சு.கி. கவுண்டச்சி (@Sujamoku) profile picture

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" : கணியன் பூங்குன்றனார்

Joined June 2024
Photo by சு.கி. கவுண்டச்சி (@Sujamoku)
சு.கி. கவுண்டச்சி retweeted
“அளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி” அளவு ( Volume ) பருந்தன்மை ( Mass ) கொண்ட வளம் பெரும் காட்சி..
1
2
1
3
295
கல்விக்கு பள்ளி தேவையா...?! teapawt.org/i/spaces/1evBnrkMNpozb…

47
சு.கி. கவுண்டச்சி retweeted
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்! தீபங்களின் வரிசையைப் போலத் தமிழர்களின் வாழ்வும் வளமும் சீராக ஒளிரட்டும்!
31
124
1
890
11,040
சு.கி. கவுண்டச்சி retweeted
கடலில் சிக்கி உயிரிழந்த காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் அனுதாபங்களையும் உரித்தாக்குகிறேன். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குவதோடு, அவர்களின் குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும். உரிய நேரத்தில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் கிடைக்காததே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்திருந்தால், அது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழாத வண்ணம் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தமிழக அரசின் தலையாய கடமையாகும். கடலில் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாகக் கண்டறிந்து மீட்பதற்கு, நவீன ராணுவத் தரத்திலான கடல்சார் கண்காணிப்புக் கருவிகள், அதிநவீன தகவல் தொடர்புச் சாதனங்கள் மற்றும் உயிர்காக்கும் மீட்பு உபகரணங்களைத் தமிழக அரசு தாமாக முன்வந்து கொள்முதல் செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். மீனவர்களின் உயிரிழப்பிற்குப் பிறகு நிவாரணம் வழங்குவதைவிட, அவர்கள் உயிரிழக்காமல் பாதுகாப்பதே ஓர் அரசின் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டும்! தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் இனியும் எந்தவித அலட்சியத்திற்கும் இடமளிக்கக் கூடாது! - பாரி சாலன்.
52
108
8
465
22,315
சு.கி. கவுண்டச்சி retweeted
தமிழினம் கண்ட ஒப்பற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள்! ஜம்புத் தீவு பிரகடனத்தை முன்மொழிந்து, இந்தியாவின் ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள்! இறுதிவரை வெள்ளையர்களை எதிர்த்து, தலைவணங்காமல் போரிட்டு, தூக்குமேடைகளையும் முத்தமிட்டவர்கள்! இந்திய விடுதலை வேட்கையின் இதயமாகத் திகழ்ந்தவர்கள்! மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்களின் விடுதலை வேட்கையை நம் மனதில் ஏந்துவோம்!
18
204
5
959
14,144
சு.கி. கவுண்டச்சி retweeted
திமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு ஊழல் வழக்கிற்காக விசாரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது! உப்பு தின்னவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்... ஊழல் செய்தவர் சிறைக்குச் செல்லத்தான் வேண்டும்! தவெகவின் இந்தச் சட்ட நடவடிக்கையைத் தமிழ்த் தேசியர்கள் வரவேற்கிறோம்! ஊழல்வாதிகளைக் கைது செய்வது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. கைது நடவடிக்கைகள் வலுவாக இருப்பதைப் போல, இந்த வழக்கையும் மிக வலுவாகக் கட்டமைத்து, முறையான ஆதாரங்களுடன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு, தவெக அரசு தகுந்த ஆதாரங்களுடன் கூடிய முறையான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, வலுவாக இந்த வழக்கை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவிற்கு அரசியல்வாதிகளின் மனதில் அச்சத்தை விதைக்க வேண்டும்! - பாரிசாலன்
55
265
10
1,235
35,836
சு.கி. கவுண்டச்சி retweeted
தமிழ்த் தேசியவாதிகள் பல ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி வந்தனர். தமிழ்த் தேசியர்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளித்து, நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கும் தவெக தலைமையிலான தமிழக அரசின் முடிவைத் தமிழர்கள் வரவேற்கிறோம்!
71
1,087
30
5,114
110,650
சு.கி. கவுண்டச்சி retweeted
