ஈழத்தமிழர்கள் மீது இலங்கையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகள்
1956 – 2009
1 இக்கினியாகலை படுகொலை 05.05.1956.
150 பேர் உயிரிழப்பு.
2 1956 இனப்படுகொலை 01.05.1958. 300க்கு மேல் உயிரிழப்பு
3 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10.01.1974. 9 பேர் உயிரிழப்பு
4 1977 இனப்படுகொலை
1978. 1500 க்கு மேல் உயிரிழப்பு
5 பெரியபுல்லுமலை இனப்படுகொலை 20.05.1980. 25 பேர் உயிரப்பு
6 1981 இனப்படுகொலை 1981. எண்ணிக்கை தெரியவில்லை
7 யாழ்நூலக எரிப்பு 01.06.1981. சுமார் 90 ஆயிரம் நூல்கள் சாம்பலாகின.
8 1983 இனப்படுகொலை 23.07.1983. 3000 க்கு மேல் உயிரிப்பு
9 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை 25.07.1983. 35 பேர் உயிழப்பு.
10 திருநெல்வேலி படுகொலை 24,25.07.1983. 51 பேர் உயிழப்பு.
11 சம்பல்தோட்டம் படுகொலை 1984. 55 பேர் உயிரிழப்பு.
12 சுன்னாகம் காவல்நிலைய படுகொலை 08.01.1984. 19 பேர் உயிரிழப்பு.
13 சுன்னாகம் சந்தை படுகொலை 28.03.1984. 9 பேர் உயிரிழப்பு.
14 மதவாச்சி-ரம்பாவா படுகொலை 09.1984. 15 பேர் உயிரிழப்பு
15 திக்கம் படுகொலை 16.09.1984.16 பேர் உயிரிழப்பு.
16 ஒதியமலை படுகொலை 01.12.1984. 32 பேர் உயிரிழப்பு.
17 குமுழமுனை படுகொலை 02.12.1984. 6 பேர் உயிரிழப்பு.
18 செட்டிகுளம் படுகொலை 02.12.1984. 52 பேர் உயிரிழப்பு.
19 மன்னார் படுகொலை 04.12.1984. 200 க்கு மேல் உயிரிழப்பு
20 கொக்கிளை கொக்குதொடுவாய் படுகொலை 15.12.1984. 131 பேர் உயிரிழப்பு.
21 முள்ளிய வளை படுகொலை 16.01.1985. 17 பேர் உயிரிழப்பு.
22 வட்டக்கண்டல் படுகொலை 30.01.1985. 52 பேர் உயிரிழப்பு.
23 புதுக்குடியிருப்பு-ஐயன் கோவிலடி படுகொலை 21.04.1985. 30 பேர் உயிரிழப்பு
24 வல்வை 85 படுகொலை 10.05.1985. 70 பேர் உயிரிழப்பு
25 திருகோணமலை படுகொலை 1985 03.05.1985- 50 பேர் உயிரிழப்பு
26 நெடுந்தீவு குமுதினி படகு படுகொலை 15.05.1985. 36 பேர் உயிரிழப்பு.
27 கிளிவெட்டி படுகொலை 1985 01.01.1985- 150 பேர் உயிரிழப்பு
28 திரியாய் படுகொலை 08.08.1985. 10 பேர் உயிரிழப்பு
29 சாம்பல்தீவு படுகொலை 04.08.1985 – 09.08.1985. 383 பேர் உயிரிழப்பு.
30 வயலூர் படுகொலை 24.08.1985. 50 பேர் உயிரிழப்பு.
