புலவர் (@RiseOfLtte) header
புலவர் (@RiseOfLtte) profile picture

If You Win,You Can Lead. If You Loose,You Can Guide.⚔️ நம் தலைமுறைக்கு தமிழரின் வீரம்செறிந்த போராட்ட வரலாற்றை பதிவதும், புரட்சிகரமான சிந்தனையை வளர்ப்பதும்.

tamileezham
Joined November 2011
Photo by புலவர் (@RiseOfLtte)Photo by புலவர் (@RiseOfLtte)Photo by புலவர் (@RiseOfLtte)Photo by புலவர் (@RiseOfLtte)Photo by புலவர் (@RiseOfLtte)Photo by புலவர் (@RiseOfLtte)Photo by புலவர் (@RiseOfLtte)Photo by புலவர் (@RiseOfLtte)Photo by புலவர் (@RiseOfLtte)Photo by புலவர் (@RiseOfLtte)
தமிழின விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடிய தமிழீழ தேசியத் தலைவருக்கு மாவீரர் நாளில் ஒன்றுதிரண்டு மலர்வணக்கம் செலுத்தியது தமிழினம். #மேதகு #தமிழினத்தலைவர் #தமிழீழத்_தேசியத்தலைவர்
5
10
138
பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் ஒன்றுகூடி மாவீரர்களுக்கு விளக்கேற்றினர். பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பகுதியில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தாயகத்தில் அமைந்திருந்த துயிலுமில்லத்தை கண்முன் நிறுத்தியது போன்ற நினைவுகளுடன் நடுகற்கள் நடப்பட்டு அவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்கள் பொருத்தப்பட்டு அணிவகுப்பு மரியாதையுடன் தமிழீழத் தேசியக்கொடி எடுத்துவரப்பட்டு ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியத்தலைவரின் 2008 மாவீரர் நாள் உரை ஒலிபரப்பைத் தொடர்ந்து , மாவீரர்களின் உறவுகளால் விளக்கேற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இதேவேளை பல்லாயிரக்கணக்கான மாவீர்களின் திருவுருவப்படங்கள் மாவீரர் மண்டபத்தில் வைக்கப்பட்டு உறவுகளால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. உலக முற்றத்தில் தமிழீழ விடுதலை வரலாற்றை வெளிப்படுத்தும் உணர்வுடன் கூடிய மிக வலிமையானதொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. தமிழின விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த விடுதலைப் புலிகளின் தியாகத்தை ,தேசியத்தலைவரின் அடிபணியாத இலட்சியத்தை புலம்பெயர் தமிழர் தலைமுறைகள் அறிந்து வழிபற்றிக்கொள்ளும் வீரவரலாறுகளின் ஒட்டுமொத்த சாட்சியமாய் இந்நாள் அமைந்திருக்கிறது. #மாவீரர்நாள்2026
12
1
23
549
பத்துக்கோடி தமிழர்களின் ஒற்றைப்பெயர்ச் சொல். பிரபாகரன். #தமிழினத்தலைவர்72 #தேசியத்தலைவர்72 #மேதகு72
1
14
34
837
“தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி” அன்று பதிவு செய்த மாவீரர் துயிலும் இல்லங்கள் பற்றிய தொகுப்பு மீள் நினைவில்….. #மாவீரர்_துயிலுமில்லம்
16
41
410
"எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது" எனும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமான சிந்தனைக்கருவாக…. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்கள், தேசியத் தலைவர், தளபதிகள், போராளிகள் படைத்த வீரவரலாற்றை எமது தலைமுறைக்கு கடத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முதலாவது மாவீரர் நாள் 2016 நவ 27 தொடங்கப்பட்டு இம்முறை 10 வது ஆண்டை எட்டி நிற்கிறது. ‘நிலத்தை இழ, போராளிகளைத் தக்கவை' நிலத்தை இழந்தால் போராளிகளைக்கொண்டு நாளை நிலத்தை மீட்கலாம்.