PMS Prasad (@PrasadnPMS) header
PMS Prasad (@PrasadnPMS) profile picture

Dravida Munnetra Kazhagam | திராவிட முன்னேற்றக் கழகம் - #திமுக #Dmk

Tamil Nadu, India
Joined April 2021
Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)
PMS Prasad retweeted
தமிழ்நாட்டில் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத அவலத்தை ஏற்படுத்திய டம்மி பதவி விலக வேண்டும்! ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத இந்தத் 'டம்மி' தவெக ஆட்சியில், சாமானியப் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? அதிகார மமதையும், மௌன நாடகமும் சேர்ந்து தமிழ்நாட்டின் நிர்வாகத்தையும் மரியாதையையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றன! இதற்கு முழு முதல் காரணம், சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் தொடர்ச்சியாகப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் எழும்போதும், தன் பதவி மற்றும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள வாய்மூடி மௌனம் சாதித்த தவெக கட்சியின் தலைவரும், டம்மி முதல்வருமான விஜய் தான். தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!
26
438
22
763
9,045
PMS Prasad retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
375
3,410
161
6,557
237,743
PMS Prasad retweeted
கண்ணீர் விடும் விவசாயிகளைக் கண்டும் காணாமல் இருக்கும் த.வெ.க. அரசு கைவிட நினைத்தாலும், தி.மு.க. அமைதியாக இருக்காது. வேளாண் பெருங்குடி மக்களின் குரலைக் கேட்டு அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர, வரும் 25-ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களுக்கு வருகிறது, “காவிரி விவசாயிகள் கருத்து கேட்புக் குழு”. விவசாயத் தோழர்களே… நம்பிக்கையுடன் வாருங்கள். உங்களது கோரிக்கைகளை அரசிடம் வலுவாக எடுத்து வைத்து, நீதி கேட்போம்! #DeltaFarmers #CauveryIssue #MetturDam #Mekedatu
#JUSTIN தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தது வீணாகும் நிலையில், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை #Thanjavur #Ammapettai #PaddyFields #News18Tamilnadu | News18Tamil.com
107
789
26
1,513
42,841
PMS Prasad retweeted
திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள்: தலைவர் கலைஞரால் ஆளாக்கப்பட்டு, அவரது அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்றவர் முரசொலி மாறன் அவர்கள். கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் தலைநகர் டெல்லியில் கழகத்தின் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டு அவரது மனசாட்சி என்று பெயரெடுத்தவர். ஒன்றிய அமைச்சராக இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த அறிவுக்கூர்மைக்குச் சொந்தக்காரர். அத்தானாக என் மேல் அன்பு காட்டி, என் மிசா சிறைவாசத்தின்போதும் உடனிருந்து, அரசியல் பயணத்திலும் ஆலோசனைகளைக் கூறி நெறிப்படுத்தியவர் மாறன் அவர்கள். மாநில உரிமைகளை மீட்டெடுக்க நாம் அமைத்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், மாறன் அவர்கள் பேருழைப்பைச் செலுத்தி எழுதிய மாநில சுயாட்சி எனும் நூலை நாம் அனைவரும் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். தாம் ஆற்றிய உரைகளாலும், இயற்றிய நூல்களாலும், தீட்டிய வரலாறுகளாலும், இறுதி வரை இறுகப் பற்றிக் கொண்ட கொள்கைகளாலும் நம் இயக்கத்தின் அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் பங்களிப்புகளை நன்றியோடு இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
83
963
10
3,317
103,817
PMS Prasad retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.! “ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி! எனவே, “தமிழா! விழிப்புணர்வு கொள்!” “தமிழா! இனஉணர்வு கொள்!” “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!” என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை! @tpdk2020 @kuratpdk
211
1,311
36
2,882
78,850
PMS Prasad retweeted
தவெக எம்எல்ஏ மீது பெண் ஆட்சியர் புகார் #TVK | #ArulVignesh | #Kallakurichi | #TNPolice
221
1,795
204
5,900
385,815
PMS Prasad retweeted
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஏந்திய அறிவாயுதம் – குடி அரசு இதழ்! ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ உருவாக்கியுள்ள குடி அரசு இதழின் முழுத் தொகுப்பை, நம்முடைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்ட நிகழ்வில் பங்கேற்றோம். ஈராயிரம் ஆண்டு அநீதிக்கு எதிராக நூறாண்டுகளுக்கு முன்பு எதிரொலித்த குடி அரசின் கருத்து முழக்கம், டம்மி முதலமைச்சரின் சர்க்கஸ் ஆட்சிக்கு எதிராக இன்றைக்கும் தேவைப்படுகிறது என்று உரையாற்றினோம். திராவிட இயக்கத்தின் Intellectual Asset-ஆன இத்தொகுப்பை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்போம். Reels-க்கும் Views-க்கும் ஆட்சி நடத்தும் போலிகள் – டம்மிகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்! இத்தொகுப்பைக் கொண்டு வந்த அண்ணன் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்களுக்கு அன்பும் வாழ்த்தும்! #குடிஅரசு #ThanthaiPeriyar
421
951
37
1,972
52,896
PMS Prasad retweeted
16
400
5
1,422
83,444
PMS Prasad retweeted
எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️ #KaviyaAnirudhReception
160
1,950
64
15,874
980,989
PMS Prasad retweeted
அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் பொருளாளர் சகோதரர் எல்.கே. சுதீஷ் எம்.பி. அவர்களின் மகள் டாக்டர் ஜானு ஶ்ரீயையும், மணமகன் அகில் ரவிக்குமாரையும் வாழ்த்தினேன். ஒருவருக்கொருவர் துணையாகவும், ஒருவரின் கனவுக்கு மற்றவர் தோளாகவும், எல்லா நலன்களும் பெற்று மகிழ்வோடு வாழ்க மணமக்கள்! சகோதரி @PremallathaDmdk, தம்பி விஜய பிரபாகரன், சகோதரர் @lksudhish ஆகியோர் பொழிந்த பாசத்தில், கேப்டன் இன்னும் நம்மோடு இருப்பதுபோன்ற உணர்வு நெஞ்சை நிறைத்தது! ♥️
75
910
7
5,332
290,620
PMS Prasad retweeted
#LIVE: குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் சிறப்புரை youtube.com/live/C5N9714OjAE…
38
453
8
991
54,130
PMS Prasad retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்! வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்! ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்! @tpdk2020 @kuratpdk
74
827
10
1,713
43,091
Stopped in London on my way to Zurich, and had a pleasant surprise on a cold Autumn evening when darkness fell before 5 pm... Was invited to dinner at a restaurant in Canary Wharf, which I realized upon arrival that I first visited 20 years ago when I came to the Lehman office nearby (then a Spanish restaurant), and then again in 2017 (when it was an Indian restaurant called Manjal). It is now the Grand Cholan! Excellent dinner with friends and my son, and the unique experience of being in the same place in 3 different avatars (both the restaurant and myself -banker, MLA, ex-Minister - across 20 years!
47
140
7
2,282
90,971
TVK: A Party of Criminals
திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் பெண் உட்பட இருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும், எத்தனை உயிர்கள் பறிபோனாலும், எதுவுமே உறைக்காத உணர்வற்ற ஆட்சியாக இருக்கும் இந்தத் தவெக ஆட்சியாளர்களிடம் இனி என்னதான் சொல்வது? இந்தப் படுகொலைகளைத்தான் @TVKVijayHQ அரசின் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் குற்றவாளிகளையாவது விரைந்து கண்டறிந்து கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
4
256
3
485
4,657
PMS Prasad retweeted
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்! இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது. சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார். அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன. இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம். ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள். ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
1,118
1,863
167
4,374
337,083
PMS Prasad retweeted
தே.மு.தி.க பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சகோதரர் @lksudhish அவர்களின் அன்பு மகள் டாக்டர் ஜானுஸ்ரீ சுதீஷ் - அகில் ரவிகுமார் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெற்ற போது, அவ்விழாவில் பங்கேற்றோம். மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @PremallathaDmdk
79
765
14
4,450
149,262
PMS Prasad retweeted
சென்னையில் இன்று நடைபெற்ற சன் குழுமத்தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகள் காவ்யா மாறன் - இசை அமைப்பாளர் சகோதரர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, காவ்யா - அனிருத் இணையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
170
1,351
16
9,660
157,381
PMS Prasad retweeted
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்! தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம். ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை. மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்! அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
113
887
17
2,020
77,814
Just when I think the level of inanity cannot get any worse...they find a way to prove me wrong...🤦‍♂️ In what world do a bunch of contract employees with zero decision making authority (irrespective of tenure) determine the investment outcomes of a state? Are MNC's and their executives so naive/dumb that they make investment decisions based on such mid-level contractors?🤦‍♂️ What is the role of the Guidance CEO (IAS officer)? What about the Industry Secretary? What of the IDC? The Industries Minister? The Cabinet, which approves all the IDC recommendations? What a sad statement on the entire political process, and democracy itself, if a bunch of mid-level contract employees (with average tenure of a few years, though some were around from the pre-2021 ADMK-era) could actually determine the investment and growth trajectory of a state of ~75 million citizens and GDP ~400 Bn USD... In fact, the smart thing to do would be to clean house of such employees every regime change...which is what I presume happened with this Minister and Govt.. Distilled Idiocy from the Noida media....
Tamil Nadu Investment Row: 15 Officials Accused of Being 'Moles' for Andhra Pradesh A major controversy has erupted after the Vijay government identified 15 officials allegedly sharing confidential investment-related information with Andhra Pradesh. Many were appointed during the previous DMK regime and have now been removed over alleged breaches of confidentiality, triggering a political storm. #TamilNaduPolitics #TVK #Vijay #AndhraPradesh #DMK #InvestmentRow #Super6 @Akshita_N
90
1,350
47
4,148
165,993