Sudhagar Pitchaimuthu (@vedichi) profile picture

Associate Professor, Heriot-Watt University,UK

United Kingdom
Joined October 2009
Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)
Sudhagar Pitchaimuthu retweeted
கல்லூரி காலத்திலிருந்தே ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட விஞ்ஞானி. ஸ்காட்லாந்து பேராசிரியர். கடல் கடந்து வென்றாலும், தான் படித்த பள்ளிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் துணையாய் நிற்கும் பண்பாளர் சுதாகர் பிச்சைமுத்து. #VoteForDMK
3
123
3
227
3,195
2025 நோபல் பொருளாதார விருது - உலகை மாற்றிய தொழில்நுட்ப வளர்ச்சி: நிலைத்த வளர்ச்சியின் ரகசியம் ------------------------------------------------------------ 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பொருளாதார விருது (The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2025) மூன்று முக்கிய பொருளாதார அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: ஜோயல் மோக்கியர் (Joel Mokyr), பிலிப் அகியோன் (Philippe Aghion) மற்றும் பீட்டர் ஹோவிட் (Peter Howitt). ஜோயல் மோக்கியர் Northwestern University, Evanston, IL, USA“for having identified the prerequisites for sustained growth through technological progress” பிலிப் அகியோன் Collège de France and INSEAD, Paris, France, The London School of Economics and Political Science, UK பீட்டர் ஹோவிட் Brown University, Providence, RI, USA “for the theory of sustained growth through creative destruction” இந்த மூவரும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு தற்காலிக முன்னேற்றத்திலிருந்து நிலைத்த வளர்ச்சியாக மாறியது என்பதை வெவ்வேறு கோணங்களில் விளக்கியுள்ளனர். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகளவில் தொழில்நுட்ப முன்னேற்றம் வழியாக நிலைத்த பொருளாதார வளர்ச்சி எவ்வாறு சாத்தியமானது என்பதை இந்த ஆண்டின் நோபல் பொருளாதாரப் பரிசு பெற்ற அறிஞர்கள் கணித மாதிரிகள் மற்றும் வரலாற்றுப் பகுப்பாய்வுகள் மூலம் விளக்கி நிரூபித்துள்ளனர். இதற்கான முக்கிய காரணம் - ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமூகங்கள் புதிய தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, பழையவற்றை மாற்றியமைத்த திறன் கொண்டிருந்ததே ஆகும். உதாரணத்திற்கு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் தொலைபேசியில் (Telephone) இருந்து அலைபேசி (Mobile phone) வரை ஏற்பட்ட மாற்றங்களையும் நாம் விரைவாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் ஓர் பகுதியாக மாற்றிக் கொண்டோம். இவ்வாறான தொடர்ச்சியான புதுமை ஏற்றுக்கொள்ளுதல் தான் வளர்ச்சியின் அடிப்படை என கூறலாம். இப்போது நமக்கு முன் நிற்கும் இரண்டு முக்கியமான கேள்விகள்: 1. புதுமை வழியிலான பொருளாதார வளர்ச்சி எதனால் நிலைத்ததாக மாறியது? 2. புதிய தொழில்நுட்பங்கள் பழையவற்றை மாற்றியபோது ஏற்பட்ட முரண்பட்ட நலன்களை வளர்ச்சி எவ்வாறு சமாளித்தது? ஜோயல் மோக்கியர், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் எவ்வாறு ஒருவரையொருவர் ஊக்குவித்து “சுயமாகத் தொடரும் வளர்ச்சியை” உருவாக்கும் செயல்முறையை விளக்கினார். அவர் கூறுவது, சமூகங்கள் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனப்பாங்குடன் இருந்தால் மட்டுமே அறிவியல் முன்னேற்றம் நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதாகும். பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் இணைந்து 1992 ஆம் ஆண்டில் உருவாக்கிய ஆக்கப்பூர்வமான அழிவு (Creative Destruction) முறைமையில், நிறுவனங்கள் புதுமைகளை உருவாக்கி, பழைய தொழில்கள் மற்றும் பொருட்களை மாற்றியமைத்து, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கின்றன என விளக்கினர். இது “படைப்பு” என்பதால் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது; அதேவேளை “அழிவு” என்பதால் பழைய தொழில்நுட்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இம்மூவரின் ஆராய்ச்சிகள் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு இயற்கையான நிகழ்வு அல்ல; மாறாக அது அறிவு (knowledge), புதுமை (innovation), தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் சமூக திறந்த மனப்பாங்கு ஆகியவற்றால் கட்டமைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்பதை நமக்கு அவர்களது ஆய்வின் மூலம் நிரூபணம் செய்து காட்டியுள்ளனர். 