மண்டியிடாத மாவீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவைப் போற்றுவோம்!
#மருது_பாண்டியர்கள்
"தமிழ்நாடு" பெயர்சூட்ட 76 நாள்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த ஈகி சங்கரலிங்கனார் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾 வீர வணக்கம் செலுத்துவோம்! 💪🏾
#தமிழ்நாடு #சங்கரலிங்கனார் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்
பொதுவுடமைக் கருத்துக்களைத் திரைப்படங்களூடாக எளிய தமிழில் கொண்டு சேர்த்த மக்கள் பாவலன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛
#பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம் #கல்யாணசுந்தரம் #Kalyanasundaram
கடலியல் ஆய்வாளர் தமிழினத்தின் பேரடையாளம் ஐயா ஒரிசா பாலு அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
#ஒரிசா_பாலு
உண்ணா நோன்பில் உலகை வென்ற ஒப்பிலா இளைஞன் ஈகைச்சுடர் திலீபன் நினைவைப் போற்றுவோம்!
வீரவணக்கம் செலுத்துவோம்!
🙏❤️💛
#ஈகைச்சுடர் #திலீபன்
#தியாகதீபம்_திலீபன்
மக்களியல் சீர்திருத்தப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
🙏❤️💛
#இரட்டைமலை_சீனிவாசன்
தாய்மொழிப் பற்றை விதைத்தவர்! சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சைவ அறிஞர், மக்களியல் சீர்திருத்தவாதி, பெண்ணியம் போற்றியவர்!
'தோழர்' என்ற சொல்லைத் தமிழ்நாட்டில் முதன்முதலில் பயன்படுத்திய பெருமைக்குரியவர் #தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾
தமிழ், ஆங்கிலம், வடமொழி என்று மும்மொழிகளையும் கற்றுத் தேர்ந்து, தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார் நினைவைப் போற்றுவோம்!
🙏🏾❤️💛
#மறைமலையடிகள்
மக்களியல் விடுதலைப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾
வீரவணக்கம் செலுத்துவோம்!
💪🏾❤️💛
#இம்மானுவேல்_சேகரனார் #இம்மானுவேல்_சேகரன் #ImmanuelSekaran
புலவர் புலமைப்பித்தன் நினைவைப் போற்றுவோம்!
🙏🏾❤️💛
#புலமைப்பித்தன்
பரங்கியனை நொறுக்கிய விடுதலைப் போராளி மாவீரர் சுந்தரலிங்கனார் நினைவைப் போற்றுவோம்!
#மாவீரர்_சுந்தரலிங்கனார்
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
தமிழ்நாட்டிலுள்ள கடைகளின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை
நவம்பர் முதல் நாளிற்குள்
தமிழில் மாற்ற வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை மனமார வரவேற்கின்றேன். வரலாற்றுச்சிறப்பு மிக்கத் தீர்ப்பினை அளித்த மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் எங்குமே தமிழ் இல்லை. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பதே அரிது.
தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்டவும், தமிழ்நாட்டின் பொதுவெளிகளில் தமிழுக்கு உரிய முதன்மையைப் பெற்றுத்தரவும் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐயா மருத்துவர் இராமதாசு, அண்ணன் தொல்.திருமாவளவன் தலைமையில் நான் மற்றும் பல நூறு தமிழ் உணர்வாளர்கள் இணைந்து தொடங்கிய தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்தல், தமிழ்மொழியைப் பொதுப்பயன்பாட்டு மொழியாக நிலைநிறுத்துதல், பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்தியது.
தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுவெளிகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போராட்டங்களின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இயக்கங்களின் வாயிலாக வலியுறுத்தப்பட்ட இக்கோரிக்கையை இன்று உயர்நீதிமன்றமே காலக்கெடு விதித்து நிறைவேற்ற உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஓட்டல் இருக்கிறதே தவிர உணவகம் இல்லை. டீ ஷாப் இருக்கிறதே தவிர தேநீர் கடை இல்லை. லாட்ஜ் இருக்கிறதே தவிர தங்கும் விடுதி எங்கும் இல்லை. பேங்க் இருக்கிறதே தவிர வங்கி இருப்பதில்லை. ஜுவல்லரி இருக்கிறதே தவிர நகைக்கடை இல்லை. ஸ்டேஷனரி இருக்கிறதே தவிர எழுதுபொருளகம் இல்லை. எலக்ட்ரிக்கல்ஸ் எலக்ட்ரானிஸ் ஹார்டுவேர் உண்டு. ஆனால், மின்பொருளகமும், வன்பொருளகமும் இல்லை. ஆப்டிகல்ஸ் உண்டு. கண் அணியகம் இல்லை. மெடிக்கல்கள் நிறைய உண்டு. மருந்தகங்கள்தான் இல்லை. ஹோல்சேல், ரீட்டைல், ரிப்பேர் சேல்ஸ் & சர்வீஸ் உண்டு. மொத்த சில்லரை விற்பனையகமோ, பழுது நீக்ககமோ எங்குமே காணக்கிடைப்பதில்லை. நீலக்கல் என்பதைக்கூட ப்ளூ ஸ்டோன் என்று தமிங்கலத்தில் எழுதுவதுதான் இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டில் சாப்பாடு கிடைப்பதற்கு பதிலாக மீல்ஸ்தான் கிடைக்கின்றது. லெமன் சாதம் ரெடி என்று வடமொழியையும் ஆங்கிலத்தையும் கலந்து வணிக பெயர்ப்பலகைகளில் தமிழ்ப்படுகொலையே நடக்கிறது.
‘மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாவேந்தர் பாரதிதாசன் வருந்திப்பாடி 75 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் அதே அவலநிலை நீடிக்கிறது.
இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் செய்த அளப்பரிய ஈகங்களைத் தனதாக்கி, மொழிப்போர் மூலம் கிடைத்த முகவரியில் ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிட ஆட்சியாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்து அழித்துவிட்டனர். தமிழ்நாட்டில் இன்றுவரை அன்னைத் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயராகும்.
தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கின்ற இழிநிலை; தாழ்வு மனப்பான்மையால், தமிழர் தன் சொந்த நிலத்திலேயே வாழ்விழந்து, தன் மொழியின் உரிமையிழந்து தவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மாணவர்கள் முதல்
மாண்புமிகு அமைச்சர்கள்வரை தமிழில் பிழையின்றி எழுதப்படிக்க தெரியாமல் தடுமாறும்நிலை இருப்பது வெட்கக்கேடானது.
தமிழ்நாட்டுத் தெருக்களிலுள்ள பெயர்ப்பலகைகள் கூட தமிழில் இல்லை என்பதைவிட தமிழினத்திற்கு வேறென்ன இழிவு இருக்க முடியும்? கர்நாடக மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் கன்னட மொழியிலேயே பெயர்ப்பலகை வைக்க வேண்டுமென அம்மாநில அரசு தனிச்சட்டம் இயற்றி அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க நீதிமன்றம் உத்தரவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
(1/2)
1965-இல் அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய செந்தமிழ்ச் செருக்கள வேந்தர் பேராசிரியர்
சி.இலக்குவனார் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛
#இலக்குவனார்
தமிழ் தேசிய விடுதலை மற்றும் சாதிய ஒழிப்பு, சமூக சமத்துவம் போன்ற கொள்கைகளில் ஊடாடி, ஆயுதப் போராட்ட வழி தனித்தமிழ்நாடு கோரி இறுதிவரை போராடிய புரட்சி வீரன் பொன்பரப்பித் தமிழரசனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்! 💪🏾
தமிழ்நாட்டு உரிமை மீட்போம்! 🙏🏾
#பொன்பரப்பித்_தமிழரசன் #தமிழரசன்
தமிழிசையின் வரலாற்றையும், பழங்கால இசையையும் ஆழமாக ஆய்வு செய்து, "கருணாமிர்த சாகரம்" என்ற நூலை 1917-ஆம் ஆண்டு எழுதியவர், சித்த மருத்துவம் மற்றும் புதுமையான வேளாண்மை முறைகள் கையாண்டது போன்ற பன்முகத்தன்மை கொண்ட தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் நினைவைப் போற்றுவோம்!
#ஆபிரகாம்_பண்டிதர்
மூவர் உயிரைக் காக்க உயிர்நீத்த வீரத்தமிழச்சி செங்கொடி நினைவைப் போற்றுவோம்!
#வீரத்தமிழச்சி_செங்கொடி
"தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்"
என்று முழங்கிய நாமக்கல் பாவலர் வெ.இராமலிங்கனார் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛
#நாமக்கல்பாவலர் #நாமக்கல்கவிஞர் #வெஇராமலிங்கனார்
























