Abubacker Official (@Abubacker_Offcl) header
Abubacker Official (@Abubacker_Offcl) profile picture

Advocate | Orator | Activist | politician | State Coordinator @ntkmaanavar |

முத்து நகர்
Joined September 2014
Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)Photo by Abubacker Official (@Abubacker_Offcl)
மக்கள் பணத்தில் ஊதாரித்தனம் செய்யும் விஜய் @CMOTamilnadu மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கஜானாவில் காசு இல்லையாம்! ஆனால், தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில், அரசுப் பணத்தில் முதல் பக்க வெட்டி விளம்பரம் செய்ய மட்டும் கஜானாவில் காசு இருக்கோ! #ஊதாரி_விஜய்
68
179
7
351
9,176
மலையாளி "ஐக்கிய கேரளமும்" தெலுங்கன் "பிரகாச ஆந்திரமும்" கன்னடன் "சம்யுக்த கன்னடமும்" கேட்டுப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் பேசி தமிழர்களை காயடித்தவர்கள் தான் இந்த ஈவெரா பக்த திருட்டுத் திராவிடக் கும்பல்! #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 தான்...
#தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! நவம்பர் 1-ஆம் நாளைத் ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா? என்பதே அடிப்படையான கேள்வி. இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம். இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் போற்றிய தமிழ்மொழியின் வரலாற்றுப் பரப்பையும், 1956 இல் வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைகளையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது. மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள். உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள். அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காகத் தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றித் தமிழர்களின் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் போராடின. அந்தக் கோரிக்கைக்காக 1956 ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13-ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் பல்வேறு இயக்கங்களும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். அந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக, *1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.* தொடர்ந்து சட்ட நடைமுறைகள் நிறைவேறி, 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஜூலை 18 ஒரு கட்சியின் ஆட்சிச் சாதனையை மட்டும் குறிக்கும் நாளல்ல. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்திற்கும், தமிழறிஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் மொழி உணர்விற்கும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் முன்னெடுப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தின் நாள். தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழர்கள் தங்கள் அரசியல் அடையாளமாக நிலைநிறுத்திய வரலாற்றுப் பெருமிதத்தின் நாள் ஜூலை 18. இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர். அது ஒரு கட்சிக்கான கோரிக்கை அல்ல; தமிழ்நாட்டின் தனித்துவமான வரலாற்று அடையாளத்தைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட பண்பாட்டுக் கோரிக்கை. அதனை ஏற்று, 2021 அக்டோபர் 30-ஆம் நாள் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேவேளையில், நவம்பர் 1 ஐ எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக நினைவுகூர்ந்து, அப்போது வாழ்ந்த 110 எல்லைப் போராட்ட வீரர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கவும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவித்தது நவம்பர் 1-இன் வரலாற்றை மறுப்பதற்கல்ல. இரு நாட்களின் தனித்துவமான வரலாற்று முக்கியத்துவத்தையும் போற்றுவதற்காகத்தான். இந்நிலையில், மீண்டும் நவம்பர் 1-ஐயும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது எந்த வகையில் பொருத்தமானது? இரண்டு நாட்களையும் கொண்டாடுவதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே பெயரில் கொண்டாடும்போது அவற்றின் தனித்துவம் மங்கிவிடும். மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் வரலாறு ஒன்று. தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்ற உரிமைப் போராட்டத்தின் வரலாறு மற்றொன்று. பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அந்த வரலாற்றை ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. அரசியல் வேறுபாடுகளுக்காக அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதும் சரியல்ல. பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம்; ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது. தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டுமென்றே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்ட வேண்டியதில்லை. ஆனால், அவற்றால் ஏற்படக்கூடிய பண்பாட்டு விளைவுகள் குறித்து எச்சரிப்பது நமது கடமை. மொழியின் அடையாளம் வெறும் பெயர்ப்பலகையில் இருப்பதல்ல. அதன் பின்னால் வரலாறும் தியாகமும் மக்களின் உரிமை உணர்வும் இருக்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நமது கோரிக்கை எளிமையானது.உறுதியானது. நவம்பர் 1 — மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள். ஜூலை 18 — தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள். இது ஒரு கட்சியை ஆதரிப்பதற்கோ மற்றொரு கட்சியை எதிர்ப்பதற்கோ அல்ல; தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாடு. தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம். நவம்பர் 1-ஐப் போற்றுவோம்; ஜூலை 18-இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்! வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! *தமிழ்நாடு நாள் — ஜூலை 18 மட்டுமே!* *தமிழ்நாடு வாழ்க! தமிழ் வாழ்க!*
7
95
3
320
6,087
அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள் ❤️ தமிழ் வாழ்க! தமிழர் வளர்க! தமிழ்நாடு செழிக்க! #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
1
98
433
1,872
இன்று ஜெயா தொலைக்காட்சி @JayaTvOfficial ஊடக விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பங்கேற்கிறேன்!
