
மெய்ப்பொருள் காண்பது அறிவு🎙️ B .Sc Viscom| Kalaignar TV Tweets/retweets are personal💭 #DravidianIdeology #DMKSQUAD @arivalayam @mkstalin @Kalaignarnews
Chennai, India
Joined September 2015
- Tweets165
- Following108
- Followers416
- Likes237
Shantha | Senior News Anchor retweeted
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை.
நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன.
சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறான்.
சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக்கொலைச் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
த.வெ.க.வினரும் தங்களது Crime Quota-வை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சாட்சியாக,
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் Tractor ஓட்டி, Tea குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா?
ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?
Shantha | Senior News Anchor retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
வெற்றி பாலியல் திட்டம்?
#TVKVulgarWarriors #TVKFailsTN
Shantha | Senior News Anchor retweeted
திராவிடப்பெண் எப்போதுமே அப்படித்தான்
கத்தியின் முனைக்கு
கலைஞர் பேனாவின் கூர்மையால் போர் கண்ட சிங்கங்கள்...
ғᴏʀ ᴍʏ ʀᴏʟᴇ ᴍᴏᴅᴇʟ - கனி மொழி கருணாநிதி 🔆
Shantha | Senior News Anchor retweeted
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
135 கிலோ மெத் போதைப்பொருளுடன் பிடிபட்ட த.வெ.க நிர்வாகி ஒரு சாதாரண ஆள் தான். அப்போ இந்த 'Breaking Bad' நெட்வொர்க்கிற்கு பின்னால் இருக்கும் அந்த ஒரிஜினல் 'வால்டர் ஒயிட்' யார்?
சொந்த கட்சிக்குள்ளேயே இருக்கும் இந்த மாஸ்டர்மைண்டை, ஆட்சிக்கு வந்து 5 மாதமே ஆன த.வெ.க அரசாங்கம் எப்போது கண்டுபிடிக்கப் போகிறது?
#BreakingBad #TVK #WalterWhite #tvkfails #meth #135kilometh
Shantha | Senior News Anchor retweeted
அமைச்சர் மாதிரி பேசுறானா பாரு... ச்ச...
அடப்பாவமே! மக்கள் பணத்தில் MLA-க்களுக்கு கார் வாங்குவதும், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதும் தான் TVK அரசின் 'மக்கள் பணியா'? நிர்வாகத் திறமையின்மையால் ₹37-க்கு கரண்ட் வாங்கி கமிஷன் அடிப்பதும் அதே மக்கள் பணத்தில் தான் என்பதை அமைச்சர் வசதியாக மறைத்துவிட்டார்!
ஊரான் வீட்டு நெய்யை எடுத்து உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க bro @CMOTamilnadu @imrajmohan @TVKHQITWingOffl
அடப்பாவமே! மக்கள் பணத்தில் MLA-க்களுக்கு கார் வாங்குவதும், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதும் தான் TVK அரசின் 'மக்கள் பணியா'? நிர்வாகத் திறமையின்மையால் ₹37-க்கு கரண்ட் வாங்கி கமிஷன் அடிப்பதும் அதே மக்கள் பணத்தில் தான் என்பதை அமைச்சர் வசதியாக மறைத்துவிட்டார்!
ஊரான் வீட்டு நெய்யை எடுத்து உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க bro @CMOTamilnadu @imrajmohan @TVKHQITWingOffl
பெரியார் அறிவுலகம் திமுக கட்டியதா..? யாருடைய Account-ல இருந்து காசு போச்சு..? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
Kovai | Periyar Arivulagam | Library | CM in Kovai | Road Show
#Newstamil24x7 #MinisterRajmohan
Shantha | Senior News Anchor retweeted
திராவிட மாடல் அரசால் அமைக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகம் திறப்பு.
திறந்து வைப்பதில் என்ன பெருமை, எதையும் திட்டமிட்டு உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை!
- கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கருதிக்கொண்டு, தமிழினத்தின் மேன்மைக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது!
2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம்.
தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது அன்புத்தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான, அழகிய நூலகத்தை உருவாக்கினார். கலைஞரின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர், அதனை அங்கிருந்து மாற்றிடவும் சீரழித்திடவும் பல முயற்சிகள் நடைபெற்றன. அனைத்தையும் தடுத்து நிறுத்தி, திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு அமைந்ததும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்துயிரூட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மேம்பாலங்கள், தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என உருவாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தேன். சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களையும் அமைத்துத் திறந்து வைத்தேன்.
தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் புதுப்பித்து, நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற புதிய வசதிகளையும் ஏற்படுத்தித் திறந்து வைத்தோம். மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்து இருந்த கோஷன் நூலகத்தையும் அதன் நூற்றாண்டையொட்டிப் பழமை மாறாமல் புதுப்பித்தோம். இரண்டையும், அப்போதைய துணை முதலமைச்சர் திரு. உதயநிதி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
சென்னை, மதுரையைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் மாபெரும் நூலகங்களை அமைக்க நமது திராவிட மாடல் அரசில் முடிவு செய்தோம். அப்படி, மேற்கு மண்டல மக்களுக்காகக் கோவையில் நாம் அமைத்துள்ளதுதான் இன்று திறப்பு விழா காணுகின்ற பெரியார் அறிவுலகம்.
