
HR Professional,Trainer, Tamil Enthusiast,Social Entrepreneur,Politician - Proud Karyakartha TN BJP YT: @gayathrisrinivas Social: @gagsshri
Chennai, India
Joined May 2010
- Tweets35.1K
- Following5.5K
- Followers19.9K
- Likes75.2K
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
நான் ஒரு ஹிந்து தான்.. ஹிந்து முறைப்படி தான கல்யாணம் பண்ண முடியும்.. அவங்க கட்சி கொள்கையெல்லாம் இதுல பேச கூடாது.. இது personal.. இது ஒரு வீட்டார் சம்மந்தபட்ட விஷயம் கிடையாது.. யார் தடுத்தாலும் மறுபடியும் அப்படி தான் பண்ணுவேன்... துரைமுருகன் சம்மந்தி கண்ணன் ரவி விளக்கம்...
#BangBang | #KannanRavi | #DuraiMurugan | #PolimerNews
Happy to Participate in the Diwali Celebration organised by our Senior leader @DrTamilisai4BJP mam along with all Karyakartha’s
எவ்வளவு ஜன்மத்துக்குடா கதறுவீங்க
இதே துரைமுருகன் ..
அவர் சாதி பூசாரியையே வச்சி..
மாட்டுக்கறியோ ஆட்டுக்கறியோ பன்னிக்கறியோ வச்சி சாராயம் குடிச்சிப்புட்டு கலியாணம் செய்திருந்தால் ' எங்களுக்கு
வன்னியர் பத்தி உடைத்து பேசும் தோழர் சீவா..😍
** இவர் எந்த ஆளு ** dr @poovannan_g
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
இன்று பிறந்தநாள் காணும் இந்தியத் திரையுலகின் தலைசிறந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan MP அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து பொதுவாழ்விலும் கலைத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
ஏழை நோயாளிகளை ஏமாற்றும் முதல்வர் மருந்தகங்கள்: ஜெனரிக் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க உடனடி நடவடிக்கை தேவை!
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ‘முதல்வர் மருந்தகங்களில்’, ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அத்தியாவசிய ‘ஜெனரிக்’ மாத்திரைகள் பல நாட்களாகக் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வரும் நோயாளிகள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அடிப்படை மருந்துகள் கூடக் கிடைக்காமல் ஏமாற்றத்துடனும் விரக்தியுடனும் திரும்பிச் செல்கின்றனர். இத்தகைய அவல நிலைக்கு, மக்கள் நலனில் துளியும் அக்கறையற்ற முதல்வர் திரு. @TVKVijayHQ தலைமையிலான தவெக அரசின் படுமோசமான நிர்வாகச் சீர்கேடே நேரடிக் காரணமாகும்.
கூட்டுறவுத் துறையையும் தமிழக மருத்துவப் பணிகள் கழகத்தையும் ஒருங்கிணைத்து மருந்து விநியோகத்தைச் சீரமைக்கத் திறனற்ற அமைச்சர் திரு. @arunraajkg அவர்கள், மக்களின் மருத்துவ அவதியைக் கண்டும் காணாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு 'மக்கள் மருந்தகங்கள்' மூலம் நாடு முழுவதும் தரமான ஜெனரிக் மருந்துகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்கி மக்கள் சேவையில் முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஆனால், தமிழகத்திலோ ஆளும் தவெக அரசின் மெத்தனப் போக்கால் இந்த மருந்தகங்கள் அனைத்தும் செயலிழந்து கிடக்கின்றன.
எனவே, இனியாவது ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முதல்வர் மருந்தகங்களிலும் தட்டுப்பாடின்றி உடனடியாகத் தரமான ஜெனரிக் மருந்துகளை இருப்பு வைக்க @TVKPartyHQ அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் ‘தவெக’ ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு!
மாநிலத் தலைநகரான சென்னை செங்குன்றத்தில், காவல் நிலையத்தின் அருகிலேயே கஞ்சா போதையில் ஒரு கொடூரன் பொதுமக்களைத் தாக்கியதோடு, தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்டத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கடும் முயற்சியில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயுள்ளது என்பதற்குச் சான்றாகும்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தவெக அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வியடைந்து, குற்றவாளிகளுக்குச் சட்டம் மற்றும் காவல்துறை மீதான அச்சமே இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. மேடை முழக்கங்களுக்கும் கள எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியை மக்கள் தற்போது கண்கூடாக உணர்கிறார்கள். அடிப்படை நிர்வாகத் திறனும் அரசியல் முதிர்ச்சியும் அற்ற ஒரு தலைமையால் பொது அமைதி எப்படி நிலைகுலையும் என்பதற்குத் தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களே அப்பட்டமான சாட்சி!
