
#MuthuSinger🎙/ரஜினி-அஜித்-ரசிகன்/இளையராஜா❤/ My dear son.. நான் வாழும் வாழ்வே..உனக்காகத் தானே..! நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே..!❤ https://www.instagram
perambalur
Joined May 2018
- Tweets64.3K
- Following7.9K
- Followers9K
- Likes158K
💙முகவரி🎙முத்து💙 retweeted
It pours as a whisper, a velvet deceit,
A borrowed oblivion, bitter and sweet.
It drinks up the daylight; one chair remains bare,
While a child sets a place for the one who's not there.
You've seen families fracture, heard promises break,
Watched the living bear grief in its merciless wake.
Yet you raise it again, knowing all that it claims,
What thirst still survives when nothing remains?
🥹🥹🥺 hope this menace might someday cease,
And leave us the lives we deserve...
💙முகவரி🎙முத்து💙 retweeted
கடந்த வார இறுதி முன் கூட்டியே சூப்பர் சிங்கர் வழியாக விழா எடுத்தது போல, இன்று பிறந்த நாளாக அமையும் ஜிக்கி அவர்களுக்கும், தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்குமாக
“ஒத்தையடிப் பாதையிலே”
பாடலோடு ஆரம்பித்தது.
“ஒத்தயடி பாதையில
ஊரு சனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா
என்னோட உசிரு,
உசிரு
வெத்தலப் போல் வாடுதம்மா
என்னோட மனசு’
youtube.com/watch?v=Cbsb8SSj…
என்று “ஆத்தா உன் கோயிலிலே” பாடலை ஜிக்கியம்மா பாடும் போது,
“ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டு
அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தைக் கண்டே
youtu.be/2LPr9Jq7rQA?si=DMii…
நம் தலைமுறைக்கு முந்திய தலைமுறைக்குப் பால்வீதியில் கைப் பிடித்து அழைத்துச் செல்லுமாற் போல இருக்கும்.
தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஜிக்கி அவர்களைப் பாட வைக்க வேண்டும் என்று கனவு கண்டிருப்பார் போல. இன்னும் சில பாடல்களிலும் அவரைப் பயன்படுத்திய வகையில்
“சின்ன முத்து” படத்தில்
சின்னமுத்து சின்னமுத்து
youtu.be/0SaaTuoWBTg?si=-5_f…
சி.எஸ்ஜெயராமன் குரலை அச்சடித்து மலேசியா வாசுதேவன் பாடவும், இணைந்து ஜிக்கிம்மா பாடியது
“பாலிருக்குது பழமிருக்குது ஸ்வாமியே”
youtu.be/32RyFT8B-gw?si=5KII…
என்று பழமையான பாடலாக “மாப்பிள்ளைத் தோழன்” படத்தில் கொடுத்திருப்பார்.
பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்
பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருபேன்
கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்.......
அனிச்சையாக வாய் முணுமுணுத்து அந்த
“நினைத்தது யாரோ நீதானே”
youtu.be/xKNziTOKFIU?si=98H5…
பாடலுக்குள் மூழ்கிவிட்டால் கரையேற ஒரு நாள் போதாது.
அப்படிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மனசு.
இம்மட்டுக்கும் ஒன்றல்ல இரண்டல்ல 34 ஆண்டுகள் கால வெள்ளத்தில் நம்மிடம் எத்தனை பாடல்கள் வந்து சேர்ந்தாலும் இந்தப் பாட்டுப் போல ஒரு கூட்டம் பாடல்கள் அப்படியே அலையடித்துக் கரையொதுக்கிய முத்துச் சிப்பி போல.
“துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்”
பாடல் எல்லாம் நம் அப்பன், அம்மை காலமென்றால் நமக்காகவே அந்த ஜிக்கியம்மாவை அழைத்து வந்து பாட வைத்தது போலவொரு பாட்டு இந்த “நினைத்தது யாரோ நீதானே”.
நினைத்தது யாரோ நீதானே" பாட்டு. அப்போது படமே வரவில்லை ஆனால் ஆறேழு மாதங்களுக்கு முன்பே எல்பி ரெக்கார்ட்டில் வந்துவிடும். இப்போது கிட்டும் பரவலான வெகுஜனத்தொடர்பு இல்லாததால் அந்த எல்பி ரெக்கார்ட்ஸ் ஐ வைத்து உள்ளூர் ரெக்கார்டிங் பார் எல்லாம் உச்ச ஒலியில் கடைவிரித்துக் கல்லா கட்டிவிடும். படம் வரும்போதும் நல்ல பப்ளிசிட்டி கிட்டிவிடும். அப்படித்தான் இந்தப் பாட்டை நான் கேட்ட அந்த கல்யாண காசெட் ஒளிபரப்பின் பின் சில நாட்களிலேயே உள்ளூர் இசைக்கூடங்களின் இதய நாதமாக மாறிவிட்டது இந்தப் பாட்டு.
தாவடிச் சந்தியில் இருந்த ரெக்கோர்டிங் பார் காரர் நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது சொல்லி வைத்தாற்போல இந்தப் பாட்டைப் போடுவார். வேடிக்கை பார்ப்பது போல சீன் போட்டு ஐந்து நிமிடத்தைக் கடத்துவேன். அப்போதெல்லாம் கைக்காசைப் போட்டுப் பாட்டுக் கேட்டால் செவிப்பறையில் வந்து விழும் அடி என்பதும் நான் அறிந்ததே.
பின்னர் மெல்ல மெல்ல உள்ளூர் நாதஸ்வரக்காரரின் பெருவிருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்றாகி, சுவாமி வீதி வலம் வடக்கு வீதியில் வரும் போது மனோ, ஜிக்கியாக நாதஸ்வரத்தின் குரல் மாறி விடும். எனக்கு இந்தப் பாட்டை அடிக்கடி தீனி போட்ட பெருமை சென்னை வானொலியைச் சாரும். யாழ்ப்பாணத்தில் இருந்து றேடியோவை மயக்கி சென்னை அலைவரிசை தொட்டால் நாலு மணிக்கு நேயர் விருப்பம். அதில் லல்லு , சத்யா, ரேவதி என்று யார் யாரோவெல்லாம் பாட்டுக் கேட்பார்கள், யாராவது ஒருவர் இந்தப் பாட்டைக் கேட்பார். பதின்ம வயது கடந்து ஆதலினால் காதல் செய்த பருவத்திலும் கொண்டாடிய பாட்டு. இப்போது கேட்டாலும் எனக்கான பாட்டு.
