காவை அஜித் retweeted
ரீல்சுக்கு 50 ஆயிரம்.. ரூட் மாபியாவின் எச்ச வேலை...
எல்லாமே subscription ல அரசியல் பேசுற கும்பல்.. Subscription பண்ணீங்கன்னா நல்ல்ல்ல்ல்ல்ல்லா அரசியல் பேசுவாங்க..
Same script.. Same song.. Same reaction.. Same insert..
#AbuseWarriors
காவை அஜித் retweeted
போட்டோ சூட்டுக்கு போன விஜய்கிட்ட வாழ்வாதார சிக்கல் குறித்து கோரிக்கை வச்சுருக்காங்க மக்கள்…
மண்டய மண்டய ஆட்டிட்டு, சேலையை கையில கொடுத்து “ஏதோ ஒன்னு பண்ணி சாப்டுக்கோங்க”னு சொல்லிட்டு கிளம்பிட்டாப்ளயாம்…
வெள்ளந்தியா அந்தம்மா போட்டு உடைச்சுட்டாங்க…🫡
காவை அஜித் retweeted
தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் சூட்டிய பெயர் "ஹரிஜன்"; அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார்.
இந்த அவமதிப்பு சொல்லை அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். அந்தச் சொல் இன்றைக்கு வெறுப்புக்குரிய சொல்லாகவே மாற்றப்பட்டுவிட்டது.
இன்று சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் பிரச்சனை எழுந்தபோது, அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களுக்கு "தேவதைகள் "என்று பெயர் சூட்டுகிறார்.
தேவர்கள் பட்டமோ, தேவதைகள் பட்டமோ இந்த மக்களுக்கு வேண்டாம்; முதலில் மனிதர்களாக அவர்களை நடத்துங்கள்.
அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் குறைந்தது ஒரு நாளுக்கு 2000 ரூபாயாவது இருக்க வேண்டும்.
அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் அரசு வேலையாக அது மாற்றப்பட வேண்டும்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகள் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் வாய் திறக்கவே இல்லை.
முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதில் இவர்களுக்கு என்ன தடை இருக்கிறது?
தொழிலதிபர்களும் முதலீட்டாளர்களும் கோட்டு சூட்டு பிரபலங்களும் மட்டும்தான் முதலமைச்சரை சந்திக்க முடியுமா? அதற்கான உரிமை அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா?
எத்தனை கார்கள் இருந்தாலும் அரசு காரில் செல்வது தான் கெத்து என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெத்து காட்டத் துடிக்கும் ஆட்சியாளர்கள் _ அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள் _ இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க முடியாதா?
பார்ப்பனியமும் மனுதர்மமும் தான் சமூகத்தை இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
-விடுதலை ராசேந்திரன்
காவை அஜித் retweeted
திவிக-வின் "மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரை பயணம்" வெற்றிபெற வாழ்த்துகள்...
@dvkperiyar @kolathur_mani @viduthalaikr @UmapathiDvk
காவை அஜித் retweeted
முதலமைச்சர் விஜய் கரூர் பேச்சு ஒரு முதலமைச்சர் தகுதிக்குரிய பேச்சாக இல்லை; மாறாக ஏதோ படை எடுத்து வந்து தமிழ்நாட்டை பிடித்து மன்னர் ஆகிவிட்டது போன்ற மனநிலையில் பேசுகிறார்.
குறிப்பாக கரூர் சம்பவம் குறித்து அவர் உருவாக்கி உள்ள சதி திரைக்கதை வஞ்சகமானது. "ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது
நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தார்" என்ற ஒரு வரலாற்று நிகழ்வு உண்டு . தீ பற்றியதற்கு காரணம் மன்னர்தான் என்ற குற்றச்சாட்டு வந்த போது அதை மறைக்க கிறிஸ்தவர்கள் மீது பழி போட்டு அவர்களை கைது செய்து பழிவாங்கி தன் குற்றத்தை மறைக்க பார்த்தார் என்ற வரலாறு தான் இப்போது நினைவுக்கு வருகிறது.
