Outis (@_outisk) header
Outis (@_outisk) profile picture
Joined April 2022
Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)Photo by Outis (@_outisk)
விதைப்பதும் முளைப்பதும் கார்த்திகையே!! #மாவீரர்நாள்
1
89
I were there!!
2
2
238
திருமாவளவன் போனது சிவாஜிலிங்கம் அண்ணையின் இறுதி அஞ்சலிக்கு ஆனால் இந்த சனியன் அதிலயும் வன்மத்தை கக்கனும் எண்டு சிறையில் இருக்கும் நாமலை AI ல edit பண்ணி ஒரு படத்தை போடுது இது கூட தெரியாம சீமானின் நாம் தமிழர் தம்பிகள் வன்மத்தை கக்கீட்டு இருக்காங்க எண்டால் இவனுகளுக்கு மூளை முட்டிக்கு கீழ தான் இருக்கும் போல!!
தன்னுடைய இரத்த உறவான மஹிந்த ராஜபக்சவின் மகனை சந்திக்க சிறீலங்கா வந்த எச்சை திருமாவின் பயணம் இனிதே நிறைவடைந்தது@thirumaofficial @_ITWingNTK
8
12
1
45
1,660
நாமல் ராஜபக்ச சிறையில் இருந்து வெளிய வந்திட்டான் அப்பிடிதானே? சரி சரி
தன்னுடைய இரத்த உறவான மஹிந்த ராஜபக்சவின் மகனை சந்திக்க சிறீலங்கா வந்த எச்சை திருமாவின் பயணம் இனிதே நிறைவடைந்தது@thirumaofficial @_ITWingNTK
2
1
13
566
This movie hits different 😔😔
The Indomitable Thespian - @mammukka! 🐐 versatile Extravaganza.! #OM
1
2
291
கஜேந்திரகுமார், கஜேந்திரன், சுகாஷ், காண்டீபன் இவங்களையும் தமிழின துரோகிகள் என்று அறிவிச்சிடலாமா? 😪😪
அவர் விட்டுச் சென்ற இடத்தை இனி இவர் தொடர்வார். தமிழினப் படுகொலையை நடத்திய காங்கிரசின் கூட்டாளிகள் அனைவரும் தமிழினத் துரோகிகள் தான்.
4
1
2
2
950
சிவாஜிலிங்கம் அண்ணைக்கு மாமனிதர் பட்டம் கொடுத்ததற்கு பொங்குபவர்களே, “மாவீரர்” என்பதும் தமிழீழ மாவீரர் பணிமனையால் தமிழீழ விடுதலை போரில் இறந்த மாவீரர்களுக்கு வழங்கப்படுது ஆனால் 2009 மே க்கு பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய கட்டமைப்பு தாயகத்தில் இல்லாத நிலையில் தாயகத்தில், புலம்பெயர் தேசங்களில் மாவீரர் பட்டங்களை வழங்கினார்கள் ஒரு படி மேலே சென்று தலைவருக்கு மாவீரர் நாள் கொண்டாடினார்கள் அதுவும் சம்பந்தமே இல்லாமல் கோடைகால கொண்டாட்டமாக கொத்து ரெட்டி சாப்பிட்டு கொண்டாடினார்கள். இந்த வேலைகளை செய்த கூட்டத்துடன் கூடி குழாவிக்கொண்டு இன்று சிவாஜிலிங்கம் அண்ணைக்கு மாமனிதர் பட்டம் கொடுத்ததற்கு பொங்கி என்ன பயன், நீங்கள் உங்களை ஒரு முறை சரிபார்த்து கொள்ளுங்கள்!
