பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21) header
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21) profile picture

மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்

Madurai North, India
Joined April 2016
Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)Photo by பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@pmoorthy21)
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
நாட்டு விடுதலைக்காகப் போராடிய பசும்பொன் திருமகனார் அவர்களின் பிறந்த நாள் இன்று. குற்றப்பரம்பரைச் சட்டம் - வாய்ப்பூட்டுச் சட்டம் போன்ற அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடியவர். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலே கழித்த தியாகத்துக்குச் சொந்தக்காரர். அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் - மக்கள் பிரதிநிதியாகவும் அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.
39
453
21
1,691
70,266
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வரலாறாய் வாழ்ந்து, வீரத்துக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் பசும்பொன் திருமகனாரைப் போற்றுகிறேன்! 🔷 விடுதலைப் போரில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றிய தீரர்! 🔷 குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளி! 🔷 உழவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சங்கங்களை நிறுவியவர்; போராடிச் சிறை சென்ற தியாகி! 🔷 சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்களுக்காகக் குரல் கொடுத்த மாண்பாளர்! “பத்தரை மாற்றுத் தங்கம்! பசும்பொன் சிங்கம்!” என்று மக்களால் போற்றப்பட்ட பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க!
69
746
17
2,668
82,006
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கழகத்தலைவர் @mkstalin அவர்களால் மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சகோதரர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக மாமண்டூர் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம். @evvelu @thamoanbarasan @Ksundarmla @abdulmalikdmk @Prabhugajendran
78
515
6
1,403
100,368
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Sofa Model ஆட்சியாளர்களின் ஆள்பிடிக்கும் அரசியலால் நடக்கின்ற மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும், கழக வேட்பாளர் அன்புச் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக கருங்குழி பகுதியில் இன்று வாக்கு சேகரித்தோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி இழுத்துச் செல்லும் இந்தக் கோமாளி ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு தொடக்கமாக இருக்கும் என்று உரையாற்றினோம். @evvelu @thamoanbarasan @ksundarmla @Joel_Dmk @AbdulmalikDmk @Prabhugajendran
111
642
10
1,658
35,312
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Circus ஆட்சியாளர்களின் அதிகார வெறியால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக, கடலென திரண்டிருந்த மதுராந்தகம் - மின்னல் சித்தாமூர் பகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உரையாற்றினோம். @evvelu @thamoanbarasan @ksundarmla @AbdulmalikDmk @Prabhugajendran
85
649
13
1,714
59,361
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று அச்சிறுப்பாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம். மதுராந்தகம் தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்தவருக்கும் - துரோகம் செய்ய தூண்டிய முதலமைச்சருக்கும் வாக்குரிமையின் மூலம் பதிலடி கொடுக்குமாறு திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றினோம்! @evvelu @thamoanbarasan @ksundarmla @AbdulmalikDmk
102
655
11
1,710
56,788
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தீர்ந்து போன சக்தியென்று சொல்லிவிட்டு அவர்களிடமே MLA கொள்முதல் செய்த குதிரை பேர ஆளுங்கட்சிக்கும் - Dummy முதலமைச்சருக்கும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்று கழக வேட்பாளர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக மதுராந்தகம் நகரில் இன்று வாக்கு சேகரித்தோம். @evvelu @thamoanbarasan @ksundarmla @AbdulmalikDmk
180
1,023
23
2,636
54,440
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தாராபுரம் குண்டடம் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம். @KN_NEHRU @mp_saminathan @V_Senthilbalaji @dmkpadhu @keprakashdmk
242
834
23
2,666
68,611
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வாக்களித்த மை காய்வதற்குள் வேறு கட்சியில் நின்று வென்றவர்களை வளைத்து ஆட்சி அமைத்து, அதைத் தக்க வைக்க மக்கள் மீது இடைத்தேர்தலை திணித்துள்ள Sofa Model ஆட்சியாளர்களின் அதிகார வெறியை முறியடிக்க, ‘ஆதரிப்பீர் உதயசூரியன்’ என்று தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக கொளத்துப்பாளையத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம். @KN_NEHRU @mp_saminathan @V_Senthilbalaji @dmkpadhu @keprakashdmk
178
1,104
30
2,833
62,869
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Dummy ஆட்சியாளர்களின் குதிரை பேர அரசியலால் தாராபுரம் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தாராபுரம் நத்தம்பாளையத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன். @KN_NEHRU @mp_saminathan @V_Senthilbalaji @dmkpadhu @keprakashdmk
371
1,110
32
3,167
96,704
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டும் தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக மூலனூரில் இன்று வாக்குச் சேகரித்து உரையாற்றினோம். அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை Whole Sale-ல் கொள்முதல் செய்யும் Sofa Model முதலமைச்சருக்கு தாராபுரம் தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டோம். #Dharapuram @KN_NEHRU @mp_saminathan @V_Senthilbalaji @dmkpadhu @keprakashdmk
192
898
28
2,137
71,076
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations. An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling. Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment. The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP. Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States! Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth. பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்! சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்! தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!
223
2,281
39
5,345
144,766
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஆட்சியில் இருந்தாலும் - இல்லாவிட்டாலும் என்றைக்கும் மக்களோடு மக்களாக நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம்! அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில் துறைமுகம் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றோம். கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி - அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி முடித்த மகளிர் - மாணவர்கள் - விளையாட்டு வீரர்கள் - மாற்றுத்திறனாளிகள் - திருநர் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை - கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. முன்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சர்க்கஸ் கூட்டத்தின் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தோம். கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் - தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டை மீட்கும் பணியில் கழகம் என்றும் முன் நிற்கும். கலைஞர் புகழ் ஓங்கட்டும்! @PKSekarbabu @Dayanidhi_Maran @PriyarajanDMK
93
694
2
1,960
51,433
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன. இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன. இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன. ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
745
2,047
112
5,342
420,573
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா! கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்! நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்! அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳 #IndependenceDay
200
1,891
43
6,193
107,770
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது. இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும். #TNFishermen
193
1,368
30
3,017
120,023
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்! தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன். அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க! #முரசொலி85 #Murasoli
140
1,524
40
4,904
161,206
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு. மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி. 100 நாள் ஆட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளது. #Budget
448
1,694
38
4,573
122,954
RT @Udhaystalin: NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @…
38
101
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். #CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் #BanNEET
535
2,106
104
5,647
436,825