போராளிகளை இழந்தால் நாளை நிலத்தை மீட்க முடியாது என்று தனது மக்களைத் தலைமைதாங்கி வழிநடத்தி சீனதேசத்தை கட்டியெழுப்பிய புரட்சியாளன் மாவோ சேதுங் கூறியதுபோல் 2009 இறுதிப்போரின் பின்னர் புலம்பெயர்ந்த போராளிகளின் துணிச்சல்மிக்க செயற்பாடுகளால் உலகின் முற்றத்தில் உயரப் பறக்கவிடப்பட்டது தமிழர் படையின் தேசியக் கொடியான பு*லி*க்கொடி. இன்று நவ21 தமிழீழ தேசியக் கொடிநாள். ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடந்த தமிழினத்தின் கூனல் நிமிர்த்தி போராட வைத்த எமது ஒப்பற்ற தேசியத் தலைவரை எம்மினம் புலித் தலைவன் என்றே அழைக்கத்தொடங்கியது. கடாரம் வென்ற சோழரின் தமிழர் சாம்ராஜயத்தில் உயரப்பறந்த புலிக்கொடி மீண்டும் புதிய உத்வேகத்துடன் பாயத்தொடங்கியது எமது தலைவனின் காலத்திலேதான். 1990 நவ21 இல் முதல் முதலாக தமிழீழ தேசியக்கொடி தலைவரால் ஏற்றப்பட்டு தேசியக்கொடி தமிழரின் கொடியாக பட்டொளி வீசிப்பறக்கத் தொடங்கியது. இக்கொடியின்கீழ் அணிதிரண்டு பல்லாயிரம் போராளிகள் தமிழின விடுதலை வரலாற்றை தமது செங்குருதியால் எழுதிச் சென்றனர். உலக வல்லாதிக்கத்தின் துணையுடன் தமிழீழதேசத்தின் இறைமை அழிக்கப்பட்டாலும், தமிழரிடம் ஒரு தேசம் இருந்தது என்பதை உலக முற்றத்தில் ஓங்கி முழங்கும் ஒற்றைச்சாட்சி இந்தக்கொடி மட்டுமே. எமது தேச விடுதலைக்காக கொடுக்கப்பட்ட அத்தனை உயிர்த்தியாகங்களின் ஒட்டுமொத்த அடையாளமாக விளங்கும் இக்கொடி ஒவ்வொரு தமிழர் கரங்களிலும் இன்றையநாளில் ஏந்தப்படவேண்டும். தலைவரால் தமிழினத்துக்கு வழங்கப்பட்ட இக்கொடியின்கீழ் அணிவகுத்து நிற்பதன் மூலமே தமிழினம் தனது விடுதலையை வென்றெடுக்க முடியும். —————————————- புலவர் கடற்புலிகள்.
18
57
633
11.11.1993 தொடங்கப்பட்ட ‘தவளைப் பாய்ச்சல்’ நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இவ் வெற்றிகரத் தாக்குதலில் கடற்கரும்புலிகள், மற்றும் தளபதிகள், போராளிகள் உட்பட 460 வரையான மாவீரர்கள் பூநகரி நாயகராக வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். #பூநகரி_நாயகர்கள்
1
6
31
543
கனடாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொன்விழா நிகழ்விலிருந்து…. #தவிபு50
1
17
92
930
கனடாவில் சிறப்பாக நடந்தேறிய “தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 ஆவது ஆண்டு பொன்விழா”. ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற பெயர் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என மாற்றப்பட்டதன் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வு, நவம்பர் 7, 2026 அன்று கனேடிய மண்ணில் பெருமளவிலான மக்களின் ஆதரவுடனும் பங்கேற்புடனும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும், அதன் வளர்ச்சிப் பயணத்தையும், ஈழத்தமிழர்களின் கூட்டுத் தேசிய உணர்வையும், தமிழீழ மெய்நிகர் அரசையும், தமிழீழ இறையாண்மையையும் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த பொன்விழா நிகழ்வில் பங்கேற்ற மக்கள் எழுச்சிமிக்க தேசிய உணர்வுடன் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். கலந்துகொண்டவர்கள் “விடுதலைப்புலிகள் மக்களின் பிரதிநிதிகள்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மேல் சட்டையையும் அணிந்து இருந்தனர். கனேடிய மண்ணில் வாழும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில், இந்த 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வு ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவாக நிச்சயமாக நிலைபெறும். #தவிபு50