6
27
98
1,054
உன் டுபாக்கூர் தலைவன் பேசவே இல்லைன்னு சொல்றார்! நீ களத்துக்கு போகலன்னு சொல்ற! டுபாக்கூர் @thiruja2009 திருமுருகன் & கோ பார்வைக்கு👇🏽👇🏽 youtu.be/VNB7Ci321rg?si=uuDP…
அடேய் ஆக்கங்கெட்ட கூவ, உன் கட்சியோட வேலை வெறும் ட்விட்டர்ல எழுதுறது மட்டும் தான், ஒரு அரசியல் கட்சி களத்தில் இறங்கி போராடி மக்கள் பக்கம் நின்னு தீர்வு காண முயற்சி பண்ணனும், பாதிக்கப்படுற மக்களுக்கு நாங்க துணை நிற்கிறோம் என்று கூட சேர்ந்து போராட்டம் பண்ணனும். பார்ல போய் குடிச்சிட்டு கூத்தடிக்க கூடாது, தூக்கிட்டு வந்துட்டடான் x_ல ஆள் வச்சி எழுதினதை... மாஞ்சோலை மக்களுக்காக களத்துல இறங்கி போராடின போராட்டம் ஒன்னு காட்டு பாப்போம்?...
2
168
5
426
6,757
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி பொய்யா சொல்லிக்கிட்டு திரிய போறீங்க "டுபாக்கூர்" திருமுருகா? @thiruja2009 teapawt.org/Seeman4TN/status/17918…
அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் மாஞ்சோலை வருகிறது. மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமைகளை பாம்பே-பர்மா எனும் மார்வாடி கம்பெனி நசுக்கியது. தரவேண்டிய நட்டஈட்டை கொடுக்காமல் வஞ்சித்தது. கிட்டதட்ட 90 ஆண்டுகளாக வசித்தவர்களை Forest Dwellers எனும் அடிப்படையில் தொடர்ந்து மாஞ்சோலை வனத்தை பயிர்செய்து பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை திமுக அரசு பறித்தது. நட்ட ஈட்டையும் பெற்றுத்தராமல் ஒப்புக்கென சில சலுகைகளை வழங்கி மாஞ்சோலை மார்வாடி முதலாளிக்கு ஆதரவளித்தது. அம்பாசமுத்திரம் தொகுதியின் எம்.எல்.ஏ அதிமுக கட்சிக்காரர். இவரும் திமுக அரசிடம் நீதிகேட்கவில்லை, போராட முன்வரவில்லை. இவ்வாறாக அனைத்து அரசியல் கட்சிகளாலும், கம்பெனியாலும் வஞ்சிக்கப்பட்டனர் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாழும் மாஞ்சோலை தொழிலாளர்கள். மே17 இயக்கம் மாஞ்சோலை தொழிற்சாலை மூடப்படுவதை எதிர்த்தும், நட்ட ஈடு கோரியும், வாழ்வாதாரத்தை உறுதி செய்தும் இரண்டு ஆண்டுகளாக மக்களின் நீதிக்காக போராடியது. இக்காலத்தில் சீமான் வாய்திறந்து மார்வாடி கம்பெனிக்கு எதிராகவும் பேசவில்லை, திமுகவை எதிர்த்து போராடவுமில்லை. மாஞ்சோலை மக்களின் வாக்குரிமைகளும் பறிக்கப்பட்டன. இவர்களில் எவரும் அம்மக்கள் மீது அக்கறை செலுத்தவில்லை. தற்போது அதே முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, இடைத்தேர்தலில் தவெக சார்பாக போட்டியிடலாம். அதிமுகவில் புதியதாக ஒருவர் போட்டியிடலாம், திமுகவின் சார்பிலும் ஒருவர் நிறுத்தப்படலாம். அல்லது திமுக, அதிமுக சீமானை ஆதரிக்கலாமென யூகங்கள் வெளியாகின்றன. இந்த மூவரும் மாஞ்சோலை மக்களை கைகழுவியவர்கள் அதிமுக, திமுக, சீமான் இணைந்து தேர்தலை எதிர்கொள்வார்களெனில் மாஞ்சோலை மக்களை வஞ்சித்ததற்காக சீமான் மே17 இயக்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்வார். மேலும், அதே முன்னாள் அதிமுக, இன்னாள் தவெக வேட்பாளராவரெனில் அவரும் எதிர்ப்பை எதிர்கொள்வார். மக்கள் விரோதிகள் அம்பலப்படவேண்டும். அதை மே17 இயக்கம் செய்யும். 90 ஆண்டுகளாக சுரண்டப்பட்ட அப்பாவி மாஞ்சோலை தொழிலாளர்களை வஞ்சித்தவர்களை ஒருக்காலும் மன்னிக்க இயலாது.
5
178
4
430
10,057
அன்பில் மகேஷ் கைதில் தவெக வுக்கு தனிப்பட்ட வண்ணம் கூட இருக்கலாம்! ஆனால் அன்பில் மகேஷ் & கோ யோக்கியர்களும் அல்ல! திமுக ஒன்றும் பரிசுத்தக் கட்சியும் அல்ல!
61
144
12
702
17,097
வன்மம்
3
1
6
1,314
வெற்றி விலை உயர்வு திட்டம்🔥🙌🏽 தங்க மோதிரத்தில் விட்ட பணத்தை, பால், தயிர், நெய் போன்ற அத்தியாவசிய பொருட்களில் பிடிக்கிறது தவெக அரசு! பலே ஆளு ப்ரோ நீங்க... @CMOTamilnadu
40
83
1,072