பாடகி ஜிக்கி அவர்கள் தனது கணவரும் பாடகர் சக இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜாவின் இசை கடந்து பல்வேறு ஆளுமைப்பட்ட இசையமைப்பாளர்களிடம் பாடியிருந்தாலும்,
நம் காலத்து இசைஞானி இளையராஜா காலத்திலும், தேனிசைத் தென்றல் தேவா இசையிலும் பாடியது ஒரு முத்தாய்ப்பு.
“பாக்கு வெத்திலை” படத்தில் மலேசியா வாசுதேவன் இசையில்
“அந்த ராமனும்”
youtu.be/f4nOA-lmyjk?si=0kkm…
என்ற அற்புதமான பாடல் பாடியிருக்கிறார்.
சங்கர் கணேஷ் இரட்டையர் இசையில் ஏ.எம்.ராஜா & ஜிக்கி பாடிய
செந்தாமரையே செந்தேன் இதழே”
youtu.be/-5_0phIzoaE?si=V-39…
போன்று அதே காலத்தில் புதுமையாக ஐந்து இசையமைப்பாளர்கள் தனித்தனிப் பாடல்களோடு விளைந்த “கண்ணில் தெரியும் கதைகள்” படத்தின்
“நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்னை நெனைச்சே”
youtu.be/6qNrNX67sYw?si=coJL…
பாடலை சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராமுடன் ஜிக்கியம்மா பாடியதும் நம் தொட்டில் காலத்தில் கேட்டுப் பழக்கிய பாடல்கள்.
ஆபாவாணன் ஒரு புதுமை விரும்பி, அவரின் பாசறையில் கியான் வர்மா இசையில் “அண்ணன் என்னடா தம்பி என்னடா” படத்தில் ஜிக்கியும், ஜமுனாராணியும் இணைந்து பாடிய பாடல்
இரவு நாடகம்
youtu.be/hjV9cgKS04w?si=dj4d…
ஞானதேவன் இசையில் மலேசியா வாசுதேவனோடு, ஜிக்கி பாடிய இன்னொன்று “முதல் மனைவி” படத்தில் அமைந்த
கோலம் போடும்
youtu.be/FLlHTT9GwhI?si=T4yt…
இசைஞானி இளையராஜாவும் நமக்கெல்லாம் பழக்கப்பட்ட “நினைத்து யாரோ நீதானே” பாடலுக்கு முன்பே “வட்டத்துக்குள் சதுரம்” படத்தில் பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் அற்புதமானதொரு பாடலை ஈன்றிருக்கிறார். ஜிக்கியம்மா தனித்துப் பாடும் அந்தப் பாட்டு
“காதலெனும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமே வருவாய்....
youtu.be/VyduPdwLB74?si=TM13…
இதுவரை கேட்காதவர்கள் இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்தப் பாடலைக் கேட்டு விட்டு வாருங்கள். எவ்வளவு அற்புதமான தேவார்தம் என்று புரியும். பதிவை எழுதியவர் : கானா பிரபா
“காதலெனும் காவியம்” பாடலின் தாளக் கட்டைக் கொஞ்சம் வேகம் பூட்டி ஒரு பாட்டு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்துப் பல்லாண்டுகளுக்குப் பின் வெளிவருகின்றது. அதுதான்
“வண்ண வண்ணச் சொல்லெடுத்து
வந்தது செந்தமிழ்ப் பாட்டு”
youtu.be/g4bNmo_TJvs?si=rcRR…
படத்திலும் ஒரு பாடகிக்கான குரலாகக் கெளரவம் பூணும் ஜிக்கி குரல், அந்தப் படம் எம்.எஸ்.வியின் குடும்பத் தயாரிப்பு என்பதும் இன்னொரு விசேஷம்.
இசைஞானி இளையராஜாவும் இன்னும் இன்னும் பாடல்களைக் கொடுத்து அழகு பார்த்தவர்.
“தாயம் ஒண்ணு” படத்தில்
“ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூங்கரம் நீட்டு ராஜா”
youtu.be/nLW2bCiUAAQ?si=YXxa…
என்று சில்க் ஸ்மிதாவின் விரகதாபப் பாடலுக்குப் பொருத்திப் பார்த்தவர் விட்டாரா என்ன?
அதே சில்க்குக்கு கிருஷ்ணதேவராயர் காலத்து 16 ஆம் நூற்றாண்டு காலத்துப் பாட்டுக்கும் ஜிக்கியை இணைத்துக் கொடுத்தார்.
அது தெலுங்கிலும், தமிழிலும் ஜிக்கியம்மாவே பாடிச் சிறப்பித்த பாட்டு. இறுதியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா கூட இணைந்து பாடியிருக்கும் அந்தப் பாட்டைக் கேட்டால் ஐம்பதுகளுக்குப் போய் ராஜா இசைத்தது போலிருக்கும்.
தெலுங்கில் “Jaanavule”
youtube.com/watch?v=xisd-3n8…
தமிழில் “இள வாலிபனே”
youtube.com/watch?v=D8-6KuO4…
என்று அமைந்திருக்கும்.
அப்படியே ஒரு தாய்மை உணர்வுக்கு ஜிக்கியம்மாவைக் கடத்தி
“பூவோடு காற்று வந்து
புது ராகம் சொல்லித் தர”
youtube.com/watch?v=ezpM6Hyw…
என்று தர்மம் வெல்லும் படத்திலும் (இதே பாடல் இளையராஜாவின் குரலிலும் உண்டு),
இன்னொரு தாய்மை சுரக்கும் பாடலாக பங்காளி படத்திலும்”
“செல்வமே சித்திரமே பூந்தேரே”
இப்படியாக பாடகி ஜிக்கிக்கு தன்னால் இயன்ற இசைக் கெளரவத்தைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
“நீதானே என் கோயில்
உன் நாதம் என் வானில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
நினைத்தது யாரோ நீதானே.......”
