J Kamatchi (@Kamatchitvk) header
J Kamatchi (@Kamatchitvk) profile picture

Kamatchi Jayakrishnan | MLA - Pallavaram Constituency | Chengalpattu North District Secretary, Tamilaga Vettri Kazhagam | @TVKVijayHQ

Chennai, India
Joined April 2026
Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)
மாணவரின் கல்விப் பயணத்திற்கு உதவிக்கரம்! 🚲❤️ செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில், 1-வது வார்டில் வசிக்கும் ஏழை மாணவர் ஒருவர் பள்ளிக்குச் செல்ல நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில், சைக்கிள் உதவி கோரி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்களை அணுகினார். மாணவரின் கோரிக்கையை அறிந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மாவட்டக் கழக இணைச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. மதன்குமார் அவர்களின் மூலம் உடனடியாக அந்த மாணவருக்கு சைக்கிள் வாங்கி வழங்கிட அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாணவரின் பள்ளிப் பயணத்தை எளிதாக்கும் வகையில் உடனடியாக சைக்கிள் வழங்கப்பட்டது. ஒரு மாணவரின் கல்விப் பயணத்திற்கு உதவுவது, அவரது எதிர்காலத்திற்கு வழி அமைப்பதாகும்! களத்தில் என்றும்… மக்களுக்காக, மக்களுடன்! ❤️ #Pallavaram #Anakaputhur #StudentWelfare #EducationSupport #PublicService
9
25
361
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்! 🎓 ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான மாண்புமிகு திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்த சிறப்பான நிகழ்வில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரி திருமதி மரகதம் குமரவேல் அவர்களும், திருப்போரூர் மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. குமரவேல் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மாணவர்களின் கல்வி வளர்ச்சி, சாதனை மற்றும் எதிர்காலப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. 🎓✨ களத்தில் என்றும்… மக்களுக்காக, மக்களுடன்! #HindustanUniversity #Convocation #Education #Pallavaram #ChengalpattuNorth #StudentAchievement
2
11
74
698
🗳️ வாக்காளர் சிறப்பு முகாம் – இன்று நடைபெறுகிறது! 18 வயது பூர்த்தியடைந்தவர்களா? உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இதுவே நல்ல வாய்ப்பு! புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மற்றும் விவரங்கள் திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காகப் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 📌 முக்கியப் படிவங்கள்: 🔹 Form 6 – புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் 🔹 Form 7 – பெயர் நீக்கம் மற்றும் ஆட்சேபனை 🔹 Form 8 – விவரங்கள் திருத்தம், முகவரி மாற்றம் 📅 நாள்: 29.11.2026, ஞாயிற்றுக்கிழமை உங்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்துங்கள்! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்வோம்! 🗳️ – திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் #VoterSpecialCamp #VoterRegistration #Form6 #Form7 #Form8 #VoterAwareness #Pallavaram #PallavaramKamatchi #ChengalpattuNorth
2
11
30
409
🎓 கல்விச் சாதனைகளைக் கொண்டாடும் மகிழ்ச்சியான தருணம்! சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களின் கல்விப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள பட்டதாரி மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அறிவால் உயர்ந்து, திறமையால் சாதித்து, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் சிறந்த தலைமுறையாகத் திகழ வாழ்த்துகிறேன்! #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth #GraduationDay
3
4
165
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், திருநீர்மலை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மாண்புமிகு பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள், அங்குள்ள குழந்தைகளுடன் அன்பாகவும் நகைச்சுவையாகவும் கலந்துரையாடி, அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்ட இனிய தருணங்கள்! குழந்தைகளின் வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் நலனில் அக்கறை கொண்டு அவர்களுடன் நேரம் செலவிட்ட இந்த சந்திப்பு சிறப்பானதாக அமைந்தது. களத்தில் என்றும்… மக்களுக்காக, மக்களுடன்! ❤️ #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth #Pammal #Tiruneermalai
7
56
546
"ச. ஜோசப் விஜய் நூறு" நூல் வெளியீட்டு விழா! சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற, நூலாசிரியர் திருமிகு அலெக்சாண்டர் இருதயநாதன் B.A., LL.B (Hons), சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் எழுதிய "ச. ஜோசப் விஜய் நூறு" நூல் வெளியீட்டு விழாவில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்களும், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. VKR.S. தியாகராஜன், MLA அவர்களும் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்து, நூலினை வெளியிட்டார்கள். இந்நிகழ்வில் வழக்கறிஞர் S. அறிவழகன் அவர்களும் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும், முக்கியப் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramMLA #ChengalpattuMLA #BookLaunch #JosephVijayNooru #Kotturpuram #AnnaCentenaryLibrary #PallavaramConstituency #PublicService
2
7
51
570
