
Official Twitter Account of @SPK_TNCC Office
T.Nagar, Chennai
Joined November 2018
- Tweets13.4K
- Following270
- Followers2.3K
- Likes13.8K
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகத் திகழும் திரு. @Udhaystalin, எம்.எல்.ஏ., அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மேலும் சிறக்கவும், மக்கள் நலன் சார்ந்த பணிகள் தொடர்ந்து வளரவும், சமூகநீதி, சமத்துவம், இளைஞர் நலன் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான தங்களது முயற்சிகள் மென்மேலும் தொடரவும் மனமார்ந்த வாழ்த்துகள்.
#HBDUdhay
44
ஆழ்ந்த இரங்கல்.
இரங்கல் செய்தி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையிடமான சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நீண்ட காலம் பணிபுரிந்து வரும் திரு.மோகனசுந்தரம் (எ) மோகன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
சத்தியமூர்த்திபவனில் பணிபுரியும் பணியாளர்களில் மிகவும் வயதில் மூத்தவர். மிகுந்த பொறுப்புணர்வுடனும், கவனத்துடனும் பணிபுரிபவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பலரிடம் பணிபுரிந்தவர்.
திரு.மோகனசுந்தரம் (எ) மோகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
66
தமிழ்நாட்டின் உரிமையைக் காப்பதில் அரசியல் வேறுபாடுகளுக்கு இடமில்லை !
தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி நதிநீர் உரிமை என்பது வெறும் அரசியல் பிரச்சினை அல்ல. அது காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் விவசாயிகளுடைய வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் நலன் சார்ந்த மிக முக்கியமான பிரச்சினையாகும்.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளும் கொள்கை முரண்பாடுகளும் இருக்கலாம். ஆனால் காவிரி விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளையும் விருப்பு வெறுப்புகளையும் கடந்து, தமிழ்நாட்டின் நலனை மட்டுமே முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் உழவர்களின் நலனையும், தமிழ்நாட்டிற்குரிய நதிநீர் உரிமையையும் பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது.
எனவே, இப்பிரச்சினையில் தமிழ்நாட்டின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டின் உரிமையைக் காப்பதில் அரசியல் வேறுபாடுகளுக்கு இடமில்லை !
71
அனைத்து மீனவப் பெருமக்களுக்கும் உலக மீன்வள தின நல்வாழ்த்துகள்!
#WorldFisheriesDay
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் பெரும் பங்காற்றி வரும் மீனவர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டி, மீன்வளத் துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வோம்.
கடலையும், நீர்நிலைகளையும் பாதுகாத்து, மீனவச் சமுதாயத்தின் எதிர்காலம் வளமாக அமைய இந்நாளில் உறுதியேற்போம்.
அனைத்து மீனவப் பெருமக்களுக்கும் உலக மீன்வள தின நல்வாழ்த்துகள்!
#WorldFisheriesDay
1
73
Selvaperunthagai Office retweeted
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், திரு. வி.எஸ். பாபு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மக்கள் பணியிலும் பொதுவாழ்விலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அன்னாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Selvaperunthagai Office retweeted
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி தமிழர்களின் வீரத்தையும், தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்த 'கப்பலோட்டிய தமிழன்' தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளை அய்யா அவர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.
அடிமைத்தனத்திற்கு எதிராக அவர் ஏற்றிய விடுதலைத் தீ என்றும் அணையாது!
அவரது வீரமும் தியாகமும் என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்!
#VOC #கப்பலோட்டியதமிழன்
Selvaperunthagai Office retweeted
மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து, ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட ஆயுளும், நல்ல உடல்நலமும் பெற்று, பொதுவாழ்வில் மேலும் பல உயரங்களையும் வெற்றிகளையும் அடைய வாழ்த்துகிறேன் !💐
@PChidambaram_IN
"குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம்"
- பண்டித ஜவஹர்லால் நேரு
#JawaharlalNehru #ChildrensDay
இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி, குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.
குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என்ற உயரிய சிந்தனையை வலியுறுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
குழந்தைகளின் கனவுகள் நனவாகட்டும்! கல்வியும் சமத்துவமும் நிறைந்த இந்தியா உருவாகட்டும்!
#JawaharlalNehru #ChildrensDay
1
94
Remembering Pandit Jawaharlal Nehru, India's first Prime Minister, on his birth anniversary.
His vision of a modern, scientific, democratic, and inclusive India continues to inspire generations. We pay heartfelt tribute to his enduring legacy of nation-building, education, and progress.
ஆழ்ந்த இரங்கல்.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. @RajeshKumarSMLA அவர்களின் மைத்துனரும், அவரது உடன்பிறந்த சகோதரியின் கணவருமான திரு. வி. நிர்மல் குமார் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்
அன்னாரை இழந்து வாடும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIP
72
ஆழ்ந்த இரங்கல்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் சி.எஸ். கர்ணன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அவரது மறைவு நீதித்துறைக்கும், அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIP
66
Selvaperunthagai Office retweeted
🪔 இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்! 🪔
இருள் நீங்கி ஒளி பிறப்பது போல, அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி மலரட்டும்!
ஒவ்வொரு இல்லத்திலும் அன்பும் அமைதியும் நிலவட்டும். ஆரோக்கியம், செழிப்பு, ஒற்றுமை நிறைந்து, புதிய நம்பிக்கைகளும் வெற்றிகளும் பிறக்கட்டும்.
அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!
#HappyDiwali
Selvaperunthagai Office retweeted
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவரும், நடிப்பு, இயக்கம், திரைக்கதை, தயாரிப்பு எனப் பன்முகத் திறமையால் இந்தியத் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவருமான உலகநாயகன் திரு. @ikamalhaasan எம்.பி., அவர்களின் பிறந்தநாள் இன்று.