பாடகி ஜிக்கி அகவை 91
❤️❤️❤️
நம் காலத்து ஜிக்கி ❤️
பதிவை எழுதியவர் : கானா பிரபா
03.11.2026
💙முகவரி🎙முத்து💙 retweeted
#SathyaSaiCommunication
தீபாவளி ஆஃபர்
Charging Cable v8 or Type C 150rs
Fancy Mobile stand 80rs
Cable Protector 30rs
Ipaky Mobile Case 120rs
Customised Skin 150rs
Bluetooth Neckband 300rs
Total 830rs
ஆனா 500 ரூபாய்க்கு உங்க வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.
Contact DM
💙முகவரி🎙முத்து💙 retweeted
“புன்னகைக்கு நேரம் ஒதுக்கு”
தன்னுடைய பாடக அனுபவத்தில் மிகக் கஷ்டமான பாட்டாக சரண் குறிப்பிட்டது இந்தப் பாடலைத் தான்.
இந்தப் பாடலுக்கு சரணைத் தேர்ந்தெடுக்க ஏதும் ஸ்பெஷல் காரணம் இருக்கிறதா?
என்ற கேள்வியை “தேனிசைத் தென்றல்” தேவா கடந்த ஆண்டு சிட்னியில் நிகழ்த்திய இசை நிகழ்வுக்கு முன்னதான ஊடகர் சந்திப்பில் கேட்டேன்.
அப்போது அருகே இருந்த சரண் என் கூற்றை ஆமோதித்து,
“இந்த மாதிரிப் பாடல்களை எனக்குக் கொடுத்து, என் மேல் நம்பிக்கை வச்ச தேவா சாருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கிறேன்”
என்று தேவாவை நன்றி பாராட்டினார்.
“காதல் சடுகுடு” (அலைபாயுதே) பாடலை ரஹ்மான் சார் இசையில் பாடிவிட்டேன், இனி வாய்ப்புகள் குவியப் போகுது என்று நினைத்த எனக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நேரத்தில் இந்த “புன்னகைக்கு நேரம் ஒதுக்கு” பாடல் வந்தது என்று ஒரு பேட்டியில் எஸ்.பி.சரண் சொல்லி இருப்பார்.
மிகுந்த இசை ரசனையுள்ள இயக்குநர் வஸந்த் முன்பே கவிதாலயாவுக்காக “நீ பாதி நான் பாதி” படத்தை இயக்கியவர் பல்லாண்டுகள் கழித்து “அப்பு” படத்தோடு இணைந்தார்.
ஆசை, நேருக்கு நேர் படங்கள் தேவா - வஸந்த் வெற்றிக் கூட்டணியைப் பறை சாற்றும். அண்ணாமலை பாடல் பதிவு இயக்குநர் வஸந்த் உடன் தான் செய்தது என்று தேவா பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ரெக்கை கட்டி பாடல் தன்னுடன் என்றார் சுரேஷ் கிருஷ்ணா.
“புன்னகைக்கு நேரம் ஒதுக்கு”
youtu.be/HbaP-6PHgpg?si=hZyd…
சரண் உடன் சுக்விந்தர் சிங், அனுபமா இணைந்து பாடிய அட்டகாஷ் பாட்டு.
இன்னொரு பக்கம் சங்கர் மகாதேவனும், உன்னி கிருஷ்ணனும் ஜோடி போட்டு
“வாடா வா”
youtu.be/zQFfRLpRKyQ?si=QrzO…
என்று ரகளையான இன்னொன்று.
இதெல்லாம் வானொலியில் CD தேயத் தேய ஒலிபரப்பியது.
உன்னிகிருஷ்ணன், ஷாலினி ஜோடி குரல்கள் “இடம் தருவாயா”
youtu.be/FIp3Wc7_TIA?si=gU25…
ஹரிணி, ஹரிஹரன் கூட்டணியில்
“நினைத்தால் நெஞ்சுக்குழி”
youtu.be/5rNoPjcwTpI?si=blIu…
ஹரிஹரன் & அனுராதா ஶ்ரீராம் தந்த
“கொய்லா”
youtu.be/6j3KaNbjM1o?si=IfuF…
என்று இந்த தேவா , வைரமுத்து, வஸந்த் வெற்றிக் கூட்டணியை மீண்டும் நிரூபித்தது.
26 வருடங்களுக்கு முன் மெல்பர்னில் இருந்து சிட்னிக்கு இடம் மாறும் சூழல் நேர்ந்த போது பிரிய மனமில்லாமல் விடைபெற்ற காலத்தில், Carnegie என்ற இடத்தில் புது இந்திய மளிகைக் கடையில் இந்த இசைப் பேழையை வாங்கினேன்.
26 வருடங்களாக என் பொக்கிஷங்களில் ஒன்றாக.
கானா பிரபா
24.10.2026
💙முகவரி🎙முத்து💙 retweeted
அவர் ஒரு அறிமுக இயக்குநர்
இவர் ஒரு அறிமுகப் பாடகர்
இருவருக்குமான முதல் வாய்ப்பு, பாடல் பதிவாகிறது, ஆனால் படமோ முடங்கிப் போகிறது.
அவர் அகத்தியன் என்ற இயக்குநர், இவர் கிருஷ்ணராஜ் என்ற பாடகர்.
இசையமைப்பாளர் தேவா அறிமுகத்தில் அவரிடம் பக்திப் பாடல்கள் பாடியவருக்குத் திரைப்படப் பாடல் வாய்ப்பு வாய்க்கிறது, சரத்குமார் நடிப்பில் அகத்தியன் இயக்கவிருந்த, “அதிகாலை சுபவேளை” படத்தில் இடம்பெற்ற
“உன்ன நான் தொட்டதுக்கு”
youtu.be/vz3I-8kMk10?si=YQzr…
பாடல் வழியாக. ஆனால் அந்தப் படம் வெளிவராமல் முடங்கிப் போனது.
இந்தப் பாடல் பின்னர் SPB பாடிய “ஊர்மரியாதை” படத்தில் வெளிவந்தது
youtu.be/eap91tjwFQI?si=Vl7e…
பாருங்கள் அப்பவே கிருஷ்ணராஜ் பாடிய பாடல் இன்னொருவருக்குப் போயிருக்கிறது. பின்னாளில் நலம் நலமறிய ஆவல் பாடலுக்கும் இப்படித்தானே நேர்ந்தது.
