NTK 2.0 (@TTNews26) header
NTK 2.0 (@TTNews26) profile picture

நாம் தமிழராய் இணைவோம்❤💛 Belongs To Tamilian Stock 🔥

Joined June 2018
Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)Photo by NTK 2.0 (@TTNews26)
தலைமுறைகள் நூறு கடந்தாலும்.. தந்த வீரங்கள் மறக்குமா 💛♥️ #Nov27 #மாவீர்நாள்
75
2
249
2,309
முப்பாட்டன் முருகப்பெருமானின் திருவிழாவில் முதலமைச்சருக்குத் துதிபாடுவதா? கோடிக்கணக்கான தமிழர்களின் இறைநம்பிக்கையை இழிவுபடுத்தியவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் நடைபெற்ற தமிழர்களின் தொன்மையான சூரன் போர் (சூரசம்ஹாரம்) பெருவிழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய ‘அரோகரா’ முழக்கத்தைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேசுக்கும் எழுப்பியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இறைவனை வழிபட வந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வழிபாட்டு மரபுகளை மீறி ஆட்சியாளர்களுக்குத் துதிபாடியிருப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களின் உள்ளத்தை ஆழமாகக் காயப்படுத்தியுள்ள வெட்கக்கேடான செயலாகும். தமிழினத்தின் தொன்மையான வழிபாட்டு மரபின் அடையாளமாகவும், தமிழர் பண்பாட்டின் பெருமையாகவும் திகழ்பவர் நமது முப்பாட்டன் முருகப்பெருமான். அவரது வீரத்தையும், வெற்றியையும், அறத்தையும் போற்றிக் கொண்டாடும் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழா என்பது எவ்வித அரசியல் வேறுபாடுமின்றித் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழிபடும் புனிதமான நிகழ்வாகும். அத்தகைய சிறப்புமிக்க பெருவிழாவிலேயே முருகப்பெருமானுக்குச் சமமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் வைத்து ‘அரோகரா’ முழக்கமிடுவது எந்த வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, சூரபத்மனை வீழ்த்தி அறத்தை நிலைநாட்டிய முப்பாட்டன் முருகப்பெருமானின் வீரத்தைப் போற்ற வேண்டிய இடத்தில், முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி, அவரைப் போல முருகப்பெருமான் பகையை வென்றதாகப் பொருள்படும் வகையில் பாடல் பாடியிருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்? முருகப்பெருமானின் வீரத்தை விளக்குவதற்கு முதலமைச்சர் விஜய்யின் பெயர்தான் அளவுகோலா? முருகப்பெருமானுடன் முதலமைச்சரை ஒப்பிடுவதே தவறெனும்போது, முருகனுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்தித் துதிபாடுவது எத்தகைய ஆணவப்போக்கு? ஆட்சியாளர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று பதவிகளையும், பொறுப்புகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழர்களின் தொன்மையான இறை வழிபாட்டையும், பண்பாட்டு மரபுகளையும் கொச்சைப்படுத்துவதா? பதவி மோகத்திற்கும், தனிமனிதத் துதிபாடலுக்கும் ஒரு வரம்பே கிடையாதா? ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காகக் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், உணர்வுகளையும் பலிகொடுப்பதுதான் கலைஞர்களின் பணியா? இதற்குப் பெயர்தான் இறைபக்தியா? அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் செய்யும் அடிமைச் சேவகமா? இதையெல்லாம் முதலமைச்சர் விஜய் சொல்லித்தான் செய்கிறார்களா? அல்லது முதலமைச்சரை மகிழ்வித்து அவரிடம் நற்பெயர் பெறுவதற்காக அவரைச் சுற்றியிருப்பவர்கள் தன்னிச்சையாக இப்படியான கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்களா? முதலமைச்சருக்குத் தெரியாமல் நடந்தது என்றால், இத்தகைய செயலை அவர் இதுவரை கண்டிக்காதது ஏன்? தமிழர்களின் இறைநம்பிக்கையைப் புண்படுத்தியவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதற்கு முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் உரிய விளக்கமளிக்க வேண்டுமா, இல்லையா? மக்கள் அளித்த பதவி என்பது மக்களுக்குப் பணியாற்றுவதற்குத்தானே தவிர, மக்கள் வணங்கும் இறைவனுக்கு இணையாகத் தங்களை உயர்த்திக்கொள்வதற்கல்ல! ஆட்சியும் அதிகாரமும் இன்று வரும்; நாளை போகும். ஆனால், தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் பெருமையும், அவரை வழிபடும் மக்களின் நம்பிக்கையும் காலங்காலமாக நிலைத்து நிற்கும். அதனைத் தனிமனிதப் புகழ்ச்சிக்காக இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, திருச்செந்தூர் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழாவில் முப்பாட்டன் முருகப்பெருமானின் வழிபாட்டு மரபை மீறி முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்டவர்களும், முருகப்பெருமானுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்திப் புகழ்பாடியவர்களும், கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களிடம் உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், அரசு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்படியொரு செயல் அரங்கேறியதற்குப் பொறுப்பேற்று, முதலமைச்சர் விஜய் உரிய விளக்கமளிப்பதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இனி எந்தவொரு திருக்கோயில் நிகழ்விலும் அரசியல் தலைவர்களுக்கான தனிமனிதத் துதிபாடலுக்கு இடமளிக்கப்படாது என்பதை உறுதிசெய்யவும் வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