16
49
710
எங்கள் உயிரினும் மேலான மாவீரர்களின் பெற்றோர்களே ! உரித்துடையோர்களே ! எமது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களினால், தாய் நாட்டின் விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த வீர மறவர்களான மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை, உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் எங்கள் தாயக விடுதலைப் போராட்டப் பாதையில் மாவீரர் நாளை முன்னிட்டு இடம் பெறுவது மரபாகும். அந்த வகையில் இவ்வாண்டும் கார்த்திகை மாதம் 15 ஆம் நாள் (15.11.2026) ஞாயிற்றுக் கிழமையன்று முற்பகல் 10:30 மணிக்கு ஒக்ஸ்ப்போட் பகுதியில் உள்ள தமிழருக்குச் சொந்தமான ( OX17 3QP ) உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் மாவீரர் பொற்றோர் மற்றும் உரித்துடையோரை அன்புரிமையுடன் அழைக்கின்றோம். "நன்றி" நிர்வாகம் தமிழீழ மாவீரர் பணிமனை ஐக்கிய இராட்சியம்.
5
22
373
தமிழீழத்தில் விடுதலைப்புலிகளை அழித்துவிடலாம் ஆனால் விடுதலைப்புலிகள் படைத்துவிட்ட புரட்சிகர சகாப்தத்தை அவர்களது வீரவரலாற்றை அவர்கள் எதற்காக மடிந்தார்களோ அந்தப்புனித இலட்சியத்தை எந்தச் சக்தியாலும் அழித்துவிடமுடியாது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
25
1
119
1,043
சிறிலங்காவும்,அதற்குத் துணைபோன நாடுகளும் இணைந்து செய்த அரசியற் படுகொலை. தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களை படுகொலை செய்ததன் மூலம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் மீண்டும் தகர்க்கப்பட்டது. சமாதானம் மீதிருந்த எமது மக்களின் கடைசி நம்பிக்கையும் அடியோடு பிடுங்கியெறியப்பட்டது. 🙏🏻வீரவணக்கம்🙏🏻 #பிரிகேடியர்_தமிழ்ச்செல்வன்
1
9
37
520
புதிய அறிக்கை: ஆனந்தபுரச் சமர் (The Battle of Ananthapuram) சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) ஆங்கிலம் மற்றும் தமிழில் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, 2009 ஏப்ரலில் நிகழ்ந்த இலங்கைப் போரின் இறுதிப் பெரும் சமரை ஆராய்ந்து, போரில் உயிர்தப்பியவர்களின் சாட்சியங்களை ஆவணப்படுத்துவதுடன், படுகாயமடைந்த 300 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை இலங்கை இராணுவம் படுகொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் இவ்வறிக்கை முன்வைக்கின்றது. ஏற்கனவே படுகாயமடைந்திருந்த பலர் உட்பட சுமார் 800 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் சுற்றிவளைக்கப்பட்டு, ஆயுதங்களுக்கான ரவைகள், மருத்துவப் பொருட்கள், உணவு மற்றும் நீர் கிடைக்காத நிலையில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் சுமார் 150 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அங்கு கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான காயமடைந்த போராளிகள் அதன் பின்னர் ஒருபோதும் காணப்படவில்லை. itjpsl.com/reports/battle-of…
164
மாதாந்த நினைவு வணக்க நிகழ்வில் புலிகளின் வீரம் போற்றும் பாடலுடன் அங்கயற்கண்ணி.