பல்லாவரம் 26-வது வார்டில் பழுதடைந்த தெருவிளக்கு உடனடியாகச் சரிசெய்யப்பட்டது! பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 26-வது வார்டு மேற்குப் பகுதியில் உள்ள நாயுடு ஷாப் ரோட்டில் (Naidu Shop Road) கடந்த மூன்று நாட்களாகத் தெருவிளக்கு எரியாமல் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்துத் தகவல் அறிந்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள், பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுத்ததன் பேரில், பழுதடைந்த தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு மீண்டும் ஒளிரச் செய்யப்பட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருவதே எங்களின் தலையாய கடமை! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramMLA #NammaPallavaramUpdates #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth
8
16
405
திரிசூலம் ஏரி தூர்வாரிச் சுத்தம் செய்யப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன! திரிசூலம் ஏரியைத் தூர்வாரிச் சுத்தம் செய்து கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. மழைக்காலங்களில் நீர்நிலைகளைப் பாதுகாத்து, அப்பகுதி மக்களின் நலனை உறுதி செய்யும் வகையில் இப்பணிகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் நலனுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் என்றும் எங்கள் பணி தொடரும்! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramMLA #Thirusulam #LakeRestoration #WaterConservation #NammaPallavaramUpdates #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth
4
62
1
178
2,424
பல்லாவரம் 21-வது வார்டு பெருமாள் நகரில் பாதாளச் சாக்கடை அடைப்பு சரிசெய்யப்பட்டது! பல்லாவரம் பகுதி, 21-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் நகரில் கடந்த இரண்டு வாரங்களாகப் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சீராக வெளியேறாததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தொடர்புகொண்டு உடனடி நடவடிக்கை எடுத்ததன் பேரில், பாதாளச் சாக்கடை அடைப்பு சரிசெய்யப்பட்டுக் கழிவுநீர் தடையின்றி வெளியேற வழிவகை செய்யப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்டநாள் சிரமத்திற்குத் தீர்வு காணப்பட்டு, சுகாதாரமான சூழல் ஏற்படுத்தப்பட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகளையும், சுகாதாரமான சூழலையும் உடனுக்குடன் உறுதி செய்வதே எங்களின் தலையாய கடமை! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramMLA #NammaPallavaramUpdates #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth
1
6
18
391
பழைய பல்லாவரம் 21-வது வார்டு அருள் முருகன் நகர் மெயின் ரோட்டில் பாதாளச் சாக்கடை அடைப்பு சரிசெய்யப்பட்டது! பழைய பல்லாவரம், 21-வது வார்டு, அருள் முருகன் நகர் மெயின் ரோட்டில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் தேங்கி நின்றதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடு மற்றும் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவியது. பொதுமக்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள், உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுத்ததன் பேரில், பாதாளச் சாக்கடை அடைப்பு அகற்றப்பட்டு, தேங்கியிருந்த கழிவுநீர் வெளியேற்றப்பட்டுச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கழிவுநீர் தேக்கப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றிச் சென்று வர வழிவகை செய்யப்பட்டது. மக்களின் பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் உடனுக்குடன் உறுதி செய்வதே எங்களின் தலையாய கடமை! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். #PallavaramMLA #NammaPallavaramUpdates #OldPallavaram #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth
2
9
35
480
அஸ்தினாபுரம் 22-வது வார்டு பஜனை கோவில் தெருவில் பழுதடைந்த தெருவிளக்கு சரிசெய்யப்பட்டது! பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 22-வது வார்டு, அஸ்தினாபுரம் பகுதி, பஜனை கோவில் தெருவில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்ததால், அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் போதிய வெளிச்சமின்மை காரணமாகப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவியது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள், உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுத்ததன் பேரில், பழுதடைந்திருந்த தெருவிளக்கு சீரமைக்கப்பட்டு மீண்டும் ஒளிரச் செய்யப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் சென்று வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் உடனுக்குடன் உறுதி செய்வதே எங்களின் தலையாய கடமை! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். #PallavaramMLA #NammaPallavaramUpdates #Hasthinapuram #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth
5
13
360
மக்கள் தலைவர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தலைவரின் பயணத்தையும் அவரைப் பற்றிய பதிவுகளையும் கொண்ட இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு, நூல் சிறப்பாக வெளிவர வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நூல்கள் அறிவை வளர்க்கட்டும்! வாசிப்பு சிந்தனையைச் செழுமைப்படுத்தட்டும்! #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth
1
7
30
457
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் நாளில், அதன் உயரிய நோக்கங்களையும் மாண்புகளையும் நினைவுகூர்வோம். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை விழுமியங்களைப் போற்றி, நமது உரிமைகளையும் கடமைகளையும் உணர்ந்து, ஜனநாயகத்தின் வலிமையைப் பாதுகாப்போம். அனைவருக்கும் இனிய இந்திய அரசியலமைப்பு நாள் நல்வாழ்த்துகள்! #ConstitutionDay #SamvidhanDiwas #PallavaramKamatchi #PallavaramTVK #TVK
