தருண் NTK (@TamilTeca) header
தருண் NTK (@TamilTeca) profile picture

உலகில் நடக்கும் அநீதிகளை கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன் !

தமிழ்நாடு
Joined February 2023
Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)
தருண் NTK retweeted
சாட்டை துரைமுருகன் மீது வழக்கு: சீமான் கண்டனம் #Seeman | #NTK | #SaattaiDuraimurugan
8
122
1
464
9,129
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள். என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா? காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா? நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா? வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
604
888
126
2,274
185,383
தருண் NTK retweeted
நீயென்ன ரவுடியா? தவெகனா பயப்படணுமா ? | தவெக நிர்வாகியை விரட்டிய பெண் ! | #tvkmember #vijayfails #tvkfails #Kovai #viralvideo #saattai
6
122
1
268
2,640
தருண் NTK retweeted
முருகப்பெருமானுக்குச் சமமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் வைத்து ‘அரோகரா’ முழக்கமிடுவது எந்த வகையில் நியாயமாகும்? | சீமான் கடும் கண்டனம் | #seemanspeech #naamtamilar #MuruganTemple #Thiruchendur #festival #vijayfails #PushpavanamKuppusamy #saattai
28
174
1
459
3,102
உண்மையான சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம்
11
38
311
#அண்ணன் சீமான் கடலுக்கு , மரத்திற்கு , நீருக்கு மாநாடு நடத்தும் போது சிரித்தவர்கள் இதெலல்லாம் பேசும் போது.......
1
2
18
283
விஜய் தவெக கட்சி ஆரம்பிக்கும் முன்பும் சரி ஆரம்பித்த பின்பும் சரி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பும் சரி சட்டமன்ற தேர்தலுக்கு பின்பும் சரி காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவில் தான் இருக்கிறார். இதுவும் ஒரு காரணம் நாம் தமிழர் கட்சி தவெக வை எதிர்ப்பதற்கு #TVKVijay #NTK
5
13
56
1,293
தருண் NTK retweeted
கல்வெட்டில் செதுக்க வேண்டிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் பதில்! | #Ramesh #Thiruchendur #MuruganTemple #TVKfails #vijayfails #saattai
3
126
2
356
5,014
தருண் NTK retweeted
சோனியா எழுதிய புத்தகத்தில் “எப்படி தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு உதவினேன்?” என எழுதியிருக்கிறாரா என்று புத்தக விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விஜயிடம் அவரை ஆதரிக்கும் “ஈழ ஆதரவாளர்களும்” “தமிழ்த்தேசிய வெற்றி கழகத்தினரும்” கேட்டு சொல்வார்களா??
36
336
5
778
8,245
இதைவிட தெளிவா இந்த மரமண்டைகளுக்கு சொல்லவே முடியாது 👇👌
205
1
561
7,719
இனப்படுகொலை செய்தவர்கள் புத்தக வெளியீட்டுக்கு இவர் போவதா? ஆமாங்க.. இந்த சீமானுக்கு இதே வேலை! அட.. நாய்க்கு பிறந்த நாயே.. புத்தக வெளியீட்டுக்கு போனது உங்கள் தமிழ்தேசிய நம்பிக்கை நட்சத்திரம் விஜய் !