31 நிலாவெளி படுகொலை 16.09.1985. 30 க்கு மேல் உயிரிழப்பு
32 பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு
33 கந்தளாய் படுகொலை 09.11.1985. 6 பேர் உயிரிழப்பு
34 முதூர் கடற்கரைசேனை படுகொலை 8.11.1985 – 10.11.1985. 30 பேர் உயிரிழப்பு
35 வங்காலை தேவாலய படுகொலை 06.01.1986. 9 பேர் உயிரிழப்பு
36 கிளிநொச்சி தொடருந்து நிலைய படுகொலை 25.01.1986. 12 பேர் உயிரிழப்பு
37 உடும்பன்குளம் படுகொலை 19.02.1986 130
38 ஈட்டி முரிஞ்சான் படுகொலை 19.03.1986 – 20.03.1986 20
39 பெரிய புல்லுமலை படுகொலை 08.05.1986
10.11.1986 18
24
40 அனந்தபுரம் ஏவுகணை தாக்குதல் 04.06.1986 5
41 கந்தளாய் படுகொலை 04,05,06.1986 50 க்கு மேல்
42 மண்டைதீவு கடல் படுகொலை 10.06.1986 33
43 செருவில் படுகொலை 12.06.1986 21
44 தம்பலகாமம் படுகொலை 12.11.1985. 34
45 பரந்தன் விவசாயிகள் படுகொலை 28.06.1986 7
46 பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை 15.07.1986 48
47 தண்டுவான் பேருந்து படுகொலை 17.07.1986 17
48 முதூர் மணல்சேனை படுகொலை 18.07.1986 14
49 அடம்பன் படுகொலை 12.10.1986 20
50 பெரிய பண்டி விரிச்சான் படுகொலை 15.10.1986 2
51 கொக்ககட்டிச்சோலை படுகொலை 28.01.1987 133
52 பட்டித்திடல் படுகொலை 26.04.1987 17
53 தோணிதட்டமடுபடுகொலை 27.05.1987 13
54 ஆலவாய் கோவில் படுகொலை 29.05.1987 40
55 மூளாய் மருத்துவமனை படுகொலை 05.11.1987 5
56 கிழக்கு பல்கலைக்கழகப் படுகொலை 23,24.05.1990 226
57 சம்மாந்துறை படுகொலை 10.06.1990 37
58 வீரமுனை படுகொலை 20.06.1990-15.08.1990 233
59 சித்தாண்டி படுகொலை 20,27.07.1990 137
60 பரந்தன் சந்தை படுகொலை 24.07.1990 15
61 பொத்துவில் படுகொலை 30.07.1990 125
62 திராய்கேணி படுகொலை 06.08.1990 90 க்கு மேல்
63 கல்முனை படுகொலை 11.08.1990 62
64 துறைநீலாவணை படுகொலை 12.06.1990 60
65 ஏராவூர் மருத்துவமனை படுகொலை 12.08.1990 10
66 கோரவெளி படுகொலை 14.08.1990 15
67 சேனகன் படுகொலை 26.08.1990 4
68 நெல்லியடி சந்தை படுகொலை 29.08.1990 16
69 சத்துருக்கொண்டான் படுகொலை 09.09.1990 205
70 நட்பிட்டிமுனை படுகொலை 10.09.1990 23
71 வந்தாறு மூலை படுகொலை 05&23.09.1990 174
72 ஒட்டுசுட்டாள் படுகொலை 27.11.1990 12
73 புல்லுமலை படுகொலை 1984- 110
74 புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை 30.01.1991 28
75 உருத்ர புரம் படுகொலை 04.02.1991 9
76 வங்காலை படுகொலை 17.02.1991 5
77 வட்டாக்கச்சி படுகொலை 28.02.1991 9
78 வந்தாறு மூலை படுகொலை 09.06.1991 10
79 கொக்கக்கட்டிச் சோலை படுகொலை 12.06.1991 220 க்கு மேல்
80 கிண்ணியடிபடுகொலை 12.07.1991 13
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வில் இடம்பெற்ற சிறுமிகளின் அற்புதமான நடனம்
#மாவீரர்நாள்_2026
#ஈழத்தின்குரல்
1
24
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!
இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டார்
மாவீரர்களின் தியாகத்தையும், அவர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களின் அர்ப்பணிப்பையும் மதித்து, அவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
#மாவீரர்நாள்_2026
#ஈழத்தின்குரல்
ஈழம் Lens retweeted
அண்ணன் அறிவுமதி;
தனித்தமிழின் பெருமிதமும், ஈழத்து உணர்வின் உயிர்த்துடிப்பும்..
தமிழ் இலக்கிய உலகிலும், திரை இசைப் பாடல்களிலும் தனித்தமிழின் இனிமையையும், மானுட நேயத்தையும், விடுதலை உணர்வையும் ஒருசேர விதைத்த பெருங்கவிஞர் அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு இன்று இனிய பிறந்தநாள்!
கவிதை என்பது வெறும் சொற்களின் அடுக்கல்ல; அது ஒரு இனத்தின் ஆன்மாவையும், உரிமைக் குரலையும் சுமந்து நிற்கும் ஆயுதம் என்பதைத் தனது படைப்புகளின் வழியாகவும், மேடை முழக்கங்களின் வழியாகவும் நிரூபித்து வருபவர் அண்ணன் அறிவுமதி.
தமிழகத்தின் மண்ணில் நின்றுகொண்டு, ஈழத்தமிழர்களின் வலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் தனது சொந்த வாழ்வின் மூச்சாகச் சுமந்த மிகச் சில ஆளுமைகளில் அண்ணன் அறிவுமதி முதன்மையானவர்.
