PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என்று மேடைகளில் வாய் சவடால் விடுவதும், நாடாளுமன்றத்தில் அதற்கு நேர்மாறான முடிவுகளை எடுப்பதும் எந்த வகையான அரசியல்?
தொகுதி மறுவரையறை என்பது வெறும் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை அல்ல. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, கல்வி, சுகாதாரம், சமூக வளர்ச்சி எனப் பல துறைகளில் முன்னேறிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான விவகாரம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க., இன்று இந்த விவகாரத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு மக்களிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது மட்டுமின்றி திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணி அல்ல நேரடி கூட்டணி என்பதனையே தற்பொழுது திமுக எடுத்திருக்கும் நிலைப்பாட்டினால் தமிழக மக்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்
அரசியல் ஆதாயங்களை விட மாநிலத்தின் நலனும், தமிழர்களின் உரிமைகளுமே முக்கியம். தமிழக மக்களின் நம்பிக்கையை அரசியல் சமரசங்களுக்காக ஒருபோதும் அடகு வைக்கக் கூடாது.
தமிழ்நாட்டின் உரிமைகளில் சமரசம் கிடையாது!
#cmotamilnadu #CMVijay
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
கழகம் காவி மயமானதில் களிப்படைகிறேன் : ஸ்டாலின் சூளுரை
(இனிமேல் இப்படியும் பேசுவார்)
#DMKBetrayedTN
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
What changed between August & November 2026 for this U turn by the DMK?
The answer lies in what happened on 26 October 2026👇🏾
Pic taken at the #FairDelimitation committee meeting. Congress Chief Ministers from neighbouring South Indian States are also seen in the picture.
DMK has stood and is still standing firmly on its demand for #FairDelimitation, where the representation of Tamil Nadu is NOT REDUCED IN ANY MANNER.
Our demand has always been VERY clear:
• Tamil Nadu’s 7.18% share of seats in the Lok Sabha SHOULD NOT be reduced!
• Delimitation can ONLY BE ALLOWED based on the 1971 Census and must remain frozen for at least 25 years!
NO NEGOTIATION WHATSOEVER on these two CORE DEMANDS of the DMK.
Thanks to the DMK’s strong stand on the issue, today the seat share of TN is going up from 39 to 59!
It was the Congress that reduced the seat share of Tamil Nadu from 7.5% to 7.18%. Today, the Congress is conspiring to reduce Tamil Nadu’s representation from 39 seats to 32!
We will not allow the Congress to backstab #TamilNadu again!
#DelimitationBill
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
திமுக - பாஜக இடையே Underground Dealing-ஆ? அன்றே கணித்த முதல்வர் விஜய்!
TVK | BJP | DMK | MKstalin | TN politics
#NewsTamil24x7 #CMvijay
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
“டெல்லி அணியா தமிழ்நாடு அணியா?” ; “பா.ஜ.க.வை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள்தான்” ; “பா.ஜ.க.வுடன் ஒட்டோ உறவோ இல்லை” “கறுப்புக்கொடி ஏத்தி டெல்லி ஆணவத்த எதிர்ப்போம்” “தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதுதான் நமது சுயமரியாதை. தேர்தல் எல்லாம் பிறகுதான்” என்றெல்லாம் வாயால் வடை சுட்டதுதான் தி.மு.க.வும் அதன் தலைமையும்.
ஆனால், இந்த பஞ்சரான பஞ்ச் வசனங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்துவிட்டவை. இப்போது, தமிழக மக்கள் அவர்களை ஆட்சியில் இருந்து விரட்டி விட்டதால் அவர்களின் வசனங்கள் எல்லாம் எப்படி மாறி உள்ளன என்பதைப் பார்த்து உலகமே உமிழ்நீரைத் தூவிச் சிரிக்கின்றது.
