Important
More than 4,000 cancer research articles have been flagged for suspected links to paper mills. These businesses produce and sell research papers, sometimes using fabricated data or manipulated results. But being flagged does not automatically prove fraud.
In the 56th episode of Health Wrap by The Hindu, @ramyakannan Kannan, Health Editor, The Hindu, and @zubeda_h , Senior Assistant Editor, The Hindu, discuss why unreliable research can affect scientific progress and why the evidence behind published studies matters.
Watch the full episode here: youtube.com/watch?v=hdL9SBdE…
Dr D.Ravikumar MP retweeted
At least 61,059 Form-7 applications seeking the deletion of names from Karnataka’s electoral rolls were filed by election officials themselves, with not a single application mentioning a reason for the deletion, a mandatory requirement under the Registration of Electors Rules, 1960.
✍️@pon_vasanth and @rishitaakhanna
thehindu.com/news/national/k…
Dr D.Ravikumar MP retweeted
Anant Singh, a history-sheeter and caste supremacist leader, is supporting a Jan Suraj candidate in MLC election. Prashant Kishore has welcomed it. Upper caste intelligentsia won't call it out, won't see a caste angle, and are fine with Kishore being in bed with a criminal.
Dr D.Ravikumar MP retweeted
BJP's police detained Dalits from Chaityabhoomi on Oct 25. It's a historical blunder, BJP will never be about to undo.
Dr D.Ravikumar MP retweeted
#Profile | A student protest in France over deteriorating school conditions has snowballed into a nationwide movement, fuelled by a cost-of-living crisis and sluggish growth, putting mounting pressure on Emmanuel Macron’s centrist administration.
✍️@samzsays
thehindu.com/news/internatio…
Dr D.Ravikumar MP retweeted
வடகிழக்குப் பருவமழை :
~~~~~~~~~~~~
நெல்லின் ஈரப்பத அளவை தளர்த்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விசிக கோரிக்கை!
~~~~~~~~~~~~
தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடி, வடகிழக்கு பருவமழை காலத்தில் நடைபெறுவதால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர். மேட்டூர் தண்ணீர் மிகவும் தாமதமாக திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள நிலையில், இந்தப் பருவமழை சூழல் அவர்களை மேலும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.
தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC), தற்போது அனுமதிக்கப்படும் நெல் ஈரப்பத அளவை
17 சதவீதம் என ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது.
அறுவடையாகும் நெல் பருவமழையின் காரணமாக கூடுதல் ஈரப்பதம் கொண்டுள்ளது. நெல் உரிய ஈரப்பதமான 17 சதவீதத்திற்கு வரவேண்டுமெனில், அதனை உலர்த்த வேண்டும். விவசாயிகளிடமோ, நெல் கொள்முதல் நிலையங்களிலோ நெல்லை உலர்த்துவதற்கு உரிய வசதியில்லை. இதனால் நெல் கொள்முதல் ஆகவில்லை என்பதுடன், பருவ மழையினால் மேலும் ஈரப்பதத்தின் அளவு உயருகிறது.
எனவே விவசாயிகள் கொள்முதலுக்கான ஈரப்பத அளவினை 17சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்திட வலியுறுத்தி போராடுகின்றனர்.
2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளில் இந்திய ஒன்றிய அரசு 19%-20% ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது என்பதை தற்போது நினைவூட்டுகிறோம்.
எனவே, தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவை தளர்த்த உடனடியாக இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
சில நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் உடனடியாக கொள்முதல் செய்ய போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதையும் விவசாயிகள் சுட்டிகாட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில் கொண்டு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
Dr D.Ravikumar MP retweeted
A BJP booth level agent filed 5,359 Form 7 objections in Uttarakhand’s Kichha, mostly seeking the deletion of Muslim voters’ names.
He claimed the ERO initially refused to accept the bulk objections but accepted them after he complained to the ECI.
Investigation by @AshwineSingh and @Basantrajsonu
newslaundry.com/2026/10/24/u…
அஞ்சலி
மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் தலித் இதழியல் வரலாற்றை உலகுக்குத் தொகுத்தளித்தவருமான முனைவர் ஜெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் தாயார் உடல் நலிவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து துயருற்றேன்.
கடந்த சில மாதங்களாக அம்மாவைக் காப்பாற்ற அனைத்துவித முயற்சிகளையும் பாலு செய்தார். சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது வேலூர் சி எம் சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. ஓராண்டாவது உயிரோடிருப்பார் என மருத்துவர்கள் சொன்னதாக பாலு கூறியிருந்தார். ஆனால் 6 மாதங்களுக்குள் இப்படி ஆகிவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், காங்கிரஸ் கட்சியில் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர். கடுமையான சாதிய நெருக்கடி மிகுந்த நெல்லையில் அதுவும் ஒரு தலித் பெண் அரசியல்வாதியாக இருப்பது சாதாரணமானதல்ல. பாலுவுக்கு அவரது அம்மாதான் ஆதர்சம். இந்த இழப்பு மிகவும் பெரியது. இதிலிருந்து அவர் விரைவிலேயே மீண்டு வரவேண்டும். அம்மாவுக்கு என் அஞ்சலி
நியாயவிலைக் கடைத் திறப்பு
மரக்காணம் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடத்தை இன்று திறந்துவைத்தேன். மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, மண்டல துணைச் செயலாளர் நாவரசு, கோட்டி பாலா , மன்ராஜ், ராஜசேகர், எல்லப்பன், கணபதி, கவுன்சிலர் கோபால் கனகராஜ் குமரேசன் தீபன் பழனி கோகுல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
அஞ்சலி
புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் திரு என்.எஸ்.ஜெயபால் அவர்களின் இணையர் திருமதி கீதா அவர்கள் உடல் நலிவால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
விசிக நிர்வாகிகள் சி. வள்ளுவன்,சிவச்சந்திரன், ஈழவளவன், இளந்தமிழன், இளங்கோ, இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Dr D.Ravikumar MP retweeted
ECI orders re-poll in Agra Division Teachers’ Constituency (Legislative Council) on Oct 26.