2025 நோபல் பொருளாதார விருது, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை காரணம் புதுமைதான் (Innovative) என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது — “தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வழி நிலைத்த வளர்ச்சி” என்பது இவ்விருதின் மையக் கருத்தாகும். இன்று விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, நோபல் குழுவினர் விருதாளர்களில் ஒருவரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் பிலிப் அகியோன் (Paris School of Economics) அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினர். அந்த நேரத்தில் நிருபர்கள் கேட்ட முக்கியமான கேள்வி — “நீங்கள் பெற்றிருக்கும் நோபல் பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?” அதற்கு பிலிப் அகியோன் மகிழ்ச்சியுடன், தனது விருது தொகையை பாரிஸ் பொருளாதாரப் பள்ளியில் (Paris School of Economics) உள்ள இளம் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முயற்சிகளுக்காக ஒதுக்கப் போவதாக தெரிவித்தார். மேலும், “செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் உதவியுடன் எவ்வாறு நமது பொருளாதார ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி, எதிர்காலப் போக்குகளை ஆராயலாம் என்பதையே கவனமாகப் ஆராய்ச்சி செய்ய‌ விரும்புகிறேன்,” என்று கூறினார். அவர் மேலும், தற்போதைய முக்கிய சவால்களில் ஒன்றான தொழிற்சாலை கார்பன் உமிழ்வு (Industrial carbon Emission) குறித்து — “கார்பன் வரி, குறை கார்பன் உமிழ்வு தொழில்நுட்பங்கள் போன்றவை பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட முடியும்” என்பதையும் ஆராயப்போவதாக தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை குறைக்குமா?, அல்லது புதிய தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்குமா? என்ற நம் கேள்விகளுக்கான பதில்களை நோபல் பரிசு பெற்ற இவ்வாய்வுகள் வழங்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. “புதுமை வழியிலான தொழில்நுட்ப முன்னேற்றமே எதிர்கால உலகின் திசையை நிர்ணயிக்கும்” என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மேலும், தரவு சார்ந்த முடிவெடுப்புகள் (Data-driven decisions) இனி ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய முதலீட்டு கருவியாக உருவெடுக்கும். எதிர்கால முன்னேற்றங்களும், கொள்கை வடிவமைப்புகளும், ஆராய்ச்சி முடிவுகளும் அனைத்தும் தரவின் ஆதாரத்தில் நிலைநிறுத்தப்படும் என்கிற திசையில் புதிய யுகம் துவங்கியுள்ளது. - பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து PhD, FRSC கெரியட்-வாட் பல்கலைக் கழகம் ஸ்காட்லாந்து, பிரிட்டன் Picture Courtesy: The Royal Swedish Academy of Sciences & Nobel Foundation
1
917
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா! 1925-ல் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு நூறாண்டுகளை நிறைவு செய்கிறது! இதனைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி (St Antony’s College, University of Oxford) மற்றும் பலியோல் கல்லூரி (Balliol College, University of Oxford) இணைந்து, "Self-Respect Movement and Its Legacies" என்ற தலைப்பில் செப்டம்பர் 4-5, 2025 அன்று சர்வதேச கருத்தரங்கை நடத்தின. