
Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://xitter.cf/t.co/VQVqPrZ8KD
Tamilnadu, India
Joined February 2018
- Tweets68.3K
- Following153
- Followers354K
- Likes54
Pinned Tweet
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்!
Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4…
#DMK
DMK IT WING retweeted
திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொலை நடந்திருக்கிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது.
சரிந்துபோயிருக்கும் சட்டம்-ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்; உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
DMK IT WING retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
தற்குறி ஆட்சியில் தமிழ்நாடே தினம் தினம் திக் திக் என்று தான் இருக்கிறது!
#TVKFailsTN
DMK IT WING retweeted
யார் திறந்தால் என்ன??
விதையிட்டு வளர்த்தது திமுக!!!
2021 முதல் 2026 வரை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், தூத்துக்குடி தொகுதியில் திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு இன்று திறப்பு விழா நடத்தி, சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறது தவெக!
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு, தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக அமைச்சர்கள் திறப்பு விழா நடத்தலாம்; ஆனால், வரலாற்றை மாற்றி எழுத முடியாது!
📍 தங்கம்மாள்புரம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா!
📍 அய்யன்கோவில் தெருவில் புதிய எரிவாயுத் தகனமேடைக் கட்டடத் திறப்பு விழா!
📍 டைமண்ட் காலனி FCI குடோன் பகுதியில் பக்கவாட்டுச் சுவர் மற்றும் பாலம் அமைக்கும் பணி!
📍 கந்தன் காலனியில் பக்கிள் ஓடை மேம்பாட்டுப் பணிகள்!
📍 சீரமைக்கப்பட்ட கோக்கூர் குளத்தின் திறப்பு விழா!
📍 குரூஸ்புரத்தில் பக்கிள் ஓடை மேம்பாட்டுப் பணிகள்!
📍 செயின்ட் மேரிஸ் காலனியில் புதிதாகக் கட்டப்பட்ட பூங்காவின் திறப்பு விழா!
📍 சிறுபாடு கிராமத்தில் நியாயவிலைக் கடை!
📍 மாப்பிள்ளையூரணி ஊராட்சியில், ஹவுசிங் போர்டு காலனியில் அங்கன்வாடிக் கட்டிடம்!
📍 மாப்பிள்ளையூரணி ஊராட்சியில், தேரஸ் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் அங்கன்வாடிக் கட்டிடம்!
📍 மாப்பிள்ளையூரணி ஊராட்சியில், சுனாமி காலனியில் அங்கன்வாடிக் கட்டிடம்!
📍 குருக்குச்சாலை அரசு பள்ளி வளாகத்தில் சமையலறைக் கட்டிடம்!
📍 தூத்துக்குடி மாவட்டம், படர்ந்தபுளியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு!
இவை அனைத்தும் திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காகச் செயல்படுத்தப்பட்ட பணிகள்!
அடிக்கல் நாட்டியது யார்? நிதி ஒதுக்கியது யார்? பணிகளை முன்னெடுத்தது யார்?
திட்டமிட்டது திமுக! நிதி ஒதுக்கியது திமுக! பணிகளை முன்னெடுத்தது திமுக! ஆனால், திறப்பு விழா நடத்திவிட்டு, அந்தச் சாதனைகளைத் தங்களின் சாதனைகளாகக் காட்டிக்கொள்வது தவெகவா?
திட்டங்களுக்கு யார் வேண்டுமானாலும் திறப்பு விழா நடத்தலாம். ஆனால், அந்தத் திட்டங்களுக்காக உழைத்தவர்களின் பங்களிப்பை மறைத்துவிட்டு, வரலாற்றைத் தங்களுக்குச் சாதகமாக எழுதிவிட முடியாது!
திமுக ஆட்சியில் உருவான திட்டங்களுக்குத் திறப்பு விழா நடத்திவிட்டு, அவற்றைத் தங்களின் சாதனைகளாக விளம்பரப்படுத்திக்கொள்வதும், சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதும் தவெகவின் அரசியல் பாணியாக இருக்கலாம். ஆனால், தூத்துக்குடி மக்கள் உண்மையை அறிவார்கள்!
ரிப்பன் வெட்டியதால் மட்டுமே ஒருவர் ஒரு திட்டத்தின் சாதனைக்குச் சொந்தக்காரராகிவிட முடியாது!
உண்மையான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் யார் என்பதைத் தூத்துக்குடி மக்கள் நன்கு அறிவார்கள்!
#DMK #DMK4TN
பனையூர் மூர்த்தி டம்மி முதல்வர் விஜய் கையில் காவல்துறை சென்ற நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு அடியோடு அதளபாதாளத்திற்கு சென்றாலும் ஊடகங்களையும் செய்தியாளர்களையும் சட்டம் ஒழுங்கு செய்திகள் குறித்து பேசவிடாமல் மிரட்டுவது யார்? டம்மி CMஆ? சூப்பர் CMஆ?
1. செஞ்சியில் மாயமான சிறுமி 15 நாட்கள் ஆகியும் காவல்துறையால் இன்னும் மீட்கப்படவில்லை!
2. மதுராந்தகத்தில் ஒரு பெண்ணின் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாகக் கிணற்றில் வீசப்பட்டுள்ளார்!
3. கோவையில் சாதியக் கொடுமை தாளாமல் ஒரு மாணவனின் தற்கொலை அரங்கேறியுள்ளது!
4. ஒரே மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயம்!
காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்தத் தொடர் கொடூரங்கள் மற்றும் கடத்தல்கள் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌன விரதம் இருப்பது ஏன்? ஜோசியரின் ஆலோசனையா?
