Pinned Tweet
அண்ணான்னு அன்போட
அழைச்சாலே வருவார்
கேக்காம குறையெல்லாம்
நிறையாக்கி தருவார்
தொண்டர்கள் தலைவர்கள்
ஆகத்தான் நெனைப்பார்
சொல்லோட நிற்காத
செயல்வீரர் இவர்தான்!!
❤️❤️❤️
A clear reflection of the people’s trust and confidence in HCM leadership. Wishing you continued success in serving the people sir.. வெற்றித்தலைவர் ❤️ @CMOTamilnadu @TVKVijayHQ
🤖 Made with AI
Rajmohan retweeted
சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அன்னாரைப் போற்றி எனது வீர வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் குரல் கொடுத்ததோடு, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது.
தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் காட்டிய வழியில், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம்!
#CMJosephVijay
Rajmohan retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.10.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
உலகெல்லாம் உறவு…
உயிரெல்லாம் கருணை…
மனிதநேயத்தின் மகத்தான வழிகாட்டி
வள்ளலாரை வணங்குகிறேன்!
அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணையாய்த் திகழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் பிறந்த இந்நன்னாளில், அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி; சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம்; ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலார் அவர்களின் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன.
உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிப்போம்!
#CMJosephVijay
“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே…
எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது.
எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்..
பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்?
தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்?
யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்?
மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்?
ஏன் SOP கொண்டு வந்தீர்கள்?
வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்?
மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்?
எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்…
“அந்த கரடி பொம்மை என்ன விலை?”
“சார், அது கண்ணாடி சார்!” 😂😂😂
#தோல்வித்தலைவர்
திரு ஸ்டாலின் அவர்கள் திருமதி சத்தியபாமா அக்காவை உருவகேலி செய்துள்ளது தவறானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் பிரச்சாரமா? பெண்களை கேலி செய்யும் பிரச்சாரமா? பெண்களை இப்படி உருவக்கேலி செய்வதுதான் உங்கள் அரசியலா? மக்களின் வாக்குகளை கேட்கச் செல்லும் அரசியல் கட்சிகளுக்கு பெண்களின் கண்ணியம் குறித்து எந்தப் பொறுப்பும் இல்லையா?
பெண்களைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவது ஒரு தனிநபரை மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல. அது ஒட்டுமொத்த பெண்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் அவமதிக்கும் செயல்.
அரசியல் மேடைகளில் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு கைதட்டல் கிடைப்பதாக நினைத்தால், அது அரசியலின் வெற்றியல்ல அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சி.
திரு ஸ்டாலின் அவர்கள் இதற்கு உடனடியாக விளக்கம் அளிப்பதுடன், பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ShameOnStalin
Rajmohan retweeted
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
Rajmohan retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
Rajmohan retweeted
🚨 போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு 🗣️
🛡️ சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
⚠️ சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப் பகிர்வது ஒரு குற்றமாகும். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
📢 இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
🚨 Greater Chennai Police is investigating a sensitive case related to POCSO offences. It has been observed that certain photographs/clips of a minor girl have been shared in media as well as in Social media handles.
⚠️ Sharing of any such pictures of a minor is a criminal offence. Publication of any such picture is an offence under section 23(2) POCSO Act and warrants legal action. Hence it is requested not to share any such information in public. Anyone having evidence related to this case may produce it with Greater Chennai Police.
#ChennaiPolice #GCP #POCSO #ChildSafety #Chennai #PublicAdvisory #CyberSafety
தாங்க முடியாத துயரம்!
பத்மஸ்ரீ, முனைவர், பேராசிரியர், பட்டிமன்றப் பிதாமகர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழ்க்கூறும் நல்லுலகிற்கே மாபெரும் இழப்பாகும்.
கல்லூரியில் பயிற்றுவித்த தமிழை, பட்டிமன்றங்கள் வாயிலாகப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று புகழின் உச்சிக்கு உயர்த்திய மாண்புடையவர்.
தன்னுடைய இறுதி மூச்சு வரை இலக்கிய உலகில் தனி முத்திரையைப் பதித்தவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உலகத் தமிழர்களுக்கும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தனைக் கோபத்திலும் “ஆபாசமாய்”பேசாமல்.. ஆதாரப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, அரசியல் பூர்வமாக பேசினார் முதல்வர்.
ஒருமணிநேர கூச்சலுக்கு நடுவே சிறிதும் சமநிலை தவறாது முழு உரையை முடித்தார். அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி, இவரிடம் கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன.