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆசிய ஆய்வு மையத்தின் (Asian Centre for Research) ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர் ஜிம் மாலின்சன் (Jim Mallinson, University of Oxford),மற்றும் பேராசிரியர் ஃபைசல் தேவ்ஜி (Faisal Devji (St Antony's College)) ஆகியோர் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் (22 speakers) இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பின்வரும் தலைப்புகளில் ஆய்வு விவாதங்களை முன்வைத்தனர்: • பெரியார் மற்றும் திராவிட இயக்கம் • பெண்ணியம், திருமணம் மற்றும் கண்ணியம் • சாதி மற்றும் சமூக நீதி • அறிவு, நினைவு மற்றும் சட்டம் • உலகளாவிய மற்றும் பிராந்திய மரபுகள் • அரசியல் மற்றும் பண்பாட்டு அங்கீகாரம் முதல்வரின் சிறப்புரை! தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். 1983 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடைபெற்ற‌ சுயமரியாதை இயக்கத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழக தலைவர் மானமிகு ஆசிரியர் திரு கி வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதை முதல்வர் அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அவரது உரையில், தந்தை பெரியார் உலகளவில் மானுட நீதிக்காக ஆற்றிய பணிகளையும், அவரது பேரனாக இந்நிகழ்வில் பங்கேற்றதையும் உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்தார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் திரு கலைஞர் அவர்கள் சுயமரியாதை இயக்கம் குறித்து அவர் பேசிய "ஆண்டவன் பெயரால், மதம், சாதி, இதிகாச புராணங்களின் பெயரால் தாழ்த்தப்பட்டுகிடந்த மக்களை பீடுநடை போடச் செய்த சிறப்புகுரிய இயக்கமாக சுயமரியாதை இயக்கம் திகழ்ந்தது" குறிப்பினை மேற்கோள் காட்டினார். தந்தை பெரியாரின் திருவுருவப்படம் திறப்பு! இந்நிகழ்வில், தந்தை பெரியாரின் திருவுருவப்படம் முதலமைச்சரால் திறக்கப்பட்டது. இந்தப் படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர் திரு. தோட்டா தரணி அவர்கள் நேர்த்தியாக வரைந்துள்ளார். இப்படம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி வளாகத்தில் (St Antony’s College, University of Oxford) நிரந்தரமாகப் பொருத்தப்பட உள்ளது. உலகமயமாகும் பெரியார்! சுயமரியாதை இயக்கம் மூடநம்பிக்கைகளை உடைத்து, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெற்றுத் தந்தது. இன்று, பெரியாரின் பங்களிப்பு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவரது மரபு விவாதிக்கப்படுவது நமக்குப் பெருமை! அனைவருக்கும் அழைப்பு! பிரிட்டனுக்கு வரும் நண்பர்கள், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் (St Antony’s College, University of Oxford) தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தைப் பார்வையிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வரலாற்றுப் பெருமைமிகு நிகழ்வை சாத்தியமாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர், ஆராய்ச்சியாளர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உளமார்ந்த நன்றி! இப்பெருமைமிகு விழாவில் எனது நண்பர்களுடன் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா - தமிழர்களின் பெருமிதம்! -பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து, PhD, FRSC ஸ்காட்லாந்து, செப்டம்பர் 5, 2025 @mkstalin @TRBRajaa #Periyar100 #SelfRespectMovement #OxfordUniversity
19
134
7
423
17,128
On behalf of Briton Tamil Diaspora, We are honoured to welcome the Hon’ble Chief Minister of Tamil Nadu, @mkstalin, to deliver the commemorative speech at the Self-Respect Movement and its Legacies Conference at University of Oxford University, UK, on 4 September, 2025. 🌍📖 #SelfRespectMovement #Oxford
13
107
424
11,912
