
#MuthuSinger🎙/ரஜினி-அஜித்-ரசிகன்/இளையராஜா❤/ My dear son.. நான் வாழும் வாழ்வே..உனக்காகத் தானே..! நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே..!❤ https://www.instagram
perambalur
Joined May 2018
- Tweets64.3K
- Following7.9K
- Followers9K
- Likes158K
Pinned Tweet
Thank you so 💓 much Sir. எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப,ரொம்ப..மகிழ்ச்சி. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. ! 🙂🙃😇🥰🤩❤🧡💛💚💙💜
💙முகவரி🎙முத்து💙 retweeted
It pours as a whisper, a velvet deceit,
A borrowed oblivion, bitter and sweet.
It drinks up the daylight; one chair remains bare,
While a child sets a place for the one who's not there.
You've seen families fracture, heard promises break,
Watched the living bear grief in its merciless wake.
Yet you raise it again, knowing all that it claims,
What thirst still survives when nothing remains?
🥹🥹🥺 hope this menace might someday cease,
And leave us the lives we deserve...
💙முகவரி🎙முத்து💙 retweeted
கடந்த வார இறுதி முன் கூட்டியே சூப்பர் சிங்கர் வழியாக விழா எடுத்தது போல, இன்று பிறந்த நாளாக அமையும் ஜிக்கி அவர்களுக்கும், தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்குமாக
“ஒத்தையடிப் பாதையிலே”
பாடலோடு ஆரம்பித்தது.
“ஒத்தயடி பாதையில
ஊரு சனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா
என்னோட உசிரு,
உசிரு
வெத்தலப் போல் வாடுதம்மா
என்னோட மனசு’
youtube.com/watch?v=Cbsb8SSj…
என்று “ஆத்தா உன் கோயிலிலே” பாடலை ஜிக்கியம்மா பாடும் போது,
“ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டு
அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தைக் கண்டே
youtu.be/2LPr9Jq7rQA?si=DMii…
நம் தலைமுறைக்கு முந்திய தலைமுறைக்குப் பால்வீதியில் கைப் பிடித்து அழைத்துச் செல்லுமாற் போல இருக்கும்.
தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஜிக்கி அவர்களைப் பாட வைக்க வேண்டும் என்று கனவு கண்டிருப்பார் போல. இன்னும் சில பாடல்களிலும் அவரைப் பயன்படுத்திய வகையில்
“சின்ன முத்து” படத்தில்
சின்னமுத்து சின்னமுத்து
youtu.be/0SaaTuoWBTg?si=-5_f…
சி.எஸ்ஜெயராமன் குரலை அச்சடித்து மலேசியா வாசுதேவன் பாடவும், இணைந்து ஜிக்கிம்மா பாடியது
“பாலிருக்குது பழமிருக்குது ஸ்வாமியே”
youtu.be/32RyFT8B-gw?si=5KII…
என்று பழமையான பாடலாக “மாப்பிள்ளைத் தோழன்” படத்தில் கொடுத்திருப்பார்.
பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்
பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருபேன்
கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்.......
அனிச்சையாக வாய் முணுமுணுத்து அந்த
“நினைத்தது யாரோ நீதானே”
youtu.be/xKNziTOKFIU?si=98H5…
பாடலுக்குள் மூழ்கிவிட்டால் கரையேற ஒரு நாள் போதாது.
அப்படிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மனசு.
இம்மட்டுக்கும் ஒன்றல்ல இரண்டல்ல 34 ஆண்டுகள் கால வெள்ளத்தில் நம்மிடம் எத்தனை பாடல்கள் வந்து சேர்ந்தாலும் இந்தப் பாட்டுப் போல ஒரு கூட்டம் பாடல்கள் அப்படியே அலையடித்துக் கரையொதுக்கிய முத்துச் சிப்பி போல.
“துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்”
பாடல் எல்லாம் நம் அப்பன், அம்மை காலமென்றால் நமக்காகவே அந்த ஜிக்கியம்மாவை அழைத்து வந்து பாட வைத்தது போலவொரு பாட்டு இந்த “நினைத்தது யாரோ நீதானே”.
நினைத்தது யாரோ நீதானே" பாட்டு. அப்போது படமே வரவில்லை ஆனால் ஆறேழு மாதங்களுக்கு முன்பே எல்பி ரெக்கார்ட்டில் வந்துவிடும். இப்போது கிட்டும் பரவலான வெகுஜனத்தொடர்பு இல்லாததால் அந்த எல்பி ரெக்கார்ட்ஸ் ஐ வைத்து உள்ளூர் ரெக்கார்டிங் பார் எல்லாம் உச்ச ஒலியில் கடைவிரித்துக் கல்லா கட்டிவிடும். படம் வரும்போதும் நல்ல பப்ளிசிட்டி கிட்டிவிடும். அப்படித்தான் இந்தப் பாட்டை நான் கேட்ட அந்த கல்யாண காசெட் ஒளிபரப்பின் பின் சில நாட்களிலேயே உள்ளூர் இசைக்கூடங்களின் இதய நாதமாக மாறிவிட்டது இந்தப் பாட்டு.
தாவடிச் சந்தியில் இருந்த ரெக்கோர்டிங் பார் காரர் நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது சொல்லி வைத்தாற்போல இந்தப் பாட்டைப் போடுவார். வேடிக்கை பார்ப்பது போல சீன் போட்டு ஐந்து நிமிடத்தைக் கடத்துவேன். அப்போதெல்லாம் கைக்காசைப் போட்டுப் பாட்டுக் கேட்டால் செவிப்பறையில் வந்து விழும் அடி என்பதும் நான் அறிந்ததே.
பின்னர் மெல்ல மெல்ல உள்ளூர் நாதஸ்வரக்காரரின் பெருவிருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்றாகி, சுவாமி வீதி வலம் வடக்கு வீதியில் வரும் போது மனோ, ஜிக்கியாக நாதஸ்வரத்தின் குரல் மாறி விடும். எனக்கு இந்தப் பாட்டை அடிக்கடி தீனி போட்ட பெருமை சென்னை வானொலியைச் சாரும். யாழ்ப்பாணத்தில் இருந்து றேடியோவை மயக்கி சென்னை அலைவரிசை தொட்டால் நாலு மணிக்கு நேயர் விருப்பம். அதில் லல்லு , சத்யா, ரேவதி என்று யார் யாரோவெல்லாம் பாட்டுக் கேட்பார்கள், யாராவது ஒருவர் இந்தப் பாட்டைக் கேட்பார். பதின்ம வயது கடந்து ஆதலினால் காதல் செய்த பருவத்திலும் கொண்டாடிய பாட்டு. இப்போது கேட்டாலும் எனக்கான பாட்டு.
பாடகி ஜிக்கி அவர்கள் தனது கணவரும் பாடகர் சக இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜாவின் இசை கடந்து பல்வேறு ஆளுமைப்பட்ட இசையமைப்பாளர்களிடம் பாடியிருந்தாலும்,
நம் காலத்து இசைஞானி இளையராஜா காலத்திலும், தேனிசைத் தென்றல் தேவா இசையிலும் பாடியது ஒரு முத்தாய்ப்பு.
“பாக்கு வெத்திலை” படத்தில் மலேசியா வாசுதேவன் இசையில்
“அந்த ராமனும்”
youtu.be/f4nOA-lmyjk?si=0kkm…
என்ற அற்புதமான பாடல் பாடியிருக்கிறார்.