குறிப்பாக, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீது அண்ணன் அறிவுமதி கொண்டிருந்த அளப்பரிய பாசத்தையும், பற்றுறுதியையும் நேரில் கண்டு மகிழ்ந்தவன் நான். தலைவர் மீதான அவரது அன்பு என்பது வெறும் அரசியல் ஈர்ப்பல்ல; அது தமிழ் மொழியின் மீதும், ஒரு தேசிய இனத்தின் மீட்சியின் மீதும் அவர் கொண்டிருந்த ஆழமான தாய்மை உணர்வின் வெளிப்பாடாகும்.
தன்மானத் தமிழனாக, தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக, இளைய தலைமுறைக் கவிஞர்களுக்கு ஒரு ஆசானாகத் திகழும் அண்ணன் அறிவுமதி அவர்களின் தமிழ் உணர்வும், அறச்சீற்றமும் என்றும் குன்றாதவை. கசப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியிலும், தனது கொள்கை உறுதியிலிருந்தும் ஈழத்துப் பாசத்திலிருந்தும் எள்ளளவும் வழுவாமல் கம்பீரமாக நிற்கும் அண்ணனின் ஆளுமை போற்றுதலுக்குரியது.
தமிழுக்கும், தமிழினத்தின் விடிவிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அண்ணன் கவிஞர் அறிவுமதி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தோடும், படைப்பாற்றலோடும், அதே தமிழ் உணர்வோடும் வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறோம்!
கிருஸ்ணா அம்பலவாணர்
மக்களுடைய காணி மக்களுக்கே என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த ஜேவிபி இனவாதிகள் வசவிளான் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலைக்கான பிரமாண்ட கட்டடத்தை நிர்மாணித்து வருகின்றார்கள்
குறித்த கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்த போதிலும், ஆட்சியாளர்களும் இராணுவத்தினரும் அதனைப் பொருட்படுத்தாது கட்டுமான பணிகளை தொடருகின்றார்கள்
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இப்பகுதியில், சபையின் அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் இராணுவ மருத்துவமனைக் கட்டுமானங்களை நிறுத்தி, சட்டவிரோத கட்டடங்களை அகற்றுமாறு வலி. வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் திரு. சோ. சுகிர்தன் அனுப்பிய உத்தியோகபூர்வ அறிவித்தலும் கூட இராணுவத்தால் கண்டுகொள்ளப்படவில்லை
நேற்று ஜேவிபியின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் போர்குற்றவாளியுமான Air Vice Marshal Sampath Thuyacontha (Retired) கட்டுமானத்தை நேரில் பார்வையிட்டு இருக்கின்றார்
"இனவாதம் இல்லை, சட்டம் எல்லோருக்கும் சமம்" என ஜேவிபி கூறுவது பச்சைப் பொய் என்பதற்கு இதுவே சான்றில்லையா?
இங்கே ஜேவிபி அதிகாரத்தின் கீழும் பௌத்த அரசியல் அதிகாரமும் இராணுவமும் சட்டத்தின் வழியான நீதிமன்ற அதிகாரத்தையும் விட மீயுயர்வானதாக கருதப்படுகின்றது
யாழ்ப்பாணத்தைச் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் அட்டூழியங்களை கண்டுகொள்ளாமல் வழமை போல வாய் மூடிக்கொண்டு மௌனம் காக்கிறார்கள்.
உள்ளூராட்சி அமைப்புக்களின் சுயாதீனத்தினை ஜேவிபி இனவாதிகளுக்காக சீரழிக்க முயற்சிக்கும் வடக்கு மாகாண ஆளுநர் திரு வேதநாயகன் வேடிக்கை பார்க்கின்றார்
இலங்கையராக ஒன்றிணைவோம், போராட்டங்களை மறந்துவிட்டு முன்னேறுங்கள் என்று பாடம் நடத்தும் அறிவழகன்களும், ஜெயராஜ்களும் உண்மைகளை பேச தயாரில்லை
சனநாயக நாடொன்றில் அப்பாவி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து பூர்விக குடி மக்களை ஆயுதம் மூலம் விரட்டி விட்டு எந்த அனுமதியுமின்றி சட்டவிரோதமாக கட்டுமானங்களை நிறுவ முடியுமா ?
சட்டம் எங்குள்ளது ?
ஒருங்கிணைப்புக்குழுக்களின் தீர்மானங்கள் குப்பைக்கூடைக்குள் வீசப்படும்போது, முறையான நிர்வாகக் கட்டமைப்புகளைச் செயலூக்கப்படுத்தாமல் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி முன்னேற்ற முடியும் ?