திராவிட மாடலின் மையம் "எல்லோருக்கும் எல்லாம்". அதாவது, சாதி, மத, பேதங்களை தாண்டி, அனைத்து சமூகப் பிரிவினருக்கும் சம உரிமைகள் மற்றும் அரசியல், கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகியவையில் சம பங்களிப்பு கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடலின் அடித்தளம். அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், அரசின் அதிகாரபூர்வமான பதவிகளில், எளிய பின்னணியில் இருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளை நியமிப்பது மிகவும் முக்கியமானது. இது சமூக நீதி மற்றும் நியாயத்தை நிலைநிறுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இந்த பணியில் மிகுந்த சவால்கள் இருந்தாலும், மனித வள மேம்பாட்டுக்கான திறன் பயிற்சியை இலக்குகளுடன் திட்டமிட்டு, தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முதலீட்டை சரியான நேரத்தில், சரியான நபர்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியமான பணியாகிறது. இதை தெளிவாகக் கணித்த தமிழ்நாடு அரசு, “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு மாதந்தோறும் Rs 7,500 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த உதவித் தொகை, மாணவர்கள் தேர்வில் முழு கவனம் செலுத்த, அவர்களுக்கு ஒரு உறுதியான ஊன்றுகோலாக இருந்தது. இன்று யூ.பி.எஸ்.சி. (UPSC) தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று, உதவித் தொகை பெற்ற 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக தேர்ச்சி பெற்ற 1009 பேரில், 4.95% பேர் தமிழ்நாட்டிலிருந்து, இந்தத் திட்டத்தின் பயனாளிகளே என்பதுவே மிகப் பெருமிதமான செய்தியாகும். இந்தப் பெரிய வெற்றிக்கான முதல் படியை, “நான் முதல்வன்” திட்டம் மூலம் தமிழக அரசு வெற்றிகரமாக அமைத்திருக்கிறது. @naan_mudhalvan இத்திட்டத்தை உருவாக்கி, சமூகத்தின் அடித்தளத்தை உயர்த்தும் இந்த நெறியில் செயல்பட்டு சாதனை படைத்த தமிழ்நாடு முதல்வருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்! ‍ -முனைவர் சுதாகர் பிச்சைமுத்து 22/04/2025
5
1
22
1,398
தமிழ்நாட்டில் மும்மொழி விவகாரம்: தமிழ், ஆங்கிலம் படித்து முன்னேறியவர்கள் கூறுவது என்ன? - BBC News தமிழ்தமிழ்நாட்டில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் "இரு மொழிக் கொள்கையே" (bilingual policy) போதுமானது. மேலும் ஆங்கிலத்தை இன்னும் திறன்பட பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. இதை விடுத்து மூன்றாவது மொழியை கற்றல் என்பது குழந்தைகளுக்கு கூடுதல் சுமை என்பதோடு, அது பெரிய அளவில் பலனும் அளிக்காது. இது குறித்து எனது கருத்தை பிபிசி தமிழ் நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டேன். பிபிசி தமிழ் நிறுவனம் இன்று பிரசுரம் செய்துள்ள "இருமொழிக் கொள்கையால் தடைகள் இருந்ததா? தமிழ், ஆங்கிலம் மட்டும் படித்து வாழ்வில் முன்னேறியவர்கள் கூறுவது என்ன?" என்ற கட்டுரையில் எனது கருத்தை வாசிக்கலாம். கட்டுரைக்கான லிங் bbc.com/tamil/articles/cj92l…
1
42
83
3,947
ஜப்பானில் வசித்தாலும், தொடர்ந்து தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவித் தொகை, அரசுப் பள்ளிகளுக்கு உட்கட்டமைபினை மேம்படுத்த நன்கொடை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கல்வி அறப்பணிகளில் உங்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, வட சென்னையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் உதவி வருவது தனிப்பட்ட வகையில் பாராட்டுகுரியது. மேலும் தோக்கியோ நகரில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பணியில் தங்களின் முன்னெடுப்பிற்கு பாராட்டுகள் அண்ணா. ஜப்பானிய மண்ணில் தமிழ் இலக்கியம் சார்ந்து தாங்கள் தொடர்ச்சியாக எடுத்து வரும் முன்னெடுப்புகள், நம் இலக்கியத்தை ஜப்பானியர்களிடம் கொண்டு சேர்த்தது. இப்படி, தாங்கள் செய்த உதவிகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். திராவிட வரலாறு குறித்து தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வரும் உங்களை "திராவிடத்தால் நான்" வரிசையில் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அறப்பணி தொடரட்டும்.