பின்னாளில் இதே அகத்தியன் இயக்கிய “காதல் கோட்டை” படம் “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” பாடல் வழி பாடகர் கிருஷ்ணராஜுக்குப் பெரும் புகழ், இருவருக்கும் மறுவாழ்வு அளித்தது வரலாறு.
வேம்படிதாளம் என்ற ஊரில் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர்.
உள்ளூர் இசைக்கச்சேரிகளில் பாடி வந்தவருக்கு ஒரு சமயம் பாடல் போட்டியில் முதற் பரிசு கிடைக்கிறது. அந்தப் பரிசைக் கொடுத்தவர் பிரபல இசையமைப்பாளர் வி.குமார்.
அப்போது தான் முழுமையான பாடகராக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் கிளர்கின்றது. இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா
தமிழ் நாடு இசைக்கல்லூரியில் முறையாக இசை பயின்று, “சங்கீத வித்துவான்” பட்டத்தை மட்டுமல்ல, முதல் மாணவர் என்ற உன்னதத்தைத் தொட்டதால் அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பதக்கம் வழங்கிக் கெளரவித்தார்.
தமிழ்த் திரைப்பட உலகில் அவருக்குத் திறவுகோலாய் அமைந்தது, இசையமைப்பாளர் ஆர்.ராமானுஜன் அவர்களுடனான அறிமுகம். அவரிடமேயே முதல் பாட்டு பாடியிருக்கிறார். அந்த சமயம், விளம்பரப் பாடல்கள், பக்திப் பாடல்களைப் பாடல்கள் என்று தொடர்கிறார்.
அது சரி
யார் அந்த ராஜன் சக்ரவர்த்தி?
அதுவும் இவர் தான்.
“ வா அருகில் வா” திரைப்படத்தில்
சாணக்யா இசையில்
இதயக் கோயிலில்
youtu.be/-7_6Wk28kAs?si=Jk03…
பொன்னுமணி பூச்சரமே
youtu.be/-VchU84LUqw?si=qP0g…
ஆகிய இரு பாடல்கள் வழியாக அறிமுகமாகிறார்.
தேவாவின் இசையில் ராஜன் சக்ரவர்த்தி என்ற பெயரிலேயே,
அம்மா தானம்மா - மண்ணுக்கேத்த மைந்தன்
youtu.be/1Mm7T6_lus8?si=6Ozy…
மாலைக் கருக்கல் வந்து - நாடோடிக் காதல்
youtu.be/NHuh1EoSrAE?si=M6hA…
வைகாசி பொறந்தாச்சு படத்தில் “வாழை மரம்” பாடல்,
அண்ணாமலை அண்ணாமலை (மாங்கல்யம் தந்துனானே)
youtu.be/I59WC79Cfrs?si=XsH0…
மேலும் “வாயாடி” என்ற இன்னொரு பாடல். “வைதேகி கல்யாணம்” படத்தில்
ஆலமரத்தடி” என்று பாடிக் கொண்டே பயணித்தாலும் பெரிய அடையாளம் இவருக்கு வாய்க்கவில்லை.
“அறிமுகம் கிருஷ்ணராஜ்”
என்று தேவா இசையில் ஆனந்த ராஜ் நடித்த, மணிவண்ணன் இயக்கிய “கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை” படம் இவருக்கு இன்னொரு தடவை அறிமுகம் கொடுக்கிறது.
தேனிசைத் தென்றல் தேவாவின் பாசறையில் track பாடகர் மட்டுமல்ல, பாட்டுச் சொல்லிக் கொடுப்பவரே இவர் தான் என்று இயங்கினார்.இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா
தன்னுடைய முதல் பாடலை அகத்தியனுக்குப் பாடி, படம் வெளிவராமல் இருந்ததோ அதே அகத்தியனின் “காதல் கோட்டை” வழியாக “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” இவருக்குப் பெரிய புகழைக் கொடுக்கிறது.
பிறகென்ன ஏறுமுகம் தான்.
ராஜன் சக்ரவர்த்தி என்று
ரஜினி புகழ் பாடல்கள்
youtu.be/bRed4MvIV2E?si=3nm2…
என்ற தனிப்பாடல் தொகுப்பில் பாடியவர் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே பாடுவேன் என்று நினைத்திருப்பாரா?
“நகுமோ” பாடலை track பாடியவர், ஹரிஹரன் பாடிய இன்னொரு வடிவமும் பதிவாகியது. ஆனால் ரஜினி தேர்ந்தெடுத்தது கிருஷ்ணராஜ் பாடியதையே.
கிருஷ்ணராஜ் பாடிய எண்ணற்ற புகழ்பூத்த பாடல்களில், நான் அடிக்கடி விரும்பிக் கேட்பவை ஐந்து
தேவா இசையில்
“உன்னருகே நான் இருந்தால்”
youtu.be/xranbNagWoU?si=m4FA…
இதயம் இதயம் இணைகிறதே
youtu.be/SVT_HaaVyA4?si=JBtf…
“ஜனவரி நிலவே நலம் தானா”
youtu.be/8snzPlRDKjc?si=_6rI…
யுவன் ஷங்கர் ராஜா இசையில்
“ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்”
youtu.be/nXIU8aiB-NM?si=_tPD…
“ஐயய்யோ”
youtu.be/uS8Z4nLJ53I?si=O06j…
இவரின் பிரிவுச் செய்தியைக் கேட்ட கணம் “நீ பார்த்துட்டுப் போனாலும்”
youtu.be/DsWdEBZf4Fk?si=PJYU…
பாடல் தான் மனசுக்குள் ஓடியது.
கிருஷ்ணராஜ் மகளின் அறிமுகம் கிட்டியதும் அகத்தியன் படத்தில் தான். தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஜீவரேகா, கார்த்திக் உடன் இணைந்து “ஓவெண்புறா ஒன்று” பாடலைப் பாடியிருக்கிறார்.
தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலைக் கூட கிராமியப் பண் பாடும் பாடகருக்காக கிருஷ்ணராஜ் பாடிய ஒத்திகைப் பாடல் தானாம். ரோஜா கம்பைன்ஸ் ஒட்டுமொத்தமாக இதை ஆதரிக்க இதுவே இறுதியானது தான் பின்னாளில் சரித்திரம் படைத்தது.
சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் வாழும் காலத்திலேயே அவர் முன்னால் “தேனிசைத் தென்றல்” தேவாவின் தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடி அவரிடம் பாராட்டுப் பெற்றவர்.
எஸ்.ஆர்.நாதனுக்குப் பிரியாவிடை கொடுத்த பாட்டைப் பாடிய இருவரும் பிரியாவிடை கொடுத்து விட்டனர்.
கானா பிரபா
23.10.2026
💙முகவரி🎙முத்து💙 retweeted
பாடகர் கிருஷ்ணராஜ் ஐ சில மாதங்களுக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேசியிருந்தேன்.
ஈழத்தமிழர் என்று அறிந்ததும்
“அட எங்க ஆள்” என்று அவர் தனக்கு நெருக்கமாக என்னை வைத்துக் கொண்டதைக் கேட்டு நெகிழ்ந்து போனேன்.
இசையமைப்பாளர் ராமானுஜம் அவர்களிடம் கிருஷ்ணராஜ் உதவி இசையமைப்பாளராக இருந்த அனுபவத்தை அப்போது கேட்டேன்.
உங்களிடம் ஒரு விரிவான வானொலிப் பேட்டி செய்ய வேண்டும் என்றதும்,
“கண்டிப்பாக, மிக்க மகிழ்ச்சி” என்று விடை கொடுத்தார்.
நமக்கு நெருக்கமான நல்ல மனிதர்கள் ஏன் என்று இப்படித் திடீரென்று மறைகிறார்கள் என்று இன்றும் என்னுள் கேட்டேன்.
மன்னிப்பவன் தான் மனிதன்
மன்னித்து
மறப்பவன் மனித தெய்வம் ❤️
youtu.be/EX5ZS132Z4k?si=DzBk…
ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அவரை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்தப் பாட்டு. பாடகர் கிருஷ்ணராஜ் தன் வாழ்வில் நடந்த நெகிழ வைக்கும் நிகழ்வைக் கூறிப் பாடுவதை இங்கு பகிரும் காணொளியில் கேட்கலாம்.
தனிப்பட்ட ரீதியில் என்னுடைய சுபாவம் என்னவெனில் ஒருவர் ஏற்படுத்திய மனக்காயத்தைப் பொறுத்தே மன்னிப்பைக் கொடுப்பேன். ஒருவர் விளைவிக்கும் கஷ்டத்தால் வீணான மன உளைச்சல் வரும் போது அதனால் தேவையற்ற விளக்க நியாயங்களைப் பேசுவதும், விதண்டாவாதம் புரிவதிலும் எங்கள் பெறுமதியான நேரத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறோம். அப்படியானவருக்கு என் அகராதியில் மன்னிப்பே இல்லை. குறித்த நபரைப் புறக்கணிப்பது தான் அவருக்குக் கொடுக்கும் ஆகச் சிறந்த தண்டனை.
எங்கள் இனத்துக்குத் துரோகம் செய்தவர்களை எப்படி மன்னிக்க?
அதே சமயம் பிரச்சனை இரண்டு பக்கமும் இருக்கிறது அல்லது தவறான புரிதல் ஏற்பட்டதென்றால் நானே முன் சென்று அவர் வயதில் மூத்தவரோ அல்லது இளையவரோ மன்னிப்புக் கேட்டிருக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன் காலை வேளை இந்தப் பாடலை முதன் முறையாகக் கேட்ட போது நெக்குருகினேன். அரை மணி நேரம் வேறெந்தப் பாட்டையும் கேட்டுவிடாதபடி செய்து விட்டது. உள் மன விசாரணையும் செய்து பார்த்தது.
குறித்த மதத்துக்கான பாடலன்றிப் பொதுவில் ஏற்க வேண்டியது இப்பாட்டு.
சகோதரர் கிருஷ்ணராஜ் ஆன்மா சாந்தியடையட்டும்.
கானா பிரபா
22.10.2026
💙முகவரி🎙முத்து💙 retweeted
90 களில் ஒரு வித்தியாசமான கூட்டணி நிகழ்ந்தது. இயக்குநர் P.வாசுவின் கதையை கே.எஸ்.ரவிகுமார் இயக்குவார். கே.பாக்யராஜை தன்னுடைய நாயகனாக்கி இயக்குவார் P.வாசு.
இந்த இரண்டு வித்தியாசமான கூட்டணியிலும் பொதுவாக இருந்த இருவரில் ஒருவர் குஷ்பு, இன்னொருவர் தேவா.
செம்பட்டுப்பூவே
வெண்மொட்டுத்தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே..
பொன் மொட்டு மானே
பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே..
youtu.be/AScsdiUGgUY?si=ePW9…
இலங்கையின் பண்பலை வானொலிகளில் பொற்காலத்தில் அந்தந்த வானொலி நேயர்கள் மட்டுமல்ல, வானொலிப் படைப்பாளர்களாக இருந்தவர்களுக்கும் கூட இந்தப் பாடலைக் கேட்டால் உச்சி குளிர்ந்து விடும், கண்கள் பூத்து விடும்.
“புருஷ லட்சணம்” படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் தேனிசைத் தென்றல் தேவா இசையில் SPB முழுமையாக ஆக்கிரமித்து, சின்னக் குயிலுக்கும் இடம் கொடுத்த அற்புதமான பாடல்.
புருஷ லட்சணம் படம் பி.வாசு கதையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஜெயராம் & குஷ்பு அந்தக் காலத்தில் ஜோடி போட்டு நடித்த வெற்றிச் சித்திரங்களில் ஒன்று.
“ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன்”
youtu.be/-P9xW2c0owc?si=RdPO…
பாடலில் அம்மன் பெயர்களை நிரலிட்டு எழுதிய
கவிஞர் காளிதாசனை மறக்காமல் இன்னும் வைத்திருக்கிறது.
