Pinned Tweet
மறுபடியும் என் account hack பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.. நான் யார்கிட்டையும் காசு கேட்கமாட்டேன், யாரும் குடுக்காதீங்க... நான் DMல பேசுறதும் இல்ல.. யாரும் DMல மெசேஜ் பண்ணாதீங்க...வேலையும் வாங்கித்தரமாட்டேன் யாரும் அதுக்காகனு DM பேசாதீங்க
Nandhuism retweeted
5 रुपए किलो के चक्कर में गत्ते बेच देता था मैं तो लेकिन ये वीडियो देख तो समझ आया कि ये तो लाखों का नुकसान कर रहा हूं मैं।
❤
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
இப்பவும் டிநகர் போனா லஞ்ச்க்கு இங்க தான் போவேன்... 13 வருசமா இந்தமெஸ்ஸல அடிக்கடி சாப்பிடுறேன்.. 2012-2017 வாரவார சனிக்கிழமை லஞ்ச் இங்க தான்... சாதம், பருப்புப்பொடி, பப்பு, மோர்க்குழம்பு, ஆம்லெட், சிக்கன் ப்ரை இதைத்தவிர எதுவும் சாப்பிட்டதில்ல...ரெம்பப்பிடிச்சது ❤
ஒரு காலத்தில் கூட்டம் நிரம்பியிருந்த ஆந்திரா மெஸ்... இன்று நான் மட்டுமே!
தீபாவளி shopping என்றாலே எனக்கு தி.நகர் தான்.
தேவையான துணிமணிகளை வாங்கிவிட்டு, இரவு dinner-க்கு நம்ம கனக துர்கா ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிட வேண்டும் என்று முன்பே plan செய்து வைத்திருந்தேன்.
புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் தி.நகர் பாலத்தை ஒட்டிய தெருவில் நடக்கும்போது, திடீரென்று ஒரு எண்ணம்.
வயிற்றுக்கு உணவு கொடுப்பதற்கு முன்பு, கொஞ்சம் மூளைக்கும் நினைவுகளுக்கும் உணவு கொடுக்கலாமே!
ஒரு தெருவை நோக்கித் திரும்பியபோது, கண்டேன் சீதையை என்பதுபோல, கண்ணில் பட்டது அந்த ஆந்திரா மெஸ் board!
அவ்வளவுதான். பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக queue கட்டிக்கொண்டு வந்தன.
இதே மெஸ்ஸுக்கு மதிய உணவுக்காக எத்தனை முறை வந்திருப்போம்!
அப்போது ஒரு வேடிக்கை. மூன்று, நான்கு முறை சாதம் வாங்கிச் சாப்பிடுவதை ஏதோ பெரிய சாதனை செய்தது போல நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்வோம். இப்போது அதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
நினைவுகளிலிருந்து நிகழ்காலத்துக்கு வந்தேன்.
அதே இரண்டாவது மாடி. அதே மெஸ்.
கையில் shopping bags வேறு. அவற்றை எங்கே வைப்பது, யார் பார்த்துக் கொள்வார்கள் என்றெல்லாம் மனதிற்குள் ஒரு சிறிய security meeting நடத்திக்கொண்டே இரண்டு மாடிகள் ஏறினேன். கொஞ்சம் மூச்சு வாங்கியது.
பரவாயில்லை!
இன்று நம்முடைய food challenge-ஐ முடித்தே ஆக வேண்டும் என்று மனதிற்குள் சபதம் போட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.
ஆனால், அங்கே காத்திருந்தது ஒரு பெரிய surprise!
ஒரு காலத்தில் இடம் கிடைக்குமா என்று காத்திருந்த அதே மெஸ்ஸில், இப்போது ஒருவர்கூட இல்லை.
நேரம் இரவு 7.45.
நான் மட்டுமே!
சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தேன். நம்பவே முடியவில்லை.
என்ன நினைத்து வந்தேன், என்ன நடக்கிறது!
அந்த மெஸ்ஸின் வழக்கமான token counter-ல் அமர்ந்திருப்பவரும் இன்று இல்லை. உள்ளே இருந்த ஒருவரிடம், "சார், டோக்கன் எங்கே வாங்கணும்?" என்றேன்.
"வாங்க சார், வந்து உட்காருங்க" என்றார்.
இன்னொரு surprise. அவரே owner, அவரே cashier, அவரே supplier என்று எல்லா பொறுப்புகளையும் ஒருவரே கவனித்துக்கொண்டிருந்தார்.
நிம்மதியாக shopping bags-ஐ வைத்துவிட்டு கை கழுவச் சென்றேன்.
நான் திரும்பி வருவதற்குள், அவரே என் மேசையில் வாழை இலையை விரித்திருந்தார்.
அந்த மெஸ்ஸின் அடையாளமான பப்பு, முருங்கைக்காய் கூட்டு, எனக்குப் பிடித்த வெண்டைக்காய் fry என்று ஒவ்வொன்றாகப் பரிமாறினார்.
