அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், உண்மையை உரக்கச்சொல்லும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், பத்திரிகை சுதந்திர தின வாழ்த்துகள்.
பத்திரிகையாளர்களின் போர்க்குரல் திரு.மோகன் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள்.
என்றும் நினைவில் வாழும் தோழர் மோகன் அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சார்பாக புகழ் அஞ்சலியை செலுத்துகிறோம்.
12 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியாற்றிய பத்திரிகையாளரின் பணிநீக்கம் சட்டவிரோதம் – ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க கோவை தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு.
நிரந்தரத் தன்மை கொண்ட பணிக்கு "ஒப்பந்தம்" என்று பெயர் சூட்டி உரிமைகளை மறுக்க முடியாது என்று தீர்ப்பு.
facebook.com/share/1FRxACFDT…
மாலை முரசு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளரும், நெறியாளருமான பரத்குமார்(வயது 48) மறைவுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 🙏.
@CMPChange
புதிய தலைமுறை தொலைக்காட்சியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட படத்தொகுப்பாளருக்கு மீண்டும் பணி வழங்க தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்திற்கு மற்றுமொரு வெற்றி
facebook.com/share/p/19mFEZb…
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க தினத்தந்தி நிறுவனத்திற்கு கோவை தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவு!*
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மற்றுமொரு வெற்றி!
facebook.com/share/p/19oG7u5…
வின் டிவி, எம் நாடு உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த திரு. சுபாஷ் சங்கர் (52) அவர்கள் மாரடைப்பால் நேற்று (21.08.2026) காலமானார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு மாற்றத்திற்கான பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
1
192
சோளிங்கர் உதவி காவல் ஆய்வாளர் முனீர் பாஷா முன்னிலையிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. எனினும் செய்தியாளர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையும் நமது கண்டிக்கிறது. 3/3
46
தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவருடன் வந்த நபர்கள் அந்த தாக்குதலில் ஈடுபட்டனர். உடன் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். 2/3
1
78
தமிழக வெற்றிக் கழத்தின் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபிலை கண்டிக்கிறோம்!!!
ராணிப்பேட்டை தினமலர் செய்தியளார்கல்யாணசுந்தரம் மற்றும் தினகரன் செய்தியாளர் அரங்கநாதன்
சோளிங்கரில் ஒரு கடைக்குள் சில நபர்கள் புகுந்து தாக்கியதை படம் பிடித்துள்ளனர். 1/3
தொடர்ந்து இதுபோன்ற அடாவடியான செயல்களில் காவல்துறை ஈடுபடாமல் இருக்க போதுமான அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறும் முதலமைச்சர் திரு.விஜய்க்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. 10/10
15
பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் அராஜகத்தினை, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் உடனடியாக தடுக்க வேண்டும். சட்டப்படியான விசாரணைக்கு தயாராகவே இருக்கும் ஊடகவியலாளர் திரு.விஜயனை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும். 9/10
1
18
யாராக இருந்தாலும் உரிய சட்டவிதிகளை பின்பற்றியே காவல் துறை தனது விசாரணையை நடத்த வேண்டும். அதிலும், ஊரறிந்த ஒரு ஊடகவியலாளரை குற்றவாளி போல் காவல்துறையினர் நடத்தும் விதமானது, கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. 8/10
1
8
16.07.2026 அன்று விசாரணைக்காக அவரை மீண்டும் அழைத்த காவல்துறையினர், திரு.விஜயன் வீடு திரும்ப இதுவரை அனுமதிக்கவில்லை.காவல்துறையின் இந்த முறையற்ற, அத்துமீறிய நடவடிக்கைகளை ஊடகவியலாளர்களாகிய நாம் ஒரு போதும் ஏற்க முடியாது. 7/10
1
11
இந்நிலையில், சட்டவிதிகளுக்கு புறம்பாக மீண்டும் நள்ளிரவு 2 மணிக்கு திரு.விஜயனை அழைத்த போலீசார், அவரது செல்போனை பிடுங்கி வைத்து, அவரை மட்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். 6/10
1
8
சட்டத்தை மதிக்கும் ஊடகவியலாளர்
திரு.விஜயனும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் இரவு பத்து மணிக்கு ஆஜராகி, நள்ளிரவு 12.30 வரை விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார். 5/10
1
8
இந்தச் சூழலில், இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு திரு.விஜயன் அவர்களை, 15.07.2026 அன்று சிறப்பு புலனாய்வுக்குழு அவர் பணிபுரியும் புதிய தலைமுறை அலுவலகத்திற்கே நேரில் சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர். அன்றைய இரவே விசாரணைக்கு வர வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர். 4/10
1
8
நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை ஆதரிக்க பேரம் பேசப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா
காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் 8 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 3/10
1
17
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணிபுரியும் ஊடகவியலாளர் திரு.விஜயனை, விசாரணை என அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் செயல் ஏற்கவே முடியாத எதேச்சதிகார நடவடிக்கை ஆகும். 2/10
1
36
விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர் திரு.
விஜயனிடம் அத்துமீறி நடந்துவரும் தமிழ்நாடு காவல்துறையின் அராஜக போக்கை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 1/10
1
179