1980களில் சீவலப்பேரி பாண்டி பாலை சிறையில் இருந்து தப்பித்ததை புத்தகங்களில் படித்திருக்கிறேன்! அதற்குப் பிறகு இந்த துப்பு கெட்ட @CMOTamilnadu விஜய் ஆட்சியில் தான் சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடுவதை கேள்விப்படுகிறேன்! புழலில் 2 பேர், தேனியில் 17 பேர் தப்பி ஓட்டம்
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம். போலீசார் தீவிர தேடுதல் வேட்டை. ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர் . தப்பியவர்களில் பலர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத்தகவல்… சம்பவ இடத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் விசாரணை நடத்தி வருகிறார். அண்டை மாவட்ட காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்
16
102
4
310
7,780
கடந்த 5 ஆண்டுகால கால திமுக ஆட்சியில் அன்பில் மகேஷுக்கு வலது கையாக செயல்பட்டவர் முத்துக்குமார் என்றால், இடது கையாக செயல்பட்டவர் இந்த ராஜீவ் காந்தி! இவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் நிறைய தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு... @tnpoliceoffl @chennaipolice_
24
230
10
737
24,127
Abubacker Official retweeted
குற்றவாளிகளின் கூடாரம் தவெக! மக்களே ஜாக்கிரதை! #tvkfails
8
306
5
479
7,033
புழல் சிறையில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 2 கைதிகள் தப்பி ஓட்டம்! திருட்டு வழக்கில் கைதான சுதீப் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சுரேஷ் ஆகியோர் தனித்தனியாக தப்பி ஓடியுள்ளனர்! சிறைக் கைதிகளை பாதுகாக்க துப்பு இல்ல! கேவலம்... @tnpoliceoffl @CMOTamilnadu
1
110
3
200
1,975
தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உட்பட 12 பேர் கைது குறித்து @EngalDesamTV இல் நான் மற்றும் தம்பி @Abubacker_Offcl உரையாடல்... youtu.be/SNxX1upySEk?si=RLyF…
25
57
843
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை! @CMOTamilnadu @TVKVijayHQ தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம். தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே? மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா? நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா? திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே! உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை. பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
632
1,736
147
3,628
192,835
திருத்தணி கார்த்திகேயபுரத்தில் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கார்த்திகேயபுரம் ஊராட்சியில் ஏறத்தாழ 838 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 35 இலட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கிளிங்கர் அரவை ஆலையை அமைத்து, அப்பகுதியின் சுற்றுச்சூழலை சீரழிக்க தமிழ்நாடு அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னதாக, அப்பகுதி மக்களின் நலன், நீர்வளம், விவசாயம் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரம் ஆகியவை குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட வேண்டியதும், அப்பகுதி மக்களின் கருத்தினைக் கேட்க வேண்டியதும் மிகவும் இன்றியமையாததாகும். அதனை விடுத்து, கிளிங்கர் அரவை ஆலையில் கிளிங்கர் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்ற காரணத்தைக் காட்டி, கிளிங்கரால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் புறக்கணித்துவிட முடியாது. கிளிங்கர் அரவை ஆலையில் மூலப்பொருட்களைக் கையாளுதல், சிமெண்ட் அரவை, தூசு பரவல், கனரக வாகனப் போக்குவரத்து, ஒலி மாசு மற்றும் நீர்வளப் பயன்பாடு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் மதிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் திணிப்பது