3
54
2
179
2,464
மதுக்கடையை மூடக்கோரினால் மக்களைக் கைது செய்வதா? கார்குடி அரசு மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடியும், அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவில், காய்கறிச் சந்தை, கோவிலுக்கு அருகில் மதுக்கடையைத் திறந்து வைத்திருப்பது ஏன்? அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் மக்களும், சாலையில் பயணிப்போரும் மதுக்கடையால் ஏற்படும் இடையூறுகளைச் சகித்துக்கொண்டுதான் மக்கள் வாழ வேண்டுமா? மக்கள் வாழும் இடத்தில் மதுக்கடையை வைத்துவிட்டு, அவர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று கேட்டால் அதுவே அரசுக்குக் குற்றமாகிவிடுகிறதா? மக்களுக்காக அரசு நடத்துகிறீர்களா? மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? இக்கடையை மூடுவது தொடர்பாக அரசு சார்பில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மூன்று முறை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று காலக்கெடுக்கள் முடிந்தும் கடை அதே இடத்தில் இயங்குகிறது என்றால், அரசின் வாக்குறுதிக்கு என்ன மதிப்பு? அதிகாரிகள் அளித்த உறுதிமொழிக்கு யார் பொறுப்பு? கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்திற்கு, மக்களிடம் மீண்டும் கால அவகாசம் கேட்க என்ன தகுதி இருக்கிறது? பேச்சுவார்த்தை என்பது பிரச்சினைக்குத் தீர்வுகாணவா? போராடும் மக்களைக் கலைத்துவிட்டு மதுவிற்பனையைத் தொடரவா? மூன்று முறை ஏமாற்றப்பட்ட பிறகும் மக்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா அரசு? கடையை மூடக்கோரி கடந்த 18.10.2026 அன்று காலை 10 மணியளவில் போராடிய பொதுமக்கள் 80 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று (16.11.2026) அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ள நிலையில், கார்குடி மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குப் பிறகும் மதுக்கடையைத் தொடர்ந்து நடத்துவதில் அரசு காட்டும் பிடிவாதம் எதற்காக? மக்களின் நிம்மதியைவிட மதுவிற்பனை வருவாய்தான் மேலானதா? அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் மக்களை கைது செய்வது என்ன நியாயம்? மது விற்பனைக்கு அரசின் பாதுகாப்பு! அதை எதிர்க்கும் மக்களுக்குக் கைது நடவடிக்கையா? இதுதான் மக்கள் நல ஆட்சியின் இலக்கணமா? வெட்கக்கேடு! எனவே, தமிழ்நாடு அரசும் அரியலூர் மாவட்ட நிர்வாகமும் இனியும் காலம் கடத்தாமல், கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
31
402
2
770
9,884
தமிழக மக்களின் சாபக்கேடு தமிழக வெற்றி கழகம்......
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition. The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned. The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days. The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct. @tnpoliceoffl #ncwindia #ncw #rashtriyamahilaaayog
1
7
136
தருண் NTK retweeted
பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பார்கள் என அவசர அவசரமாக ஓடோடி வந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மக்களிடம் மனுக்களை பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா! Kallakurichi | Collector Padmaja | Petition #DistrictCollector #NewsTamil24x7
15
141
7
1,138
95,982
தருண் NTK retweeted
சட்ட ஒழுங்கு @actorvijay அடே தற்குறி பயலே இது நாடா இல்லை சுடுகாடாடா
"கத்தியோடு 4 பேரு திடீர்னு ஓடி வந்தாங்க.. வெட்டிட்டு போலீசால எல்லாம் எங்கள ஒண்ணும் பண்ண முடியாதுனு பகிரங்கமா மிரட்டிட்டு போனாங்க சார்.." சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் இளைஞரை 4 பேர் கும்பல் துரத்தி, துரத்தி கத்தியால் வெட்டி தாக்குதல்.. பைக் ஹாரனை சப்தமாக அடித்ததை தட்டிக்கேட்ட போது மிரட்டியதால் போலீசில் இளைஞர் புகார் அளித்த ஆத்திரத்தில் வெறிச்செயல்.. #Chennai | #Pattinapakkam | #MurderAttempt | #PoliceCase | #PolimerNews
3
5
202
தருண் NTK retweeted
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் பற்றி இன்னாள் முதல்வர் இப்படி Boby Shaming பண்ணும் போது வாய்மூடி இருந்துட்டு "பொட்டு மாமா" என்று சொன்னதும் பொங்குவதற்கு பெயர்தான் "தூயசக்தி"
85
343
11
1,207
18,632
தருண் NTK retweeted
இது உண்மையென்றால் இந்த எம்.எல்.ஏ மீது நடிவடிக்கை எடுக்காத விஜய்தான் வெட்கப்கப்படனும் !
50
596
8
1,624
50,748
தருண் NTK retweeted
ப்ளாக் டிக்கெட் வித்தவன் அமைச்சரானால் இதுதான் நடக்கும் ! @Balajierodetvk
76
510
6
1,293
51,312
தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? முதலமைச்சர் விஜய் பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னிப்பு கேட்கப்போகிறாரா? நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா? @CMOTamilnadu @TVKVijayHQ மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்? தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா? கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'Sorry வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்? எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா? ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
206
504
16
1,072
30,787