மாயா மச்சீந்தரா பாடலில் வரும்
“மாறன் கலைக்கூடம்,
மஞ்சத்தில் உருவாக்கும்,
மேஸ்திரி…
காதல் சாஸ்திரி…”
என்ற வரியில் வரும் மாறன் கலைக்கூடம் என்பதற்குப் பொருள் தேடினேன்.
“அது யாருடா மாறன்… அப்படி என்ன நாம் தெரிந்து வைத்திராத கலைக்கூடத்தை அவர் கட்டியிருக்கிறார்?” என்று தேடவே, மாறன் அலங்காரத்தை வந்தடைந்தேன்.
மாறன் அலங்காரம் என்ற நூல் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் எழுதப்பட்டது. நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர் அவர்.
மாறன் அலங்காரம் — அடிப்படையில் ஒரு தமிழ் இலக்கண நூல். ஆனால், அது தமிழ் இலக்கணத்தை மட்டும் பேசுவதில்லை. மாறனாகிய நம்மாழ்வாரின் பெருமையைப் பாடும் நூலாகவும் இருக்கிறது.
பாண்டிய மன்னர்களை மாறன் என்று அழைப்பதுண்டு. பாண்டிய மன்னர்களின் சிற்றரசர் மரபில் வந்ததால் நம்மாழ்வாருக்கும் மாறன் என்ற பெயருண்டு.
தமிழ் மொழியின் ஒட்டுமொத்த அமைப்பையும், இலக்கிய நெறிகளையும் முறைப்படுத்தும் ஐந்து முதன்மை இலக்கணப் பிரிவுகளாகிய எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் ஆகிய ஐந்திலக்கணம் பற்றி நாம் அறிவோம்.
இதில் அணி இலக்கணம் என்பது செய்யுள்களுக்குச் சொல்லாலும் பொருளாலும் அழகு சேர்ப்பதை விளக்கும் இலக்கணமாக அமைகிறது. அணி — அணிகலன் என்பதை அலங்காரம் என்ற வடமொழிச் சொல்லாலும் குறிப்பதுண்டு.
தமிழ் மொழியின் அணிகளைக் கொண்டு மாறனை அலங்கரிப்பதால் அந்நூலுக்கு மாறன் அலங்காரம் என்று பெயர்.
சரி, மீண்டும் பாடலுக்கு வருவோம். யார் இங்கே அப்படியொரு மாறன் கலைக்கூடத்தைக் கட்டுகிறார் என்றால் முதலில் நம்மவர், கமல்ஹாசர்தான். இரண்டாவதாக, நம்ம வாலி அவர்கள்.
கமலை “காதல் இளவரசன்” என்று எளிமையாகச் சொல்லிவிட்டால் அதில் என்ன “அலங்காரம்” இருக்கிறது?
“மாறன் கலைக்கூடம்
மஞ்சத்தில் உருவாக்கும்
மேஸ்திரி…
காதல் சாஸ்திரி…”
என்று ஒரு காதல் வித்தகனைப் பிரமாண்டமாக, கம்பீரமாக விவரித்தால்தானே அழகு!
அதுபோல் 1970, 1980களில் பிறந்த எம் போன்ற பாவப்பட்ட பிறவிகளுக்கு முத்தத்தின் மதிப்பைக் கற்றுக்கொடுத்ததில் கமலுக்குப் பெரும்பங்குண்டு என்பது மறுப்பதற்கில்லை.
முத்தத்திற்கு எது அழகு? ஏது சுவை? பொறுங்கள். நாயகனும், நாயகியுமே விளக்குகிறார்கள். கேட்போம்.
அவன்:
“உன்னை நான் சிந்தித்தால்
உண்டாகும் தித்திப்பை
உதட்டுக்குள்
பொத்தி வைத்தேன் நாளும்…”
அவள்:
“பொத்தி வைத்த
தித்திப்பை நீ
தந்தாலென்ன…
முத்தமிட்டு சர்க்கரை நோய்
வந்தாலென்ன…”
அவன்:
“தினமும் தினமும் வரலாமா?
தவணை முறையில் தரலாமா? சொல்லடி…
சோன் பப்படி…”
அவள்:
“செயலில் இறங்கு சீக்கிரமா
மீனம் மேஷம் பாக்கணுமா
மென்னுடா…
என்னைத் திண்ணுடா…”
“மலரை வண்டு மொய்த்திட
மாதம் தேதி ஏது?
மீன மேஷம் பார்ப்பதோ
காதல் தோன்றும் போது…”
என்று அதிகம் யோசிக்காமல் பகிரப்படும் முத்தங்களே காதலில் முத்தங்கள். மற்றதெல்லாம் வெறும் சத்தங்கள்!
மேலும், கமலை உலக நாயகன் என்று நேரடியாகவும் அவர் சொல்லவில்லை.
“உனையும் எனையும் புனைவோமா
உலகப் படமாய் தருவோமா?”
என்று மனிஷா கொய்ராலாவை விட்டுக் கால்ஷீட் கேட்க வைத்துவிட்டு,
“ஹஜ்ஜி மா… செல்ல புஜ்ஜி மா…” என்று கொஞ்சியும் இருக்கிறார்.
பாண்டி நாட்டு பரமக்குடியில் பிறந்த மாறன் கமல்ஹாசனுக்கு, சோழ தேசத்து ரங்கராஜன் வடித்த “மாறன் அலங்காரம்” “மாயா மச்சீந்தரா” பாடல் என்றால் அது மிகையல்ல.
அழகிய வார்த்தைகளை மீட்டருக்குள் நிரப்பிப் பாட்டெழுத பலராலும் முடியும். வார்த்தைகளுக்குள் இத்தனை சூட்சுமங்களை ஒளித்து வைக்கவும், அந்த வார்த்தைகளை கச்சிதமாக மீட்டருக்குள் பாட்டில் வைக்கவும் வாலி ஒருவரால் மட்டுமே முடியும்!
ஆம், இன்றைய சபாஷ் வாலி மூமென்ட் தான்❣️
@ShobhithaK #ShobhiScribbles
#வாலி #கமல்ஹாசன் #மாயா_மச்சீந்தரா
Prince jewellery
Panakal Park
Madras,
இந்த மாதிரி address மனப்பாடம் தெரிந்தது சொல்லுங்க கேப்போம்..
#தீபாவளி #advertisment #DiwaliCelebration
Passport diary 😉😀 #passport
என்னத்த சொல்ல...
இலிங்க இப்படி தானா... இல்ல இப்படி பேச வைக்கிறாங்களா...
#elonmusk #bollywooda #roadster
"5,000 ஆண்டுகளுக்கு முன்பே....!”
#RanbirKapoor | #PushpakaVimana | #Ramayana | #ElonMusk | #Bollywood | #Roadster
What is the use of adding eggs + Vermicelli ??
@grok
OMg ,Its the first time I see this 👌👌
Readers added context they thought people might want to know
This video is staged entertainment from Rick Lax Productions, not a real DIY repair. Eggs and uncooked pasta do not fix or strengthen concrete/stairs.
facebook.com/justinflomoffi…
eater.com/2021/5/11/2243…














