Pinned Tweet
In gentle stillness, the heart holds a feeling words cannot explain.
Some prayers are held in silence, in tears, and in faith.
Walked away from here with the hope in my heart and the quiet belief that,
in his time,
everything will fall into place🧿🦚💫⭐️
Gracious Gaze retweeted
அமைச்சர் @imrajmohan கோட்டுக்கும் விமர்சனம் பண்றானுங்க,
வாட்சுக்கும் விமர்சனம் பண்றானுங்க,
கையில் கட்டியிருக்கிற சாமி கயிறுக்கும் அவதூறு பரப்புறானுங்க.
அடுத்ததாக என்ன? அவர் போட்டிருக்கிற உள்ளாடை 🩲 நோக்கித்தான் அவதூறு பரப்புவானுங்க போலயே! ஆனாலும் இந்த மானங்கெட்ட பொழப்புக்கு…பிச்சை எடுத்து திங்கலாம்டா கொத்தடிமைகளா!
சமூக வலைதளங்களில் குறிவைத்து தாக்கப்படும் பத்திரிகையாளர்கள்!
தவெகவினரின் அராஜக நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது!
சில தினங்களுக்கு முன், ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ‘தி வீக்’ இதழில் பணியாற்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தொழில் முதலீடு தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் செயல்படும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய விரிவாகத் திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்தை நாடுவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாவது குறித்து அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளராக இந்த கேள்வியை எழுப்புவது அவருடைய கடமை. அந்த வகையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த கேள்வியை கேட்டதற்காக சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியனுக்கு எதிராக அருவெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, அருண்ராம் அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டு வருகின்றனர். தவெக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை அருண்ராம் மற்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வின் புகைப்படத்தை அருண்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ கோரிக்கை’யின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அருண்ராம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தகவெக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதால், சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வரும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர் பிரபாகரன் தமிழரசு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ‘ஹாக்’ செய்ய சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்.
ஒருகேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவாக பேசுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையை எழுதியதற்காக சமூக வலைதளப்பக்கத்தின் பதிவுகளை அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கம் செய்வதும், சமூக வலைதளக் கணக்கை முற்றிலும் முடக்க நினைப்பதும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவதும் உண்மைகளை எழுதுவதும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிப்பதும் பத்திரிகையாளர்களின் கடமை. அந்த கடமையைச் செய்யும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதும் அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவதும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகைத் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
அந்த வகையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகைள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தவெக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu
@tnpoliceoffl
53
Gracious Gaze retweeted
"ஹேமாவதி அணைக்கட்டு கட்டுவதில் தமிழக அரசுக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை"
- 6.3.1970 சட்டமன்ற குறிப்பு
dmkthondan.blogspot.com/2010…
‼️‼️
டிரோன்கள் பறக்க தடை
CM விஜய் திருச்சிக்கு செல்ல உள்ள நிலையில் வரும் 20ம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை. மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் உத்தரவு
#Cmvijay #trichy #drone #Collector
2
90
சிங்கப்பெண்கள் work…🔥🔥
பாதுகாப்பு மையத்திற்கு..
திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் ஆதரவில்லாமல் சுற்றித்திரிந்த நான்கு வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த குழந்தையை மீட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
அங்கன்வாடி மையம், வடமாநில தொழிலாளர்கள் நிறைந்த பகுதி உள்ளிட்ட இடங்களில் விசாரித்தும் பெற்றோர் குறித்த தகவல் கிடைக்காததால், குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்
Child | Tiruppur | 18 November 2026
#Singappen #TNPolice #NorthIndia #Boy | #NewsTamil24x7
Gracious Gaze retweeted
Replying to @MalaimurasuTv
@MalaimurasuTv @ThanthiTV @NewsTamilTV24x7 @PttvNewsX @sunnewstamil @sathiyamnews @news7tamil
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷைப் பற்றி வெளிப்படையான புகார் வராத நிலையில்கூட கடந்த இரண்டு வாரமாகப் பெருவாரியான விவாதங்களை நடத்திய நீங்கள் 🫵 இந்த ரிஷிவந்திய MLA வசந்தம் கார்த்திகேயனைப் பற்றி விவாதம் நடத்த உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?
@EPSTamilNadu @TTVDhinakaran @Seeman4TN @jothims @premallatha @Shanmugamcpim @annamalai_k @jawahirullah_MH @AdvtSudha @VanathiBJP @DrTamilisai4BJP @NainarBJP @DivyaSathyaraj_ @KanimozhiDMK @NCWIndia @draramadoss @AIADMKITWINGOFL @AIADMKOfficial @tncpim @cpimspeak @_ITWingNTK
இதைப்பற்றி நீங்கள் தெரிவித்த கண்டணம் எங்கே என்று தேடிக்கொண்டிருக்கிறேன் 👀
Gracious Gaze retweeted
தமிழ்நாட்டுக்கு கிடைத்த சிறப்பான அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl 🔥
e - CSR 🔥
Another digital initiative in public service by Tamil Nadu Police! Through the e-CSR service, members of the public can register complaints online from the comfort of their homes and obtain a e-CSR receipt without visiting a police station in person. Watch this awareness video to know more about the e-CSR service!
