N Ramachandran retweeted
சிவன் மலையில் சிலுவையா? லிங்கமலையைக் காக்க ஒன்றிணைவோம்! 🔱
900 ஆண்டுகள் பழமையான புதுக்கோட்டை லிங்கமலை சிவன் கோவில் மலையை கிறிஸ்தவ மிஷனரிகள் ஆக்கிரமித்து, 'சவேரியார் மலை' என பெயர் மாற்ற முயல்வதாக இந்துக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மத நல்லிணக்கத்தைக் கெடுத்து, மதக்கலவரத்தைத் தூண்டும் இந்த சதிக்கு எதிராக, எம்பெருமான் சிவனின் புனிதத் தலத்தைக் காக்க அனைத்து இந்துக்களும் உடனே ஓரணியில் திரண்டு குரல் கொடுப்போம்! 🙏🏻
#Lingamalai #SaveLingamalai
N Ramachandran retweeted
"லிங்கமலையையே மொத்தமாக அழித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள்!"🚨🤬
#LingaMalai | #SaveLingaMalai
N Ramachandran retweeted
திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்கமலையும் குறி வைக்கப்படுகிறதா?
புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டிக்கு அருகில், 11-12 நூற்றாண்டுகளைச் சேர்ந்த பழமையான சிவன் கோயில் அமைந்துள்ள லிங்கமலைப் பகுதியில், சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிலுவை அருகே, கோட்டாட்சியரின் தடை உத்தரவையும் மீறி, நவம்பர் 24 ஆம் தேதி ‘மகா கார்த்திகை’ தீபத் திருநாளன்று ஜெபம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதைத் தட்டிக் கேட்ட இந்து பக்தர் மாரிமுத்து கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் கடும் கண்டனத்திற்குரியவை!
அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை உட்பட சோழர்கால வரலாற்று சான்றுகள் நிறைந்திருக்கும் லிங்கமலைப் பகுதியில், கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்த இவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது? திருப்பரங்குன்றத் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதைத் திட்டமிட்டு தடுத்துக் கொண்டிருக்கும் @TVKPartyHQ ஆட்சியில், இந்துக்களின் உரிமைகள் மீது கை வைத்தால் யார் என்ன கேட்கப் போகிறார்கள் என்ற துணிச்சலா? அல்லது சபாநாயகர் முதல் முதல்வர், முக்கிய அமைச்சர்கள் வரை அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கும் தவெகவின் சிறுபான்மையின அரசு, இந்துக்களுக்கு ஆதரவாக எப்படியும் குரல் கொடுக்காது என்ற இளக்காரமா?
இந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை ஆளும் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தால், சமூகத்தில் சகோதரத்துவம் எப்படி மலரும்? சமத்துவம் எப்படி தழைத்தோங்கும்?
எனவே, ‘இது அனைவருக்குமான ஆட்சி’ என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதாது, அதை தனது செயலிலும் திரு. @TVKVijayHQ அவர்கள் செய்து காட்ட வேண்டும். திரு. மாரிமுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இந்துக்களின் உரிமைகளையும் தவெக அரசு பாதுகாக்க வேண்டும்!
N Ramachandran retweeted
Tahsildar Ordered Cross Removal 20 Years Ago, But Order Still Not Implemented At Lingamalai In Pudukottai, TN
thecommunemag.com/tahsildar-…
N Ramachandran retweeted
திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்கமலையும் குறி வைக்கப்படுகிறதா? - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
#tamiljanam | #justin | #government | #Nagendran | #newsupdate
N Ramachandran retweeted
நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவிற்கு தக்க பதிலடி கொடுத்தார் நமது பாஜக சட்டமன்ற உறுப்பினர் திரு. போஜராஜன் அவர்கள்.
N Ramachandran retweeted
இந்திய அணுவுலைகளுக்கு தேவையான காங்கிரஸ் காலத்தில் கொடுக்க மறுத்த யுரேனியம், தற்போது இந்தியாவுக்கு மகிழ்ச்சியுடன் தருகிறோம் தருகிறோம் !
- ஆஸ்திரேலியா பிரதமர் 💥
N Ramachandran retweeted
ஆளுமை மிக்கவர்கள் உலகத்தில் எங்கு சென்றாலும் அவர்கள் ஆளுமைக்கு இது போன்ற ஒரு மரியாதை தேடி வரும்.
N Ramachandran retweeted
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
N Ramachandran retweeted
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres
N Ramachandran retweeted
ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு, அந்நாட்டு அரசால் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது!
N Ramachandran retweeted
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
N Ramachandran retweeted
2026 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும், பாஜக வெற்றி வேட்பாளர் திரு.N.ராமச்சந்திரன் அவர்களுக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு, பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#NDAwillWinTN
N Ramachandran retweeted
தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% இடங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையவில்லை. ஆனால், திமுக பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு என்பது, சுமார் 30 ஆண்டு கால போராட்டம். உண்மையில் திமுகவின் நோக்கம், மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவதைத் தடுப்பதே.