திமுக ஆட்சியில் யாராவது தும்மினால் கூட "சட்டம் ஒழுங்கு சீர்கேடு" என 24 மணி நேரமும் விவாத மேடை போட்ட ஊடகங்களும் செய்தியாளர்களும், இன்று தவெக ஆட்சியின் சீர்கேட்டைப் பற்றி ஒரு விவாதம் கூட நடத்தாமல் கைகட்டி, வாய் பொத்தி நிற்பது யாருக்குப் பயந்து? விவாதங்களில் சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசக் கூடாது எனத் தவெக மேலிடம் ஊடகங்களை மிரட்டுகிறதா?
உண்மையை மறைக்கும் ஊடகங்களும், செயல்படாத தவெக அரசும் தமிழ்நாட்டிற்குப் பிடித்த மாபெரும் சாபக்கேடு! @PttvNewsX @polimernews @ThanthiTV @NewsTamilTV24x7 @News18TamilNadu @news7tamil @IndiaToday @TimesNow
பெண்கள் பாதுகாப்பு எங்கே?
ஊடக சுதந்திரம் எங்கே?
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி, சிறு நாகலூர் கிராமத்தில் உள்ள கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
சென்னை அமைந்தகரையை சேர்ந்த பெண் சுமார் 100 கி.மீ. தள்ளி செங்கல்பட்டு மாவட்டம், சிறுநாகலூர் கிராமத்திற்கு கடத்தி வந்து கொல்லப்பட்டாரா அல்லது கொலை செய்து உடலை கொண்டு வந்து போட்டார்களா என்று தெரியவில்லை
இந்த கொடூர சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் உண்மையா?
பெண்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் மட்டும்தான் டம்மி CM பேசுவாரா?
பெண்கள் உயிரிழக்கும்போது மௌனம் காப்பதுதான் தவெக அரசின் தூய ஆட்சியா?
#ProtectWomenFromTVK
A Greater Freedom. A Lasting Social Impact. ❤️🚌
When a woman can travel without worrying about the cost of her bus fare, the impact goes far beyond transportation. It means more money saved for her family, greater access to employment, easier journeys to hospitals, and more freedom to make her own choices.
The data speaks volumes about the significance of the Vidiyal Payanam scheme, introduced by the DMK government under the leadership of former Tamil Nadu Chief Minister and DMK President Thiru. @mkstalin.
The Vidiyal Payanam scheme represents a meaningful step towards making public transport more accessible and expanding women's freedom of movement. It is an example of how a policy focused on everyday needs can make a difference in people's lives.
Because when women move forward, families move forward. And when women have greater freedom, society moves forward with them. ❤️
Data article by @the_hindu
DMK IT WING retweeted
ஆறு மாசம் டைம் வேணும்னு கேட்டீங்களே அதுக்கப்புறம் எல்லாத்தையும் சரி பண்ணிடுவீங்களா..
.
இல்ல அதுவே உங்களுக்குப் பழகிடும்
#TVKVijayFails
DMK IT WING retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
சென்னை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பட்ட அணி மாவட்ட துணை அமைப்பாளர் Dr.S. Navin Kumar அவர்கள் லடாக்கிற்கு பைக்கில் பயணம் செய்து கழகக் கொடி ஏந்தி பாராகிளைடிங் செய்தார்
DMK IT WING retweeted
வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது!
DMK IT WING retweeted
செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை.
வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளை விடுதியில் அடைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது.
சாத்தான்குளத்தில் இரு சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் அரிவாளால் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவையில் சாதிய வன்கொடுமையால் 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார் . மறுபுறம், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?
தவெக ஆட்சியில் இன்றைக்கு பாலியல் வன்கொடுமையா? போதைப்பொருள் நடமாட்டமா? என்ற போட்டி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது
கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
தினமும் பத்திரிக்கை எடுத்தாலும் சரி, தொலைக்காட்சி பார்த்தாலும் சரி, சோசியல் மீடியாக்களை பார்த்தாலும் சரி, கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் என்ற செய்திகள் இல்லாத செய்திகள் இன்றைக்கு நாட்டில் இல்லை.
இப்பொழுது எல்லாம் குழந்தைகளுக்கு எதிரான செய்தி தொடர்ந்து ஓயாத நாட்களாக வந்து கொண்டிருக்கிறது.
கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
மக்கள் பாதுகாப்பை முற்றிலுமாகப் பலிகடா ஆக்கிய த.வெ.க அரசு!
சாத்தான்குளம் படுகொலை, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, தொடரும் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களால் தமிழ்நாடே அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளதை வேடிக்கை பார்க்கும் திறனற்ற அரசு இது!
#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
இலவச அரிசியைப் பாலிஷ் போட்டு விற்று பச்சை மோசடி செய்யும் தவெக.
கம்பத்தில் பாலிஷ் அரிசியைக் கொடுத்ததால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை மக்கள் முற்றுகையிட்டதும், அவர் ஒட்டம் பிடித்ததும் தான் இந்த அரசின் மாற்றமா?
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
இந்த கோமாளி அரசு சன்ன ரகப் பொன்னி அரிசியை கொள்முதல் எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?
எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#TVKFailsTN
DMK IT WING retweeted
மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா?
அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது.
அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர்.
கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA.
தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.
ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?
என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
மெத் பூபாலன், பவுடர் சரத், குட்கா விஜயபாஸ்கர் இவங்களை வச்சுக்கிட்டு எப்படி பாஸ், வெட்கமே இல்லாம போதை ஒழிப்பு மாரத்தான்லாம் ஓடுனீங்க?
#TVKFailsTN


















