CTR.Nirmalkumar retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இன்று (17.11.2026), தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தபோது...
Today visited Thoothukudi Thermal Power Station (TTPS) which went on fire last year.
As per the plan last year they were supposed to complete 60% repair works in May’26, but the works were dead slow. After our government took over we have reviewed all pending projects like TTPS, Uppur,NTPS and enabled the work in war footage.
In May we had targeted to open by Jan’27 but we are confident that before end of Nov’26 this TTPS will start its generation.
இன்று (17.11.2026), தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அலகு – 1 மற்றும் அலகு – 2 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு, அலகு – 1-இன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்து, அனல் மின் நிலைய வளாகத்தில் மரக்கன்றையும் நட்டபோது...
இந்நிகழ்வில், கூடுதல் தலைமைச் செயலாளர் / மின்வாரியத் தலைவர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., அவர்கள், மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு) திரு. பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. சரவணன் அவர்கள், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு. ஜான் டால்டன் அவர்கள் மற்றும் அனல் மின் நிலையத் தலைமைப் பொறியாளர் திரு. பிரபாகர் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
CTR.Nirmalkumar retweeted
Tamil Nadu Solar Roof Top Portal Apply Link 🔗 👇
tnebltd.gov.in/usrp/applysta…
@CMOTamilnadu | @CTR_Nirmalkumar | @TNDIPRNEWS
Yes… it’s done in most of TV, Radio and print media.
Replying to @CTR_Nirmalkumar @CMOTamilnadu
Advertise in Polimer and Puthiya thalaimurai sir @CTR_Nirmalkumar , TRP audience base wise they're having wider reach. So it'll reach more families.
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 2026 வரை தமிழகத்தில் சுமார் 87 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 35000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு.
விண்ணப்பிக்கவும்: tnebltd.gov.in/usrp/
#TN1LakhTarget_TNRoofTopSolar
CTR.Nirmalkumar retweeted
இந்தியப் பத்திரிகை கவுன்சில் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையானது, சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் பணிகளையும் செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
உண்மை, நேர்மை, நடுநிலை, நம்பகத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்!
#CMJosephVijay
#NationalPressDay
CTR.Nirmalkumar retweeted
A complaint petition was submitted yesterday (15.11.2026) to the Madurai City Police Commissioner,
As per the guidance of our Honourable
@CMOTamilnadu and our respected Party Joint General Secretary,
@CTR_Nirmalkumar
requesting appropriate legal action against those spreading AI-generated fake photographs and false information by falsely portraying the person arrested in connection with the jewellery theft incident at the Kalavasal Bypass area in Madurai as an office-bearer of the Tamilaga Vettri Kazhagam (TVK).
– S.R. Thangapandi, MLA
Madurai West Constituency
District Party Secretary
State Executive Committee Member
– Tamilaga Vettri Kazhagam
#TVK #Madurai #CyberCrime #FakeNews #AI
@CTR_Nirmalkumar @CMOTamilnadu
CTR.Nirmalkumar retweeted
தளபதியார் மற்றும் கழக இணைப் பொதுச்செயலாளர் அண்ணன் CTR நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மதுரை காலவாசல் பைபாஸ் பகுதியில் நடைபெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை,தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி எனத் தவறாகச் சித்தரித்து,
AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படங்கள் மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி,
இன்று (15.11.2026) மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
- SR.தங்கப்பாண்டி MLA
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
மாநில நிர்வாக குழு உறுப்பினர்
- தமிழக வெற்றிக் கழகம்.
#TVK #Madurai #CyberCrime #FakeNews #AI #TVKVijay #TamilagaVettriKazhagam
@CTR_Nirmalkumar @CMOTamilnadu
நேற்று (14.11.2026), தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய்ப் பாசனத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் இருபோகப் பாசனப் பகுதியில், முதல் போகப் பாசனத்திற்காக 45,041 ஏக்கர் நிலங்களின் பாசனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீரைத் திறந்து வைத்தபோது...
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. சபரிஐங்கரன் அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. சோ. கார்த்திகேயன் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி. கருப்பையா அவர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. விஜய் அவர்கள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Our government will submit all the evidence and facts to the committee appointed by Supreme Court.
More than 1 lakh people need a support and update on their future & livelihood.
வருஷநாடு மேகமலையில் கள ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் @CTR_Nirmalkumar 💥
மலைவாழ் மக்களுக்கு ஆதரவு குறல் எழுப்பினார் ♥️
இன்று (14.11.2026), தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும் “தென்றல் தவழும் சுருளிச் சாரல் திருவிழாவினைக்” குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இசைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கேடயங்களை வழங்கிப் பாராட்டி, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 35 கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டபோது...