சிறுவயதிலேயே கலைஞரின் பேச்சால் திராவிட அரசியலின் அவசியத்தை புரிந்து கொண்ட செந்தில்குமார், ஜப்பானில் தமிழ் மாணவர்களுக்கான உதவி, மக்கள் நலப் பணிகள் என ஆர்வமாக ஈடுபட்டு வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel
13
32
1,905
என்றும் பெரியார்!
தந்தை பெரியார் என்ன சாதித்து விட்டார் என கேட்கும் தற்குறிகளின் கவனத்திற்கு! #Periyar
10
134
1
495
14,558
தமிழக அரசின் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஏற்பாட்டில் ‘அயலகத் தமிழர் தினம் 2025’ வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது. விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு தலைப்புகளில் Panel Discussion ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. “அயலக நாடுகளில் வாய்ப்புகள்: கல்வி மற்றும் வேலை வாய்ப்பு” என்ற தலைப்பில் துறை சார் நிபுணர்களுடன் உரையாடினேன். இந்நிகழ்வில் 250 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
2
14
65
1,624
மின்னம்பலம் யூடியூப் சேனலில், பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களின் “வாங்க பேசலாம்” நிகழ்வில் நான் கலந்து கொண்ட உரையாடலின் மூன்றாம் பகுதி youtu.be/S0TEXEGT2aY?si=Mw__… நன்றி மின்னம்பலம்.
5
75
1
322
10,927
மின்னம்பலம் யூடியூப் சேனலில், பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களின் “வாங்க பேசலாம்” நிகழ்வில் நான் கலந்து கொண்ட உரையாடலின் இரண்டாம் பகுதி. youtu.be/JY41tNHCrEc?si=XGCw… நன்றி மின்னம்பலம்.
5
93
1
533
21,248
பொருளாதார அறிஞரும், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேரா. ஜெயரஞ்சன் அவர்கள் பல்வேறு துறையை சார்ந்த வல்லுநர்களுடன், மின்னம்பலம் இணைய இதழ் வாயிலாக உரையாடி வருகிறார். இத்தையக உரையாடல் வரிசையில் நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தனது பணிச்சுமைக்கு இடையிலும் நேரத்தை ஒதுக்கி வெகுசன மக்களுக்கும், இளைஞர்களுக்கும் சமூக பொருளாதாரம் குறித்த அடிப்படை அறிவையும், உலகளாவிய போக்குகள் குறித்தும் தொடர்ச்சியாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பேரா. ஜெயரஞ்சன் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். மின்னம்பலம் குழுவினருக்கு நன்றி! உரையாடலின் முதல் பகுதியினை இங்கே இணைக்கப்பட்டுள்ள யூ டியூப் லிங் வாயிலாக பார்க்கலாம். youtu.be/qgWS5_l5EQc?si=Tq76…
17
93
4
438
16,200
வாழ்த்துகள் டாக்டர் சென். @senbalan எளிய மனிதர்களுக்கு நவீன அறிவியல் மருத்துவத்தை கொண்டு செல்லும் தங்களது விழிப்புணர்வு பணிக்கு வாழ்த்துகள்! சமூக நீதி பயணத்தில் திராவிட மாடலின் சிறப்புகளை எல்லோரிடமும் எடுத்துச் செல்லும் தங்களின் தொண்டு சிறக்கட்டும்.