“மாமனிதர்” விருதின் வரலாற்று மற்றும் நிறுவனப் புனிதம்.. தேசியத் தலைவரின் நேரடி அதிகாரம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பில் "மாமனிதர்" (Maamanithar) என்பது சாதாரணமாக வழங்கப்படும் ஒரு கௌரவப் பட்டமல்ல; அது தமிழீழத்தின் அதிஉயர் தேசிய விருதாகும். குமார் பொன்னம்பலம், தராகி சிவராம், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் போன்ற ஆளுமைகளுக்கு, விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நேரடி ஒப்புதலோடும், ஒரு நடைமுறை அரசின் (De-facto State) அதிகாரப்பூர்வத் தீர்மானத்தோடுமே இந்த விருது வழங்கப்பட்டது. நிறுவன ஒழுங்கு மீறல்: 2009 மே மாதத்திற்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய கட்டமைப்பு தாயகத்தில் இல்லாத நிலையில், புலம்பெயர் நாடுகளில் பல குழுக்களாகப் பிரிந்து நிற்கும் தரப்புகள் தாமே "அனைத்துலகத் தொடர்பகம்" என்ற பெயரில் இலச்சினையைப் (Letterhead) பயன்படுத்தி, "தேசியத் தலைவர் வழிகாட்டுதலில் மாமனிதர் விருது வழங்குகிறோம்" என்று அறிவிப்பது, அந்த விருதின் வரலாற்றுப் புனிதத்தையும், நிறுவன ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
2
2
2
12
725
புகழ் வணக்கங்கள் சிவாஜி அண்ணன் 💔
ரவிராஜ் அண்ணன், ஐயா ஜோசப் பரராஜசிங்கம், சிவாஜி லிங்கம் அண்ணை போன்றோர் தவிர்த்து மிகுதி எல்லோரும் தங்களின் சுயலாபத்திற்காக தான் அரசியலுக்குள் வந்தார்கள்.
1
2
6
292
தங்களின் ஆதாயங்களுக்காக edit செய்யப்பட்ட வரலாறுகளை கடத்துவதை விடுத்து 1989 இல் தலைவர் “மாவீரர் நாளை” எவ்வாறு அடையாளப்படித்தினாறோ அதே போல் வரலாற்றை கடத்துங்கள். இளம் தலைமுறையினருக்கு உதாரணமாக இருங்கள் குழப்பங்களை ஏற்படுத்தி உபத்திரமாக இருக்காதீர்கள்!!
தேசியத் தலைவரின் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் உரை 1989 #மாவீரர்நாள்_2026 #ஈழத்தின்குரல்
1
1
11
631
Edited version bro.. please try again 🤣🤣🤣
தேசியத் தலைவரின் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் உரை 1989 #மாவீரர்நாள்_2026 #ஈழத்தின்குரல்
1
2
9
435
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் அதாவது மே 2009 க்கு முன்பு தமிழீழத்தில் “மாவீரர் நாள்- நவம்பர் 27” என்றே நினைவு கூறப்பட்டது. தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வரலாறும் அதுவே மாறாக மே 2009 க்கு பிற்பாடு புது வரலாறுகள் கற்பிப்பவர்களை கடந்து செல்லுங்கள்!
1
2
241
உங்களுக்கு ஒரு கட்சியில் இருக்கும் வன்ம இஷ்ட மயிருக்காக எல்லாம் நாங்கள் இவ்வளவு காலமும் சொல்லி வந்த சொல்லாடலையும் வரலாறையும் மாற்ற ஏலாது “மாவீரர் நாள்” என்றே தொடர்ந்து சொல்லப்படும், எழுதப்படும். நீங்கள் என்னத்தை வேணும் எண்டாலும் எழுதி துலையுங்கோ ஆனால் “மாவீரர் நாளை” நவம்பர் 27 இல் நினைவுகூர்ந்தால் அதுவே போதும் அதையும் மாற்றி துலைக்காதீங்கோ துலைவாரே!!
1
3
18
685
நான் பேசுவது ஆதரங்களோடு ஆனால் நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுகிறீர்கள். “தமிழீழ தேசிய மாவீரர் நாள்” என்று சொல்லாவிடின் இறையாண்மை பாதிக்கும் என்று நினைக்கும் நீங்கள் ஏன் இவ்வளவு காலமும் அதை சொல்லவில்லை? நீங்கள் மாவீரர்நாள் என்றே சொல்லி வந்தீர்கள் அப்போது எல்லாம் இறையாண்மை பாதிக்கப்படவில்லையா?