கரூர் கூட்டத்தில் போலீசார் திட்டமிட்டு தன்னை உள்ளே அனுப்பியதாக அவர் பேசுவதும் அந்தக் கூட்டத்திற்கு ஏன் தடை போடவில்லை என்று கேட்பதும் எதிர்மறையான நேர்மையற்ற பழிச்சொற்கள்!
இவர்களே கேட்டு அனுமதி வாங்கிய கூட்டத்திற்கு காவல்துறை தடை போட வேண்டும் என்று இதுவரை எந்த ஒரு தலைவரும் பேசியதாக வரலாறு இல்லை. அப்படி தடை போட்டு இருந்தால்
இறந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு.
நெரிசல் மிகுந்த மேடை போடப்பட்டிருந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்; அந்த பகுதிக்கு முன்பாகவே பேசி விடுங்கள் என்று காவல்துறை எச்சரித்ததை ஆதவன் அர்ஜூ னாவும் அவர்களது சகாக்களும் கேட்க மறுத்து
ஏற்பாடு செய்த இடத்தில் தான் பேசுவோம் என்று
அடம்பிடித்து பேச வைத்தார்கள் .
இது காவல்துறையின் சதியா? அல்லது ஆதவன் அர்ஜுனாக்களின் சதியா? என்று கேட்டால் விஜய் என்ன பதில் கூறுவார்? கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்து கொண்டிருக்கும் போதே விஜய் பேசிக் கொண்டே இருந்தார். #விஜய் #தெரிந்தே #நடத்திய #சதியா? என்று கேட்டால் விஜய் அதற்கு என்ன பதிலை கூறுவார்?
விஜய் கட்சிக்கு எதிராக திமுக எந்த ஒரு எதிர் நிலையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை விஜய் கட்சி ஒரு வலிமையான எதிர்ப்பு சக்தி என்பதை திமுக கருதி பார்க்க வில்லை. அதன் காரணமாகவே தேர்தல் களத்தில் தவெக என்ற கட்சியையோ விஜய் பெயரையோ மு.க.ஸ்டாலின் எந்த ஒரு பிரச்சார கூட்டத்திலும் உச்சரிக்கவே இல்லை!
சொல்லப் போனால் விஜய் கட்சி கூடுதல் ஓட்டுகளை வாங்கினால் ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதே திமுகவின் தேர்தல் வியூகமாக இருந்தது.
இதனால் விஜய் கட்சிக்கு எந்த இடையூறும் அரசு தரப்பில் இருந்து செய்யப்படவில்லை என்பதே உண்மை.
கரூர் சம்பவத்திற்கு பிறகும் விஜய் மீது மு.க.ஸ்டாலின் நேரடி குற்றம் சாட்டவில்லை; புஸ்ஸி ஆனந்தையும், விஜயையும் கைது செய்வதற்கான நியாயமான காரணங்கள் இருந்தும் கைது செய்யவில்லை.
அதே கரூர் கூட்டத்தில் பேசிய விஜய் காவல்துறை சிறப்பான ஏற்பாடுகள் செய்ததை பாராட்டினார். இப்போது சதித்திட்டம் புரியாமல் பாராட்டியதாக நாடகமாடுகிறார்.
சதி நடந்தது என்பதற்கு என்ன ஆதாரங்களை ஒரு முதலமைச்சர் என்ற முறையில் அவர் திரட்டி வைத்திருக்கிறார்? அந்த ஆதாரங்களை ஏன் கரூர் கூட்டத்தில் பேசவில்லை?
