Smiling Raman retweeted
அடுத்த 24 மணி நேரத்துல இந்த 3-ல ஒண்ணு கண்டிப்பா நடக்கும் 👀
#dmk #TamilNaduPolitics #TVK #tvkfails #Kallakurichi
Smiling Raman retweeted
சிக்கந்தர் மலையா? அது தர்காவே இல்லை.. வேலூர் இப்ராஹிம் அதிர்ச்சி விளக்கம்! | Thirupparankundram |
#velloreibrahim | #thiruparankundramdeepamissue | #thiruparankundramdeepam | #Madurai
Smiling Raman retweeted
Truth about Katu-va's in Bharath and their version of Secularism being imposed on us Hindus...
Smiling Raman retweeted
குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கைது – குற்றத்தை மூடி மறைத்துப் பாதுகாத்த முதலமைச்சர் உட்பட அனைவரின் மீதான நடவடிக்கை எப்போது?
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காமல் கடந்த நான்கு மாதங்களாக மூடி மறைக்க முயன்று, அவ்விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்ற பிறகு, அவரைப் பாதுகாத்துத் தப்பிக்க வைக்கவோ, நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்தவோ முடியாமல் வேறு வழியின்றி, கைது செய்திருக்கிறது இந்த கொடுங்கோல் தவெக அரசு.
மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி, அவருக்குத் தாங்க முடியாத மன உளைச்சலைக் கொடுத்தது குற்றம் என்றால், அத்தகைய குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்துகொண்டே, அதனை மூடி மறைக்க முயன்றவர்களும் சட்டத்தின் முன் குற்றவாளிகள்தான்!
கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகாரை மறைத்து, அவரைப் பணியிட மாற்றம் செய்யப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படும் தலைமைச் செயலாளர்; புகார் அளித்தால்தான் விசாரிக்க முடியும் என்ற நிலையில் அலட்சியத்தோடு செயல்பட்ட காவல்துறைத் தலைவர்; இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, அது ஒரு வதந்தி (Rumour) என்று இக்குற்றத்தை திசைதிருப்ப முயன்ற சட்டத்தையே மதிக்காத சட்டத்துறை அமைச்சர்; இவை அனைத்திற்கும் மேலாக, தன் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகாரைக் கண்டும் காணாதது போல கள்ளமௌனம் காத்த முதலமைச்சர் என, இவ்விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டு, புகாரை மூடி மறைந்து காப்பாற்ற முயன்ற அனைவருமே சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதுதான் பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் உண்மையான நீதியாகும்.
சாதாரணக் குடிமகன் தவறு செய்தால் உடனடியாகப் பாயும் சட்டம், ஆளுங்கட்சியின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களிடம் மட்டும் செயலிழந்துவிடுவதைப் பார்க்கும்போது, தமிழகத்தில் நடப்பது Rule of Law-ஆ, அல்லது Rule of Ruling Party-ஆ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
“கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல் கோடிச்
சூழாது செய்யும் அரசு”
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு உணர்த்தும் நியதி போல, ஆட்சிமுறை தவறி, விளைவுகளை ஆராயாமல் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசன், தனது செல்வத்தையும், குடிமக்களையும் ஒரே நேரத்தில் இழப்பான். அத்தகைய நிலையைத் தவெக அரசும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் அடையும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை மக்கள் உணர்த்துவார்கள்.
@TVKVijayHQ @CMOTamilnadu
Smiling Raman retweeted
பொய்ச்செய்திகளை, வெறுமனே யூகத்தின் அடிப்படையில், ஊரெல்லாம், ஊதாரி காங்கிரஸூம், திமுகவும் ஓயாமல் ஊளையிட்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த போது, சட்டமன்றத்திலேயே, அண்ணாதிமுகவின் மிகத் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்தவர் திரு. EPS அவர்கள் தான்.
அதன்படி,
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18% க்கு குறையக் கூடாது. 1971 மக்கள் தொகை அடிப்படையில் தான் சீட்டுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டுமே தவிர, வேறெந்த ஆண்டின் மக்கள் தொகையையும் கணக்கிலெடுத்து சீட்டுக்களின் எண்ணிக்கை உருவாக்கக் கூடாது.
Delimitation-யில், இவ்ளோ தான் அண்ணாதிமுகவின் கொள்கையென முரசறைந்தார். இன்றைக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அண்ணாதிமுக மாநில உரிமை கொள்கையில் மிக ஆழமான நிலைப்பட்டைக் கொண்டது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மதிப்பளித்திருக்க வேண்டும் என வெளிப்படையாக தன் நிலைப்பாட்டை அறிவித்தவர் திரு. EPS அவர்கள்.
மருத்துவ மேற்படிப்பில், OBC ற்கான 27% இட ஒதுக்கீடுக்கு முதன் முதலில் வழக்கு தொடுத்தது அண்ணாதிமுக தான்.
EWS 10% அமலாக்க முடியாதென்றதும் அண்ணாதிமுக தான். 7.5% உள்ளிட ஒதுக்கீட்டின் போது, ஆளுநரே கையெழுத்திட முடியாதென அறிவித்த போதும், அசராமல் அதைச் சாத்தியமாக்கி அசத்தியவரும், இதே இந்த எடப்பாடியார் தான்.