இப்படிப் பக்தி மயமான சித்ராவுக்கு இன்னொரு ரகளையான பாட்டாக
“அண்ணாசாலை”
ஈழத்தில் இருந்து இந்தப் பாடலைக் கேட்ட போது சென்னையில் ஃபேமசான றோட்டாம் என்று நண்பர்களுக்குள் பேசிக் கொள்வோம். 😁
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா”
youtu.be/9Sd3l945lBE?si=WHRs…
எஸ்பிபி & சித்ரா கூட்டணியில் அற்புதங்களில் ஒன்று. இந்தப் படம் தெலுங்குக்குப் போன போது இந்த மெட்டையும் தேவா பயன்படுத்திக் கொண்டார், ஆனால் “செம்பட்டுப் பூவே” பாடலுக்குப் பதில் வேறொன்று. ஆகவே செம்பட்டு நமக்கு மட்டுமேயானது என்று பெருமையடித்துக் கொள்ளலாம் 😊
ஜெயராம், குஷ்பு பற்றிச் சொல்லும் போது அவர்கள் ஜோடி கட்டிய இன்னொரு படமான “மனசு ரெண்டும் புதுசு” படம் கூட மலையாள இயக்குநர் லோகிததாஸின் மூலகதையை எடுத்து அமிர்தம் இயக்கியது.
இதில் “சோளிக்கே பீச்சே”
youtu.be/K0Ei4lHF6aM?si=Ehi6…
பாடலைத் தமிழுக்குத் தருவித்திருப்பார் தேவா.
“சொர்க்கத்தில் அம்மா”
இந்தப் பெயரில் தான் முதலில் உருவானது பி.வாசு கதை, திரைக்கதை, வசனம் எழுத, திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் நடித்த “அம்மா வந்தாச்சு”
“நந்தினி நந்தினி ஓ நந்தினி”
youtu.be/wZ_XzaEw0LI?si=EA8p…
மனோகரமான பாட்டு ❤️
“உனக்கொரு தாயிருக்கா”
youtu.be/6poxe3BY-Ak?si=ZgYc…
சோக ராகம் பாடும்.
“தினத்தந்தி பேப்பரில”
youtu.be/M6_y3gxZLTY?si=gxqA…
அந்தக் காலத்தில் ஹிட் அடித்த ஒன்று.
“இது உனக்காகப் பாடும் ராகம்”
youtu.be/2UUBcfsalsE?si=60S5…
SPB, சுசீலாம்மா, சித்ரா இணைந்த வித்தியாசமான பாட்டு.
“அம்மா வந்தாச்சு” படத்தை கே.பாக்யராஜின் பூர்ணிமா தயாரிப்பில், பாக்யராஜ், குஷ்பு, ஶ்ரீதேவி விஜயகுமார் நடித்திருந்தார்கள்.
பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுத, தேனிசைத் தென்றல் தேவா இன்னிசை வழங்கினார்.
இந்த மாதிரி வித்தியாசமான இயக்குநர் கூட்டணி என்று சொல்லும் போது, இயக்குநர் அகத்தியன் கதையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய “பொண்டாட்டி ராஜ்யம்” குறிப்பிட வேண்டிய ஒன்று.
“அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே”
youtu.be/D_vXZ2SHmUU?si=SGt_…
என்னவொரு தேனிசைத் தென்றல்
“பொண்டாட்டி ராஜ்ஜியம் தான் நடக்குது”
youtu.be/HTNnr_Cg7nQ?si=iD2D…
SPB மிரட்டுவார் இப்படி “தண்டால் எடுங்கடா”
youtu.be/IKwZju7NqAA?si=DU9r…
முன்பே “அதிகாலை சுபவேளை” படத்துக்குக் கொடுத்து அங்கே பயன்படாமல், அதாவது அந்தப் படமே வராமல் இடம் மாறிய
“ராகம் ஒன்று சுகமானது”
youtu.be/0QaJCsolfFg?si=QQ0G…
கேட்டால் சொர்க்க லோகமானது ❤️
சரவணனைக் கச்சிதமான குடும்பத் தலைவராகக் காட்டி ஜனரஞ்சக அந்தஸ்துக் கொடுத்தது “பொண்டாட்டி ராஜ்ஜியம்”
பின்னாளில் சரவணன் இயக்குநர் அகத்தியனிடம் வேண்டி வாங்கிக் கொண்ட கதை “சந்தோஷம்” ஆனது.
அட இங்கேயும் தேனிசைத் தென்றல் தேவா தான்.
இந்தப் படத்தில்
“சாமியே ஐயப்பா”
youtu.be/gaKvxng8JXg?si=g8fa…
தேவா குழுவினர் பாடும் பாடலும்,
சேதுமாதவா உன்னைச் சேர்த்து அணைக்கவா
youtu.be/E8pQMjo31sA?si=3b_3…
உன்னிகிருஷ்ணன், அனுராதா ஶ்ரீராம் குரல்களிலும் இனிக்கும்.
கானா பிரபா
22.10.2026
💙முகவரி🎙முத்து💙 retweeted
சத்ய சாய் ஆயுத பூஜை விஜயதசமி ஆஃபர் Sisko Brand Jazz model Bluetooth Speaker 20w
Good sound and good bass
normal price 900rs but now just 550rs delivery all over Tamil Nadu available.
For this delivery charges 50rs.
For more details
#SathyaSaiCommunication
💙முகவரி🎙முத்து💙 retweeted
கவியரசு கண்ணதாசன் வரிகளில் இசைஞானி கொடுத்த
தேவன் தந்த வீணை ❤️ பாடல் பிறந்த கதை ✍️
🎙️ கானா பிரபா கதைக்கிறேன்
#sjanaki #spb #Ilaiyaraaja #Kannadasan #kanapraba
💙முகவரி🎙முத்து💙 retweeted
#Jailer2 படத்துக்கு நிறைய ரிவ்யூ வந்திருக்கு
ஆனா,@Saattaidurai சொன்ன வார்த்தைதான் மனசை ரொம்பவே நெகிழவச்சுது..