தத்துவப்பிறழ்வும், தரம்தாழ்ந்த அரசியலும்.. நான் பேசுவது "சுத்துமாத்து கதை" என்ற அற்பத்தனமான சொற்பிரயோகங்களை பயன்படுத்துவதால், வரலாறு ஒருபோதும் தன் பதிவுத்தடத்தை மாற்றிக்கொள்ளாது.. சிக்கலான கேள்விகளைத் தவிர்த்து ஓடுவதை விட, வரலாற்றுத் தரவுகளோடு அவற்றை எதிர்கொள்வதே ஆரோக்கியமான அரசியலாகும். சில இணையப் பயணர்கள் முன்வைக்கும் வாதம் தத்துவார்த்த ரீதியாக "அனுபவவாதப் பிழை" (Naive Empiricism) எனப்படும் குறுகிய பார்வையைக் கொண்டது. அதாவது, "நான் பார்த்ததும் கேட்டதும் மட்டுமே முழு உண்மை; அதற்கு அப்பாற்பட்ட அரசியல் பரிணாமங்கள் எல்லாம் பொய்" என்று நம்பும் மனநிலை. தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு நடைமுறை அரசாக (De-facto State) ஆட்சி செய்த காலத்தில், அங்கே நிலம் இருந்தது, நிர்வாகம் இருந்தது, இறையாண்மை நடைமுறையில் இருந்தது. அந்த மண்ணில் நின்று வெறும் "மாவீரர் நாள்" என்று அழைத்தாலே அது தமிழீழ தேசத்திற்கானது என்பது அன்றைய கள யதார்த்தம். ஆனால், இன்று நிலத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் இழந்து, உலக நாடுகளில் சிதறி வாழும் புலம்பெயர் சூழலில் நிலைமை முற்றிலும் வேறு. இங்கே நிலம் இல்லை; சொல்லாடல்களும் (Terminology) அரசியல் வரையறைகளுமே ஒரு தேசத்தின் இருப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆயுதங்கள். சூழல் மாறும்போது, அரசறிவியல் சொல்லாடல்களின் தேவை இன்னும் கூர்மையடைகிறது. மக்கள் பேச்சுவழக்கில் சுருக்கமாக அழைப்பதைக் காரணமாகக் காட்டி, "தமிழீழ தேசிய மாவீரர் நாள்" என்ற அரசறிவியல் அடையாளத்தைக் கைவிடுவது என்பது, காலப்போக்கில் அந்த நினைவேந்தலிலிருந்து "தமிழீழம்" என்ற அரசியல் இலக்கையே நீர்த்துப்போகச் செய்யும் (Depoliticization) ஆபத்தைக் கொண்டது. வரலாற்றுச் சூழலையும், அரசறிவியல் நுணுக்கத்தையும் உள்வாங்காமல், ஒரு தேசத்தின் இறையாண்மை சார்ந்த சொல்லாடலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை "சுத்துமாத்து" என்று கொச்சைப்படுத்துவது ஆரோக்கியமான உரையாடலுக்கு அழகல்ல. விமர்சனங்களைத் தரவுகளோடும் தர்க்கத்தோடும் எதிர்கொள்வோம் என்பதே எமக்கு எமது விடுதலை இயக்கம் கற்றுத்தந்த வரலாற்றுப்பாடமாகும்!
3
249
தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் காலத்தில் பொதுவாக பாவிக்கப்பட்ட சொல்லாடல் “மாவீரர்நாள்- நவம்பர் 27” நீங்கள் இன்று சீமானுக்கு பாடம் கற்பிக்கிறேன் என்று நினைத்து அங்கு இருக்கும் ஒன்று இரண்டு பதாகைகைகளை வைத்து தமிழீழத்தில் “தமிழீழ மாவீரர் நாள்” என்றே சொல்லப்பட்டது என்று அங்கே இருந்தவர்களுக்கு புதுப்பாடம் கற்பிக்கிறீர்கள். விடுதலைப்புலிகள் “தமிழீழ தேசிய மாவீரர் நாள்” என்றே நாங்கள் சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தால் அதை நிச்சயமாக எமக்கு பழக்கப்படுத்தியிருப்பார்கள் ஆனால் அவர்கள் அது பற்றி பெரிது படுத்தவில்லை என்பது தான் உண்மை.
Replying to @krishnaambalav1
ஆர்வக்கோளாறுகளை தவிர்த்து விடுங்கள் ஐயா. தமிழீழ மாவீரர் நாள். நவம்பர் 27 தமிழீழம் 👇
2
1
1
6
450
விடுதலைப்புலிகளின் கொள்கை முடிவுகள் பற்றி சாமானியனுக்கு தெரிய வாய்ப்புகள் மிக குறைவு ஆனால் நாம் எதை பார்த்தோம், எதை கேட்டோம் என்ற தரவுகளின் அடிப்படையிலேயே எம்மால் இந்த விடயத்தை அணுக முடியும். விடுதலைப்புலிகள் உத்தியோக பூர்வ மாவீரர்நாள் கையேடை உருவாக்கி வழங்கியிருந்தார்கள் ஆனால் அதில் கூட நீங்கள் சொல்லும் “தமிழீழ தேசிய மாவீரர்நாள்” என்ற வார்த்தை பிரயோகம் இல்லை. தமிழீழத்தில் “மாவீரர்நாள்- நவம்பர் 27 என்றே சொல்லப்பட்டு வந்தது அதை தான் மக்கள் கடைப்பிடிப்பார்கள். “தமிழீழ தேசிய மாவீரர்நாள்” என்று சொல்லாத படியால் இறையாண்மை பாதிக்கப்படும் என்பது எல்லாம் சுத்துமாத்து கதை, விடுதலைப்புலிகள் மாவீரர்நாள் என்பதால் இறையாண்மை பாதிக்கப்படும் என்று நினைத்திருந்தால் நிச்சயமாக “தமிழீழ தேசிய மாவீரர்நாள்” என்ற சொல்லாடலையே கடைப்பிடித்து இருப்பார்கள், எங்களுக்கும் பழக்கியிருப்பார்கள்!