#உணர்ச்சிகளை #தூண்டிவிட்டு #அதற்கு #பின்னால் #உண்மைகளை #மறைக்க #முடியும் #என்ற #கடந்த #கால #மன்னர் #ஆட்சி #திரைப்படக் #கதைகளை #இப்போது #மக்கள் #நம்ப #மாட்டார்கள் – at Mylapore Tiruvallike, India
காவை அஜித் retweeted
பாஜகவின் ஒடுக்குமுறை அரசியலை எதிர்த்து துணிந்து களமாடிய ஒரே கட்சியான திமுகவை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் இறங்குவது மறைமுகமாக பாஜகவுக்கு தமிழகத்தில் களம் அமைத்து தரும் ஒரு செயல்பாடு என்பதை உண்மையான பாசிச எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சி அமைக்கும் வலிமையும் கட்டமைப்பும் உள்ள ஒரே கட்சி திமுக தான். ஜெயலலிதா ஆட்சியைப் போல் பழிவாங்கும் அரசியலை முற்றாகப் புறந்தள்ளி ஆக்கபூர்வமான வளர்ச்சி அரசியலை முன்னெடுத்தார்.
முதல்வராக இருந்த மு.க ஸ்டாலின் இப்போது இந்த ஆட்சி பழிவாங்கும் அரசியலை தொடங்கி விட்டது. 41 உயிர்களை கூட்ட நெரிசலில் கரூர் பறிகொடுத்தது அப்போதே இதற்கு காரணமான ஆனந்தையும் விஜய்யையும் மு.க ஸ்டாலின் அடுத்த நாளே கைது செய்திருக்கலாம்: ஆனால் அதை அவர் செய்யவில்லை ;மாறாக எந்த ஒர்கட்சி தலைவரும் தனது தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார் என்று பெருந்தன்மையோடு பேசினார். இப்போது திமுக மீது மனசாட்சி இன்றி குற்றம் சாட்டுகிறார்கள் ;
சவால் விடுகிறார்கள்
இதுதான் இவர்கள் நடத்தும் அரசியலின் தரம்!
அப்போது விஜயை கண்டித்த கட்சிகள் இப்போது இந்த பிரச்சனையின் பழிவாங்கும் படலம் துவங்குகிறபோது அதை எதிர்க்காமல் வாய் மூடி மவுனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது.
அஇஅதிமுக இடத்தில் தவெகவை
நிறுத்தி அதன் வலிமையற்ற கட்டமைப்பை எந்த நேரத்திலும் சீர்குலைத்து அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் சூழ்ச்சிகரமான பாஜக அரசியலை உண்மையான இந்துத்துவ அரசியல் எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@SJForumindia @VCKofficial_ @arivalayam @DMKITwing @sunnewstamil
காவை அஜித் retweeted
இடஒதுக்கீட்டை எவ்வளவு கொச்சைப்படுத்துகிறார் பாருங்கள்.. இடஒதுக்கீட்டால் படிப்பு வேலை வாய்ப்புகளில் பயன்பெற்ற BC,MBC,SC,ST ஜாதியை சார்ந்தவர்களை எவ்வளவு இழிபார்வையுடன் இவர் அனுகியிருப்பார்.. இவர்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்பது எவ்வளவு கேவலம்.. இது ராகுல் காங்கிரஸா? அல்ல ராஜாஜி காங்கிரஸா?
காவை அஜித் retweeted
தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடி தொடங்கும் மரபு தமிழ் நாட்டில் நீடிக்கிறது. "தமிழ்த்தாய் வாழ்த்து" தான் தமிழ்நாடு அரசின் பாடல் என்று திராவிட மாடல் ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின் அரசு ஆணையும் பிறப்பித்திருக்கிறார். அதேபோல் சட்டமன்ற நிகழ்வு தொடங்குவதற்கு முன்பும் "தமிழ்த் தாய் வாழ்த்து" தான் பாடப்பட்டு வந்தது இதில் "ஜன கன மன" தேசிய கீதத்தை ஏன் இணைக்க வேண்டும் ? "வந்தே மாதரம்" பாடலைப் போல் தமிழ் வாழ்த்துப் பாடலும் ஒரு விருப்ப தேர்வுதானே தவிர சட்டபூர்வ தமிழ்நாட்டுக்கான பாடல் அல்ல ; தேசிய கீதமே சட்டபூர்வமான பாடல் என்ற கருத்தியலை உறுதிப்படுத்துதே இதன் நோக்கம்.
