Belongs to Dravidian stock | Ex MLA Egmore | Spokesperson | Social Work| DMK Legal Wing State Join secretary.

Egmore, Chennai
Joined October 2016
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியதாகச் செய்திகள் வருகின்றன. இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை! இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?
84
440
21
1,128
56,288
திருச்சி தெற்கு மாவட்ட க் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த கையாளாகாத தவெக @TVKVijayHQ அரசு கைது செய்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்குச்சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை விலைவாசிப் பிரச்சனைகளை கையாளத்தெரியாமல், மக்களை திசைத்திருப்பவே இத்தகைய அடக்குமுறைகளை கையில் எடுத்திருக்கிறது இந்த #DummyCM அரசு.சட்ட ரீதியாக சந்திப்போம். எதற்கும் அஞ்சுகிற இயக்கம் அல்ல தி.மு.கழகம். @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing
47
161
3
703
11,547
RT @Udhaystalin: அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்…
157
60
தவெக ஆட்சில வாழும்போது தான் பிரச்சனை என்றால்.. இறந்த பிறகும் பிரச்சனை தான் போல...!
2
20
1
30
745
I Paranthamen retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள் 🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. 🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். 🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. 🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. 🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள். 🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. 🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? 🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்! #LawAndOrder
161
1,889
40
3,279
99,359
I Paranthamen retweeted
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறான். சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக்கொலைச் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்துள்ளனர். த.வெ.க.வினரும் தங்களது Crime Quota-வை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சாட்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் Tractor ஓட்டி, Tea குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா? ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?
177
1,149
36
2,513
127,419
I Paranthamen retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
156
2,183
72
4,192
133,103
I Paranthamen retweeted
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது. மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்த SofaModel ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள். ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா? ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்? இந்தக்குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
176
1,435
29
3,391
146,149
I Paranthamen retweeted
கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்தச்சூழலில், கழகம் - முற்போக்கு அமைப்புகள் - மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
121
1,239
24
3,042
112,405
I Paranthamen retweeted
#WATCH | “தவெக ஆட்சிக்கு பிறகுதான் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது” -கனிமொழி, திமுக எம்.பி., #SunNews | #Kanimozhi | #TVKVijay‌ | #DMK | #NTK
46
427
3
1,003
12,916
பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதியான வாழ்வுக்காகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி இன்னுயிர் ஈந்த தமிழ்நாடு காவலர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்! #PoliceCommemorationDay @tnpoliceoffl
1
29
208
1,880
கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகச் சொல்லி அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் தவெக அரசு, எவ்வாறு இந்த கடன் தேவை குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா? கழக ஆட்சியின் கடந்த 2025–26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் ரூ.13,002.22 கோடி அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது. தவெக அரசு, இந்த நிதி ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கு இன்னும் தவெக அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா? வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா? முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா? த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். எனவே, இதனை தங்களின் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.
50
460
30
892
52,715
I Paranthamen retweeted
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ். பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்? கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
205
1,936
55
4,471
132,126
I Paranthamen retweeted
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘முதலமைச்சர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு’ என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், ‘முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு’ என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்? ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா? ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.
302
2,419
88
5,144
232,016
கோவையில் தந்தை பெரியார்அறிவுலகம் ! காலம் உள்ள வரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தான். @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
13
88
2
333
2,603
I Paranthamen retweeted
தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பொய்ச்செய்திகளுக்கு எதிராக போரிட, கழக ஆட்சியின் போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது. அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers - கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளை செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார். ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது. Transparent Governance-ஐ தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய Advisors நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்? ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி - ஆபாச தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா? உண்மை எது - பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல. உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்.
182
1,341
70
2,702
270,625
I Paranthamen retweeted
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது! #Kovai #Coimbatore #PeriyarArivulagam
581
3,797
234
8,927
335,169
I Paranthamen retweeted
மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்! மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது. இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும் - அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன. எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார். ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலைவாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா? இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா? இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும். #DeltaFarmers #Cauvery #MetturDam
130
1,499
25
3,357
98,190