#TamilNaduPolice #eCSR #DigitalPolicing #OnlineComplaint #PublicService #TNPolice
1
111
கர்நாடகா அணை கட்ட முடியாது - Loud and clear…✨
Kudos to @imrajmohan @BussyAnand and @AadhavArjuna 🔥🔥
#DelhiVisits #TVKMinisters #TVkGovernance
Gracious Gaze retweeted
சென்னை, தி.நகர் உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் வணிகர்களிடம் தவெக அரசு கட்டாய வசூலில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா திட்டவட்ட மறுப்பு
#tvk #tvkgovt #vikramaraja #thanthitv
Gracious Gaze retweeted
எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே 😂
கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல.
உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் fake news factories கூட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்
Silenced the Law & Order allegations with facts and figures! 🔥🔥
@copmahesh1994 sir, hats off! 🫡🫡
Facts speak…Noise fades🤐
#TVKGovt #DGPMaheshkumar #CMVijay #LawandOrder #TamilNadu
4
154
Gracious Gaze retweeted
வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடாமல், திட்டங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் முதல்வர் விஜய்! 🔥
கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 9 புதிய கட்டிடங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் என மக்கள் பயன்பாட்டிற்கான பணிகளைத் தொடங்கி வைத்திருப்பது பாராட்டுக்குரியது. 👏
மக்களுக்கான ஆட்சி… செயல்பாட்டில் நிரூபிக்கும் ஆட்சி! ❤️
Gracious Gaze retweeted
நிரூபிக்கப்படாத ஒரு சம்பவத்தை குறித்து தொடர்ச்சியா அவதூறு கதைகள் சொல்லி வரும் கனிமொழி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@TVKVijayHQ @CMOTamilnadu @tnpoliceoffl @CTR_Nirmalkumar
Gracious Gaze retweeted
அண்ணன்களா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்கிற செய்கையால பல பேருக்கு BP வந்து ஸ்டோக்கே வந்துரும் போல ஏன்னா இப்படி பாடா படுத்துறிங்க விட்ருங்க அவங்கள பாவம் !
DMK+BJP+ADMK =ஏன் வயிறு எறியுதுலே 🔥
Gracious Gaze retweeted
டேய் மக்கு @arivalayam டாஸ்மாக்குக்கு வேலை செய்ய போறவன் civil engineers' ஆ இருக்கிறவங்க டாக்டர் இல்ல
அப்ரோ 2021-2026 உன் ஆட்சிதான? தேனில MLA @OfficeOfOPS இவன்தான்.. அவன்ட கேளு
5 வருஷமா அமரர் ஊர்தி வசதி கூட இல்லாம தள்ளுவண்டில எடுத்துட்டு போற அவலத்துல வச்சது யாருடா? 5 வருஷமா புடுங்கல 6 மாசத்துக்குள்ள கேக்க வந்துட்டானுங்க @DMKITwing
மருத்துவப் பணிகள் கழகமா… மதுபானப் பணிகள் கழகமா?
மருந்தும் மதுவும் ஒரே கூரையில்: தவெக ஆட்சியின் புதிய சுகாதாரக் கொள்கை!
பாராசிட்டமாலும் குவார்ட்டரும் ஒரே கூரையில் இருக்க முடியாது.
தவெக ஆட்சியில் நிர்வாகத் திறன் எவ்வளவு தூரம் ‘புரட்சிகரமாக’ மாறிவிட்டதற்கு சாட்சி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வது!.
அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவக் கருவிகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்கும் உன்னத பணியைச் செய்யும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம், அம்பத்தூர், திருமழிசை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைக்கும் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டிருப்பது வெட்ககேடு.
தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்வது, அவற்றைச் சேமிப்பது, தரத்தைப் பரிசோதிப்பது, அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதுஆகிய பணிகளுக்காகதான் மருத்துவ பணிகள் கழகம் உருவாக்கப்பட்டது. டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை கசிவு சரிசெய்தல், தரை ஓடுகள் மாற்றுதல், மழைநீர் வடிகால் சீரமைப்பு போன்ற பணிகள் செய்வது என்பது மருத்துவ பணிகள் கழகத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது.
பாராசிட்டமால் மாத்திரைகளையும், இன்சுலின் மருந்துகளையும், அறுவை சிகிச்சை உபகரணங்களையும் இதுவரை பாதுகாத்து வந்த மருத்துவப் பணிகள் கழகம், இனி டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை ஒழுகுகிறதா? ஷட்டர்கள் சரியாக மூடுகிறதா? என்பதைப் பரிசோதிக்கும் ‘உன்னதப்’ பணியை செய்ய போகிறது!
