
MLA-Kamaraj Nagar,Puducherry President-Latchiya Jananayaka Katchi @ljk_puducherry|@ljktamilnadu_ Let’s build a glorious TN & Puducherry!
Chennai
Joined July 2009
- Tweets5.1K
- Following842
- Followers5.6K
- Likes417
சிறு வயது முதல் அன்புமணி ராமதாஸ், சீமான் மற்றும் அண்ணாமலை ஆகியத் தலைவர்களுடன் பழக்கம் இருக்கிறது.அவர்களுடன் இருப்பது ஒரு நட்புரீதியான உறவு. எதிர்காலத்தில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் லட்சிய ஜனநாயக கட்சியை எப்படி வளர்க்கலாம் என ஆரம்பநிலையில் ஆலோசித்து வருகிறேன்; எதுவும் நடக்கலாம் என SS News Digital ஊடகத்திற்கு அளித்த Podcast-ல் பேசியிருந்தேன்.
#jcm #ljk #tamilnadu #Podcast #PoliticalLeadership
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்; தவறினால் மத்திய அரசின் தேசிய மகளிர் ஆணைய விசாரணை மூலம் மாநில அரசுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.
#jcm #ljk #tamilnadu #tvkfails #cmotamilnadu
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ICU-யில் போதுமான வென்டிலேட்டர் வசதி இல்லை என இதய நோயாளி ஒருவர் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியைத் தருகிறது. உயிருக்கே ஆபத்தான நிலையில்,நோயாளியைத் திருப்பி அனுப்புவது ஏற்புடையதல்ல; மத்திய சுகாதாரத்துறையுடன் பேசி, உரிய வசதிகளைப் பெற்று, நோயாளிகள் பாதிக்கப்படாதவாறு பணிசெய்ய ஜிப்மர் நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்!
#jcm #ljk #puducherry #jipmer #healthcareforall
காவிரி நீர் விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட சூழலில், சோனியா காந்தியின் புத்தக நிகழ்ச்சியில் கர்நாடக CM-வுடன், தமிழக CM உறவுகொண்டாடுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.. மேக தாதுவில் நமக்கு எதிராக அணை கட்டத்துடிக்கும் நபருடன், CM என்னும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பழகுவதை, மானமுள்ள தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்!
#jcm #ljk #tamilnadu #Cauvery #CMOTamilNadu
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் கப்பலோட்டி, சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி வரலாறு படைத்த கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றிப் புகழ்வணக்கம் செலுத்துவோம்!
#ljk #jcm #voc #freedomfighters #voschidambaranar
காமராஜ் நகர் தொகுதியில், எனது அறிவுறுத்தலின்படி இலவச மருத்துவ முகாம் நாளை (18.11.2026, புதன்கிழமை) நடைபெற உள்ளது.
அனைத்துப் பகுதி மக்களும் இம்மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#jcm #ljk #puducherry #freemedicalcamp #solallaseyal
PACL நிறுவனத்தின் மோசடியால் இந்தியா முழுவதும் சுமார் 7 கோடி மக்களும், தமிழகத்தில் ஒரு கோடி மக்களும் தங்கள் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு மக்களின் பணத்தை மீட்டுத் தர வேண்டும். PACLஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு ஆதரவை லட்சிய ஜனநாயக கட்சி வழங்குகிறது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நாங்கள் இருப்போம்!
#jcm #ljk #tamilnadu #pacl #cmotamilnadu
🤖 Made with AI
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் நேரலை வர்ணனையில் பாடகர் வேல்முருகன், “தமிழக முதல்வர்,
அமைச்சருக்கு அரோகரா” என சொல்லியிருப்பது மிக மிகத் தவறானது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை போற்றி வணங்க எழுப்பப்படும் முழக்கமான,'அரோகராவை’ எந்தவொரு மனிதனுக்கும் சொல்வது, கடவுளை நிந்திக்கும் செயல் ஆகும். இப்படி ஒரு தவறு மீண்டும் நடக்காதவாறு தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்!
#ljk #jcm #tamilnadu #thiruchendurmurugan #VelMurugan
மதுரை - செக்கனூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்ததாகக் கூறப்படும் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், உடலில் 5 இடங்களில் காயம் வந்தது எப்படி? இன்சூரன்ஸ் தொகையை முறைகேடாகப்பெறுவதற்காக, லாரி நிறுவனமும் ஏலக்காய் உரிமையாளர்களும் லாரியில் தீ வைத்துவிட்டு, இறுதியில் ஏலக்காய் மூட்டைகள் திருடுபோனதாக பொய்ப்புகார் அளித்துள்ளதாக, பாலகிருஷ்ணனின் மனைவி கூறியிருக்கிறார். இந்நிலையில், இதற்குப் பின்னணியில் இருக்கும் முறைகேட்டாளர்களையும் லாக்-அப் மரணத்துக்குக் காரணமான காவல் துறையினரையும் கைது செய்ய வலியுறுத்துகிறேன்.