19
98
1,432
மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு. ஐப்பசி மாதம்-2026 (நாளை ஞாயிற்றுக்கிழமை) கடந்த காலங்களில் தமிழீழத் தேசியவிடுதலைப் போரட்டத்தின் போது இதே மாதத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் குறிப்பாக மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 மாவீரர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் பெண் மாவீரராக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். மாலதி அவர்களையும், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொது மக்கள் ஆகியோரை நினைவு கொள்ளும் நினைவு வணக்க நிகழ்வு வழமைபோல் உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் நாளை 25.10 2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு உணர்வுபூர்வமாக நடைபெற ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. எனவே தாயக விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம். "மாவீரர்கள் காலத்தால் அழியாத அற்புதப் பிறவிகள்." தமிழீழ தேசிய தலைவர். தமிழீழ மாவீரர் பணிமனை, உலகத் தமிழர் வரலாற்று வளாகம் ஐக்கிய இராச்சியம் . 07507676675 07983337797 07365291272 07460822946
6
14
308
அவரிடம் கற்றுக்கொண்டவை ஏராளம். ஒரு சாதாரண போராளியையும் அபாரதுணிச்சல் மிக்க போராளியாக வளர்த்தெடுக்கும் சிறப்பியல்பை அவர் பெற்றிருந்ததாலேயே கடற்புலிகள் அமைப்பு எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியிருந்தது. கடற்பயிற்சிகள் தொடக்கம் கனரகப் பீரங்கிப் பயிற்சிகள்வரை நேரில்நின்று நெறிப்படுத்தும் அவரது செயற்திறனைக்கண்டு நாம் அதிசயித்ததுண்டு. ஓய்வில்லாமல் உழைத்து அவர் கட்டியெழுப்பிய கடற்புலிகள் வீரத்தை இன்றும் உலகம் வியப்போடு பார்த்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை அதன் தலைவிதியை கடற்போர்தான் நிர்ணயித்திருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்த இந்தக் கடற்போரை 18 வருடங்களுக்கும் மேலாக சொந்தப்பயிற்சியோடு மூர்க்கத்தனமாக எதிர்கொண்டு தமிழீழக் கடற்பரப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழீழக் கடற்படைத் தளபதி எங்கள் சூசையண்ணை. சேரா ஒஸ்கார்,ரூ எய்ற்,திறி சீறோ எனப் பல்வேறு பரிபாசைப் (கோட்வேட்)பெயர்கள் அவருக்கிருந்தாலும் அவருக்கு நாம் வைத்த (கோட்வேட்) பெயர் ‘நாட்டாமை’ இன்று எங்கள் நாட்டாமைக்குப் பிறந்தநாள். இனிய பிறந்தநாள் நினைவுகளோடு… புலவர். #சிறப்புத்தளபதி_சூசை #தமிழீழ_கடற்படை_தளபதி #கடற்புலிகள்
1
11
89
1,213
கூட இருந்தோர் நினைவுகளில் துடிக்கும் எம் நெஞ்சம்- ஒளிந்திருந்து குழிபறிக்கும் கும்பலுக்கா அஞ்சும். #நெருப்பின்_வரிகள்
2
27
1
158
1,441
எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்தில் இருந்தே பிறக்கிறது. #தமிழீழத்_தேசியத்_தலைவர்
4
57
301
2,325
நாம் சிந்திய இரத்தமும், இழந்தவைகள், தொலைத்தவைகள் என அனைத்தும் எமது நாட்டை மீட்டெடுப்பதற்காகவே. நாடு என்பது நிலம்,மக்கள், மொழி,உரிமை,தேசியம் அடையாளம் என்பவற்றை உள்ளடக்கியதே. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், அதனைத் தலைமேற்றுத் தாங்கிய தலைவரையும் அவர் வழியில் இறுதிவரை களமாடிய தளபதிகள்,போராளிகளின் தியாகங்களையும் கேள்விக்குட்படுத்த முனையும் துரோகசக்திகளின் செயற்பாடுகளை உணர்வுள்ள தமிழர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள்.
13
65
823