மாநில உரிமையை அடகு வைத்து விட்ட இந்த செயலை மறைப்பதற்கு ஒரு ஆதாரத்தை தேடித் தேடி கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது சட்டமன்றத்தில் கலைஞர் படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது முதலில் தேசிய கீதமும் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப் பெற்றது என்று முதலமைச்சர் விஜய் கூறுகிறார். இந்த ஓட்டைவாதம் மக்களிடம் எடுபடாது என்பதை தெரிந்து கொண்ட அவரே இதற்கான பதிலையும் கூறிவிட்டார் குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் தேசிய கீதம் பாடி இருக்கலாம் என்று அவரரே அதற்கு விளக்கமும் கூறியிருக்கிறார். பிறகு இதில் குற்றம் சாட்டுவதற்கு என்ன இருக்கிறது?
சொல்லப்போனால் இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று இருந்த மரபை தமிழ்நாடு அப்படியே ஏற்காது ; தேசிய கீதத்தோடு தமிழ்த்தாய் வாழ்த்தையும் இணைத்து இங்கே பாட வேண்டும் என்று அதிலும் மாநில உரிமையை நிலைநாட்டி இருக்கிறார் தமிழின தலைவர் கலைஞர் .
இதற்கு நேர் மாறாக தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளை மாற்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு தேசிய கீதத்தையும் கொண்டு வந்து இணைத்து தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளத்தை சிதைத்து இருக்கிறார் முதல்வர் விஜய்.
@mkstalin @sunnewstamil @arivalayam @DMKITwing
காவை அஜித் retweeted
இது Misinterpretation மற்றும் Manipulated Dataக்களின் காலம். தங்களுக்கு ஏற்றது போல செய்திகளை திரிப்பதற்கே எல்லோரும் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில், பேராசிரியர் காதர் மைதீன் பேசியது தவறான வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுக்கும்.
60 ஆண்டுகால திமுக கூட்டணியை முறிக்கிறோம் என்று பேசி விட்டார். உடனே 2026-60 என்றால் 1966 அதனால் 1967லிருந்து நீடித்த கூட்டணியை முஸ்லிம் லீக் முறிக்கிறது என அவரவர்கள் ஒரு வரலாற்றை எழுதத் தொடங்கி விட்டார்கள்.
1967ல் அல்ல 1962 தேர்தலிலேயே திமுக- முஸ்லிம் லீக் கூட்டணி உருவாகி விட்டது. 1977, 1989, 1996, 2001 தேர்தல்களில் திமுக கூட்டணியில் லீக் இடம்பெறவில்லை. 1996 தேர்தலில் பெரியகுளத்தில் இரட்டை இலைச் சின்னத்திலும், 2001 தேர்தலில் திருச்சி 1 தொகுதியிலும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது பேராசிரியர் காதர் மைதீன் தான்.
பின்னர் 60 ஆண்டுகள் கூட்டணி என ஏன் அவர் சொன்னார் என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும். செய்தியை ரிப்போர்ட் செய்யுங்கள், அதை விடுத்து இது தான் வாய்ப்பு என நீங்கள் படிக்காத வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு தவறாக திணிக்காதீர்கள்.
காவை அஜித் retweeted
அரசுப்பள்ளி மாணவர்கள் 2-ம் தரக் குடிமக்களா?
மத்திய அரசின் அலட்சியத்தால், 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் சேலத்தை சார்ந்த கோபிகா, லக்னோ-வை சார்ந்த சுகானி ஆகிய 2 பேர் த*கொ-லை செய்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் கனவுகள், அவர்களது பெற்றோரின் நம்பிக்கை அனைத்தும் ஒரு NEET-ஆல் சுக்குநூறாகியிருக்கிறது. பிள்ளைகளை இழந்த பெற்றோரின் வலி உண்மையிலேயே மிகக் கொடூரமானது. இதற்கு ஒரு அரசே காரணமாக இருக்கிறது எவ்வளவு வக்கிரமானது. மாணவர்களை மருத்துவர்களாக்க அரசு நிர்வாகம் இயங்குகிறதா? அல்லது, மாணவர்களின் வாழ்க்கையை முடித்து கட்ட அரசு நிர்வாகம் இயங்குகிறதா? என்ற சந்தேகம் உருவாகிறது.