புதுமையான சிந்தனைகள், துணிச்சலான கதாபாத்திரத் தேர்வுகள், கலை மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பல தலைமுறை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர்.
திரைப்படக் கலைக்கும் இந்தியத் திரையுலகின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் போற்றத்தக்கது.
கலைப் பயணம் மேலும் சிறக்கவும், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணியிலும் கலைப் பணியிலும் தொடர்ந்து சாதிக்கவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !
@maiamofficial
ஆழ்ந்த இரங்கல்.
இந்திய ஆட்சிப் பணியின் மூத்த அதிகாரியும், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியவருமான திரு. சையத் முனீர் ஹோடா அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
நீண்டகால அரசுப் பணியில் தனது நிர்வாகத் திறமையாலும், அர்ப்பணிப்புடன் கூடிய சேவையாலும்; தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல் தலைவராக பணியாற்றிய அவரது பொதுச் சேவைகள் என்றும் நினைவுகூரப்படும். எந்த நேரத்திலும் அவரை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் அந்தளவு மிக எளிமையானவர்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1
109
Selvaperunthagai Office retweeted
Heartiest congratulations to Shri Mallikarjun Kharge Ji on completing four years as the President of the Indian National Congress.
Your four-year journey has been marked by dedication to the party, commitment to democratic values, and continued efforts to uphold the ideals of social justice, equality, secularism, and inclusive development.
May you continue to lead with determination and inspire the party as it pursues a stronger, more inclusive, and democratic India.
Wishing you good health, strength, and many more years of dedicated public service!
Shri @kharge
மாவீரர்கள் பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் !
வீரம் விளைந்த மண்ணின் விடுதலைப் போராளிகள் – மருது சகோதரர்களுக்கு வீர வணக்கம்!
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்கள் பெரிய மருது, சின்ன மருது சகோதரர்கள்.
1799-ஆம் ஆண்டு வெளியிட்ட ஜம்புத்தீவு பிரகடனத்தின் மூலம், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்த விடுதலைப் போராட்ட முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் மருது சகோதரர்கள். அடக்குமுறைக்கும் அந்நிய ஆதிக்கத்திற்கும் அடிபணியாமல், வீரத்தையும் தியாகத்தையும் தங்கள் வாழ்வின் அடையாளமாக்கியவர்கள்.
1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்களின் தியாகம், தமிழினத்தின் வீர வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.
அவர்களின் வீரமும், தியாகமும், விடுதலை உணர்வும் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைத்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
மருது சகோதரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!
விடுதலை உணர்வை நெஞ்சில் ஏந்துவோம்!
சமத்துவமும் சமூக நீதியும் நிலைநாட்ட உறுதியேற்போம்!
மாவீரர்கள் பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்!
74
காவலர்களின் தியாகம் போற்றப்படட்டும்! அவர்களின் வீரமும் அர்ப்பணிப்பும் என்றும் நிலைத்திருக்கட்டும்!
உயிர்த் தியாகம் செய்த காவலர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வீர வணக்கம்!
#காவலர்நினைவுதினம்
#PoliceCommemorationDay
#வீரவணக்கம்
#காவலர்தியாகம்
காவலர் நினைவு தினம் (Police Commemoration Day)- அக்டோபர் 21
நாட்டின் அமைதியையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பணியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறையினரின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டவும், புயல், மழை, இயற்கைச் சீற்றங்கள் போன்ற ஆபத்தான சூழல்களிலும் துணிவுடன் பணியாற்றும் காவலர்களின் சேவை போற்றுதலுக்குரியது.
தங்கள் கடமையைச் செய்யும்போது உயிர்நீத்த காவலர்களின் தியாகம் என்றும் மறக்கப்படாது. அவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்குகொண்டு, அவர்களின் தியாகத்திற்கு நம் நன்றியையும் மரியாதையையும் செலுத்துவோம்.
காவலர்களின் தியாகம் போற்றப்படட்டும்!
அவர்களின் வீரமும் அர்ப்பணிப்பும் என்றும் நிலைத்திருக்கட்டும்!
உயிர்த் தியாகம் செய்த காவலர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வீர வணக்கம்!
#காவலர்நினைவுதினம் #PoliceCommemorationDay #வீரவணக்கம் #காவலர்தியாகம்
1
131
இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! உழைப்பை உயர்வாகப் போற்றி, தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஆயுத பூஜைத் திருநாளில், அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும், தொழில்களில் வளமும், வாழ்வில் வெற்றியும் பெருகட்டும்.
உழைப்பாளர்களின் வாழ்வு உயர்ந்து, தமிழ்நாடு வளமும் நலமும் பெற மனமார்ந்த ஆயுத பூஜை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ஆயுதபூஜை #சரஸ்வதிபூஜை #வாழ்த்துகள்
இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
உழைப்பை உயர்வாகப் போற்றி, தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஆயுத பூஜைத் திருநாளில், அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும், தொழில்களில் வளமும், வாழ்வில் வெற்றியும் பெருகட்டும்.
உழைப்பாளர்களின் வாழ்வு உயர்ந்து, தமிழ்நாடு வளமும் நலமும் பெற மனமார்ந்த ஆயுத பூஜை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ஆயுதபூஜை #சரஸ்வதிபூஜை #வாழ்த்துகள்
106
RT @SPK_TNCC: தமிழர்களின் மகிழ்ச்சியிலும, சோகத்திலும், காதலிலும், கொண்டாட்டங்களிலும் தனது இசையால் இரண்டறக் கலந்த தேனிசைத் தென்றல் தேவா அவர்…




