#jcm #ljk #balakrishnan #CustodialDeath #chekkanurani
வங்கக்கடலில் அக்வான் புயல் உருவான சூழலில், புதுச்சேரி, காரைக்கால் கடல் பகுதிகளுக்குள்
சுற்றுலாப் பயணிகளும் மீனவர்களும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வகம் சொன்னதைப் பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதையொட்டி, புதுச்சேரியில் காய்கறி விலை உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின்
விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்படி, வேண்டுகோள் விடுக்கிறேன்
#ljk #jcm #puducherry #CycloneAlert #cyclone
மேகதாது அணை விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி அணை கட்டியே தீருவேன் என்று கர்நாடக முதலமைச்சர் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஒரு மாநிலத்தின் நீர்வளத் திட்டம், மற்றொரு மாநிலத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. நாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள், அனைத்து விவசாயிகளின் நலனையும் சமமாகக் கருதி, மாநிலங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் காக்கும் வகையில் கர்நாடக அரசு இந்த அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
#jcm #ljk #MekedatuDam #Cauvery #Farmers
மதுரை - திருப்பரங்குன்றம் மலையில் 'ஈழக்குடும்பிகன்' எனும் வார்த்தை தமிழி எழுத்தில் உள்ளது வியப்பைத் தருகிறது. இதன்காலம் கி.மு 100 முதல் 300 வரை என்கின்றனர், கல்வெட்டறிஞர்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்வெட்டுகளையும்; ஓலைச்சுவடிகளையும் உலகத்தமிழர்கள் அறியும்படி, அரசின் இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
#LJK #JCM #TamilNadu #TamilHeritage
மதுரை - செக்கானூரணி காவல் நிலையத்தில் புகாரளிக்கச்சென்ற பாலகிருஷ்ணனை இரவில் விசாரித்தது ஏன்? அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறும் காவல் துறை, அவரது உடலை உறவினர்களிடம் காட்டாமல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பியது ஏன்? இவை பாலகிருஷ்ணனை அடித்துக்கொன்றுள்ளார்களோ எனும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நீதியைப்பெற்றுத் தர வேண்டும்.
#jcm #ljk #CustodialDeath #TamilNaduPolice #cmotamilnadu
'ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும். நம் நாட்டிற்கு என்று ஒரு சொந்த செயற்கைக்கோள் இருந்தால் தான் அது நமக்குப் பாதுகாப்பு. அந்த வகையில் ரூமி ட்வின்-2026 ராக்கெட் ஏவுதலுக்கு உண்டான ஸ்பான்ஷர்ஷிப்பை செய்திருந்தோம். ரூமி ட்வின் செயற்கைக்கோளை, விண்ணில் செலுத்தும்போது, அதனை நிறுத்தி மீண்டும் இயக்க முடியும் வகையில் உருவாக்கி இருந்தோம்’’ என SS News Digital ஊடகத்தில் Podcast-ல் எடுத்துரைத்தேன்.
#jcm #ljk #RHUMITWIN2026 #SpaceTechnology #trending
கடலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 7 இளம்பெண்கள் உள்ளிட்ட 12 பேர் மாயமானதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலையளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக காவல்துறையின் முக்கியப் பொறுப்பாகும்.
எனவே, மாயமான அனைவரையும் விரைந்து கண்டறிந்து பத்திரமாக மீட்பதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தமிழக காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#jcm #ljk #tamilnadu #cmotamilnadu #publicsafety
மத்திய அரசின் சில்லறைப் பணவீக்கப் புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 2026-ல் இந்தியாவின் பெரிய மாநிலங்களிலேயே தமிழ்நாடு 7.29% பணவீக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் சராசரிப் பணவீக்கம் 6.09% ஆக இருக்கும்போது, தமிழ்நாட்டின் பணவீக்கம் அதைவிடக் கணிசமாக அதிகரித்துள்ளது.
மக்களின் குடும்பப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வெறும் வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் வெளியிடுவதோடு நின்றுவிடாமல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும், சாமானிய மக்களின் பொருளாதாரச் சுமையைத் தணிக்கவும் அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#LJK #Jcm #tamilnadu #inflation #tvk
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பஞ்சத்தாலும் பட்டினியாலும் பலர் உயிரிழந்த இந்தியாவில், இன்றைக்கு வறுமை 90%-க்கு மேல் குறைந்திருக்கிறது. அதனை நான் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். இந்த சாதனைக்கு இப்போது எல்லோரும் உரிமைகொண்டாடுகிறார்கள்’ என SS News Digital ஊடகத்தில் Podcast-ல் கூறினேன்.
#LJK #JCM #Puducherry #Trending #gdp
தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட 23 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இரவுக் காவலர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாதது மிகுந்த வேதனைக்குரியது.
உழைக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#LJK #JCM #TamilNadu #GovernmentEmployees #SalaryPending
தமிழ்நாட்டின் சிறந்த தூய்மை நகரமாக தேனி - அல்லிநகரம் நகராட்சியானது, மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற அமைச்சகத்தினால் விருது வழங்கிப் பாராட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு பெருமைமிகு தருணம்.. இந்த விருதைப் பெற காரணமாக இருந்த அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதைத் தொடர்ந்து தக்கவைக்கவும் வாழ்த்துகிறேன்.
#ljk #jcm #Theni #tamilnadu #CleanCity



