கோவை மட்டுமல்ல, திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களைத் திராவிட மாடல் அரசில் அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன.
அந்த வகையில், ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று கழக உடன்பிறப்புகள் தம் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்து நிற்கும் இந்த அறிவுச் சின்னங்கள் கழக அரசின் சிந்தனையில் உதித்தவை. கழகத்தால் கட்டியெழுப்பப்பட்டவை. வேறு எந்த அரசும் செய்யாதவை.
நூலகங்கள் மட்டுமில்லாமல், சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு வலுவான அடித்தளத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம்.
அறிவு, அறிவு, அறிவு என அறிவை மையப்படுத்தியே இயங்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனால்தான், கழகத்தின் முதல் தலைமையகத்துக்கு அறிவகம் எனப் பெயர் வைத்தார் நம் ஆருயிர் அண்ணா. அவரை ‘அறிஞர்’ என்றும், கலைஞரை முத்தமிழ் ’அறிஞர்’ என்றும்தான் அடைமொழி தந்து அழைக்கிறோம். தலைவர் கலைஞரால் அமைக்கப்பட்டு இன்றளவும் கழகத்தின் தலைமையகமாகத் திகழும் அலுவலகக் கட்டடத்துக்கும் அண்ணா ‘அறிவாலயம்’ என்றுதான் கலைஞர் பெயரிட்டார். இந்த அறிவுமரபின் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு கழக இளைஞரணியின் சார்பில் அறிவுத்திருவிழா நடத்தப்பட்டது.
அறிவுத்தீ எங்கும் பரவ வேண்டும், அறிவு ஜனநாயகமயமாக வேண்டும், வாசிப்புப் பழக்கம் வளர்ந்து பண்பட்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ வேண்டும் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை உருவாக்கினோம். புத்தகத் திருவிழாக்களை நடத்தினோம். கீழடி, பொருநை என அருங்காட்சியகங்களை உருவாக்கினோம். மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவுகளை நடத்தினோம்.
இவையாவும் பசுமரத்தாணி போல, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பதிந்திருக்கிறது. ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி!
அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்!
என் அன்புக்குரிய கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று காணுங்கள். தினம்தினம் செல்லுங்கள். கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வந்தாலும், பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை எனப் பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும்! அறியாமை ஒழியட்டும்! வாழ்க பெரியார்!
Jailer2 படம் பயங்கரமாமே💥
விரக்தியில் விஜய் ரசிகர்களாமே
உண்மையா?
Tvk நண்பர்களே உங்கள் கருத்து என்ன?
#jailer2 #jananayagan #tvk #trending #rajini #redgiantmovies
Shantha | Senior News Anchor retweeted
“Some fight the war, some lead the execution, but the Master rules the entire game.”
-THE MASTER "Anbil Mahesh Poyyamozhi"🗡️
Unit-ku 35 ரூபா!
அவர் நிர்மல்குமார் இல்ல,கலெக்ஷன் குமார்
யாராவது சோலார் பவர் பிளான்ட் போடுறவங்க கிட்ட கேட்டுப் பாருங்க. 15 லட்சத்துக்கு கம்மியா நீங்க பெர்மிஷன் வாங்க முடியுமான்னு.
முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள்
#Collectionகுமாரு
விஜய் ஆட்சியும் - போராட்டக் களமாகும் தமிழ்நாடும்!
#mic_with_shaan #TVKVijayFails #TVKFailsTN #sanitaryworkers
@arivalayam @DMKITwing
@TVKPartyHQ @arunraajkg @CMOTamilnadu
Shantha | Senior News Anchor retweeted
மாணிக்கம் கேட்டுச்சா…..
We made it easy for you, Mr. @manickamtagore!
@arivalayam #Congress #SIR #DMK4TN
Shantha | Senior News Anchor retweeted
கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்!
சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா?
தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார்.
உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள்.
இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன.
“தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி!
மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை.
கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார்.
திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார். எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார்.
இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்றியைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
இடைத்தேர்தல் முடிவைக் கொண்டாடும் தவெக ஆதரவாளர்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்!
இரண்டு தொகுதிகளிலும் சேர்த்து பதிவான மொத்த வாக்குகள் – 3,65,824.
இதில் தவெகவுக்கு கிடைத்தது 1,40,889 வாக்குகள் மட்டுமே!
அப்படியென்றால், 100 பேரில் 61 பேர் தவெகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்!
தவெகவுக்கு எதிராக விழுந்த வாக்குகள் – 2,24,935. அதாவது, தவெகவுக்குக் கிடைத்த வாக்குகளைவிட 84 ஆயிரம் வாக்குகள் அதிகம்!
தவெகவுக்கு 5 மாசத்துலயே ,இவ்வளவு எதிர்ப்பா?
@CMOTamilnadu
#இடைத்தேர்தல் #மதுராந்தகம் #தாராபுரம்