ஒருபுறம் நாள் தோறும் மாதவனை மயிலத்தமடுவில் சிங்கள குடியேற்ற வாசிகள் மாடுகளை கொ*ன்று வீசுகின்றார்கள்
கேட்க யாருமில்லை
மறுபுறம் வன வள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம், மகாவலி திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என மத்திய ஒற்றையாட்சி நிறுவனங்களின் அடாவடி தினங்களுக்கு எந்த முடிவும் இல்லை
சிங்கள குடியேற்றங்கள் , பௌத்த மயமாக்கல் என எந்த அட்டூழியங்களுக்கும் தீர்வு இல்லை
நேற்று கூட சட்டவிரோத தையிட்டி விகாரையில் எந்த அனுமதியுமின்றி சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன
யாரும் கேட்க முடியாது
குருந்தூர் மலையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் பிக்கு கல்கமுவே சந்தபோதி தேரர் வளமான விவசாய காணிகள் உள்ளடங்கலாக 300 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கின்றார்
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகளுக்கு பின்னரும் கொடூர யுத்தத்தின் போது வன்னிக்கு உணவளித்த 13 விவசாய பண்ணைகள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கின்றது
ஜேவிபி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன
என்ன முன்னேற்றம் ?
குறைந்த பட்சம் வடக்கு கிழக்கு மக்களின் பிரதான வாழ்வாதாரங்களில் ஒன்றான கடற்தொழிலாளர் எதிர் கொள்ளும் நெருக்கடிகளை கூட தீர்க்க முடியவில்லை
உண்மையில் காணாமல் போனோர் நெருக்கடி , அரசியல் கைதிகள் விடுதலை என அடிப்படை பிரச்சனைகள் முதல் பொருளாதார நெருக்கடிகள் எதற்கும் தீரவில்லை
மண்ணும், அந்த மண்ணோடு பின்னிப் பிணைந்த வாழ்வாதாரமும் ஒரு இனத்தின் அடையாளம் மட்டுமல்ல; அது அவர்களின் உயிர்மூச்சு.
இங்கே அதிகாரங்கள் மாறுகின்றன
ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள்
ஆனால் பேரினவாத சித்தாந்தத்தில் எந்த மாற்றமும் இலை
சொந்த மண்ணில் அகதிகளாக நிற்கும் சாமானிய மக்களின் கண்ணீரைத் துடைக்கும் நீதியாக மாறாதவரை, இந்த மண்ணின் வலிகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்காத வரை இந்த தீவு ஒரு போதும் முன்னேற போவதில்லை
#ஈழத்தின்குரல்
1
30
அநுராவுக்கு வாக்கு போட்ட தமிழ் அடிமைகளே... இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?
"எவருக்கும் நினைவேந்தல் உரிமையில் தடை இல்லை" என்று பாராளுமன்றத்தில் வாய் கிழியப் பேசினாரே பாதுகாப்பு அமைச்சர், இப்போது உங்கள் அனுராவின் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
மாலதி அக்காவின் 39வது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரனுக்குப் பொலிஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு அச்சுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது!
அன்று மேடைகளில் வீரம் பேசி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிமைகள் மலரும்" என்று வடை சுட்ட தமிழ் அடிமைத் MPs-களே, அமைச்சர்களே... இப்போது உங்கள் வாய் எங்கு போனது? ஏன் ஒடுங்கிப் போய்விட்டீர்கள்? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? இதுதான் உங்கள் எஜமானர்களின் ஜனநாயகமா?
மக்களை ஏமாற்றி ஓட்டுக் கேட்டுவிட்டு, இன்று நினைவேந்தல் உரிமையைக் கூடத் தடுத்து நிறுத்தும் இந்த அடிமைத்தனமான ஆட்சியை இனியாவது தட்டிக் கேட்பீர்களா, அல்லது மௌனமாக வேடிக்கை பார்ப்பீர்களா?
தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது கைகட்டி வேடிக்கை பார்க்கும் சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சாவுமணி அடிப்போம்!
#ஈழத்தின்குரல்
16
கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானம் வழங்கிப் பாலியல் வன்கொடுமை இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி திருவையாறு பகுதியில், 14 வயதுடைய சிறுமியொருவருக்கு மதுபானம் வழங்கிப் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றச்சாட்டில் 19 வயதுடைய இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி தற்போது மருத்துவ சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி (23.11.2026) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
16
ஈழம் Lens retweeted
#WhereIsPrageeth?
We urge the #USA to arrest those responsible and investigate the disappearance of journalist Prageeth #Eknaligoda.
Mohamed Uvais Mohamed Ali Sabry is alleged to be the mastermind behind the killings of journalists, including Prageeth. He was a personal adviser to Rajapaksa and has been accused of crimes against humanity.