இந்த ஜூன் மாதத்தில் மட்டும், நாடு முழுவதும் 11 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2021-ல் தர்மேந்திர பிரதான் அமைச்சரான பின்பு நீட் தேர்வால் 93 மாணவர்கள் தற*கொ-லை செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 2021-லிருந்து 4 ஆண்டுகளில் இந்தியாவில் 54,513 பள்ளி, கல்லூரி மாணவர்கள் த*கொ-லை செய்துள்ளனர்.
கல்வி அமைச்சரின் பிள்ளைகள் வெளிநாட்டில் பயில்வதால் இந்திய பெற்றோரின் பிள்ளைகள் குறித்த கவலை அவருக்கு இல்லை என்பது போல தெரிகிறது.
நேற்று உயிரிழந்த சேலம் #கோபிகா ஒரு ஏழை சவர தொழிலாளியின் மகள். மட்டுமல்லாமல் அவர் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி. சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வு எழுதி மருத்துவ கல்வி பெற முடியும் என்பது அப்பட்டமான சட்டவிரோத செயல். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14 கூறும் சமத்துவம், பிரிவு 15 கூறும் பாகுபாடு ஆகிய கூறுகளுக்கு முரணாக, ஒன்றிய அரசு, அரசுப்பள்ளி மாணவர்களை 2-ம் தர குடிமக்களாகக் கருதுகிறது.
#JusticeForGopika
#ResignPradhan
#DharmendraPradanMustResign
#NEET
காவை அஜித் retweeted
தமிழ்நாட்டுக்கு உரிமையான உயர் சிறப்பு மருத்துவ மேல்படிப்புக்கான(super speciality) 152 இடங்களை ஒன்றிய ஆட்சியிடம் சரணடைய செய்திருக்கிறது தவெக ஆட்சி; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அதிர்ச்சியான தகவலை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் திமுக ஆட்சி சரியான வாதங்களை எடுத்து வைத்தது. இந்த இடங்கள் அகில இந்திய கோட்டாவுக்கு சென்று விடாமல் தடுத்து நிறுத்தியது.
இதை அகில இந்திய கோட்டாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தனி நபர் தொடர்ந்த வழக்கில் நடந்த விவாதத்தில்
த.வெ.க ஆட்சி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சரண்டர் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்; சரியான உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை.
குறிப்பாக வழக்கு போட்டவர் சுட்டிக்காட்டிய என். எஸ் கார்த்திகேயன் எதிர் தமிழ்நாடு அரசு வழக்கு இந்த வழக்கோடு தொடர்பு இல்லாதது
நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இதை வலிமையாக மறுத்திருக்க வேண்டும் ஏன் மறுக்கவில்லை?
அரசின் சார்பில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களாக இருந்துவிடக் கூடாது; இது மிகவும் ஆபத்தானது!
மருத்துவமனையிலேயே பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இவை. இந்தியாவிலேயே சிறப்புமிக்க உயர் மருத்துவர்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு!
இதற்காகவே பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டை நோக்கி சிகிச்சைக்கு வருகிறார்கள்.
இதேபோல்தான் மோடி ஆட்சி மருத்துவ மேல் பட்டப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மறுத்தபோது;தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; அனைத்து மாநில பிற்படுத்தப்பட்ட மாணவர்ளுக்கும் அந்த இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டு தந்தார் என்பது வரலாறு!
புதிய ஆட்சி இப்படி ஒரு சமூக அநீதிக்கு துணை போய் இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மீண்டும் பறிகொடுத்த இடங்களை மீட்டு தருவதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு அரசு இறங்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவ கட்டமைப்பை ஒருபோதும் சீர்குலைத்து விடக்கூடாது!