பா.ஜ.க.வின் தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதுதான் சுயமரியாதை என்று சொன்னவர்கள், இப்போது அதே பா.ஜ.க.வின் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளனர். அதற்கு திமுக சொல்வது என்ன தெரியுமா?. “திட்டங்கள் சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே?” என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்லி தங்களின் சரிவுக்கு சாய்வுக்கும் சப்பைக் கட்டு கட்டுகிறது தி.மு.க.
“இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல” என்றும் திமுக ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. நம் வெற்றித் தலைவர் தேர்தல் பிரசாரத்தின்போதே சொன்னதுபோல, பா.ஜ.க.வின் காலடியில் தி.மு.க. கவிழ்ந்துள்ளது. இது தேர்தல் தோல்வியின்போதே எடுக்கப்பட்ட முடிவு என்பதைத்தான் “இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல” என்று திமுக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
“We maintain full consistency” என்று தனது இன்னொரு முகமூடியையும் தி.மு.க. கழற்றிக் காண்பித்து, தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது. பா.ஜ.க.வுடன் மறைமுக உறவில் இருந்து இன்று நேரடி உறவிற்கு வந்துள்ளதைத்தான் maintaining full consistency என்று தி.மு.க.வே ஒப்புக்கொண்டு உள்ளது.
நாங்கள் எப்போதும் இப்படித்தான். ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சைப் பேசுவோம். ஆட்சியில் இருந்து விரட்டப்படும்போது வேறு பேச்சைப் பேசுவோம். இப்படி வெட்கமே இல்லாமல் வேடம் போடுவதுதான் எங்கள் வாடிக்கை. இது குறித்து கேள்வி கேட்கவே, “what is your problem?” என்று மக்களைப் பார்த்துக் கேட்டுள்ளது.
1999ல் இருந்தே நாங்கள் பா.ஜ.க.வின் மறைமுகக் கூட்டில்தான் இருந்து வந்துள்ளோம். அது தெரியாத அப்பாவிச் சிறுபான்மை சகோதரர்கள்தான் எங்களை நம்பி ஏமாந்து எங்களுக்கு வாக்களித்து வந்தனர். ஆனால், அவர்கள் நம்பினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய?. நாங்கள் எப்போதும்போல எங்கள் சுயநல மற்றும் ஆதாய அரசியல் குணத்தின்படியே கடபடதாரிகளாகத்தான் இருந்து வருகிறோம். எங்களுடைய இரட்டை வேடத்திலோ ஆதாய அரசியலிலோ ஒருபோதும் “No Deviation and no departure at all” என்றும் பெருமையாக வெளிப்படையாகக் கூச்சநாச்சமே இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளது.
“அதிமுகவின் ரிங் மாஸ்டராக பிரதமர் மோடி செயல்படுகிறார்” என்று பேசிய தி.மு.க. தலைமை இப்போது பா.ஜ.க.வின் காலடியில் வீழ்ந்துள்ளதன் மூலம் தங்களுக்கும் ரிங் மாஸ்டர் பா.ஜ.க.தான் என்பதை முழுமனதுடன் ஒப்புக்கொண்டுள்ளது.
இப்படி ஓர் அரசியல் சூதாட்டம் ஆடுவதற்குப் பெயர்தான் கொள்கையா?. இப்போது எங்கே போனது பெரியாரின் சுயமரியாதை?. இப்போது எங்கே போனது அறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையைப் பின்பற்றுவது?. இப்போது எங்கே போனது திமுகவின் கெத்து?. இப்போது எங்கே போனது திமுகவின் தெம்பு திராணி?. உங்களின் சுயநல ஆதாயத்திற்குத்தான் பெரியார், அண்ணாவின் பெயர்களா?. இப்படி செய்வதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காதே. சிறுபான்மை சகோதரர்களும் தமிழக மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள்.