The allegations must be thoroughly and independently investigated, and those responsible must be brought to justice.
The victims and their families deserve truth, accountability and justice.
#JusticeForPrageeth #HumanRights #SriLanka #PressFreedom #EndImpunity
@amnestyusa
#whereisprageeth? Ask #SriLanka to investigate the disappearance of journalist Prageeth #Eknaligoda. Also, please do our online action & join our photo action for him. Thanks. #lka #stillnoanswers amnestyusa.org/countries/sri…
ஈழம் Lens retweeted
Replying to @alisabrypc @ChrisVanHollen
How can the US justify granting a visa to an individual accused of masterminding extrajudicial killings of Tamils and continuing to promote hate speech against the Tamil community? Why were relevant provisions of US immigration law, particularly INA Section 212(a)(3)(E)(iii), not considered? The US must ensure that credible allegations of serious human rights violations are not ignored and that accountability and justice for Tamil victims are upheld.
முல்லைத்தீவில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு
நிகழ்வு 2026
#மாவீரர்நாள்2026
#ஈழத்தின்குரல்
ஈழம் Lens retweeted
#NJTS நம் இனத்தை கருவருத்த சிங்களர்தான் உங்களது தலைமை விருந்தினரா?!.. பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் செயற்கைத் நுண்ணறிவுத் துறையில் இருக்கும் போது!!
தமிழ் இனப்படுகொலை நடந்து 17 ஆண்டுகள் முடிந்தும் ஒரு சிறு நீதியைக்கூட பெற இயலாத கையறு நிலையில் நம் தமிழினம்!! இன்றும் கூட செம்மணியில் உயிருடன் புதைக்கப்பட்ட தமிழ்க்குழந்தைகளின் எழும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்படுகிறது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?#நியூசெர்சி_தமிழ்_சங்கம்
சாட்டி மாவீரர் நினைவிட வழக்கு - சட்டப்பிரிவு குறிப்பிடப்படாததால் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
சாட்டி மாவீரர் நினைவிடத்தில் மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கக் கூடாது எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் காணி உரிமையாளரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலான வழக்கு இன்று (17) ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட சான்றுகளுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் நீதிமன்றில் வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.
இதன்போது, பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை என எதிராளிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், தமது தரப்பு நியாயங்களையும் மன்றில் எடுத்துரைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய சட்டப்பிரிவு குறிப்பிடப்படாத நிலையில் குறித்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனச் சுட்டிக்காட்டி, வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், குறித்த விடயம் மீண்டும் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், எந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது என்பதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணிகளான பெலினா, அஜித் சங்கர், கௌரிதரன், ஸ்ரீராகவன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#மாவீரர்நாள்_2026
#ஈழத்தின்குரல்
1
52
குழந்தைகளை பாதுகாக்க முயற்சி செய்யும்போது தாய்மார்களே நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்
#ஈழத்தின்குரல்
1
42
தமிழீழத்தில் 2006 அன்று நடைபெற்ற மாவீரர் பெற்றோர் ,உறவுகள் மதிப்பளிப்பு நிகழ்வு
#மாவீரர்கள்_2026
#ஈழத்தின்குரல்
பிள்ளைகளை மண்ணுக்காக வித்தாக்கிய போதும் உணர்வின் வீரியம் சற்றும் குறைந்திடா மாவீரர் தந்தை ஏற்புரை நிகழ்த்துகிறார்...
கேட்டு்ப்பாருங்கள்...
#மாவீரர்நாள்_2026
#ஈழத்தின்குரல்
தங்கேஸ் அண்ணை ( தங்கண்ணா )
இயக்கத்தின் கட்டுப்பாட்டையும் மரபையும் உயிரைவிட உயர்வாக மதித்த ஒரு போராளியின் வரலாறு.
எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆரம்பகாலப் போராட்டப் பயணத்துடன் இணைந்து பல்வேறு கால கட்டங்களில் தங்களுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் ஏற்று, மக்களின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்த பல போராளிகள் இருந்திருக்கிறார்கள். அந்த வரலாற்றுப் பயணத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பதித்தவர் தான் தங்கேஸ் அண்ணை. போராளிகளால் அன்பாக தங்கண்ணா என்று அழைக்கப்பட்டவர்.
தங்கேஸ் அண்ணை 1984ஆம்
ஆண்டு ஆரம்ப காலப் பகுதியில்
விடுதலைப் புலிகளில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்தியாவில் நடைபெற்ற ஆறாவது பயிற்சி முகாமில் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் தாயகம் திரும்பினார்.