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! உலகம் காடுகளால் சூழ்ந்து கிடந்த காலத்தில், எட்டு அடுக்கு மாடங்கள் கட்டி, உயர்ந்ததொரு நகர வாழ்வியலைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்த பேரினம் நம் தமிழினம். "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய" “தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செருவேட்டுப் புகன்று எழுந்து மின்தவழும் இமய நெற்றியில் விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்” – சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு! "தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம் நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான் குன்றமுண் டாகு மளவு." – பரிபாடலில் தமிழ்நாடு! "நும் நாடு யாதெனில் தமிழ்நாடு என்றல்" – இளம்பூரணர் "மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ" – கம்பராமாயணம் “தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்” – சேக்கிழார் "கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்” – ஒட்டக்கூத்தர் (இராசராச சோழனுலா) "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” “தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே!” – முண்டாசுக் கவி பாரதி தமிழ்நாடு என்ற பெயரில், தமிழர்களின் இறையாண்மை கொண்ட இந்த நிலம் என்றென்றும் அழைக்கப்பட்டது என்பதற்கு இவ்வாறு பல்வேறு ஆதாரங்கள் நம் கண்முன்னே கொட்டிக் கிடக்கும்பொழுதும் கூட, தமிழ்நாட்டை எப்படியாவது திராவிட நாடாக மாற்றிவிட வேண்டும் என்று வஞ்சகம் வைத்துச் சிந்திக்கும் தமிழரல்லாதவர்களுக்குத் தாங்கள்தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம் என்ற வெட்டிப் பெருமை வேண்டும் என்பதற்காகவே, பெயர் வைக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாள் என்று அறிவித்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். பெயரைச் சூட்டவாவது அவர்கள் முயற்சித்தார்களா? தமிழ்நாட்டுக்கு அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்காகச் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மண்ணில் மடிந்த வரலாற்றையும் மறைத்துவிட்டார்கள்! யாரோ பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் சூட்டியதாகப் பெருமை கொண்டாடியவர்கள்... மானத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு அதிகாரப்பூர்வமாக உருவான தினமே தமிழ்நாடு நாள்! நவம்பர் 1 தான் தமிழ்நாடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு மாநிலமாக உருவான நாள். இந்நன்னாளே தமிழ்நாடு நாள்! பல ஆயிரம் ஆண்டுகளாக நம் நாடு தமிழ்நாடுதான்! அதை மனதில் ஏந்திக் கொண்டாடும் தினமாக, இன்றைய தினம் மகிழ்ச்சியோடு, இயற்கை நமக்குக் கொடுத்த அருட்பெரும் வரமான தமிழ்நாட்டை, நம் வீட்டை, நம் நாட்டைப் போற்றுவோம்! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு! – பாரிசாலன்
40
418
7
2,003
25,841
சு.கி. கவுண்டச்சி retweeted
ஒரு 30 காணொளிகளை இதுவரை போட்டுவிட்டார்கள்... ஆனால், கட்சியின் சார்பாக ஒருவரும் என்னுடன் விவாதத்திற்கு வருவதற்குத் தயாராக இல்லை. இதற்கிடையே, தென்னகம் விஷ்ணுவை இழிவுபடுத்துவதற்காக வெட்டப்பட்ட ஓர் அலைபேசி உரையாடல் பதிவு. அதையும் முழுமையாக வெளியிடாமல், வெட்டி ஒட்டித்தான் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் முழுமையாக வெளியிட்டால்தானே யார் மீது தவறு இருக்கிறது என்பதை முடிவு செய்ய இயலும்? 49 நிமிடங்கள் கொண்ட முழுமையான அலைபேசி உரையாடல் பதிவை வெட்டி வெட்டித்தான் வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பதன் காரணம் என்ன? தெரியாமல் தவறு செய்பவர்களைத் திருத்தலாம். தெரிந்தே தவறு செய்பவர்களை எவ்வாறு திருத்துவது?
212
339
38
1,828
64,466
சு.கி. கவுண்டச்சி retweeted
சிறைவாசிகள் தொடர்ச்சியாகத் தப்பிப்பது ஓர் எதேச்சையாக நடக்கும் சம்பவமாகத் தெரியவில்லை. தமிழகச் சிறைகளில் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான சில பாதுகாப்பு முறைகளைக் கொண்டுவருவதற்காக நடத்தப்படும் நிகழ்வுகளாக இருக்கலாம். சிறைவாசிகள் தப்பிப்பதைக் காரணம் காட்டி, அத்தகைய முறைகளை அரசு நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது.
62
102
12
603
36,288