல்’ காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’ - ஜெயசந்திரனின் அவர் குரலில் சோகத்தை அருமையாக வெளிப்படுத்தி பாடிய பாடல்.
சினிமாவில் ஆரம்ப ஆலாபனை நீக்கப்பட்டது, ஆனால் ஆடியோவில் உள்ளது. ஆனாலும் ஜெயசந்திரன் பாடியதை பகிரவே எனக்கு விருப்பம்.
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் எல்லாமே சிவரஜ்சனி ராகம் சார்ந்த பாடல்கள்.