நாகரீக அரசியலின் நட்சத்திரம் ⭐️ #CMVijay
எல்லோரும் பொதுவாய் Sundayக்காக காத்திருப்பாங்க.. எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.. #cmvijay
@CMOTamilnadu @TVKVijayHQ
இந்தக் சாலை விபத்து குறித்த செய்தி வேதனை தருகிறது. சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்பது மிக அடிப்படையான உரிமையும் கடமையும் ஆகும்.
எனவே சாலை பாதுகாப்பு, மின் பாதுகாப்பு, நீர்நிலைகளில் பாதுகாப்பு, முதலுதவி போன்ற அத்தியாவசிய வாழ்வியல் திறன்களைப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டாயமாகக் கற்றுக்கொடுக்கும் வகையில் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். “பாடத்திட்டத்தில் பாதுகாப்பு பயிற்சிகள்” சேர்க்கப்படும்.
எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பை மனதில் கொண்டு, இத்தகைய வாழ்வியல் பாதுகாப்புத் திறன்களை மாணவர்களிடம் சிறு வயதிலிருந்தே கொண்டு சேர்க்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு, மிகுந்த கவனத்துடன் செயல்படுத்தப்படும்.
இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#JUSTIN கேரளத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் விபத்திற்கு முன் வெளியிட்ட வீடியோ
#Keralam #RoadAccident #Dindigul #Students #News18Tamilnadu | News18Tamil.com
அரசு விழாக்களில் தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு! மாண்புமிகு முதல்வருக்கு நன்றி..
கப்பலோட்டிய தமிழர் ஐயா வஉசி பிறந்தநாள்! அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, விடுதலைக்காகத் தனது செல்வத்தையும் சுகவாழ்வையும் தியாகம் செய்த உத்தமர்!
இவரது வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றே — உரிமைக்காகப் போராடத் துணிவும், இலட்சியத்திற்காகத் தியாகம் செய்யும் மனமும் கொண்டால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ள முடியும்.
கப்பலோட்டிய தமிழர் ஐயா வஉசி பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டுப்புற கலைஞர்களோடு சிறப்பாக ஆடி பாடி மோளம் கொட்டி கொண்டாடினோம்! முன்னோரின் தியாகத்தையும் இலட்சியத்தையும் தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்வோம்!
அறிவை மட்டும் கற்பிப்பவர்கள் அல்ல; ஒரு தலைமுறையின் சிந்தனையை வடிவமைப்பவர்கள் ஆசிரியர்கள். அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
மாண்புமிகு தமிழக முதல்வர் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் தோழர்..
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபத்தை மீளுருவாக்கிய தலைமைச் சிற்பி திரு. வி. பி. வேல்முருகன் அவர்களுக்கும் பாராட்டுகள்
தமிழ் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியச் சிறப்புகளைப் பேணிப் பாதுகாப்பதில் எங்கள் வெற்றித் தலைவரின் தலைமையிலான அரசு மிகுந்த அக்கறையுடனும் உறுதியுடனும் செயல்பட்டு வருகிறது. அவற்றைப் போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதிலும் உறுதியாக உள்ளோம்.
உங்கள் காணொலியில் சிற்பி திரு.வேல்முருகன் அவர்கள், மதுரையில் சிற்பக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது மாமல்லபுரத்தில் சிற்பக்
கல்லூரி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் பயின்று, சிறப்பான பயிற்சி பெற்ற கலைஞர்கள் இன்று உலகம் முழுவதும் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தி சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோன்று, மதுரையில் சிற்பக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், உரிய வகையில் ஆய்வு செய்து அரசு நிச்சயமாகப் பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாமதுரை போற்றுவோம்!
மன்னராட்சி காலத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கல்மண்டபமான வீரவசந்தராயர் மண்டபத்தை உருவாக்கிய தலைமைச் சிற்பி திரு. வி. பி. வேல்முருகன் அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தேன்.
அவர் முன்வைத்த கோரிக்கையைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
#வீரவசந்தராயர்மண்டபம் #VPVelmurugan #சிற்பக்கலை #தமிழகஅரசு #MaduraiHistory #TamilNaduSculptors
Rajmohan retweeted
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Rajmohan retweeted
100 நாள் ஆட்சி
ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி
100 Days of Governance
A Government for Generations
#CMJosephVijay
வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!
2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.
வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.
- ராஜ்மோகன்





