திராவிட மாடல் அரசின் சமத்துவக் கொள்கை மீது நாட்டம் கொண்ட Dr.செந்தில் பாலன், ஓமனில் பணியாற்றிக் கொண்டே திராவிட கருத்துகளை இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் நம்பிக்கை குரல். இவரது கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. 'திராவிட வாழ்த்துக்கள் - sen balan ' @PEN_Offl. #DravidathaalNaan #DravidianModel
2
6
24
1,483
புதுமைப் பெண் திட்டத்தின் சமூக பொருளாதார தாக்கங்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளியில் கல்வி பயின்று பின்னாளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் வழியாக வழங்கப்படும் மாதந்தோறும் ₹1000 கல்வி உதவித் தொகை சமூக பொருளாதார தளத்தில் மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்தியுள்ளது என்பதைப்பற்றி சமீபத்தில் மாநில திட்டக் குழு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முக்கியமான விளக்கங்களும் புள்ளி விவரங்களும் தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளன. கள ஆய்வில் இடம்பெற்ற எட்டு மாவட்டங்களில் இத்திட்டத்தின் பல்வேறு நேர்மறை விளைவுகளை சர்வே உறுதிப்படுத்தியுள்ளது: 1மிக இளம் வயது கர்ப்பப்பிரசவம் (Teenage Pregnancy)
15-19 வயதுக்குள் கர்ப்பம் தரிக்கின்ற பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களில் (ஈரோடு, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், சிவகங்கை) இந்த கல்வி உதவித் தொகை கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ◦பெண்கள் உயர்கல்வியில் சேர்ந்ததன் மூலம் திருமண வயது அதிகரித்துள்ளது. ◦இதனால் teenage pregnancy வெகுவாக குறைந்து காணப்படுகிறது. சமீபத்திய புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்திய அளவில் சராசரி teenage pregnancy 6.8% என்றாலும், தமிழ்நாட்டில் இது 6.3% ஆக உள்ளது. 2கல்வி செலவுகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு உதவி
மாணவிகள் கல்வி உதவித் தொகையை முக்கியமாக கல்லூரி கட்டணம், போக்குவரத்து செலவுகள், மற்றும் திறன் வளர்ப்புக்கான பட்டயப் படிப்புகளுக்கான கட்டணங்களை சந்திக்க பயன்படுத்துகின்றனர். 3நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மாணவிகள்
இத்திட்டம் நகர்ப்புற மாணவிகளைவிட கிராமப்புற மாணவிகளுக்கு மிகுந்த ஆதரவாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுமைப் பெண் திட்டம் தரும் நேரடி மற்றும் மறைமுக சமூக பொருளாதார பலன்கள் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது திண்ணம்.
33
84
1,958
ஆயிரம் ரூபாய் காச வச்ச என்னத்த கிழிக்க முடியும்? இதெல்லாம் ஒரு காசா? என ஏளனம் செய்தவர்களுக்கு திராவிட மாடல் தந்திருக்கும் பதில் மிக முக்கியமானது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுரிகளில் உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் "புதுமைப் பெண்" திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சாதிய அடுக்குகளுக்கு இடையே உயர்கல்வி பெறுவதில் உள்ள ஏற்ற தாழ்வை நீக்கி சாதித்து காட்டியுள்ளது திராவிட மாடல். அதாவது ஒரு காலத்தில் உயர் சாதியில் பிறந்த பெண்களுக்கு மட்டும் கல்வி கிடைக்கும் சூழல் இருந்தது. பின்னாளில் அரசு தந்த இட ஒதுக்கீடு உரிமை வாயிலாக கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தியதால் பெண்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்பு அதிகரித்தது. ஆயினும் போக்குவரத்து கட்டணம் மற்றும் கல்லூரிக்கு சென்று வரும் போது தேவைப்படும் அன்றாட செலவு ஆகியவை பெரும் தடை கல்லாக இருந்தது. இந்த தடை கல்லை புதுமைப் பெண் திட்டம் அப்புறப்படுத்தி புதிய பாதையினை வகுத்து தந்துள்ளது. இத்துடன் அரசு பேருந்துகளில் வழங்கபடும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை திட்டமும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, சமூக சவால்கள் உடைய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவிகளுக்கு இடையே பெறப்படும் உயர் கல்வி வாய்ப்பு என்பது ஏற்ற தாழ்வின்றி தற்போது சம நிலையினை எட்டுவதற்கு இந்த மாதாந்திர உதவித் தொகை ஒரு நெம்புகோலாக உதவி வருகிறது. அதாவது சமூக வாரியாக BC (30.6%), MBC (36.7%), SC (30.6%) பயனாளர்களுக்கு இடையே உள்ள உயர் கல்வி பெறும் வாய்ப்பில் உள்ள ஏற்ற தாழ்வினை நீக்கி உள்ளது. தொடர்ச்சியான மூலதனம் மூலம் சமூக எந்திர (social