மக்களாட்சி நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நாட்டு மக்களின் வாழ்வுரிமையைவிடத் தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கம் என்பது முதன்மையானது அல்ல. சுற்றுபுரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி மக்களின் கடமையோ, அதைப்போலவே, இயற்கையைப் பாதுகாப்பதும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதும் அரசின் முதன்மைக் கடமையாகும். சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் அரசு அனுமதியளிக்கக்கூடாது. ஆகவே, தமிழ்நாடு அரசு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் ஊராட்சியில் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
27
379
4
593
11,105
Bro Mind Voice : 10 ரூவா சம்பாதிக்கிறதுக்கு எம்புட்டு மானங்கெட்டு போய் திரிய வேண்டியதா இருக்கு..!
8
121
1
505
3,423
I posted this video 3 days before. that time I didn't get this. Why should I included muslim boy's dog kicking video If I have a religious bias? These Sangi fanatics purposely trimmed selected part. To understand my view, watch the full video👇🏽👇🏽 youtu.be/GUn4aLx3uLw
43
26
9
107
23,831
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்! சவுதி நாட்டில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழரான தம்பி சிவராஜா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது தாய்நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து பொருளாதாரத்தேடலுக்காக சவுதி நாட்டுக்குச் சென்ற தம்பி அனோஜன், மதம் சார்ந்தும், இறைக்கோட்பாடுகள் சார்ந்தும் விமர்சனத்தை வைத்து, சமூக வலைத்தளத்தில் விவாதித்ததற்காக அந்நாட்டு அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தம்பி அனோஜன் சமூக வலைத்தளத்தில் தான் எழுதியவைகளை உடனடியாக நீக்கியதோடு, அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். விளைவை அறியாது, மற்றவர் உணர்வை காயப்படுத்தும் விதமான தன்னுடைய புரிதலற்றச் செயல்பாட்டுக்கும், பெருந்தவறுக்கும் முழுமையாக வருந்தித் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் தம்பி அனோஜனைத் தண்டிப்பது என்பது ஏற்புடையதல்ல! அதுவும் உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக தம்பி அனோஜன், சமூக வலைத்தளத்தில் மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும் தன்னுடைய கருத்தின் விளைவை உணர்ந்து, பதிவுகளை நீக்கி, சவூதி அரேபிய அரசிடமும், இசுலாமிய உறவுகளிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறது. அப்படியிருக்க, அவருக்கு மரணத்தண்டனை அளிப்பது என்பது எவராலும் ஏற்க முடியாதது. மனித உரிமை குறித்துப் பெரிதும் விவாதிக்கப்பட்டுப் பேசப்படும் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் தற்காலச்சூழலில் இணையதளத்தில் எழுதிய அவதூறானக்கருத்துக்கு மரணத்தைத் தண்டனையாக விதிப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், பரிவையும் போதிக்கும் மகத்துவம் மிகுந்த மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், மக்களை நன்னெறிப்படுத்தி வழிகாட்டிய போற்றுதற்குரிய இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகையத் தவறை செய்து, வரலாற்றுப்பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை சவுதி நாட்டின் ஆட்சியாளர் பெருந்தகைகள் உணர வேண்டும். ‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று போதித்த போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், தமது இறுதிப் பேருரையில், “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்கிறார். மேலும், மன்னிப்பை இறைவனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகவும், மனிதன் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணாதிசயமெனவும் உலகுக்கு உரைக்கிறார். நபி பெருமானார் காட்டிய அத்தகைய உயர்ந்த அன்பு வழி நின்று, அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி நாட்டின் அரசு வழங்க வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்பார்ப்பும், கனிவானக் கோரிக்கையுமாகும். ஆகவே, உலகம் தழுவி வாழும் மானுடப்பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தம்பி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இம்மரணத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும், தம்பி சிவராசா அனோஜனை மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் சவூதி அரசோடு பேசி, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
314
1,139
204
2,239
274,113
மக்களிடம் ஏற்கனவே பன்மடங்கு அதிகமாக மின்கட்டணம் வசூலித்து வரும் நிலையில், ஓர் அலகு மின்சாரம் 35 ரூபாய்க்கு தனியாரிடம் வாங்கினால் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகக் கட்டணத்தை உயர்த்தப்போகிறீர்கள்? மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா? @CMOTamilnadu @TVKVijayHQ தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு மின்சாரத்தைச் சுமார் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தவெக அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் சொந்த மின் உற்பத்தி திட்டங்களை வலுப்படுத்தாமல், அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது. தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவையாக உள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நீண்டகாலமாக பெரிய முதலீடு ஏதும் செய்யாமல் முந்தைய திமுக, அதிமுக அரசுகள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால் அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் 2 இலட்சம் கோடிகள் அளவிற்கு கடனில மூழ்கியுள்ளது. அதையே தவெக அரசும் தொடர்ந்தால் மேலும் மேலும் கடன்தான் அதிகமாகும். உற்பத்தியில் முதலீடு செய்வதுதானே நிலையான தீர்வை நோக்கி நகரும். ஒவ்வொரு முறையும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதையே தீர்வாகக் கூறிக்கொண்டிருந்தால், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது எப்போது? இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு எப்போது வரும்? அதற்கான திட்டமும் காலக்கெடுவும் எங்கே? மின் உற்பத்திக்கு அணு மின் திட்டமும், அனல் மின் திட்டமும் மட்டும்தான் உள்ளதா? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை உள்ளிட்ட மாற்று மின்பெருக்கத் திட்டங்களே இல்லையா? அவற்றில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தாதது ஏன்? கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது, மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் கையூட்டுக்காக (கமிசன்) திமுக அரசு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தனது ஆட்சியில் அதைவிட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது யாரிடம் கையூட்டு (கமிசன்) வாங்க? தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழல் முறைகேடுக்கு வழிவகுத்தது என்று குற்றஞ்சாட்டிய முதல்வர் விஜய் அவர்கள், அதைவிட அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்வது ஏன்? அன்று தவறு என்று சொன்ன கொள்கை, இன்று ஆட்சிக்கு வந்ததும் சரியாகிவிட்டதா? 