"ரஜினிக்கு ஒரு மகன் இருந்து அவர் ரஜினியை இயக்கியிருந்தா .. அந்த மாதிரி நெல்சன் பார்த்து பார்த்து பண்ணிருக்கார்"
@Nelsondilpkumar
#Jailer2
#Jailer2Blockbuster
💙முகவரி🎙முத்து💙 retweeted
தமது ஐம்பது வருடப் பயணத்தில் இருவருமே இன்று மீளவும் நிரூபித்திருக்கிறார்கள் ❤️
எல்லாவற்றுக்கும் ஒரே தாரக மந்திரம்
உழைப்பு
உழைப்பு
உழைப்பு
எப்பவும் நீங்க ராஜா ❤️❤️❤️
#Rajinikanth #Ilaiyaraaja
💙முகவரி🎙முத்து💙 retweeted
சிறையில் சில
இளையராஜா பாடல்கள் ❤️
🎙️ கானா பிரபா கதைக்கிறேன்
#ilaiyaraaja #kanapraba
💙முகவரி🎙முத்து💙 retweeted
#Trenchified With pure #Rajinism ..
What a screen presence 😎😎 and fiery performance 🔥🔥 from #Thalaivar.
Pure goosebumps 🥰🥰.
Royal salute 🫡🫡to Nelson for delivering this mass monster .
#Jailer2
💙முகவரி🎙முத்து💙 retweeted
நண்பர்களே ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைக்கு உங்கள் அலுவலகம் கம்பெனி கல்லூரிகளில் சக ஊழியர்களுக்கு பரிசு கொடுக்க என்ன இருந்தால் நம்ம சத்யசாய் கம்யூனிகேஷனில் Mobile Accessories தரமாகவும் குறைந்த விலையும் கொடுக்கிறோம் மேலும் விவரங்களுக்கு
DM தொடர்பு கொள்ளவும்
#Sathyasaicommunication
💙முகவரி🎙முத்து💙 retweeted
இந்த வீடியோ 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது...அதாவது அஜித் அவர்களும் அவரது சமகால நடிகரான விஜயும் ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டது...இது அஜித் விஜயின் படங்களில் ஒவ்வொருக்கொருவர் மாற்றி மாற்றி சண்டைப் போட்டுக் கொண்ட படங்களுக்கு பிறகு நடந்த விழா...
இந்த நேரங்களில் இவர்கள் சேர்ந்தபோது யாரும் அஜித் அவர்களை யாரும் வசைபாடவில்லை ..நாங்கள் இருவரும் தொழில் முறை போட்டியாளர்களே தவிர எதிரிகள் கிடையாது என்று 2007 பில்லா பத்திரிகை சந்திப்பிலும், 2011 மங்காத்தா படப்பிடிப்பிலும் இருவரும் , விஜய் கைகடிகாரமும் அன்பளிப்பாகவும் வழங்கினார் ..என்பதே நிதர்சனம்..
அப்போதும் யாரும் வசைபாடவில்லை...
அதன் பிறகு விஜய் முன்னேற்றமும் அஜித் அவர்களின் முன்னேற்றமும் வேறு வேறு திசைகளாக இருந்தன.
மேலும் அஜித் அவர்களது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களையும் , ரசிகர்களையும் வசைப்பாடாதீர்கள் என்றும் அறிவித்ததிருந்தார்..அதை எத்தனைப் பேர் கேட்டு நடந்தோம்..
ஒரு உண்மையான ரசிகனுக்கு அவரது பார்வையில் இருந்து பார்த்திருந்தால் அவரின் எண்ணம் நிச்சயமாக தெரிந்திருக்கும்.
கார் பந்தயத்தை காண , அஜித் அவர்கள் மற்ற சக நடிகர்களான மாதவன், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், நயன்தாரா, அனிருத், ஜீ வி , எப்படி அழைத்திருந்தாரோ அந்த எண்ணத்தோடு சக நடிகரும் முதலமைச்சரான விஜயை அழைத்திருப்பாரே தவிர... உங்கள் எண்ணோட்டத்திற்கு அவர் காரணமாக மாட்டார்..அவருக்கு சினிமாவை விட அவரது லட்சியமான கார் பந்தயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக ஆதரவாளர்களை தேடுவாரே தவிர ...அவரது ரசிகர்களை சுயநலத்திற்காக பயன் படுத்தமாட்டார்...
அவரும் சில தவறுகள் செய்திருப்பார் , செய்தார் காரணம் அவரின் முடிவுகள் அனைத்தும் அவருடையதே அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் தோல்வியும் சந்தித்து இருக்கிறார் ...அவரை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமலும் விலகாமலும் இருப்பவனே உண்மையான ரசிகன்...
இதை புரிந்து கொள்ளுங்கள் இல்லையேல் விலகிக் கொள்ளுங்கள்...ஆனால் அவரின் புகைப்படம் வைத்துக்கொண்டு அவரைத் திட்டுவதால் , கேலிப்பேச்சு பேசுவதால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை...
அவரின் திரைப்படங்கள் சரியில்லை என்றால் விமர்சனம் செய்ய முழு உரிமை உண்டு...ஆனால் உனக்கு ஏற்றார் போல் அவர் இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்...
அவரை பிடித்தால் ரசியுங்கள்
இல்லையெனில் விலகுங்கள்...இதும் அவர் சொன்ன வார்த்தைதான்...
வாழு வாழ விடு 💜
இல்லனா ஆல வுடு 🫠
#AjithKumar
💙முகவரி🎙முத்து💙 retweeted
புலவர் புலமைப்பித்தன் 91
💚💚💚
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் ஓதும் ❤️❤️❤️
கோபுர வாசலில் நின்று மேல் நோக்கிப் பார்த்தால் அந்தக் கோபுர சித்திர வேலைப்பாடுகளில் மிளிரும் சிற்பப் பாவைகளில் பொதிந்திருக்கும் கலை நயத்தைத் தாண்டி அவற்றின் செயற்பாட்டில் வாத்சாயனரின் காம சூத்திரம் பாடமெடுக்கும்.
கோயிலின் கருவறையில் ஆண்டவனைத் தரிசிக்கும் முன்பே இன்பம் கடந்த பேரின்பப் பெருவாழ்வுக்கான கடைசி நிறுத்தமாக அது பிரதிபலிக்கும்.
அறத்தின் வழியே பொருளை ஈட்டி, இன்பம் சுகித்து வீடு பேறாம் முத்தியை அடையும் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பொருளைக் கற்பிக்கும் இந்து சமய நெறியில் இன்பம் சுகித்த பின் நாடும் முத்தி நெறி அது.