engine) இயக்கவியல் மூலம் அறிவு பொருளாதாரத்தை பரவலாக விரிவாக்கம் செய்வதே திராவிட மாடலின் அடிப்படை கோட்பாடு. இதன் பலனை ஓவ்வொரு பத்து ஆண்டிலும் தமிழ்நாடு அறுவடை செய்கிறது. அந்த வகையில் தற்போது பெண்கள் கொண்டாடும் திட்டமாக புதுமைப் பெண் திட்டம் உள்ளது. ஏற்ற தாழ்வில்லாத, எல்லோருக்கும் எல்லாம் என்னும் பொதுவுடமை சிந்தாந்த இயக்கவியலை கொண்ட திராவிட மாடல் உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டு. அந்த வகையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கான உயர்கல்வி பெரும் வாய்ப்பில் புதுமைப் பெண் திட்டம் ஒரு மைல் கல். இது வரை 2,30,820 மாணவிகள் 2023 ஆண்டு இறுதிக்குள் பலன் அடைந்துள்ளனர். இத்திட்டம் அறிமுகம் செய்த 2022-2023 கல்வி ஆண்டில் மட்டும் 13,681 மாணவிகள் அதிகமாக உயர் கல்வி பெறுவதற்கான உந்துதலை புதுமைப் பெண் திட்டம் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசிற்கு பாராட்டுகளும், நன்றிகளும் ஆதாரம்: மாநிலத் திட்டக் குழுவின் ஆய்வு முடிவுகள்
11
198
5
440
15,933
What Can You Do with a Thousand Rupees (~£10)? Is a thousand rupees just a small amount? To those who doubted, or criticised the Dravidian model—Tamil Nadu’s unique socioeconomic investment strategy—provides a powerful answer. Under the "Pudhumai Pen" scheme, the Tamil Nadu government provides women pursuing higher education in government, government-aided, and private colleges with a monthly educational assistance of one thousand rupees (~£10). This initiative has brought about a transformative change. The Dravidian model has achieved remarkable success in breaking down barriers to higher education for marginalized communities. Not long ago, only women from forward community and or economically privileged backgrounds had access to education. Although the Tamil Nadu state government later covered tuition fees through reservation policies, transportation and daily expenses remained obstacles for many women from marginalised communities. The “Pudhumai Pen” scheme has removed these barriers, opening a new pathway to education. Additionally, Tamil Nadu’s Zero Ticket Bus Travel Scheme for Women in government buses further supports this goal, helping women from economically disadvantaged backgrounds access education. This monthly grant plays a vital role in advancing educational equality among socially marginalized groups, including the Backward Classes (BC), Most Backward Classes (MBC), and Scheduled Castes (SC), enabling access to higher education across these communities: BC (30.6%), MBC (36.7%), and SC (30.6%). The foundation of the Dravidian model is continuous investment in social equity. Every decade, Tamil Nadu reaps the rewards of this commitment. Today, the Pudhumai Pen project is celebrated by women across Tamil Nadu. The Dravidian model—an inclusive approach that seeks to uplift everyone—stands as an example to the world. The Pudhumai Pen project marks a milestone in expanding higher education opportunities for women. By the end of 2023, a total of 230,820 women students have benefited (no tuition fees & monthly scholarship Rs 1000). In the 2022-2023 academic year alone, the scheme motivated an additional 13,681 students to pursue higher education. We should appreciate Tamil Nadu state Government for this progressive initiative. Source: Study results of the State Planning Commission, Tamil Nadu. #womenempowement #WomenInSTEM #womeneducation #SDG5
1
2
1
14
2,008
Heartfelt sympathies to the people of Valencia affected by the devastating floods. My thoughts are with those who have lost homes, businesses, and loved ones. Wishing strength and resilience to everyone impacted, and gratitude to all the emergency responders working tirelessly. @IvanMoraSero I hope you and UJI friends are safe and well. #ValenciaFlood #staystrongvalencia
1
7
647