அப்போது முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த லோரன்ஸ் அண்ணையுடன் இணைந்து தனது ஆரம்பகாலப் பணிகளை முன்னெடுத்தார். அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளிலும் பங்கேற்றார்.
1985.10.25 அன்று வவுனியா கொக்குவெளிப் பகுதியில் பதுங்கியிருந்த இராணுவத்தினர் தாக்கிய போது லோரன்ஸ் அண்ணையுடன் நான்கு போராளிகள், வீரச்சாவடைந்தார்கள்.
அதன் பின்னர் முரளி அண்ணை
கொஞ்சம் காலம் பொறுப்பாக
இருந்தார் அதன் பின் பசீலன்
அண்ணை முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்பை ஏற்று பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இந்திய இராணுவத்துடனான மோதலில் வற்றாப்பளைப் பகுதியில் பசீலன் அண்ணையும் வீரச்சாவடைந்தார்.
அதனைத் தொடர்ந்து பால்ராஜ் அண்ணை முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருடன் இணைந்து தங்கண்ணாவும் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின்னர் பால்ராஜ் அண்ணை வன்னி மாவட்டப் பிராந்தியப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நவம் ( டடி ) அண்ணை முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
நவம் அண்ணையின் தலைமையில் இந்திய இராணுவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு மோதல்களிலும் தங்கண்ணா பங்கேற்றார். நெடுங்கேணி பாடசாலையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினரை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் நவம் அண்ணை காயமடைந்து, மேலதிக சிகிச்சைக்காகத் தமிழகம் கொண்டு செல்லப்பட்டு தமிழகத்தில் வீரச்சாவடைந்தார்.
அதனைத் தொடர்ந்து தங்கேஸ் அண்ணை முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இந்திய இராணுவத்திற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். இவ்வாறு லோரன்ஸ், முரளி, பசீலன், பால்ராஜ், நவம் ஆகிய தளபதிகளின் காலகட்டங்களைக் கடந்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் பொறுப்பையும் போராட்டப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்தவர் தங்கண்ணா.
1989.11.17 அன்று மாலை சுமார் 05 மணியளவில் டடி முகாமிலிருந்து தங்கண்ணாவும் அவருடைய பாதுகாப்புப் பணியில் இருந்த கணேஸ் என்ற போராளியும் முள்ளியவளைப் பகுதிக்குப் புறப்பட்டனர். அண்மையில் பயிற்சியை முடித்துவிட்டு வந்திருந்த புதிய போராளிகளைச் சந்தித்து, அவர்களைப் பிரதேச அரசியல் பணிகளில் ஈடுபடுத்துவதே அவர்களுடைய பயணத்தின் நோக்கமாக இருந்தது.
அவர்களுடன் குப்பிகள் அடங்கிய ஒரு கறுப்புப் பொதியும், தலைவருடன் தங்கண்ணா பரிமாறிக்கொள்ளும் இரகசியத் தொடர்பு முறையில் பயன்படுத்தப்பட்ட கோட் சீட் எனப்படும் முக்கிய ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.
அடுத்த நாள், 1989 நவம்பர் 18ஆம் திகதி காலை சுமார் 06 மணியளவில் கணேஸ் துவிச்சக்கர வண்டியைச் செலுத்தினார். தங்கண்ணா முன்பக்கத்தில் ஏ.கே. துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தார். வண்டியின் பின்புறக் கரியரில் குப்பிகளும் முக்கிய ஆவணங்களும் அடங்கிய பொதி வைக்கப்பட்டிருந்தது.
தண்ணீரூற்று - மாமூலை சேச்சுக்கு முன்பாகச் செல்லும் பாதையில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது, துவிச்சக்கர வண்டியின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த பொதி தவறி விழுந்தது. உடனடியாகக் கணேஸ் வண்டியை நிறுத்தி, பொதியை எடுப்பதற்காகக் கீழே இறங்க முற்பட்டார். அப்போது தங்கண்ணா தானே இறங்கி அதனை எடுத்துக்கொள்வதாகக் கூறி கீழே இறங்கினார்.
அந்த இடத்தில் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய இராணுவத்தினர் தங்கண்ணாவின் இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைக் கவனித்து அவரை நோக்கிச் சுட்டனர். தங்கண்ணாவின் காலில் குண்டு பாய்ந்ததால் அவர் கீழே விழுந்தார்.
அந்த நொடியில் கணேஸ் தனது நெஞ்சுப் பகுதியில் இருந்த கைக்குண்டை எடுத்து எதிர்த்தாக்குதலுக்குத் தயாரானார். ஆனால் தங்கண்ணா அவரைத் தடுத்து நிறுத்தினார். குண்டை எறிய வேண்டாம் என்றும் உடனடியாக நிறுத்துமாறும் கட்டளையிட்டார்.