300
802
43
1,764
66,899
விளங்கிடும் தமிழ்நாடு🤷🤦🤦 இப்படி ஒவ்வொரு தற்குறிக்கும் ரெண்டு நிமிஷம் விளக்கம் சொல்லி அவுங்க மனசுக்குள்ள பூந்து இது மாற்றம் இல்ல ஏமாற்றம்னு புரிய வெச்சி முடிக்கிறதுக்குள்ள.... 2031 election முடிஞ்சிடும்...🤷😭😭
36
78
706
நம்ம வரலாறு தெரிஞ்சாதனே..🐅🐅 நாம யாருனு தெரியும்..🐅 அப்பதான நாம தலை நிமிர்ந்து நடக்க முடியும்👑🐅
2
167
3
431
3,626
தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? முதலமைச்சர் விஜய் பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னிப்பு கேட்கப்போகிறாரா? நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா? @CMOTamilnadu @TVKVijayHQ மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்? தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா? கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'Sorry வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்? எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா? ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
206
504
16
1,071
30,847
மதுக்கடையை மூடக்கோரினால் மக்களைக் கைது செய்வதா? கார்குடி அரசு மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடியும், அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவில், காய்கறிச் சந்தை, கோவிலுக்கு அருகில் மதுக்கடையைத் திறந்து வைத்திருப்பது ஏன்? அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் மக்களும், சாலையில் பயணிப்போரும் மதுக்கடையால் ஏற்படும் இடையூறுகளைச் சகித்துக்கொண்டுதான் மக்கள் வாழ வேண்டுமா? மக்கள் வாழும் இடத்தில் மதுக்கடையை வைத்துவிட்டு, அவர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று கேட்டால் அதுவே அரசுக்குக் குற்றமாகிவிடுகிறதா? மக்களுக்காக அரசு நடத்துகிறீர்களா? மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? இக்கடையை மூடுவது தொடர்பாக அரசு சார்பில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மூன்று முறை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று காலக்கெடுக்கள் முடிந்தும் கடை அதே இடத்தில் இயங்குகிறது என்றால், அரசின் வாக்குறுதிக்கு என்ன மதிப்பு? அதிகாரிகள் அளித்த உறுதிமொழிக்கு யார் பொறுப்பு? கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்திற்கு, மக்களிடம் மீண்டும் கால அவகாசம் கேட்க என்ன தகுதி இருக்கிறது? பேச்சுவார்த்தை என்பது பிரச்சினைக்குத் தீர்வுகாணவா? போராடும் மக்களைக் கலைத்துவிட்டு மதுவிற்பனையைத் தொடரவா? மூன்று முறை ஏமாற்றப்பட்ட பிறகும் மக்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா அரசு? கடையை மூடக்கோரி கடந்த 18.10.2026 அன்று காலை 10 மணியளவில் போராடிய பொதுமக்கள் 80 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று (16.11.2026) அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ள நிலையில், கார்குடி மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குப் பிறகும் மதுக்கடையைத் தொடர்ந்து நடத்துவதில் அரசு காட்டும் பிடிவாதம் எதற்காக? மக்களின் நிம்மதியைவிட மதுவிற்பனை வருவாய்தான் மேலானதா? அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் மக்களை கைது செய்வது என்ன நியாயம்? மது விற்பனைக்கு அரசின் பாதுகாப்பு! அதை எதிர்க்கும் மக்களுக்குக் கைது நடவடிக்கையா? இதுதான் மக்கள் நல ஆட்சியின் இலக்கணமா? வெட்கக்கேடு! எனவே, தமிழ்நாடு அரசும் அரியலூர் மாவட்ட நிர்வாகமும் இனியும் காலம் கடத்தாமல், கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
31
407
2
776
10,001
தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகனை இதுக்கு மேலயும் கேவலப்படுத்த முடியுமா?? முதல்வர் ஒன்னும் கடவுளுக்கு நிகர் கிடையாது அதுவும் கோவில்ல போய் சூரசம்ஹாரம் நடக்கும் போது🥺 “முதலமைச்சருக்கு அரோகரா… இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா…” 😡😡🤦
1
40
69
757
அறிவிலும் கலப்படமா?