மாநில உரிமை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், இட ஒதுக்கீடு, மத்தியில் கூட்டாட்சி மாநில சுயாட்சி என முழுக்க முழுக்கக் கொள்கைகளின் அடிப்படையில், அரை நூற்றாண்டு காலம் அட்சுரம் பிசகாமல், அரசியல் நடத்தும் ஒரே ஒரு அரசியல் கட்சி என்றால், சர்வ நிச்சயமாக, அஃது, அண்ணாதிமுக தான்.
ஊர்தோறும் தூர்வாரி உயிர் நீருக்கும் உத்தரவாதம் அளிக்கும். உலக முதலீட்டாளர்களை உள்ளூருக்குள் அழைத்து தொழிற்துறையிலும் முத்திரை பதிக்கும்.
அருள் விக்னேஷ்களின் அரசியலையே அழிக்கும். அன்னை காவிரியை சட்டத்தின் துணையோடு அழைக்கும்.
அண்ணாதிமுக என்பது,
தமிழ்நாட்டில் செயல்படுகிற வெறுமனே ஓர் அரசியல் கட்சி மட்டும் அன்று. அதையும் தாண்டிய அனைவரையும் உள்ளடக்கிய ஓர் ஒப்பற்ற,
'ஒற்றுமை' குறியீட்டின் அடையாளம்.
'வளர்ச்சி' குறியீட்டின் அடையாளம்.
'அமைதி' குறியீட்டின் அடையாளம்.
மாற்றம் விரும்பியதால் உருவான, கடந்த ஆறுமாத கால, குரங்கின் கையில் சிக்கிய பூமாலையாய் விழிபிதுங்கி நிற்கும் இவ்வாட்சியையும், 2021-26 கால, நிர்வாகச் சீரழிவின் நிரந்தர ராஜாவான ஸ்டாலினின் ஆட்சியையும்,
புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியாரின் 2017-21 கால ஆட்சியையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துத் தெளிவாகுங்கள். அண்ணாதிமுக ஆட்சி மீண்டும் மலர ஆதரவளிக்கும் அற்புதச் செயலைச் செய்யுங்கள்.
இரட்டை இலை - தமிழ்நாட்டின் பாதுகாவலன்
இரண்டு திமுகவையும்,
அடியோடு அகற்றுவோம்...!
இரட்டை இலையை,
ஆட்சியில், அமர்த்துவோம்...!
புரட்சித்தலைவியின் பக்தன்
தனாகுட்டி
Smiling Raman retweeted
யோவ் வன்னி @VanniTamizhVCK இந்த மானங்கெட்ட பிழைப்பு உமக்குத்தேவையா @VCKofficial_ @vckitwingoffi @thirumaofficial @aloor_ShaNavas @VckBalaji
Smiling Raman retweeted
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.
அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்-
“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts”
மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது.
இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.
இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும்.
இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Smiling Raman retweeted
என் பேர கூட சொல்லாம "மற்றும் பலர்"னு சொல்லி உன் அண்ணன் நக்கல் பண்ணிட்டு இருந்தான், இப்ப நீ ஜெயிலுக்கு யாரால போனனு உன் அண்ணன் கிட்ட போய் சொல்றியா..
என் பேரு.. எடப்பாடி பழனிச்சாமி!!
Smiling Raman retweeted
#புரட்சித் தலைவரின் ஆட்சி காலத்தில் அமைச்சராக பணியாற்றிய
ஐயா H.V.ஹண்டே அவர்களின் 100 வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு
மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள் நேரில் வாழ்த்தினார்!
Smiling Raman retweeted
சிரிக்காமல் எப்படி ஒருவரை கலாய்ப்பது? @Senthilvel79 ரோஸ்டிங் இப்படி இருக்கும்👇
Smiling Raman retweeted
அண்ணன் மட்டும் இப்போ சினிமா நடிச்சு இருக்கனும்.. கலெக்டருக்கு தொந்தரவு கொடுத்த எம்எல்ஏ வை பாலத்துக்கு கீழே தொங்க விட்டுருப்பாரு..
முதலமைச்சராக இருப்பதால் அவரால் ஒன்னும் செய்ய முடியல பாவம்🚶🚶
@TVKPartyHQ @TVKVijayHQ
Smiling Raman retweeted
தம்பி @WengerFan09 திருமாவுக்கு நீங்க பேரு இப்ப இங்க set ஆகுது😂
விசிகவின் ரஜினிகாந்த் ஒரு வக்கீலா நம்ப முடியல இப்ப பாலியல் பொருக்கி எல்லாம் முட்டு கொடுக்கும் நிலைக்கு போயிடுச்சி
@arnoldkote4 🔥🔥🔥
Smiling Raman retweeted
ஏலே வாங்க வாங்க Part - 2 Video வந்துருக்கு 😂
Part 1 ah விட அடி நொறுக்கி விட்டுருக்காங்க 😂🔥
Smiling Raman retweeted
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அஞ்சாது போராடிய வீரத்தமிழர், செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தில், அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial சார்பிலும், என் சார்பிலும், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, சுதந்திர வேட்கையைத் தமிழர் நெஞ்சங்களில் விதைத்த அவரது வீரமும் தியாகமும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்!
#VOChidambaramPillai
Smiling Raman retweeted
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு…
ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு….
What bro…
It’s so wrong bro @actorvijay !
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
