1
2
140
அந்தக் காலகட்டத்தில் இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது, அதனை மீறக் கூடாது என்ற தலைவரின் அறிவுறுத்தல் தனக்குக் கிடைத்திருந்ததாகவும் தங்கண்ணா கணேஸிடம் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் போது அதனை மீறுவது இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்கும் மரபுக்கும் ஏற்றதல்ல என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தன்னிடம் ஆயுதம் இருந்தும், எதிரே ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் நின்றும் அவர் எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை.
அதற்குப் பதிலாக கணேஸிடம் ஒரு முக்கியமான கட்டளையைப் பிறப்பித்தார். துவிச்சக்கர வண்டியில் இருந்த பொதியையும் எடுத்துக்கொண்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார். அந்தப் பொதியில் இயக்கத்தின் முக்கியமான ஆவணங்களும் குப்பிகளும் இருப்பதால் அவற்றைப் பாதுகாப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.
தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், கணேஸ் முதலில் அங்கிருந்து வெளியேறு என்று வலியுறுத்தினார். கணேஸ் அந்த இடத்தைவிட்டு வெளியேறிய பின்னர் சில நிமிடங்கள் கழித்து தங்கண்ணா எழுந்து நிற்க முயன்றபோது இந்திய இராணுவத்தினர் மீண்டும் அவரை நோக்கிச் சுட்டனர். அவரது நெஞ்சுப் பகுதியில் பல துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.
எதிர்த்தாக்குதல் நடத்தாமல், தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியைக் கூட முன்னெடுக்காமல், தலைவரின் அறிவுறுத்தலையும் இயக்கத்தின் கட்டுப்பாட்டையும் மீறக்கூடாது என்ற நிலைப்பாட்டில்
இறுதி வரை உறுதியாக நின்ற தங்கண்ணா, அந்த மண்ணிலேயே
தனது உயிரை அர்ப்பணித்தார்.
ஒரு போராளியின் ஆளுமையை அவர் கையில் வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அவர் கடைப்பிடித்த ஒழுக்கம், ஏற்றுக்கொண்ட பொறுப்பு, சக போராளிகளின் பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவம், கடினமான தருணத்திலும் தனது கொள்கையில் கொண்டிருந்த உறுதி ஆகியவற்றின் ஊடாகவே அவருடைய ஆளுமையைப் புரிந்துகொள்ள முடியும்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பைவிட, தன்னுடன் பயணித்த போராளியின் பாதுகாப்பையும் இயக்கத்தின் முக்கிய ஆவணங்களின் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தியவர் தங்கண்ணா.
முல்லைத்தீவு மாவட்டத்தின் போராட்ட வரலாற்றில் பல்வேறு தளபதிகளுடன் பயணித்து, பின்னர் மாவட்டப் பொறுப்பை ஏற்று தனது கடமையை முன்னெடுத்த தங்கண்ணாவின் வரலாறு அவருடன் பயணித்த போராளிகளின் நினைவுகளிலும் நிலைத்திருக்கும்.
ஆயுதத்தைவிட ஒழுக்கத்தை உயர்வாக மதித்தவர். தன்னைவிட சக போராளியின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியவர். இறுதித் தருணத்திலும் தான் ஏற்றுக்கொண்ட கட்டளையை மீறாதவர்.
தங்கண்ணா என்ற பெயர் வெறுமனே ஒரு போராளியின் பெயரல்ல. அது ஒரு காலகட்டத்தின் நினைவுச் சுவடு. அவரது வாழ்க்கையும் இறுதித் தருணமும் போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.
தங்கேஸ் அண்ணா வீரச்சாவுடைந்து இன்றுடன் 37 ஆண்டுகள் கடக்கின்றன அவருக்கு எனது சிரம் தாழ்த்தி வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பிறப்பு: 1964.03.11
வீரச்சாவு: 1989.11.18
பிறப்பிடம் :சிலாவத்தை. முல்லைத்தீவு
முழு பெயர் : செபஸ்தியாம்பிள்ளை
மங்களதாஸ்.