‘சரக்கு’ பாதுகாப்பாக இருந்தால்தான், மருத்துவமனைகளுக்கு ‘வேலை’ இருக்கும் என்ற பொருளாதாரச் சுழற்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை முதல்வர் விஜய் எடுத்திருக்கிறாரா? அரசின் புதிய சுகாதாரக் கொள்கையில், உடல்நலத்தைக் காப்பதற்கான மருந்துகளுடன் உற்சாகத்தைக் காப்பதற்கான மதுபானங்களின் சேமிப்புக் கிடங்குகளும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காகத் தங்கத்தை கொள்முதல் செய்து நகைக்கடை அனுபவம் பெற்ற மருத்துவப் பணிகள் கழகம், இப்போது டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைப்பதன் மூலம் கட்டுமானத் துறையிலும் கால்பதிக்கிறது. உண்மையை சொல்வது என்றால், ‘மருத்துவம் – நகைக்கடை - மதுபானக் கிடங்கு’ எனத் தன்னை ஒரு ஆல்-ரவுண்டர் நிறுவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறது மருத்துவப் பணிகள் கழகம். ஒரு மருத்துவ நிறுவனத்தின் நிபுணத்துவத்தை வேறு துறைக்குப் பயன்படுத்துவதுதான் நிர்வாக நடவடிக்கையா?
தடுப்பூசி மற்றும் இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளைத் தட்பவெப்ப நிலை மாறாமல் பாதுகாக்கும் கிடங்குகளைப் பராமரித்த அனுபவத்தால், மதுபானங்களை பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கலாம் போல! உயிர் காக்கும் தடுப்பூசிகளுக்கும், ‘உற்சாகம்’ தரும் மதுபானங்களுக்கும் ஒரே மாதிரியான தொழில்நுட்பப் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்த அறிவாளிகள் நிரம்பிய அரசு அல்லவா விஜய் ஆட்சி!
முதல்வர் விஜய் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள 108 அவசர உதவி மையத்தில் ஆய்வு செய்திருக்கிறார். மறுபக்கம் மருந்துகளை வாங்க உருவான மருத்துவப் பணிகள் கழகம், டாஸ்மாக் கிடங்குகளின் கூரைகளை சரி செய்யப் போகிறது. இதுதான் தவெக அரசின் சுகாதார வரைபடமா? ஆம்புலன்ஸ்களை அழைக்கும் இடத்தில் முதல்வர் ஆய்வு. அதே நேரத்தில் டாஸ்மாக் கிடங்குக்கு அவசர சீரமைப்பு! மருத்துவத்தையும் மதுவையும் ஒரே நிர்வாகத்தின் இரு கண்களாக பாதுகாக்கிறார் முதல்வர்.
தேனியில் அமரர் ஊர்தி கிடைக்காததால், ஆதரவற்ற மூதாட்டி சீதாலட்சுமி உடல் தள்ளுவண்டியில் வைத்து 2 கி.மீ தூரம் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவலம் 10 நாட்களுக்கு முன்புதான் நடந்தது. இறுதியாக உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல ஒரு அமரர் ஊர்தியைக் கொடுக்க வக்கில்லாத அரசுதான், டாஸ்மாக் கிடங்குகளில் மழைநீர் ஒழுகாமல் பார்த்துக்கொள்வது பெரிய நகைமுரண்!
அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை; நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைக்கவில்லை; மருத்துவ உபகரணங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை; மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை; படுக்கைகள் இல்லை; ஒழுகும் மருத்துவமனை கூரைகள்; பழுதான ஸ்கேன் இயந்திரம் என எத்தனையோ தீக்கப்படாத பிரச்னைகள் பற்றி புகார்கள் வருகின்றன. அதையெல்லாம் சரி செய்யாமல் டாஸ்மாக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கிற அவலத்தை என்ன சொல்ல?
மருந்துக் கிடங்குகளைக் காப்பாற்ற உருவான கழகம், மதுக் கிடங்குகளையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இனி மதுபானக் காப்பீடும் கொண்டு வருவார்கள் போல!
மருத்துவப் பணிகள் கழகமா... இல்லை மதுபானப் பணிகள் கழகமா? என்பதை தெளிவுபடுத்திவிடுங்கள்! ஏன் என்றால் பாராசிட்டமாலும் குவார்ட்டரும் ஒரே கூரையில் இருக்க முடியாது. ‘மருந்து’ம் ‘மது’வும் வேறு வேறு!
Gracious Gaze retweeted
2021–2026 காலகட்டத்தில் மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக துரைமுருகன் மீது எழுந்துள்ள ₹1,427 கோடி இழப்புக் குற்றச்சாட்டு விசாரணையில் உண்மை வெளிவரட்டும்.
#DuraiMurugan #SandMiningScam #DMK
Gracious Gaze retweeted
அடடே கித்னா வாய்டா..
முடிஞ்சா EX MLA வை கிழட்டு மாமானு சொல்லுடா பாப்போம் @Seeman4TN ஒரு கொள்கை வெங்காயமும் இல்ல இவனை நம்பும் தம்பிகளும் என்ன பிறவிங்களோ🤡🤦🏻♀️






