இந்த “மந்திரம் இது” பாடலை ஒரு காலத்தில் பொருளை ஆழ ஊன்றிக் கேட்காமல் அது கொடுத்த ஆன்மிக இசையிலேயே மூழ்கித் திளைப்பேன். ஆனால் வேடிக்கையாக ஒரு சம்பவம் நடந்தது. பல வருடங்களுக்கு முன் வானொலி நிகழ்ச்சி படைக்கும் போது இந்தப் பாடலை ஒலிபரப்பிய கணம் தொலைபேசி அழைப்பொன்று வருகிறது. மறுமுனையில் ஒரு நேயர் “என்ன விரசமான பாட்டெல்லாம் ஒலிபரப்புகிறீர்கள்?” என்று கேட்ட பின்பு தான் இந்தப் பாடலின் தன்மையே புரிந்தது. அதன் பின் “ஆவாரம் பூ” படம் பார்க்கும் போது இன்னும் தெளிவாகவே அர்த்தம் கொடுத்தது. ஆனால் என்னளவில் இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் ஒரு இறை பக்தி நிலைக்குப் போய் விடுவேன். அதாவது கோபுரம் நோக்கிக் கூப்பித் தொழும் இரு கரங்களாய்.
புலவர் புலமைப்பித்தனைப் பாட்டெழுதக் கூப்பிடும் போது இசைஞானி இளையராஜா இம்மாதிரிச் சூழலுக்கு இவர் தான் பொருத்தமானவர் என்னுமாற் போலக் கொடுப்பாரோ என்று “மான் கண்டேன் நான் கண்டேன்” பாடலை வியந்து எழுதிய போதும் சொன்னேன். இங்கேயும் அதையே தான் மீளச் சொல்ல வேண்டியிருக்கின்றது.
“உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு” காமத்துப் பால் அதிகாரத்தில் அடங்கும் குறளின் விளக்கத்தை
டாக்டர் மு.வரதராசன் இவ்வாறு விளக்கம் பகிர்கிறார் ;
இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
“மந்திரம் இது மந்திரம்” பாடலில் புலவர் காட்டும் உவமைகளும் காமத்துப் பாலை திரையதிகாரப்படுத்துகின்றது.
கூடிக் குலவிக் கொண்டாட எஸ்பிபி & எஸ்.ஜானகி (சாமிக்கிட்டச் சொல்லி வச்சு, அடுக்குமல்லி எடுத்து வந்து), அந்தப் பெண்ணின் சுய பச்சாதாப மனச்சாட்சிப் பாடலாக எஸ்.ஜானகி குரல் கொடுக்கும்
“நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்”
அந்த இளைஞனின் பால்ய காலத்துத் துன்பியல் பயணத்தின் ஓசையாக ராஜாவின் அசசீரி ஒலியாய்
“ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு”
என்று பொருந்தும் குரல்களைப் பொருத்தியவர் இங்கே
கே.ஜே.ஜேசுதாஸ் ஐ அவர்களின் கூடலுக்கான நாதமாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.
சொல்லப் போனால் இந்தக் காட்சியமைப்புக்கு ஒரு விரகதாபப் பாடலை நிரப்பி வர்த்தகச் சந்தையைக் குறி வைத்திருக்கலாம். ஆனால் காமத்தைக் கலைப்படைப்பாடக் கொடுத்த தக்காராவின் தமிழ் வடிவத்தைக் கொணர்ந்த இயக்குநர் பரதனுக்கு இந்தப் பாட்டின் வழி தன் சீர் செய்கிறார் ராஜா.
விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
என்று பாடினார் ஒரு கவிஞர். அதை வேறு விதமாகவும் நியாயப்படுத்தினார்.
ஆனால் புலமைப் பித்தனோ
“உன் முகம் தேயாத சந்திர பிம்பம்”
“மாலையில் அடிக்கும் மஞ்சளின் வெயிலே”
என்று எக்காலத்துமான பெண் அழகைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
என்னவொரு அருமையான தெய்வீக இசையை சேர்ந்திசைக் குரல்கள் பொருந்தத் தந்திருக்கிறார் ராஜா. வரிகளை மட்டும் சுரம் பிரித்துக் கேட்டால் வாத்சாயனர் பாடமெடுக்குமாற் போல இருக்கும்.
புலமைப்பித்தனுக்கு இப்படியான சங்கீதம் கொட்டும் மெட்டுக் கிட்டினால் கொண்டாட்டமோ என்னமோ.இந்தப் பாடலின் ரிதத்தை வரிகளை விலக்கிக் கேட்டால் கண்டிப்பாக ஒரு இறை உணர்வு பொருந்திய பாடலாகத் தான் தோன்றும். ஆனால் இரண்டும் கலந்து சங்கமிக்கையில் விரசத்தை மேவிய தெய்வீக நாதத்தை பாடகர் குரலோடும், இசையோடும், சேர்ந்திசைக் குழாமோடும் பொருத்தி ஒரு பாசுரத்தைக் கேட்கும் நிலை கைவரப்பெறும்.
இசையோட்டத்தில் ஒற்றைப் புல்லாங்குழல் பாடம் நடத்த அதை அப்படியே ஒப்புவிக்குமாற்போல எவ்வளவு இலாவகமாக இந்த சேர்ந்திசைக் குரல்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன பாருங்கள். அந்தக் குரல்களை அடுத்த சரணத்தில் பாடவும் வைக்கிறார் மூல வரிகளைச் சேர்ந்து தோத்திரம் இசைக்குமாற் போல. கோரஸ் குரல்களை வைத்து ராஜா செய்யும் மந்திர ஜால வித்தைகளில் இதுவுமொன்று. சத்தியமாக இந்த இசையைக் கேட்டு மெய் சிலிர்த்துக், கண்கலங்கிவிட்டேன். எத்தனை கோடி இசையை வைத்தாய் ராஜா.
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் ஓதும்
மந்திரம் இது....
youtube.com/watch?v=yOIesInH…
தன் பாடல்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் புலவர் புலமைப்பித்தன் ஐயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ❤️❤️❤️






