N Ramachandran retweeted
இன்றைய தினம், எளிமையான விவசாயப் பெருமக்களும், தீரமிக்க ஜல்லிக்கட்டு வீரர்களும் வாழும் பெருமைகொண்ட கந்தர்வகோட்டை தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் திரு.சி.உதயகுமார் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திரு. @Vijayabaskarofl அவர்களோடு இணைந்து பங்கேற்று உரையாற்றினேன்.
கந்தர்வகோட்டையின் முக்கிய பிரச்சனையாக குடிநீர் பிரச்சனை இருப்பதற்கு காரணம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது தான். அதுமட்டுமின்றி, பிசானத்தூர் எனும் ஊரில் இருந்து தான் கந்தர்வகோட்டைக்கு குடிநீர் கிடைக்கிறது. அந்த ஊரில் மருத்துவக் கழிவுகள் ஆலையை அமைக்க திட்டமிட்டது தான் இந்த தொகுதி எம்.எல்.ஏ செய்துள்ள சாதனை. பொதுமக்களின் பெரும் எதிர்ப்பிற்கு பிறகு, அந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
கீரனூர் பேருந்து நிலையம், முந்திரி தொழிற்சாலை, கறம்பக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி, கொள்ளிடம் நகர நீர் திட்டம், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கறம்பக்குடி வரை விரிவாக்கம் என 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக கடந்த 5 ஆண்டுகளாக எதையும் நிறைவேற்றவில்லை. மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்டுகள் இன்று இல்லை. திமுகவின் எடுப்பாக தமிழகத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை அறவே புறக்கணிக்க வேண்டியது அவசியம்.
எனவே, கந்தர்வகோட்டை மக்களின் கவலைகள் தீரவும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரு. சி.உதயகுமார் அவர்களை கந்தர்வகோட்டை மக்கள் மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! மக்களுக்கான நல்லாட்சி மலரட்டும்!
N Ramachandran retweeted
இளைஞர்களுக்கு வேலையின்மை, சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் அடிப்படை வசதிகளின்மை என கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் பட்ட இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜகவின் வெற்றி வேட்பாளர் திரு. @RAM_BJP அவர்களுக்கு 'தாமரை' சின்னத்தில் வாக்களிப்பீர்..!
N Ramachandran retweeted
All our Prayers for him to Win with Great Majority .
Best Wishes @RAM_BJP
இந்தியாவே கண்டிராத விஞ்ஞான ஊழல்களை செய்து தமிழகத்தை தலைகுனிய வைத்த தீயசக்தி திமுகவின் ஐந்தாண்டு கால காட்டாட்சிக்கு முடிவு கட்டவும், தமிழகத்தை மீட்டெடுக்கவும் மக்களுடன் கரம் கோர்த்து பயணித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் களம் காணும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் திரு. N.ராமச்சந்திரன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், அண்ணன் திரு. @Vijayabaskarofl அவர்களோடு இணைந்து பங்கேற்று உரையாற்றினேன்.
புதுக்கோட்டையில் கூடியிருந்த திரளான மக்களிடம் திமுகவின் மோசமான ஆட்சி முடியப்போகிறது என்கிற மகிழ்ச்சியையும், மாற்றத்திற்கான எழுச்சியையும் காண முடிந்தது. புதுக்கோட்டையின் போட்டோஷூட் எம்.எல்.ஏ திரு.முத்துராஜா அவர்கள், உண்மையில் வசூல்ராஜாவாக தான், கடந்த 5 ஆண்டுகளாக இருந்திருக்கிறார். தன்னுடைய தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு மருத்துவமனைக்கு அவர் கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட திமுகவினரால் தமிழக மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது?
முந்தைய அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், 12 நாளுக்கும், 13 நாளுக்கும் ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெறுவதால், புதுக்கோட்டை மக்கள் மாதம் ரூ.3000 குடிநீருக்காக செலவு செய்யும் அவலநிலையை உருவாக்காகியுள்ளது திமுக அரசு. இந்த நிலை மாறவேண்டும். காவிரி - குண்டாறு - நல்லாறு இணைப்பு திட்டம், கால்நடை மருத்துவக்கல்லூரி, ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என புதுக்கோட்டைக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றாத திமுகவின் பொய்களை இனியும் மக்கள் நம்பமாட்டார்கள்.
கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய சமூக நல ஆர்வலர் திரு. ஜகபர் அலி அவர்களை லாரியேற்றி கொன்ற அவலத்தை தமிழகமே பார்த்தது. தமிழகத்தை சுரண்டி கொள்ளையடிக்கும் கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கும் திமுக ஆட்சி இனியும் தமிழகத்தை ஆளக்கூடாது. எனவே, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் திரு. N.ராமச்சந்திரன் அவர்களை புதுக்கோட்டை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். புதிய வளர்ச்சிப்பாதையில் புதுக்கோட்டை பயணிக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வெல்லட்டும்! தமிழகத்தில் நல்லாட்சி மலரட்டும்! (1/2)
