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் மின்சாரம் ஓர் அலகு 4.85 ரூபாய் முதல் 5.85 ரூபாய் வரை அளவிற்குத் தனியாரிடம் வாங்கப்பட்டது. அவசரத் தேவைக்காக அதனை 21 ரூபாய் அளவிற்கு உயர்த்தி வாங்கிய பொழுது திமுக அரசை கடுமையாக எதிர்த்தோம். ஆனால், முந்தைய திமுக ஆட்சியின் கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய தவெக அரசின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகம் உயர்ந்துள்ளது எப்படி? அதற்கான நியாயத்தை மக்களிடம் விளக்க தவெக அரசு தயாரா? தவெக ஆட்சிக்கு வந்து, கடந்த 5 மாதத்தில் மின்கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதாக அல்லல்பட்டு மக்கள் போராடி வரும் நிலையில், இப்பொழுது ஓர் அலகு 35 ரூபாய் கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்தால், அதனை காரணமாக வைத்து மேலும் எத்தனை மடங்கு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்கப்போகிறீர்கள்? மின்தேவை அதிகரிப்பதை முன்கூட்டியே கணித்து, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையல்லவா? பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு அவசரமாக அதிக விலைக்கு வாங்குவதற்கு அரசு எதற்கு? நிர்வாகம் எதற்கு? தனியாக மின்துறைதான் எதற்கு? அரசினுடைய மின் நிலையங்களில் நிறுவப்பட்ட உற்பத்தித்திறன் எவ்வளவு? தற்போது பயன்படுத்தப்படும் திறன் எவ்வளவு? முழுமையாக உற்பத்தி செய்ய முடியாததற்கான காரணங்கள் என்ன? தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்திலேயே, மின்வெட்டு ஏற்படும் அளவிற்குத் தமிழ்நாடு மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. அவற்றைச் சரிசெய்ய தவெக அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? அவற்றையெல்லாம் செய்யாமல் ஆய்வு என்ற பெயரில் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் சென்று வந்தது தங்கள் கட்சியின் விர்சுவல் வாரியர்ஸ் ரீல்ஸ் போடுவதற்கு மட்டும் தானா? மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த அவசரத் தேவையைக் காரணமாக்கி எந்த விலையிலும் மின்சாரம் வாங்கலாம் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறைந்த செலவில் மின்சாரம் பெறுவதற்கான மாற்று வாய்ப்புகள் ஆராயப்பட்டனவா? கொள்முதல் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது? எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு மின்சாரம், எத்தனை நாட்களுக்கு வாங்கப்படுகிறது? இதனால் ஏற்படும் மொத்தக் கூடுதல் செலவு எவ்வளவு? ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தூயசக்தி என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் தவெக அரசு வெளிப்படையாகப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். இந்தக் கூடுதல் செலவை எப்படியாயினும் நாளை மின்கட்டண உயர்வாக மக்கள் தலையில் சுமத்தப் போகிறீர்கள். ஆக அரசின் திட்டமிடல் குறைபாட்டிற்காக எளிய மக்களும் விவசாயிகளும் சிறு தொழில்முனைவோரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டுமா? தனியார் மின் நிறுவனங்களின் வருமானத்தை உயர்த்துவதற்கா மக்கள் உங்களுக்கு அதிகாரத்தை வழங்கினார்கள்? என்ற என்னுடைய கேள்விகளுக்கு தவெக அரசிடம் என்ன பதில் உள்ளது? ஆகவே, அரசின் மின் நிலையங்களைச் சீரமைத்தல், நிலுவைத் திட்டங்களை நிறைவேற்றுதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் மாற்று மின் உற்பத்தி திட்டங்களையும், மின்சேமிப்பு வசதிகளையும் விரிவுபடுத்துதல், மின் விநியோக இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதிக விலையிலான மின் கொள்முதல் முடிவை உடனடியாக மறுஆய்வு செய்து, தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வதோடு, கூடுதல் கொள்முதல் செலவை மக்கள்மீது சுமத்தக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
89
915
20
1,796
39,698
Abubacker Official retweeted
VCK-வின் சந்தர்ப்பவாத அரசியலை தரவுகளுடன் அம்பலப்படுத்தும் சிறப்பான காணொளிப்பதிவு @Abubacker_Offcl 👍 youtu.be/kYQk5IUn8Yw?si=xKaF…
14
29
316