ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்...
பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தவெகதான் வெற்றி பெறும்… எத்தனை படைகளைக் கொண்டு வந்தாலும் நாங்கள் தூள் தூளாக்குவோம்…
– வைகோ
100% எழுத்தறிவு பெற்ற
மாநிலமானது `தமிழ்நாடு’…
தமிழகத்தின் எழுத்தறிவு 98%ல் இருந்து 100% ஆக உயர்வு… நேற்று நடைபெற்ற எழுத்தறிவு தேர்வில் 4.5 லட்சம் பேர் பங்கேற்பு… 4.5 லட்சம் பேரும் எழுத்தறிவில் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு… தமிழ்நாடு 100% எழுத்தறிவு இலக்கை எட்டியதாக மத்திய அரசு அறிவிப்பு…
1
4
1,509
கந்த சஷ்டி விழா, பக்தர்களுக்கான விழாவாக இல்லாமல், ரீல்ஸுக்காகக் கொண்டாடப்பட்ட விழாவாக மாறியுள்ளது… ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டிருக்கின்றன…
- சேகர் பாபு
திருக்கோவில்களை திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழ்பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா தவெக அரசு?
கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூர் திருத்தலத்தில், கண்டவர்களுக்கெல்லாம் ‘அரோகரா’ முழக்கமிடும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? கடந்த ஆறு நாட்களாகக் கடும் விரதமிருந்து, நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து, சிந்தையிலும் நெஞ்சிலும் எம்பெருமான் முருகனைச் சுமந்து நிற்கும் பக்தர்கள், திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழைக் கேட்பதற்காகவா ஆண்டவனின் சந்நிதியில் கூடுகிறார்கள்? ஒருவேளை, அரசியல் அதிகாரமும் திரையுலகப் புகழும் இருப்பதால், பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளைவிட, திரு. ஜோசப் விஜய் எனும் சினிமா பிரபலம் உயர்ந்தவர் என்று இந்த மூடர் கூட்டம் கருதுகிறதா?
- நயினார் நாகேந்திரன்
2
4
925
திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வில் 'தமிழக முதலமைச்சருக்கு அரோகரா' என்ற கோஷம் தவறான விஷயம்.. மன்னிப்பு என கடந்து சென்றுவிட முடியாது, பக்தர்கள் மனம் புண்பட்டுள்ளது…
- அண்ணாமலை
1
19
1,059
தூய சக்தி என்று சொல்லிக்கொண்டு கொடுமையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது... இதற்கெல்லாம் முடிவுகட்ட விரைவில் ஒரு நல்ல சூழல் அமையும்…
- மு.க.ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு முடிவு கட்ட விரைவில் ஒரு நல்ல சூழல் அமைய உள்ளது… நாம் தயாராக இருக்க வேண்டும்…
- முக ஸ்டாலின்
தவெக ஆட்சி எந்த சூழலிலும் கவிழாது.. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிப்பெறாது…
- திருமாவளவன்
7
21
2,154
தமிழ்நாடு மசாலாவை விரும்புகிறது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசயிருப்பது குறித்து உங்கள் பார்வை…
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவு…
தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை…
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவிற்கு மடைமாறும் விவகாரம்…
தமிழ்நாடு மசாலாவை விரும்புகிறது… நாங்கள் ரிசல்டை விரும்புகிறோம் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து…
100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.
தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
- உதயநிதி ஸ்டாலின்
தாங்களே சம்பாதிக்கணும், ஒரு சிறு பங்கு கூட தோழமைக் கட்சிக்குப் போகக்கூடாது… இதுபோல கெட்ட எண்ணம் இருக்கிற சில தலைவர்கள் குறித்து சொல்லியும் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை…
- திருநாவுக்கரசர்
இனி ஆளுவதற்கு ஒரே ஒரு தலைவர்தான் என மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள்… இனி எந்த தேர்தல் வந்தாலும் முதலமைச்சர் வெற்றி வாகை சூடுவார்…
- அமைச்சர் செங்கோட்டையன்
1
31
2,817
நானும், தலைவர் திருமாவும், விசிகவினரும் திமுகவை நேசிக்கிறோம்… ஆனால் விசிக மீது திமுகவினர் வன்மத்தோடு செயல்படுகிறது…
- அமைச்சர் வன்னி அரசு
பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
- உதயநிதி ஸ்டாலின்
18
1,327