"தமிழீழ தேசிய மாவீரர் நாள்" என்று சொல்லும்போது, அங்கே "தமிழீழம்" என்ற தேசமும், அதன் இறையாண்மையும் (Sovereignty) அரசறிவியல் ரீதியாகப் பதிவு செய்யப்படுகிறது.
3
3
9
587
அண்ணே, தமிழீழத்தில் மாவீரர் நாள் மாதத்தில் வீதிகளில், சந்திகளில், பேருந்து நிலையங்களில் கட்டப்படும் வளைவுகளிலும் மாவீரர் நாள் என்றே குறிப்பிடப்படும் ஆனால் நான் ஒரு தடவை “தமிழீழ மாவீரர்நாள்” என்ற வளைவை கண்டு இருக்கிறேன் ஆனால் பொதுவாக பெரும்பாலும் “மாவீரர்நாள்” என்று குறிப்பிடுவதே வழக்கம்.
Replying to @_outisk
தம்பி 1991 மாவீர்ர் நாள் வளைவுகள் எல்லா நகர கிராம சந்திகளிலே கட்டப்படும் உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா என்று தெரியவில்லை எல்லா வளைவுகளிலுமே “தமிழீழ தேசிய மாவீர்ர் நாள்”என்றே எழுதியிருக்கும் ஆதாரம் கேட்டால் நாங்கள் அந்த ஆண்டு ஒளிவீச்சுக்களைத்தான் தேடிப்பார்த்து எடுக்கவேண்டும்.
3
286
கடந்தகால விடுதலைப்புலிகள் பத்திரிகை, மாவீரர்நாள் படங்களை பார்த்திருக்கிறேன் இந்த கட்டுரைக்கு பிற்பாடு மீண்டும் ஒருமுறை சரிபார்த்தேன் பழைய படங்கள், பத்திரிகைகளில் “மாவீரர்நாள்” என்று தானே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ தேசிய மாவீரர்நாள் என்று எப்போதிலிருந்து குறிப்பிடப்படுகிறது? நான் அறிந்த வரையில் “தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர்நாள் உரை” என்றே புலிகளின் குரலில் கேட்டிருக்கிறேனே தவிர “தமிழீழ தேசிய தலைவரின் தமிழீழ தேசிய மாவீரர்நாள்” என்று கேட்டதாக ஞாபகம் இல்லை. பி.கு: நான் கேட்காதததை நீங்கள் கேட்டிருக்கலாம் அப்பிடி கேட்டிருந்தால் தெளிவுபடுத்துங்கள்.