சங்கர் கணேஷ் இரட்டையர் இசையில் ஏ.எம்.ராஜா & ஜிக்கி பாடிய
செந்தாமரையே செந்தேன் இதழே”
youtu.be/-5_0phIzoaE?si=V-39…
போன்று அதே காலத்தில் புதுமையாக ஐந்து இசையமைப்பாளர்கள் தனித்தனிப் பாடல்களோடு விளைந்த “கண்ணில் தெரியும் கதைகள்” படத்தின்
“நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்னை நெனைச்சே”
youtu.be/6qNrNX67sYw?si=coJL…
பாடலை சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராமுடன் ஜிக்கியம்மா பாடியதும் நம் தொட்டில் காலத்தில் கேட்டுப் பழக்கிய பாடல்கள்.
ஆபாவாணன் ஒரு புதுமை விரும்பி, அவரின் பாசறையில் கியான் வர்மா இசையில் “அண்ணன் என்னடா தம்பி என்னடா” படத்தில் ஜிக்கியும், ஜமுனாராணியும் இணைந்து பாடிய பாடல்
இரவு நாடகம்
youtu.be/hjV9cgKS04w?si=dj4d…
ஞானதேவன் இசையில் மலேசியா வாசுதேவனோடு, ஜிக்கி பாடிய இன்னொன்று “முதல் மனைவி” படத்தில் அமைந்த
கோலம் போடும்
youtu.be/FLlHTT9GwhI?si=T4yt…
இசைஞானி இளையராஜாவும் நமக்கெல்லாம் பழக்கப்பட்ட “நினைத்து யாரோ நீதானே” பாடலுக்கு முன்பே “வட்டத்துக்குள் சதுரம்” படத்தில் பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் அற்புதமானதொரு பாடலை ஈன்றிருக்கிறார். ஜிக்கியம்மா தனித்துப் பாடும் அந்தப் பாட்டு
“காதலெனும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமே வருவாய்....
youtu.be/VyduPdwLB74?si=TM13…
இதுவரை கேட்காதவர்கள் இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்தப் பாடலைக் கேட்டு விட்டு வாருங்கள். எவ்வளவு அற்புதமான தேவார்தம் என்று புரியும். பதிவை எழுதியவர் : கானா பிரபா
“காதலெனும் காவியம்” பாடலின் தாளக் கட்டைக் கொஞ்சம் வேகம் பூட்டி ஒரு பாட்டு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்துப் பல்லாண்டுகளுக்குப் பின் வெளிவருகின்றது. அதுதான்
“வண்ண வண்ணச் சொல்லெடுத்து
வந்தது செந்தமிழ்ப் பாட்டு”
youtu.be/g4bNmo_TJvs?si=rcRR…
படத்திலும் ஒரு பாடகிக்கான குரலாகக் கெளரவம் பூணும் ஜிக்கி குரல், அந்தப் படம் எம்.எஸ்.வியின் குடும்பத் தயாரிப்பு என்பதும் இன்னொரு விசேஷம்.
இசைஞானி இளையராஜாவும் இன்னும் இன்னும் பாடல்களைக் கொடுத்து அழகு பார்த்தவர்.
“தாயம் ஒண்ணு” படத்தில்
“ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூங்கரம் நீட்டு ராஜா”
youtu.be/nLW2bCiUAAQ?si=YXxa…
என்று சில்க் ஸ்மிதாவின் விரகதாபப் பாடலுக்குப் பொருத்திப் பார்த்தவர் விட்டாரா என்ன?
அதே சில்க்குக்கு கிருஷ்ணதேவராயர் காலத்து 16 ஆம் நூற்றாண்டு காலத்துப் பாட்டுக்கும் ஜிக்கியை இணைத்துக் கொடுத்தார்.
அது தெலுங்கிலும், தமிழிலும் ஜிக்கியம்மாவே பாடிச் சிறப்பித்த பாட்டு. இறுதியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா கூட இணைந்து பாடியிருக்கும் அந்தப் பாட்டைக் கேட்டால் ஐம்பதுகளுக்குப் போய் ராஜா இசைத்தது போலிருக்கும்.