1
178
403
2,355
தற்குறிகள் கீச்சு கீச்சுனு கதற போறானுங்க🤣🤡 நான் ஜீரோ.. HERO கிட்ட கேளுங்க மேகதாது அணை குறித்த கேள்விக்கு🔥 குழந்தைகள் காணாமல் போச்சு கண்டுபிடிக்க முடியல?❗ கள்ளக்குறிச்சி MLA மேல.. துணை சபாநாயகர் மேல நடவடிக்கை எடுக்க முடியல‼️ Endingல நேரு மாமா இல்லையென்றால் என்ன?🤔
1
48
98
985
தமிழ்நாட்டின் மருத்துவ - சுகாதார தரவுகளை மறைப்பதற்கு பெயர்தான் வெளிப்படையான ஆட்சியா??
2
126
281
2,055
இவரு அடி தனியா இருக்கு 😂
2
51
1
129
1,271
பொய் பேசலாம் சார் ஆனா ஏக்கர் கணக்கில் பேச கூடாது🙂 அதுவும் கடைசில ஒன்னு சொன்னிங்க பாத்தீங்களா.. ***திரும்பி ஒரு முற முறைப்பாரு பாருங்க.. நாங்க எல்லாம் நடிங்கி போயிருவோம்****🤣🤣🤪😂
16
1
23
323
தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! தமிழர் எழுச்சி நாள் விழா விழாப் பேருரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: கார்த்திகை 10 | 26-11-2026 காலை 10 மணியளவில் இடம்: எல்.எஸ். திருமண மண்டபம் 100 அடி சாலை, ரகமத் நகர், வருவாய் துறை அலுவலகம் அருகில். பாளையங்கோட்டை திருநெல்வேலி மாவட்டம் மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
6
230
603
7,288
யோவ் விசய் தொலைக்காட்சி இருந்தாலும் உனக்கு இம்புட்டு குசும்பு ஆகாதுயா!😅👌 தற்குறி தலைவனும் தற்குறிகளும் தாக்கப்பட்டனர் 😅🤣
6
238
2
944
35,321
தரவரிசைப் பட்டியல்களில் முதலிடம் பெறுவதற்கு மட்டும் தான் முதலீடுகளா? மக்களுக்கான நாட்டுக்கான உண்மையான வளர்ச்சி எங்கே?
3
181
2
407
4,216
என்னடா இது முரட்டு முட்டுக்கொடுத்த மணியா இது👌😅
3
32
1
86
1,018
இந்தியா முழுக்க நாரடிச்சிட்டாங்க தமிழ்நாட்டு மானத்த😡🤬 CM விஜய் சார் இது தான் தமிழ்நாட்டை தலைநிமிர செய்வதா?? வாழ்த்துகள் ப்ரோ😭😭
1
155
3
279
1,968
கார்த்திக் அண்ணன் on Fire🔥 100 கோடிக்கு போதை பொருள் கடத்திய தவெகவினரை பற்றி CM Vijay Sir வாயை திறந்தாரா? Show மட்டும் தான் பண்ணுவாரு..
2
259
729
15,478
சாட்டை👌🔥 - தவெகவுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே தவெக அமைச்சரால் பாதுகாப்பு இல்லனா.. மக்களுக்கு எப்படி இருக்கும்🙄😡
7
166
1
411
2,996
தமிழ்த்தேசிய முழக்கத்தை தமிழர் மயமாக்கிய செந்தமிழன் சீமான் அவர்கட்கு நெஞ்சு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
16
353
12
1,000
6,229