@CMOTamilnadu @mkstalin @arivalayam @sunnewstamil @Kalaignarnews @MPaasarai
காவை அஜித் retweeted
ஏற்கனவே வெளியான ஆவணப்படம் திரையிடவும் தடை!
அதைக் கேள்வி கேட்டால் அறிக்கைக்கு முகநூலில் தடை!
கடந்த மே 31, 2026 அன்று புதுக்கோட்டையில் திருப்பரங்குன்றம் ஆவணப்படத் திரையிடல் தடுக்கப்பட்டது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையை இந்தியாவில் தடை செய்துள்ளது பேஸ்புக் நிர்வாகம்.
"This is because we complied with a legal request to restrict this content & Local Legal Requirement" - “இதற்குக் காரணம், இந்தப் பதிவைத் தடுக்கச் சொல்லி வந்த ஒரு சட்டப்பூர்வக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டு” என்றும் உள்நாட்டுச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு என்றும் கூறி திவிக பதிவினை இந்தியாவில் முடக்கியதாக பேஸ்புக் தெரிவிக்கிறது.
எந்தச் சட்டத்தின் காரணமாக, யாருடைய தூண்டுதலின் பெயரில் காவல்துறையினர் திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத் திரையிடலைத் தடுத்தார்கள்? யாருடைய உத்தரவு? யார் அந்த மேலிடம்? என்ற கேள்விகளுக்கு இன்று வரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இக்கேள்விகளை எழுப்பிய திராவிடர் விடுதலைக் கழக அறிக்கை எந்தச் சட்டத்தினால் முகநூலில் முடக்கப்பட்டுள்ளது? அப்படி முடக்க சட்டப்பூர்வ கோரிக்கை வைத்தது யார்? மாநிலத்தை ஆளும் தவெகவா? ஒன்றியத்தை ஆளும் பிஜேபியா? அல்லது இருவருமா? அல்லது வேறு தரப்பா?
ஆவணப்படத்தைத் திரையிட மேலிடம் சொல்லித் தடை, அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட உள்நாட்டு சட்டவிதிகளின்படி வந்த கோரிக்கை அடிப்படையில் என்றும் காரணம் சொல்லி முகநூலில் தடை! இது ஜனநாயக நாடு தானா? கருத்துச் சொல்லும் உரிமையை அளித்துள்ள அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்தின்படி நடக்கும் நாடு தானா?
தமிழ்நாடு தவெக அரசே, இந்திய பிஜேபி அரசே இது கருத்துரிமை குறித்த கேள்வி. இது ஊடகச் சுதந்திரம் குறித்த கேள்வி. இது ஜனநாயக உரிமைகள் குறித்த கேள்வி!! அரசமைப்புச் சட்டம் வழங்கிய கருத்துரிமையும் மதச்சார்பின்மையும் தானே உள்நாட்டுச் சட்டம்? வேறு எந்தச் சட்டத்தினால் திருப்பரங்குன்றம் ஆவணப்படத் திரையிடல் தடுக்கப்பட்டது? எந்தச் சட்டத்தினால், யாருடைய கோரிக்கையால் கருத்துரிமைக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட திவிக அறிக்கை முகநூலில் முடக்கப்படுகிறது?
ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்லப்பட வேண்டும். அதிகாரத்தின் பெயரில் கேள்விகள் மூடப்படக் கூடாது.
ஜனநாயகவாதிகளே உரிமைக்கு எதிரான இந்த முடக்கத்தை உடைக்க ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்! அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைக் காப்போம்.
- தமிழ்நாடு டிஜிட்டல் ஊடலவியலாளர்கள் சங்கம்.
tndjumail@gmail
#tndju
காவை அஜித் retweeted
*சமத்துவபுரம்னு ஒன்ன யாரு கொண்டு வந்தா? விஜயா?
*ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு உதவித்தொகை, வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
இன்னும் நிறைய இருக்கு.. இது திமுக செய்தது..