இன்று தான் ஆதித்தன் வீரச்சாவடைந்து அளம்பில் துயிலும் இல்லத்தில் முதலாவது வித்துடல் விதைக்கப்பட்ட நாள் அது ஆதித்தன் உடையது
#ஈழத்தின்குரல்
23
தலைமன்னார் - பேசாலை கடற்பரப்பிற்கு அண்மையில் ஒரு கிலோகிராம் நிறையுடைய தங்கத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளத
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத் தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளையினால், நேற்று ( 17) தலைமன்னார் - பேசாலை கடற்பரப்பிற்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் ஒரு கிலோகிராம் நிறையுடைய தங்கத் தொகையைக் கடத்த முயன்ற இரண்டு (02) சந்தேகநபர்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு (01) டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடல் மார்க்கமாக தென்னிந்தியாவிற்குக் கடத்தப்படவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் குறித்த தங்கத் தொகை தொடர்பான மேலதிக தகவல்களை விரைவில் வழங்குவதற்குக் கடற்படை எதிர் பார்த்துள்ளது.
மன்னார் மாவட்ட மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு தட்சணாமருதமடு
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் மடுப்பிரதேசத்தின் தட்சணாமருதமடு கிராமத்தில் இளைஞர்களின் பங்களிப்புடன் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் 16.11.2026 அன்று காலை 10.30 மணியளவில் மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு முள்ளிக்குளம், இரணைஇலுப்பக்குளம், குஞ்சுக்குளம், மாதாகிராமம், தம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான், பண்டிவிரிச்சான், பாலம்பிட்டி, தட்சணாமருதமடு கிராமங்களில் இருந்து 220 க்கு மேற்பட்ட மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை, ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். தட்சணாமருதமடு பாடசாலை சந்தியில் இருந்து நடை பவனியாக ஆரம்பித்து பொதுப்படம் தாங்கிய சிறார்கள், கத்தோலிக்க மற்றும் சைவமத குருக்கள், முன்னாள் போராளிகள்,சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் மண்டபத்திற்கு வரப்பட்டார்கள்.
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமானது.
* பொதுச்சுடரினை : மாவீரர் கோவிந்தனின் தாயார் திருமதி. தர்மலிங்கம் அமராவதி அவர்கள் ஏற்றிவைத்தார்,
* பொதுப்படத்திற்கான மலர் மாலையினை : மாவீரர் அறிவு அவர்களின் துணைவியாரும், மாவீரர் குரலமுதனின் சகோதரியும், முன்னாள் போராளியுமான திருமதி குறிஞ்சி அவர்கள் அணிவித்தார்.
* நினைவுச்சுடரினை கரும்புலி மாவீரர் வன்னிமன்னன் அவர்களின் தாயார் திருமதி. லூசியா ஜேந்தி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
* உணர்வு பூர்வமாக நடந்த இந்நிகழ்வினைத்தொடர்ந்து
* மாவீரர்கள் நினைவு சுமந்த நடனம் சிறார்களால் நிகழ்த்தப்பட்டது.
* அடுத்து நினைவு ஆசியுரையினை இந்து மத குருக்கள், பங்குததந்தை நிகழ்த்தினர்.
* அடுத்து மாவீரர் நினைவான கவிதையை ஆசிரியை நிகழ்த்தினார்.
* தொடர்ந்து மாணவர்களால் மாவீரர்கள் நினைவு நடனம் இடம்பெற்றது.
* இறுதியாக மாவீரர் பாலு அவர்களின் துணைவியார் திருமதி ஜேந்தி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
* முடிவில் அழைக்கப்பட்ட பெற்றோர்கள் அனைவருக்கும் சிறப்பான உணவு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு நினைவுப்பொருள் வழங்கியதுடன், மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமான நிறைவுபெற்றது. இம்மதிப்பிற்கான பங்களிப்பினை டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் வழங்கியிருந்தனர்.
#மாவீரர்நாள்_2026
#ஈழத்தின்குரல்
ஈழம் Lens retweeted
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே இந்த கார்த்திகை மாதத்திலே...
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும், இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களில் குறிப்பாக 2009ஆம் ஆண்டு 1,46,679. பொது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது.
காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.
இவ்வுலகில் இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில், அழுதவர்களுக்காக இறந்தவர்கள் இவர்கள் என்கிற உணர்வோடும் ஏக்கத்தோடும் அவர்களின் நினைவுகளை வலிகளோடு சுமந்தாலும் , அவர்களின் கனவுகள் மெய்ப்பட எஞ்சியவர்களாக நாம் உள உறுதியோடு லட்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்போம்.
#மாவீரதெய்வங்கள்
#வீரத்துறவிகள்
#அறிவோம்ஈழம்
#தமிழீழதேசியமாவீரர்நாள்நவம்பர்27
#தலைவர்72
#பிரபாகரம்






















































