1 நாட்கள்… தமிழகத்தின் இளம்படை எதிர்பார்க்கும் எழுச்சித் திருநாள் நெருங்குகிறது! @Udhaystalin #UdhayStalin #dmkyouthwing #Trending
DMK.YOUNGSTERS retweeted
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் தான் நீதிமன்றம் இத்தனை நிபந்தனைகளை விதிக்கிறது. கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? நியாயம் கிடைக்கும் வரை திமுக இதைக் கையில் எடுக்கும்; நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்போம்!
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள்
#Arrest_ArulVignesh
#Resign_JosephVijay
DMK.YOUNGSTERS retweeted
மகன்தான் உளறுறாருன்னு பார்த்தா, இவரு அதுக்கு மேல உளறுறாரு! அதிமுக ஆட்சி எப்போ, திமுக ஆட்சி எப்போன்னு கூட தெரியாம, இதுங்க ரெண்டும் எதுக்கு கட்சி வச்சிருக்குன்னு தெரியல! 😌
#Updates | குழந்தைகள் தின வாழ்த்துத் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
#Trending | #ChildrensDay | #MKStalin
DMK.YOUNGSTERS retweeted
குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
ஊதியம் இல்லாத நிலையில் Childline பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம்.
எனவே Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
DMK.YOUNGSTERS retweeted
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
DMK.YOUNGSTERS retweeted
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
DMK.YOUNGSTERS retweeted
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. @KMarimuthuoff அவர்களுக்கு, ஆலத்தம்பாடி கடைத்தெருவில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.
விவசாயிகளின் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி அமைய வாக்களிப்போம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு!
#VoteForDMK
DMK.YOUNGSTERS retweeted
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க முற்படும் பாசிச சக்திகளையும் அதன் அடிமைகளையும் தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
DMK.YOUNGSTERS retweeted
மண்ணின் உரிமை காக்க மக்கள் நலம் பேண இது கலைஞரின் வழிவந்த திராவிட நாயகரின் கோட்டை! தமிழ்நாட்டின் தன்மானத்தை ஒருபோதும் எவரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டோம்!
இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்று திமுக உயர்ந்து நிற்கிறது!
#VoteForDMK
DMK.YOUNGSTERS retweeted
சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்!
நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார்.
#voteForDMK #OraeThalaivanMKS
DMK.YOUNGSTERS retweeted
A leader isn't defined by the chair he sits in, but by the people he lifts up! 🖐🏽
He is not just our CHIEF MINISTER.
To the mothers receiving their monthly rights, he is a beloved BROTHER. 🫶🏽
To the children eating a hot breakfast before class, he is a compassionate MENTOR. 👨🏽🏫
To the Tamil culture and language, he is a fierce GUARDIAN. ♠️
And when forces from Delhi try to silence our voice and erase our progress, he stands tall as our fearless PROTECTOR. 💪🏽
For a Tamil Nadu that is stronger, fairer, and unstoppable, stand with the ORAE THALAIVAN MKS who stands for ALL of us. 🤴🏽
On April 23, vote for progress #VoteForDMK! 🌄
#OraeThalaivanMKS
DMK.YOUNGSTERS retweeted
தேர்தல் பரப்புரைக்குச் செல்லும் ஊர்களிலெல்லாம் மக்கள் தரும் இந்த அன்பும் ஆதரவும், இன்னும் அதிகம் செயாலாற்றுவதற்கு பெரும் ஊக்கமளிக்கின்றன.
#VoteForDMK