மேட்டூர் கொளத்தூரில் உள்ள காவலாண்டியூரில் பட்டியல் சமூகமும் வன்னியர் சமூகமும் காதல் திருமணம் செய்துகொண்டு மாமன் மச்சானாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.. அந்த ஊரே வன்னியரும் பட்டியல் சமூகம் ஒன்றாக சேர்ந்தே வாழ்கின்றனர்.. காரணம் அண்ணன் கொளத்தூர் மணி மற்றும் காவலாண்டியூர் ஈஸ்வரன் அவர்கள்.. அங்கு பாமக அடர்த்தியாக இருக்கக்கூடிய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணற்ற ஜாதி மறுப்பு திருமணங்களை பெரியாரிய அமைப்புகள் செய்து வைத்திருக்கிறது.. இதெல்லாம் ஊரும் காலனியும் ஒன்னு சேர வேண்டும் என்கிற நோக்கமில்லாமல் வேறெண்ண?
இப்ப நான் உங்கள ஒன்னு கேக்குறேன்.. சந்தையூர் தீண்டாமை சுவர்ல உங்க நிலைப்பாடு என்ன???
காவை அஜித் retweeted
தேசிய அரசியலின் சூழல் கருதி
திமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
வென்றோம்... அங்கீகாரம் பெற்றோம்...
எத்தனையோ வன்கொடுமைகள்
நீகழ்ந்த போதும் கொள்கை காக்க
சமரசம் செய்தோம்...
ஆதவ் கட்சியில் இருந்து கூட்டணியை
பிளவு படுத்த முயன்ற போது...
இந்த கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்றார் தலைவர்...
ஆதவை இடைநீக்கம் செய்தார்...
திக, திமுக, விசிக மூன்று குழல்
துப்பாக்கி என்றார்...
8 தொகுதி கொடுத்தார்கள்...
தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
பிரச்சாரங்களில் விஜயை RSS பிள்ளை என்றார்...RSS-ன் ஒட்டு புழு விஜய் என்றார் நம் இன்றைய அமைச்சர்...
ம. சா. மு. கூ தோற்றுப் போனது...
தவெக வென்றது...
மசாலா வெற்றி என்றார் நம் அமைச்சர்..
பெரும்பான்மை சிக்கல் நேர்ந்த போது.. குடியரசுத் தலைவர் ஆட்சி நிகழ்ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்றார்...
திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்...
ஆதவ் சொன்னதும் சினிமா மோகத்தை மட்டுமே வைத்து வெற்றிபெற்ற விஜய் கையை பிடித்து உயர்த்தினார். விசிக அலுவலகம் முன்பு Tvk.. Tvk...என முழங்கினார்கள்...
மீண்டும் ஆதவிடம் இருந்து அமைச்சராக அழைப்பு வந்தது...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
அன்றைக்கு உங்க கட்சில வெறும்
20 பேர்தான் இருக்காங்கனு சொன்ன ஆதவ்... இன்று ஒட்டு மொத்த கட்சியையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
அவர் சானக்கியர்தான்..
தொண்டர்கள் அதிகாரம் கிடைத்து விட்டதாக குத்திக்கிறார்கள்...
திமுகவை விமர்சிக்கிறார்கள்.நாங்கள் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லை. குறைவான தொகுதிகள் என கொந்தளித்து எழுதுகிறார்கள்.ஆனால் நல்ல perform செய்த எனக்கு சீட் கொடுக்கவில்லை... அதற்கு அவர் ஆதங்கப்பட உரிமை இல்லை... திமுகவிற்கு போய்விடுங்கள் என்று விரட்டுகிறார்கள்...
என்னென்னமோ நடந்தாகிவிட்டது...
இப்போது என்னை கட்சிக்கு எதிரானவன்...
திமுக முட்டு.. என எழுதுவார்கள்...
தோழர்களே..
அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் விசிகவின் இலக்கு என்றால்,அந்த இலக்கை எப்படி அடைந்தோம் என்பது தான் நாளைய வரலாறு...
கொள்கையால் உடன்பட்டு
கூட்டணி வைத்தோம்...
மக்களின் நம்பிக்கையை பெற்றோம்... தனித்து நின்றோம்...