இத்தனை மோசடிகளையும் செய்துவிட்டு, “எப்போதெல்லாம் வாள் எடுக்க வேண்டும் ; எப்போதெல்லாம் கேடயம் எடுக்க வேண்டும் என்று தங்களுக்குத் தெரியும்” என்று தி.மு.க. தலைமை சொல்லி உள்ளது. தமிழக மக்களுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் அவர்தம் நலன்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக தி.மு.க. தங்களின் முனை மழுங்கிய மொக்கை வாளை எடுத்துச் சுழற்றத் தொடங்கி உள்ளது. தங்கள் குடும்பத்திற்கும் தங்கள் அமைச்சர்களுக்கும் எதிராக உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து காப்பதற்காக சுயநலக் கேடயத்தையும் எடுத்துள்ளதை தி.மு.க.வே அம்பலபடுத்திக் கொண்டு விட்டது. இவை அத்தனையையும் பா.ஜ.க.வின் காலடியில் விழுந்து வணங்கி செய்கிறது என்பதை மக்கள் பார்த்துகொண்டுதான் உள்ளனர். இதற்கான பரிசாக, இனி வருகிற எல்லா தேர்தலிலும் திமுகவிற்கு அதலபாதாளத் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
#DMKBetrayedTN
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
வெண்மைப் புரட்சி மூலம், நாட்டின் பால்வளத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றிய டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய பால் தினத்தில், பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பால் உற்பத்தியின் மூலம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து மேம்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நமது அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காத்திடும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்கியதோடு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
அவ்வகையில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிட நமது அரசு என்றும் துணை நிற்கும்!
#CMJosephVijay
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
2.5 வயது குழ*ந்தையை பா*லி*யல் ரீதியாக து*ன்*பு*ருத்தி கொ*ன்ற கிருஷ்ணகிரி திமுக இளைஞர் பிரிவு அதிகாரி பெரியநாயகம்:
குறிப்பு: 139 நாட்கள் கழித்து தான் நீதிமன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவரை காப்பாற்ற நடந்த போராட்டத்தில் தோல்வியுற்றது திமுக.
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
தனது கட்சியின் பாலியல் விங் நிர்வாகியைக் காப்பாற்றத் துடியாய்த் துடிக்கும் ரீப்போஸ்ட்நிதி!
கள்ளக்குறிச்சியில் பாலியல் விங் நிர்வாகியால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருப்பது குறித்துப் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினால், மூன்று மாதங்களுக்கு முன்பே அந்தப் பெண் மீது எங்களது பாலியல் விங் நிர்வாகி புகார் அளித்துள்ளார் என்று எவ்விதக் கூச்சமுமின்றிப் பச்சைப் பொய்யைக் கூறியிருக்கிறார் ரீப்போஸ்ட்நிதி!
ஆனால், பத்திரிகை ஒன்றில், "22.10.2026 தேதியிட்ட புகார் கடிதம் வெளியானது" என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே புகார் அளிக்கப்பட்டதாக முட்டுக்கொடுக்கிறார் ஆபாசநிதி.
தன் மீது தவறில்லை என்றால், பாலியல் விங் நிர்வாகி ஏன் ஓடி ஒளிய வேண்டும் என்ற கேள்விக்கு, நடுநிசியில் ரீப்போஸ்ட் செய்யும் பழக்கமுள்ள ரீப்போஸ்ட்நிதியால் பதில் சொல்ல முடியுமா?
தலைமறைவாக இருக்கும் அந்தப் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது, அவருக்கு முனைப்புடன் முட்டுக்கொடுக்கும் ரீப்போஸ்ட்நிதிக்குத் தெரியுமா?
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
மாண்புமிகு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் @Kanimozhi_tvk அவர்களின் கவனத்திற்கு !
கவுண்டம்பாளையம் – டிவிஎஸ் நகர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதனால் பள்ளிக்குச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.
மக்கள் பெரிதும் ஆவலோடு மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்து உள்ளார்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் வருகையின்போது..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu | @rajinikanth
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
PARODY | தளபதி தம்பி இன்பா retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu






