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி) திரு. துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, இ.வ.ப., அவர்கள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு. வீராச்சாமி அவர்கள், மாவட்டச் சுற்றுலா அலுவலர் திரு. பாஸ்கரன் அவர்கள், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் திரு. சையது முகைதீன் இப்ராஹிம் அவர்கள், உத்தமபாளையம் வட்டாட்சியர் திரு. பாலசண்முகம் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மின்கொள்முதல்! திமுக தலைவர் ஸ்டாலினின் கடந்த வாரச் செய்தி – பொய்!! – கேரளா அரசின் மறுப்பின் மூலம் தற்போது அம்பலம்!!
teapawt.org/mkstalin/status/211784…
"தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்" (திருக்குறள் 293)
கலைஞர் உரை: ஒருவர் தன் நெஞ்சறிந்து (மனச்சாட்சிக்குப் பொருந்தாத) பொய்யைச் சொல்லக் கூடாது. மீறிப் பொய் சொன்னால், அந்தப் பொய்யின் குற்றவுணர்ச்சியால் அவருடைய சொந்த மனமே அவரை வருத்தித் தண்டிக்கும்.
பொய்ச் செய்திகளை உருவாக்குவதும், உருவாக்கப்பட்ட பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்காக முரசொலி பத்திரிகையை நடத்தி வரும் திமுக. கடந்த வாரம் இதேபோன்று கேரளா அரசுக்கு 8.64 ரூபாய்க்கு மின்சாரம் விற்பனை செய்ய ஒரு தனியார் நிறுவனம் தயாராக இருந்ததாக வெளிவந்த ஒரு செய்தியைக் குறிப்பிட்டு, தமிழக மின்சாரக் கொள்முதல் குறித்து ஒரு பொய்யான செய்தியைப் பரப்ப முயன்றார் ஸ்டாலின். தற்பொழுது அதைக் கேரள அரசு மறுத்துள்ளது.
திரு. ஸ்டாலின் அவர்களுக்கு ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எந்தவித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் ஒவ்வொரு துறையையும் முதல்வரின் உத்தரவுக்கிணங்கச் சீரமைத்து வருகிறோம். கடந்த 70 வருடங்களாக திமுக தமிழகத்திற்குச் செய்த பேரழிவைச் சீரமைக்க ஒவ்வொரு நாளும் முதல்வரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் போராடி வருகிறோம்.
நீங்கள் முதல்வராக இருந்தபோது உங்கள் ஆட்சியின் லட்சணத்திற்கு ஒரு சின்ன உதாரணம்: முன்னாள் அமைச்சர் நேரு அவர்கள் மீது 2 வழக்குகள், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு மீது 2 வழக்குகள், உங்கள் மகனின் நண்பர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் அவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு லஞ்சம் வாங்கிச் சிக்கி சிறையில் இருக்கிறார். இதைவிட வெட்கக்கேடு என்ன தெரியுமா? பெரியார் உலகத்திலேயே, உலகில் வேறு எங்கும் பார்க்காத வகையில் போலி நூல்கள் என்ற பெயரில் ஊழல்!
இன்னும் ஒரு படி மேலே போய் உங்கள் தலைமையில் இருந்த காவல்துறை, குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செய்த ஒரு கொடிய குற்றவாளியைக் காப்பாற்றி, ஒரு வருடத்திற்கு மேல் உங்கள் அரசு எல்லா மட்டத்திலும் பண ஆதாயத்தைப் பெற்று அந்தக் குற்றவாளியைப் பாதுகாத்து வந்திருக்கிறீர்கள். இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்: அண்டை மாநிலங்கள் இருளில் மூழ்கி இருந்தபோது தமிழக மக்கள் இருளில் மூழ்கிவிடக் கூடாது மற்றும் தமிழகத் தொழில்துறை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே சில தினங்கள் குறுகிய கால (Short term) அடிப்படையில் கேஸ் பவர் (Gas power) அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது. அதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதை எப்போதும் நிரூபிக்கத் தயாராக உள்ளோம். இனி வரும் காலங்களில் அதிக விலை கொடுத்து வாங்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
திரு. ஸ்டாலின் அவர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள். உங்கள் குடும்பம் தமிழகத்திற்குச் செய்த துரோகத்திற்குப் பிராயச்சித்தம் தேடவே ஆயிரம் வருடங்கள் போதாது. திமுகவின் கறுப்புப் பக்கங்களை மறைக்கப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுங்கள் ஸ்டாலின் சார்!
unavailable
இன்று (14.11.2026), தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் விலக்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தியபோது...
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்) அவர்கள், திரு. க. சபரிஐங்கரன் (பெரியகுளம்) அவர்கள், திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி (மதுரை மேற்கு) அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சாரக் கொள்முதல் டெண்டர் திறப்பு!
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.
யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது ...
Jan - ஒரு யூனிட் ரூ.13
Feb - ஒரு யூனிட் ரூ.9.50
Mar - ஒரு யூனிட் ரூ.10
Apr - ஒரு யூனிட் ரூ.10
May - ஒரு யூனிட் ரூ.9.95
June - ஒரு யூனிட் ரூ.13
இந்த குறைந்தபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் 2014 ம் ஆண்டுக்கு பிறகு விரைவில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படும்.










