தெலுங்கில் “Jaanavule”
youtube.com/watch?v=xisd-3n8…
தமிழில் “இள வாலிபனே”
youtube.com/watch?v=D8-6KuO4…
என்று அமைந்திருக்கும்.
அப்படியே ஒரு தாய்மை உணர்வுக்கு ஜிக்கியம்மாவைக் கடத்தி
“பூவோடு காற்று வந்து
புது ராகம் சொல்லித் தர”
youtube.com/watch?v=ezpM6Hyw…
என்று தர்மம் வெல்லும் படத்திலும் (இதே பாடல் இளையராஜாவின் குரலிலும் உண்டு),
இன்னொரு தாய்மை சுரக்கும் பாடலாக பங்காளி படத்திலும்”
“செல்வமே சித்திரமே பூந்தேரே”
இப்படியாக பாடகி ஜிக்கிக்கு தன்னால் இயன்ற இசைக் கெளரவத்தைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
“நீதானே என் கோயில்
உன் நாதம் என் வானில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
நினைத்தது யாரோ நீதானே.......”
பாடகி ஜிக்கி அகவை 91
❤️❤️❤️
நம் காலத்து ஜிக்கி ❤️
பதிவை எழுதியவர் : கானா பிரபா
03.11.2026
அஜித் அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவராகவே இருக்கிறார். இருந்திருக்கிறார். விஜய் அவர்களை சந்தித்து விட்டார் என்பதற்காக, முந்தைய அரசுக்கு நன்றி கூறியதை எல்லாம் இல்லை என்று சொல்லி விட முடியாது. கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.👍
💙முகவரி🎙முத்து💙 retweeted
#SathyaSaiCommunication
தீபாவளி ஆஃபர்
Charging Cable v8 or Type C 150rs
Fancy Mobile stand 80rs
Cable Protector 30rs
Ipaky Mobile Case 120rs
Customised Skin 150rs
Bluetooth Neckband 300rs
Total 830rs
ஆனா 500 ரூபாய்க்கு உங்க வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.
Contact DM
Yow... @anirudhofficial இது மாதிரி நிறைய பாட்டு போடுய்யா.!
What a song.! What a lyrics.!
👏 ❤✍🎵🎶
Excellent Edit ❤
Finally #jailer2 🙂👍📽
Perambalur LA cinemas (Ram)
#Jailer2IndustryBlockbuster
செய்தி: அதிர்ச்சியை தரும் விலைவாசி ஏற்றம். கண்டு கொள்ளாத தமிழக அரசு.
அவங்க ஆட்சிக்கு வந்து, அமைச்சர்களா ஆன அதிர்ச்சியில இருந்தே இன்னும் மீண்டு வரலையாம்.! இதுல விலைவாசி ஏற்ற அதிர்ச்சியெல்லாம் கண்டுக்கவா போறாங்க.!
வங்கி, ரேஷன் கடை ...உட்பட எந்த இடமாக ஆயினும்..
அலுவலர்கள் மூளை:
கஸ்டமர் wait பண்ணிட்டு இருப்பாங்க..சீக்கிரம் வேலைய முடிக்கணுமே.!😏
மனசாட்சி:
அட...ஏம்பா..!அதெல்லாம் ஒரு மண்ணுமில்ல.! கையில தான் உலகத்தையே வச்சுருக்காங்கல்ல.!அதுல மூழ்கி இருப்பாங்க.! Don't worry பொறுமையா பாரு.
இந்த clinic plus ஷாம்பு இப்பெல்லாம் தலைக்கு போட்டு குளிக்கும் போது அதிகமா நுரை வருதே.! எப்படிடான்னு யோசிச்சேன்.! பார்த்தீங்களா..ஆத்துல எவ்வளவு நுரை போகுது.!! இந்த சோப்பு, ஷாம்பு கம்பெனி காரனுங்க மேல எல்லாம் கேஸ் போட்டு விசாரிச்சா நல்லா இருக்கும்.! 😏