அதிகாரம் பெற்றோம்
என்பதாக இருந்தால் மட்டுமே
நாளைய தலைமுறை கொண்டாடும்...
இன்று அடைந்திருக்கும் அதிகாரம் கொள்கையை மறந்து... அரசியல் சூழலில் ஏற்பட்ட ஆசாதாரன சூழலை பயன்படுத்தி பெற்றது... இது வராலாற்றுப் பிழை
என்றே நாளை பதிவு செய்யப்படும்..
#ஆளுர்ஷாநவாஸ்
காவை அஜித் retweeted
"இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும் !"
- திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி @kolathur_mani அவர்களின் அறிக்கை !
"தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையில் ஏழு பேர் பட்டியல் இனப் பிரிவினரும்,
4 பெண்களும் இடம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அதே நேரத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இந்த பட்டியல் இனப் பிரிவினரில் ஒருவரை ஏன் நியமிக்க கூடாது என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.
இந்தத் துறைக்கு அமைச்சராகவும் துறையின் இயக்குனராகவும் பார்ப்பனர்களையே தேர்ந்தெடுத்து நியமித்திருப்பதின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் பனகல் அரசர் முதன் முதலாக கொண்டு வந்த அறநிலையத்துறை சட்டம் (Hindu Devastaan Act) பார்ப்பனர்கள் கொள்ளையிலிருந்து கோயில்களை காப்பாற்றுவதற்காகத் தான்! அப்போதிலிருந்தே பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிறகு ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான முழு சட்ட வடிவம் ( Hindu Religious Endowments Act) கொண்டுவரப்பட்டது. அப்போதும் பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தது.
பல்வேறு நம்பிக்கை பிரிவுகளைக் கொண்ட இந்து மதம் இப்போது ஒற்றை மதமாக்கப்பட்டு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு விட்டது.
அனைத்து இந்துக்களும் அர்ச்சகர்கள் ஆகும் உரிமை கிடையாது.அது பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்று நீதிமன்றங்கள் வழியாக பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்கள்.
இப்போதும் கோயில் திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக தரையில் காத்துக் கிடக்க, பல்லக்கிலும் தேரிலும் இரண்டு அல்லது மூன்று பார்ப்பனர்கள் சட்டை இல்லாமல் பூணூல் அடையாளத்தை காட்டிக் கொண்டு நிற்பது எதைக் காட்டுகிறது? இந்து மதமும் இந்துக்களும் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதைத் தானே?
இந்து மதத்தை மட்டுமல்ல,அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து அறநிலையத்துறையையும் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பதை உணர்த்துவதாகத் தான் இந்த நியமனங்கள் அமைந்திருக்கின்றன.
இந்த பார்ப்பன அமைச்சர் ஏற்கனவே ஒரு பதிவில் பாஜகவின் குரலை எதிரொலித்திருக்கிறார்.அதாவது கோயிலில் தமிழ் வழிபாட்டு உரிமை கேட்பவர்கள் ஏன் முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களை நோக்கி அந்த கேள்விகளைக் கேட்பதில்லை என்று அவர் கேட்டிருக்கிறார்.
இப்படி பாஜக மனநிலை கொண்ட ஒருவரை அறநிலையத்துறையின் அமைச்சராக நியமித்திருப்பது ஏற்கத் தக்கது அல்ல. இந்த முடிவு தமிழ்மக்களின் உளவியலுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
முதலமைச்சர் @CMOTamilnadu மாண்புமிகு ச.ஜோசப் விஜய் @actorvijay இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
- "கொளத்தூர் மணி,"
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
22.05.26
ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இந்துத் துறையை வழிநடத்தினால் அது “அரசியல்” மாற்றம் கருதலாம்
ஆனால் அதே துறை மீண்டும் ஆதிக்கக் கைகளுக்கு சென்றால் அதுதான் “மாற்றமா”?
#TVKVijayHQ #TVKVijayFails
20


