நூலக நூற்றாண்டு விழா
வானூர் தொகுதி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் நூற்றாண்டுவிழாவில் பங்கேற்று மலரை வெளியிட்டு வாழ்த்தினேன்.
புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு முத்து, செயலாளர் மு.பாலசுப்பிரமணியன், விசிக நிர்வாகிகள் அரிமாத் தமிழன், தலையாரி, அமுதவன், சிவச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Dr D.Ravikumar MP retweeted
Hitler gradually molded the judiciary to align with Nazi ideology. He used democratic rules to dismantle democracy. Replay of those ominous developments must be prevented by saving the Constitution, rule of law and constitutional morality
theleaflet.in/international-…
Dr D.Ravikumar MP retweeted
In September, @IndianExpress' investigation revealed that two Election Commissioners had written separately to the Cabinet Secretary seeking action against a senior officer inside the EC.
What happened to those letters is now on record.
File notings obtained under RTI by Commodore Lokesh Batra (retd) show the Cabinet Secretariat discussed the letters on August 3 & 4, then decided to do nothing beyond acknowledging them.
The reasoning? Sandhu and Joshi had written in their individual capacity, not as the Commission.
“In the absence of any official communication from the Commission as a whole, any action at this stage may be inappropriate. It may also be construed as interference in the functioning of the Constitutional Body.”
The Commission, as our investigation has shown, had not met as a full body for FOUR months.
indianexpress.com/article/in… via @IndianExpress
Dr D.Ravikumar MP retweeted
"It is not enough to admit guilt; public life calls for fixing responsibility." Former CEC @AshokLavasa argues that the EC’s decision to roll back controversial SIR procedures must be followed by an explanation of why they were introduced in the first place.
#AshokLavasa #ElectionCommission #CEC #VotingRights #NewsToday | @sardesairajdeep
Dr D.Ravikumar MP retweeted
'Arbitrary, Unjustified Deletion of Eligible Voters': More Than 70 Scientists Call For the Scrapping of SIR
thewire.in/rights/arbitrary-…
Dr D.Ravikumar MP retweeted
A UP seat won by under 7,000 votes has 10,470 suspect voter entries
indianexpress.com/article/in…
Dr D.Ravikumar MP retweeted
சாதிய வன்கொடுமையால் கோவை மாணவன் அகிலன் தற்கொலை!
தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும்!
நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரையின்படி பள்ளிகள் தோறும் சமூகநீதி மாணவர் படையை நிறுவிட வேண்டும்!
_________________________
கோவை -பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த பதினோராம் வகுப்பு மாணவன் அகிலன் சாதிய வன்கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமளிக்கிறது.
கடந்த சிலநாட்களுக்கு முன்னர், கல்வி உதவித் தொகை பெறும் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மாணவர்களை எழுந்து நிற்குமாறு ஆசிரியர் விஜயகுமார் கூறியுள்ளார். அப்போது அகிலன் உள்ளிட்ட சில தலித் மாணவர்கள் எழுந்து நின்ற போது, "நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களா?" என அந்த ஆசிரியர் கேட்டதாகவும்; அதற்கு ஆமாம் நாங்கள் சாப்பிடுவோம் என அகிலன் கூறியதாகவும் தெரிகிறது. அதிலிருந்து சக மாணவர்கள் சிலர் அகிலனைச் சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தினரென்றும் அகிலனுடன் பிற மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தனரென்றும் தெரியவருகிறது.
இதனைப் பள்ளி நூலகரிடம் அகிலன் தெரிவித்தன் அடிப்படையில் நூலகரும் இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். அப்போதே பள்ளித் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவன் அகிலனை தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகளுக்கு அகிலன் ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் , கடும் மனஉளைச்சலில் இருந்த மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
மாணவன் அகிலனின் பெற்றோரின் போராட்டத்துக்கு பின்னர் தலைமை ஆசிரியர் அருண்குமார் , ஆசிரியர் விஜயகுமார் மற்றும் மாணவர்கள் இருவர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைதுசெய்யப்படவில்லை.
மாணவன் அகிலனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை போக்குவதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கையை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்!
ஆசிரியர்களுக்கு சமூகநீதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் சிறப்பு பயிற்சி வழங்கிட வேண்டுமென்றும்; சமூகநீதி குறித்த பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென்றும்; தற்போது கேரளாவில் நடைமுறையில் இருப்பது போல் 'சமூகநீதி மாணவர் படையை' பள்ளிகள் தோறும் ஏற்படுத்திட வேண்டுமென்றும் நீதிபதி சந்துரு ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. எனவே, அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்!
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.