வரலாற்றை விழுங்கும் ; நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அரசியல்: 'தமிழீழ தேசிய மாவீரர் நாள்' வெறும் 'மாவீரர் நாளாக'ச் சுருக்கப்பட்டதன் பின்னணி என்ன? வரலாறு என்பது வெறும் நாட்காட்டியில் குறிக்கப்படும் எண்களோ அல்லது சுவரொட்டிகளில் அச்சிடப்படும் வண்ணங்களோ அல்ல; அது ஓர் இனத்தின் இரத்தத்தாலும், சதையாலும், கண்ணீராலும், ஈடுஇணையற்ற தியாகத்தாலும் எழுதப்பட்ட உயிர் சாசனம். 1989-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் நாள் (கார்த்திகை 11) தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட 'தமிழீழ தேசிய மாவீரர் நாள்' என்பது, தாய்மண்ணின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரை ஈந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களின் புனிதமான நினைவு நாளாகும். ஆனால், இன்று தமிழகத்தின் தேர்தல் அரசியல் களத்தில், குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் 2026 மாவீரர் நாள் நிதி சேகரிப்புப் பக்கத்திலும் விளம்பரங்களிலும், 'தமிழீழத் தேசிய' என்ற வரலாற்று அடையாளம் திட்டமிட்டோ அல்லது அறியாமையாலோ நீக்கப்பட்டு, வெறுமனே 'மாவீரர் நாள் - கார்த்திகை 11 (27-11-2026)' என மொட்டையாகச் சுருக்கப்பட்டிருப்பது மிகக் கடுமையான தத்துவார்த்த விவாதத்தை எழுப்பியுள்ளது. இதனை வரலாற்றுப் புரிதலின்மை என்பதா, அல்லது இந்தியத் தேர்தல் அரசியலின் சட்டச் சிக்கல்களுக்குப் பயந்து வரலாற்றையே அடகு வைக்கும் சந்தர்ப்பவாதம் என்பதா என்ற கேள்வி இன்று ஒவ்வொரு உணர்வாளனின் நெஞ்சிலும் கனலாக எரிகிறது. ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கும், ஒரு பிராந்தியக் கட்சியின் தேர்தல் அரசியலுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாதபோது, புனிதமான வரலாறுகள் வெறும் அரசியல் மூலதனமாக மாற்றப்படுகின்றன. தமிழீழ மாவீரர்கள் என்பவர்கள் ஏதோ ஒரு கட்சியின் பொதுக்கூட்டத்திற்காகவோ அல்லது இருபது இலட்சம் ரூபாய் நிதி சேகரிக்கும் விளம்பரத்திற்காகவோ மடிந்தவர்கள் அல்லர். அவர்கள் ஒரு தேசத்தின் இறையாண்மைக்காகவும், தன்மானத்திற்காகவும் தங்களை விதையாக்கிக் கொண்டவர்கள். 'தமிழீழத் தேசிய' என்ற வேரை வெட்டிவிட்டு, வெறும் 'மாவீரர் நாள்' என்று அழைப்பது என்பது, அந்தத் தியாகத்தின் நிலப்பரப்பையும், அரசியல் இலக்கையும், வரலாற்றுப் பின்னணியையும் இருட்டடிப்புச் செய்யும் செயலாகும். நாளை இதே பாணியில், தியாகத்தின் உண்மையான வரலாற்றை மறைத்து, அதனை உள்ளூர் வாக்கு வங்கி அரசியலுக்கு ஏற்றவாறு வளைத்து, ஒரு கட்டத்தில் அந்த வரலாற்றையே முற்றிலுமாகப் புதைத்துவிடும் அபாயம் இதில் ஒளிந்திருக்கிறது. மாவீரர் நாள் என்பது கண்ணீரோடும், மௌனத்தோடும், ஆழ்ந்த சுயபரிசோதனையோடும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு தேசியத் துக்கமும் எழுச்சியும் கலந்த நாள். ஆனால், அதனைத் தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியலின் வழக்கமான 'வீரவணக்கப் பொதுக்கூட்டமாகவும்', 'நிதி திரட்டும் நிகழ்வாகவும்' மாற்றியிருப்பது தியாகத்தின் மாண்பைக் குலைக்கும் செயலாகும். ஒருபுறம், போரில் காயமடைந்து, கைகால்களை இழந்து, வாழ்வாதாரமின்றித் தவிக்கும் உயிருள்ள போராளிகள் உலகெங்கும் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். மறுபுறம், மரணித்த மாவீரர்களின் படங்களைப் பயன்படுத்தி, அவர்களின் பெயரால் நிதி திரட்டி, மேடைகளில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி அரசியல் லாபம் தேடும் போக்கு வளர்ந்துள்ளது. சத்தியத்திற்காகவும் இலட்சியத்திற்காகவும் வாழ்ந்து மடிந்தவர்களின் வரலாற்றை, தரம் தாழ்ந்த தேர்தல் அரசியல் சதுரங்கத்திற்குள் இழுத்து வந்து பலியிடுவது என்பது, சிங்களப் பேரினவாதம் செய்த இனப்படுகொலைக்குச் சற்றும் குறைவில்லாத ஒரு வரலாற்றுப் படுகொலையாகும். வரலாறு திரிக்கப்படும்போதும், தியாகம் வியாபாரமாக்கப்படும்போதும் மௌனமாக இருப்பது, நாமும் அந்தத் துரோகத்திற்குத் துணைபோவதற்குச் சமமாகும். எழுகதிர் இதழுக்காக, - கிருஸ்ணா அம்பலவாணர் @Seeman4TN @NaamTamilarOrg @Saattaidurai @sabas_kris0712 @RatnaKing20 @KalaranjanK @arulmozhi_25
2
3
16
847