Rajesh Kumar (@RajeshKumarSMLA) header
Rajesh Kumar (@RajeshKumarSMLA) profile picture

Minister of Tourism | Government of Tamil Nadu MLA Killiyoor Constituency, Former DCC President - Kanyakumari West

Kanyakumari
Joined May 2024
Photo by Rajesh Kumar (@RajeshKumarSMLA)Photo by Rajesh Kumar (@RajeshKumarSMLA)Photo by Rajesh Kumar (@RajeshKumarSMLA)Photo by Rajesh Kumar (@RajeshKumarSMLA)Photo by Rajesh Kumar (@RajeshKumarSMLA)Photo by Rajesh Kumar (@RajeshKumarSMLA)Photo by Rajesh Kumar (@RajeshKumarSMLA)Photo by Rajesh Kumar (@RajeshKumarSMLA)Photo by Rajesh Kumar (@RajeshKumarSMLA)Photo by Rajesh Kumar (@RajeshKumarSMLA)
ஊத்துமலை ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தென்காசி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொருளாளருமான எஸ்.பி. முரளி ராஜா அவர்களின் சகோதரி திருமதி எம். தமயந்தி நாச்சியார் அவர்களின் மறைவையொட்டி, இன்று அவரது இல்லத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான கே.வி. தங்கபாலு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வி.பி. துரை, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.எம். ராமேஸ்வரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் திரு.அமீர்கான் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினேன்.
2
7
242
மரபும் காக்கப்பட்டு, மத நல்லிணக்கமும் நிலைநாட்டப்பட்டுள்ளது! திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற மாண்பையும் அமைதியையும் உறுதி செய்த தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். #கார்த்திகைதீபம் #திருப்பரங்குன்றம் #மதச்சார்பின்மை #TVK #CMVijay
1
29
133
814
கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்! திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகிற்கு ஒளியின் மகத்துவத்தையும், அறத்தின் வெற்றியையும் உணர்த்திய சிவபெருமானின் திருவடிவமே கார்த்திகை தீபத் திருநாளின் சிறப்பாகும். இருள் நீங்கி ஒளி பிறப்பதைப் போல, அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் அகன்று, அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறையட்டும். இல்லங்கள் தோறும் நம்பிக்கையின் ஒளி பரவட்டும்! அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!
2
10
36
488
கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்த போது, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. விஸ்வநாதன் அவர்களும் உடனிருந்தார். #CMVijay #TamilNadu #tngovtgift
5
155
2
1,086
7,225
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் பசுமைப் பூங்கா, சாகசச் சுற்றுலா, உணவகம், உள்ளிட்ட புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரடி கள ஆய்வு செய்தேன். இவ்வாய்வின் பொது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், இ.ஆ.ப., திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு V.P. துரை, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ், மற்றும் உள்ளாட்சி பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
1
5
30
444
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மிக சுற்றுலா தலமும் குமரி மாவட்டத்தின் புனிதர் தேவசகாயம் அவர்கள் ஞானஸ்நானம் பெற்ற வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருக்குடும்ப திருத்தலத்திற்கு வருகின்ற பக்தர்களின் வசதிக்காக தங்கும் இடம், சமுதாயக் கூடம், மற்றும் வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகளை சுற்றுலாத்துறை சார்பில் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன். அப்போது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. V.P.துரை அவர்கள், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ் அவர்கள், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சதீஷ் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
6
22
318
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடலோர அமைதி மற்றும் குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் வாணியக்குடியில் நடைபெற்ற உலக மீனவர் தின விழாவில் மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு. ஶ்ரீநாத் அவர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தேன். இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ஆட்சியர் திரு. மு.பிரதாப். இ.ஆ.ப, குமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.. விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி. தாரகை கத்பர்ட், திரு.செல்லசுவாமி, திரு. ஆஸ்டின், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை , மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10
26
339
விளவங்கோடு சட்டமன்றத்திற்குட்பட்ட, மாலைக்கோடு – பகுதியில் அமைக்கப்பட்ட ஊர்ப்புற நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள், நூலகர்கள்,புரவலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பேரியக்க தோழர்கள், மாணவ, மாணவர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
4
20
284
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து துறை அலுவலர்களுடன் எனது தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள், மாநகராட்சி ஆணையாளர். திருமதி. ஐஸ்வர்யா, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆஸ்ட்டின், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2
6
42
2,108
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று அனைத்திந்திய தொழில் வல்லுநர் காங்கிரஸ் (AIPC - தமிழ்நாடு) சார்பில் முதலாவது வருடாந்திர மாநாடு 2026 (TN Annual Summit 2026) மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்து, சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் இம்முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்! #AIPC #AIPCTamilNadu #INC #TamilNadu #Congress
7
26
386
நாகர்கோவில் மாநகராட்சி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கட்டப்படும் அன்னை இல்லம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி சிறப்பித்தேன். இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள், மாநகராட்சி ஆணை யாளர். திருமதி. ஐஸ்வர்யா, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆஸ்ட்டின், மண்டல தலைவர் திரு.செல்வகுமார், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சிவபிரபு,, மாநகர மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.நவீன் குமார் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
5
23
395
மீனவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான உலக மீனவர் தின நல்வாழ்த்துக்கள்.
1
3
23
221
இரங்கல் செய்தி கிள்ளியூர் பேரூராட்சி 8 - வது வார்டு உறுப்பினர் திரு. R.பிபின் ராஜ் அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. R.பிபின் ராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்க தோழர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் தங்கள் துயரத்தில் பங்கேற்கும், செ. ராஜேஷ் குமார் சுற்றுலாத் துறை அமைச்சர், தமிழ்நாடு.
6
3
1
12
338
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இன்று திரு.விஜய் வசந்த் MP, திரு. சசிகாந்த் செந்தில் MP ஆகியோருடன் இணைந்து அவரது உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2
14
88
627
படிக்கவும் பகிரவும் #Belonging- A Journey Of Love
6
27
108
1,098
ஆழ்ந்த இரங்கல்! கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களுக்காகப் பணியாற்ற வேண்டிய நிலையில் அவரது திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
3
10
27
381