சாப்பிடத் தொடங்கியபோது கேட்டேன்.
"என்ன சார், இப்படி கூட்டமே இல்லாமல் இருக்கு?"
அவர் என்னைப் பார்த்து,
"நீங்க old customer-ஆ சார்?" என்றார்.
அந்தக் கேள்வி எனக்குள் ஒரு சின்ன சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
அந்த மெஸ்ஸுக்கு முன்பு வந்த அனுபவங்களையும், அங்கிருந்த பழக்கவழக்கங்களையும் இரண்டு நிமிடங்கள் அவரிடம் பகிர்ந்துகொண்டேன்.
அவர் முகத்தில் ஒரு பக்கம் பெருமை இருந்திருக்கலாம். இன்னொரு பக்கம் இன்றைய நிலை குறித்த வருத்தமும் இருந்திருக்கலாம்.
14 வருடங்களுக்கு மேலாக ஒரு உணவகத்தைத் தொடர்ந்து நடத்துவது சாதாரண விஷயமா என்ன?
அதுவும் தி.நகர் போன்ற ஒரு commercial இடத்தில்!
பேசிக்கொண்டிருந்தபோது அவரே சொன்னார்.
"முன்ன மாதிரி தி.நகருக்குக் கூட்டம் வர்றதில்லை சார்."
அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டேன்.
பிறகு மீண்டும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினேன்.
ஒரு காலத்தில் இரண்டாவது, மூன்றாவது முறையாக சாதம் வாங்கிச் சாப்பிட்ட அதே நான், இன்று ஒரே முறை கொடுத்த சாதத்தை வைத்துக்கொண்டு சாம்பார், ரசம், மோர் என்று பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
சாப்பாட்டின் சுவையிலும் முன்பு இருந்த அதே consistency இல்லை என்று தோன்றியது.
கூட்டம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று மனதிற்குள் ஒரு சிறிய analysis ஓடியது.
ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தேன்.
அந்த ஒரே ஆள் — அவரை owner என்று அழைப்பதா, supplier என்று அழைப்பதா என்று தெரியவில்லை — அவரிடமே GPay செய்து வெளியே வந்தேன்.
நான் சாப்பிட்டு முடிக்கும் வரை வேறு ஒருவர் கூட உள்ளே வரவில்லை.
அந்த இடத்தை விட்டுக் கிளம்பும்போது ஏதோ ஒரு சிறிய வருத்தம் மனதில் இருந்தது.
அங்கிருந்து மாம்பலம் ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.
அப்போதுதான் இன்னொரு ஆச்சரியம்!
அதே தெருவின் இருபுறங்களிலும் இருந்த தள்ளுவண்டிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
ஆண்கள், பெண்கள் என எல்லோரும் நின்றுகொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காலத்தில் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றால் இப்படிப்பட்ட mess-களைத்தானே தேடுவோம்?
இன்று அந்த உணவகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. தள்ளுவண்டிக் கடைகளில் மட்டும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த பையன் முழுநேர influencer போல... குடும்பத்தோட promotion after Dorothy instagram.com/simsondevaraj_…
அதே யுக்தி
தாம்பரத்தில் நடைபெறும் நடிகர் தனுஷின் 'ஓம்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கடும் கூட்ட நெரிசல்.!
#Chennai | #Dhanush | #OMmovie | #OM | #OMChapter1 | #OMAudioLaunch | #PolimerNews
இவங்க குடிக்கிற அந்த டீ கின்னத்திக்கு எதுனா பெயர் இருக்கா? ராஜஸ்தான் பொம்பளைங்கபெரும்பாலும் இதுல தான் குடிக்கிறாங்க... டம்ளர்ல ஆத்தி குடிக்கிறதுக்கு இந்த கின்னத்துல ஊத்தி குடிச்சா ஆற வைக்கிற நேரம் மிச்சமாகும்
வேலை தேடுவோம் ஆனா online interview மட்டும் தான் அட்டண்ட் பண்ணுவோம்... அதே ஊர்ல இருந்தாலும் சனிக்கிழமை வச்சாலும் அட்டண்ட் பண்ணமாட்டோம்.... அப்படி ஒரு வசதி வாய்ப்போட வாழ்க்கை அமையனும்
Same couple youtu.be/gmIoVxm6Ubo?si=5wuM… எப்படி இப்படி மாறிட்டாங்க 😳😳😳😳
Nandhuism retweeted
Opportunities for Interns for Talent Acquisition role
Walkin happening today and tomorrow
#internship #paidintern #internjobs #chennaijobs
நிறையபேர் ஆபீஸ் ஐடிகார்ட்/ லோகோவோட வீடியோ போடுறாங்க அதெல்லாம் கேஸாகாதா கம்பனில? எதுக்கும் கம்பனி பாலிசிய படிச்சுட்டு போட்டோ/ வீடியோ போடுங்க மக்களே....
இதுனால இவங்களுக்கு அவார்ட் குடுப்பாங்களா
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.!
#Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews



