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
ஈ.வெ.ரா. பெயரில் கோவையில் திறக்கப்பட்ட நூலகத்தில் புத்தகக் கொள்முதல் மோசடி: அனைத்து நூல்களையும் தணிக்கை செய்யத் தனிக்குழு அமைத்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க!
கோவையில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களின் பெயரில், கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னர் இன்றைய முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட அந்த நூலகத்தில், 'AI' மூலம் பிழைகளுடன் தயாரிக்கப்பட்ட போலி நூல்களைப் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்று மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடியிருப்பது மன்னிக்க முடியாத அறிவுத் துரோகமாகும்.
போலிப் பெயர்களைப் பயன்படுத்தித் தகுதியற்ற நூல்களை நூலகத்திற்குள் திணித்து அரசு கஜானாவைக் கொள்ளையடித்த மோசடி நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது பாரபட்சமின்றி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் தவறிழைத்தவர்கள் எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும்.
அந்த நூலகத்திலுள்ள நூல்கள் அனைத்தையும் முழுமையாகத் தணிக்கை (Audit) செய்து முறைகேடுகளை வெளிக்கொண்டு வர, துறைசார் வல்லுநர்கள் அடங்கிய தனிக்குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தகுதியற்ற நூல்களை அப்புறப்படுத்தி, அதற்காக வழங்கப்பட்ட அரசு நிதியை முழுமையாகத் திரும்பப் பெற (Recover) வேண்டும். மாணவர்கள் மற்றும் வாசகர்களை ஏமாற்றும் இந்த மோசடி விவகாரத்தில் அரசு தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதையும், மக்களுக்கு வெளிப்படைத்தன்மையை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு திரு. @TVKVijayHQ அவர்களுக்கு உண்டு.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
கரடியே காரி துப்பின கதையாக,
மாதொருபாகன் என்றொரு சாதிய வன்ம புத்தகத்தை எழுதிய கம்யூனிஸ்ட் ஆதரவாளர் பெருமாள் முருகனே பெரியார் அறிவுலகத்தில் திமுக ஊழல் என்கிறார்.
திமுகவோ தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் புத்தக கொள்முதல் நடந்தது ஆக இது தவெக ஊழல் என்கிறது.
நம்மை பொறுத்தவரை பெரியார் என்ற ஆளுமை பிம்பமே தமிழகத்தின் மீது திணிக்கபட்ட மாபெரும் கருத்தியல் ஊழல்.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
பெருமாளும், முருகனும் சேர்ந்து வந்து பெரியாரின் பெயரில் நடைப்பெற்ற ஊழலை அம்பலப்படுத்தியுள்ளனர்.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
This is Scary.
தமிழ் கூறும் நல்லுலகம்
நாசமாக போய்கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசியலால்.
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அமரர் திரு. P H. பாண்டியன் அவர்களின் மகனும், வழக்கறிஞருமான திரு. P H. வினோத் பாண்டியன் அவர்கள், தேசிய நீரோட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, மக்கள் சேவையிலும், தேசப்பணியிலும் ஈடுபடும் உயரிய நோக்கத்துடன், இன்று எனது முன்னிலையில் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவரது அரசியல் மற்றும் பொதுவாழ்வுப் பயணம் சிறப்பாக அமையவும், கட்சியின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வில் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில பொதுச் செயலாளர் திரு ஜான் பீட்டர் அவர்கள் உடன் இருந்தார்.
Om Shanthi
We are a regular visitor to Nemili. The way Mama share Bala Story for decades never changed.
07/10/2026
Greeted our State President after his successful international tour. Exchanged Diwali Greetings
@NainarBJP
@BJP4TamilNadu
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
அபுதாபியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற BAPS இந்து மந்திருக்கு நேரில் சென்று தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.
இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலைச் சிறப்புகளை உலக அரங்கில் பறைசாற்றும் வகையில் கம்பீரமாக எழுந்து நிற்கும் இத்திருத்தலம், இந்தியாவின் ஆன்மிகப் பெருமைக்கும், உலகளாவிய நல்லிணக்கத்திற்கும் சிறந்த அடையாளமாகத் திகழ்கிறது.
இந்தியப் பண்பாட்டையும், சனாதன தர்மத்தின் உயரிய நெறிகளையும் உலகெங்கும் கொண்டு சேர்க்கும் இத்தகைய புனிதத் தலங்கள் நம் அனைவருக்கும் பெருமை அளிக்கின்றன!
இந்த நிகழ்வில் தமிழக பாஜகவின் NRI பிரிவு மாநில அமைப்பாளர் திரு சுந்தர் அவர்கள் உடன் கலந்துகொண்டார்.
(1/3)

