4
22
335
பல்லாவரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 6 முக்கியக் கோரிக்கைகள்! பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சியையும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளையும் முன்னிறுத்தி, ஆறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களிடம் நேரில் வழங்கினேன். இதில், 1. மூவரசம்பேட்டை சாலை விரிவாக்கம். 2. திருநீர்மலையில் ரயில்வே மேம்பாலம் அமைத்தல். 3. பல்லாவரம் – குன்றத்தூர் சாலை விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்துதல். 4. பொழிச்சலூர் – கவுல் பஜாரில் வடிகால் வசதிகள். 5. நாகல்கேணி – திருநீர்மலை சாலை விரிவாக்கம். 6. பல்லாவரத்தில் விளையாட்டு அகாடமி அமைத்தல். மேலும், தொகுதியின் போக்குவரத்து, அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தேவையான கூடுதல் திட்டங்களையும் எடுத்துரைத்து, அவற்றை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தேன். பல்லாவரத்தின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்! #Pallavaram #PallavaramMLA #InfrastructureDevelopment #PublicService #ChengalpattuNorth #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing
1
17
85
911
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கை! தமிழக வெற்றிக் கழகத்தின் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் நேரில் சந்தித்து, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியத் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை வழங்கி அவற்றை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். அவர் முன்வைத்த முக்கிய வளர்ச்சித் திட்டக் கோரிக்கைகள்: ▪️ மூவரசம்பேட்டை சாலை விரிவாக்கம். ▪️ திருசூலத்தில் ரயில்வே கேட்டை கடப்பதற்காக ரயில்வே மேம்பாலம் அமைத்தல். ▪️ பல்லாவரம் – குன்றத்தூர் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து தொடருதல். ▪️ பொழிச்சலூர் – கவுல் பஜார் பகுதிகளில் வடிகால் (Drainage) திட்டப் பணிகள். ▪️ நாகல்கேணி – திருநீர்மலை சாலை விரிவாக்கம். ▪️ பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் விளையாட்டு அகாடமி (Sports Academy) அமைத்தல். மேலும், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் போக்குவரத்து, அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்குத் தேவையான கூடுதல் திட்டங்கள் குறித்தும் அமைச்சரிடம் எடுத்துரைத்து, தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை வைத்தார். பல்லாவரம் தொகுதியின் வளர்ச்சி… மக்களின் நலன்… எங்கள் இலக்கு! #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth #Pammal
7
51
361
4,732
அக இருளை நீக்கி, அன்பும் அமைதியும் நிறைக்கும் ஒளித் திருநாள்! 🪔✨ இல்லங்கள் தோறும் தீப ஒளி பரவட்டும்… இதயங்கள் தோறும் மகிழ்ச்சி மலரட்டும்… அனைவரின் வாழ்விலும் நம்பிக்கையும் நலமும் பெருகட்டும்! அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்! 🪔🙏 – திருமதி. J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் #KarthigaiDeepam #கார்த்திகைதீபம் #KarthigaiDeepamWishes #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #ChengalpattuNorth
5
26
352
மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளுக்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து சிறக்கட்டும்! #PallavaramKamatchi #PallavaramTVK #ChengalpattuNorth #TVK #TVKITWing
1
3
15
309
போலியோ இல்லாத உலகை உருவாக்குவோம்! இளம்பிள்ளைகளைப் போலியோ பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் நேரில் பங்கேற்று, குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தேன். ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து கிடைப்பதை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பு. பெற்றோர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கிடக் கேட்டுக்கொள்கிறேன். போலியோ இல்லா தலைமுறை – நம் பொறுப்பு! ❤️ திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramKamatchi #PallavaramMLA #PolioDrops #PulsePolio #ChildHealth #PallavaramConstituency #PublicHealth #PublicService
3
11
196
அனகாபுத்தூர் - பம்மல் பொதுநலச் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்பு! பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் அமைந்துள்ள அனகாபுத்தூர் - பம்மல் பொதுநலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பொதுநலச் சங்கங்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் நேரில் கலந்துகொண்டு, பொதுநலச் சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் அப்பகுதியின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் பொதுநலச் சங்க நிர்வாகிகள், குடியிருப்போர் நலச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். #PallavaramMLA #Anakaputhur #Pammal #ResidentsWelfareAssociation #PublicGrievance
4
18
415
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்! இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமைப் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் நேரில் பார்வையிட்டு, குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்து, 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramMLA #PolioDrops #PulsePolio #ChildHealth #PallavaramConstituency
3
26
405